யோகவாசிஷ்டம் என்ற மஹாராமாயணம் 693
தினமொரு சுலோகம்
நாள் 693
ஏவமத்யந்தவிததே ஸம்பன்னே த்³ருʼஶ்யவிப்⁴ரமேன கிஞ்சித³பி ஸம்பன்னம்ʼ ஸர்வ்வஶூன்யம்ʼ ததம்ʼ யத: (6.2/188/20)
एवमत्यन्तवितते संपन्ने दृश्यविभ्रमेन किञ्चिदपि सम्पन्नं सर्व्वशून्यं ततं यत: (6.2/188/20)
ഏവമത്യന്തവിതതേ സംപന്നേ ദൃശ്യവിഭ്രമേന കിഞ്ചിദപി സമ്പന്നം സര്വ്വശൂന്യം തതം യത: (6.2/188/20)
வசிஷ்டர் தொடர்ந்தார்:” ‘ ஆரம்பத்தில்’ என்ற சொற்றொடர்’ அப்படியொரு ஆரம்பம் சிருஷ்டியில் இருந்தது என்ற எண்ணத்தை உண்டு பண்ணக்கூடும்.ஆனால் இந்த எண்ணம் கூட வெறும் வார்த்தைகள் தான். கற்பிக்க எளிதாக இருக்கும் என்பதற்காக பயன்படுத்தப் பட்டது.உண்மையில் எதுவும் ஆரம்பித்ததில்லை.போதத்தில் போதத்திலிரநது வேறல்லாத ஒரு எண்ணம் வெளிப்பொருட்களை கற்பனை செய்து உருமாற்றம் அடைந்தது தான் ஜீவன்.
இந்த கற்பனையில் உருவாகின்ற சங்கற்பங்களுக்கு பல பெயர்களும் உருவங்களும் உண்டு.
போதத்தினால் போதந்தின் வழியாக உயிருள்ள ஒன்றாய் ஜீவன் உருப்பெறுகிறது.
அது வஸ்துவைப்பற்றி அறிந்திருப்பதால் அதை ‘சித்’ என்று பெயரிட்டு அழைக்கிறோம்.
ஒவ்வொரு பொருளையும் ‘ இது இதாகிறது’ என்ற பகுத்தறிவு உள்ளதால் அதை ‘புத்தி’ என்றழைக்கிறோம்.
‘அது’ எண்ணங்களையும் கற்பனைகளையும் யோசிப்பதால் அதை ‘ மனம்’ என்று சொல்கிறோம்.
‘ இது நான்’ என்ற எண்ணம் உள்ளதால் அது’ அஹம்காரமாகிறது’
போதத்தால் நிறைவு பெறுகிறதால் சித்தம் ஆகிறது.
உறுதியான எண்ணங்களின் கோர்வை உருவாவதால் அது ‘ புரியஷ்டகம்’ என்றழைக்கப்படுகிறது. பிரபுத்ததையில் சென்றடையும் போது எல்லா அறிவும் மறைந்து போவதால் அது அவித்யை என்றழைக்கப்படுகிறது. அதுவே அஞ்ஞானம் !
இந்த விளக்கங்கள் எல்லாம் ஆதிவாஹிகன் என்ற சூக்ஷ்ம தேகம் இருக்கிறது என்ற எண்ணம் இருப்பதால்த் தான்.
ஒருபோதும் இல்லாத உலகத்தைக் குறித்து விளக்கமாக கூறிவிட்டேன்.
ஆதிவாஹிக தேகம் என்பது அதி சூக்ஷ்மமான வெறுமை அல்லது சூன்யம் தான்.
அது ஒருபோதும் முளைத்தெழுவதில்லை.ஆகவே அதை இல்லாதது.
இருந்தாலும் அனந்த போதம் என்ற க்ஷேத்திரத்தில் எண்ணிக்கையிலடங்காத உலகங்கள் தொடர்ந்து தோற்றுவிக்கப்படுகின்றன.
எதிரில் வைத்திருக்கும் பொருட்களை பிரதிபலிக்கின்ற கண்ணாடி போல் சூக்ஷ்ம தேகம் உலகங்களை பிரதிபலித்துக் கொண்டேயிருக்கிறது.
விசுவப் பிரளயத்திற்குப் பின் பரமபுருஷன் அனந்தபோதத்தில் உதிக்கின்ற இந்த ஆதிவாஹிகனைக் குறித்து எண்ணுகிறது.
சூக்ஷ்மதேகம் தானாகவே பிரம்மா-விஷ்ணு- மஹேசவரர்களைக் குறித்து எண்ணுகிறது.சூக்ஷ்ம தேகம் எதைப்பற்றியெல்லாம் எண்ணி அவைகளுடன் ஐக்கியம் அஅடைகிறதோ அவை வெளித்தோன்றுகின்றன.
இப்படி பல விதமான பொருட்கள் உற்பத்தியானதாகத் தோன்றுகிறதென்றாலும் அது திருசிய பிரமை தான்.ஏனென்றால் எதுவும் ஒருநாளும் சிருஷ்டிக்கப் பட்டதில்லை.எல்லாமே சூன்னியம் தான்.அதே நேரத்தில்அது எங்கும் நிறைந்துமிருக்கிறது.ஆதியும் அந்தமும் இல்லாத பிரம்மம் மட்டும் தானென்றும் எப்பொழுதுமுள்ளது.இருந்தாலும் சூக்ஷ்ம தேகம் தான் அனுபவங்களை தேடுவதாக எண்ணுவதால்- கற்பனை செய்வதால்,வித்தியாசமான பன்மை தோன்றுகின்றன.இந்த சூக்ஷ்மமான ஆதி வாஹிக தேகத்தில் ஸ்தூலதேகம் முதலியவற்றைக் குறித்தும் அதன் மூலப்பொருட்களையும் உறுப்புக்களையும் குறித்து எண்ணங்களும், பிறப்பு, கர்மம்,காலம்,ஆகாயம்,முறை, முதுமை,மரணம்,பாப- புண்ணியங்கள்,ஞானம் என்று பற்பல கற்பனைகளும் முளைத்து எழும்புகின்றன.இந்த கற்பனைகள் சேகரித்தவுடன்,இந்த சூக்ஷ்ம தேகம் பஞ்ச பூதங்களாலான விசுவத்தை உண்மை போல் அனுபவிக்கின்றது.ஆனால் இதெல்லாமே மாயா மயக்கம் தான்.கனவுகளும் கனவுப் பொருட்களும் தான்..