யோகவாசிஷ்டம் என்ற மஹாராமாயணம் 695
தினமொரு சுலோகம்
நாள்695
திருஷ்டாவும் திருக்குமரன் இருந்ததில்லை!
ஜ்ஞானஸ்ய ஜ்ஞேயதா நாஸ்தி கேவலம்ʼ ஜ்ஞானமவ்யயம்ʼ
அவாச்யமிதி போ³தோ⁴ந்த: ஸம்யக்³ஜ்ஞானமிதி ஸ்ம்ருʼதம்ʼ (6.2/190/5)
ज्ञानस्य ज्ञेयता नास्ति केवलं ज्ञानमव्ययं
अवाच्यमिति बोधोन्त: सम्यग्ज्ञानमिति स्मृतं (6.2/190/5)
ജ്ഞാനസ്യ ജ്ഞേയതാ നാസ്തി കേവലം ജ്ഞാനമവ്യയം
അവാച്യമിതി ബോധോന്ത: സമ്യഗ്ജ്ഞാനമിതി സ്മൃതം (6.2/190/5)
வசிஷ்டர் தொடர்ந்தார்:” ஞானம் அறிவிற்கான விஷயமாக மாறும் பொழுது அது பந்தனமாக மாறுகிறது.”
இராமன் கேட்டான்:” எப்படி ஞானம் அறிவிற்கான விஷயம் என்ற எண்ணத்தை முடிவிற்கு கொண்டு வருவது?”
வசிஷ்டர் சொன்னார்:” பூரணமாக போதம் விழித்தெழுந்து விட்டால் புத்தியின் மந்ததை முடிவிற்கு வந்து விடுமல்லவா? அது தான் முக்தி! அது உருவமற்றதானது; முற்றிலும் அமைதி நிறைந்தது; அதுவே உண்மை!”
இராமன் கேட்டான்:” போதம் பூரணமாக விழித்தெழல் என்றால் என்ன? உயிரினங்களை எல்லா விதமான பந்த( ன) ங்களிலிருந்தும் விடுதலை அடைய வைக்கக் கூடிய ( போதுமான) பரிபூரண ஞானம் தான் என்ன?”
வசிஷ்டர் சொன்னார்:” பரமமான ஞானம் என்றால் அதற்கு அறிந்து கொள்ள ஒன்றுமேயில்லாதது என்று பொருள்.ஞானம் சுதந்திரமானதும் அழிவில்லாததும் ஆக இருக்கிறது.எல்லா விதமான வியாக்கியானங்களுக்கும் விளக்கங்களுக்கும் அப்பாற்பட்டது.சத்தியத்தை நேரடியாக உணருவது தான் பரமமான ஞானம்.”
இராமன் வினவினான்:” ஞானத்திற்கும் அறிவிற்கு ஆதாரமான வஸ்துவிற்கும் இடையில் என்ன வேற்றுமை உள்ளது? ஞானம் என்ற சொல்லை பயன்படுத்தும் பொழுது என்ன பொருள் கொள்ள வேண்டும்?”
வசிஷ்டர் சொன்னார்:” ஞானம் என்றால் போதம் பூரணமாக விழித்து எழல் என்று பொருள். அது சத்திய சாக்ஷாத்காரம்! அதை எந்த வித கட்டுப்பாடுமில்லாமல் தியானிப்பது தான் அதை அடைவதற்கான வழி.உண்மையில் ஞானத்திற்கும் ஞானத்திற்கான பொருளுக்கும் எந்த விதமான வித்தியாசமும் கிடையாது.”
இராமன் கேட்டான்:” அப்படியென்றால், ஞானத்திற்கும் ஞான வஸ்துவிற்கும் இடையில் பிரமையை அடிப்படையாகக் கொண்டு வேற்றுமை உண்டாகவும்,அது நம்முள் உறுதிப்படவும் காரணம் என்ன?”
வசிஷ்டர் சொன்னார்:” ஞானத்திற்கு புறம்பாக ஏதோ ஒன்று உள்ளது என்ற பிரமை தான் இந்த வேற்றுமை உணர்வுக்கு காரணம். ஞானத்திற்கு புறம்பாக ஏதோ உள்ளது என்ற எண்ணம்! உண்மையில் ஞானத்திற்கு வெளியேயோ, உள்ளேயோ ஒன்றுமே கிடையாது.”
இராமன் சொன்னான்:” நானும் தாங்களும், மற்ற உயிரினங்களும், பலவிதப்பட்ட பொருட்களும், நிறைந்த உலகை தெளிவாக நாம் காண்கிறோம்.பிறகு எப்படி இதெல்லாம் பொய் என்று சொல்ல முடியும்? அதை எப்படி நியாயப்படுத்துவதற்கு முடியும்?”
வசிஷ்டர் சொன்னார்:” விசுவ பிரபஞ்சம் என்ற விராட் புருஷன்.( திருஷ்டா) சிருஷ்டியின் ஆரம்பத்தில் இருந்ததில்லை.அப்பொழுதும் இப்பொழுதும் எப்பொழுதும் பார்க்கப்படுவதற்கு ஒரு பொருளும் ‘திருக்காக’ இருந்ததில்லை.