யோகவாசிஷ்டம் என்ற மஹாராமாயணம் 712
தினமொரு சுலோகம்
நாள் 712
നിത്യപാരായണം ദിവസം 700
ப³லோ லீலாமிவ த்யக்தஶங்கம்ʼ ஸம்ʼஸாரஸம்ʼஸ்தி²தம்ʼ
யாவத்³தே³ஹமிமாம்ʼ ஸாதோ⁴ பாலயாம்யமலைகத்³ருʼக் (6.2/201/29)
बलो लीलामिव त्यक्तशङ्कं संसारसंस्थितं
यावद्देहमिमां साधो पालयाम्यमलैकदृक् (6.2/201/29)
ബലോ ലീലാമിവ ത്യക്തശങ്കം സംസാരസംസ്ഥിതം
യാവദ്ദേഹമിമാം സാധോ പാലയാമ്യമലൈകദൃക് (6.2/201/29)
வசிஷ்ர் இராமனிடம் வினவினார்:” இராமா, உனக்கு இதற்கு மேல் என்னிடம் கேட்க வேண்டியுள்ளதா? இப்பொழுது இந்த விசுவத்தை எப்படி காண்கிறாய்? உன் உள்ளுணர்வு- உள் அனுபவம் எப்படியுள்ளது?”
இராமன் சொன்னான்:” பகவான்,தங்கள் கிருபையால் நான் முற்றிலும் போதம் விழித்தெழுந்தவனாயுள்ளேன்.எல்லா மாசுகளும் என்னை விட்டு அகன்று விட்டன.என் தவறான கருத்துக்களும் மயக்கங்களும் போயே போய்விட்டன.என்னை கட்டிப்போட்டிருக்கும் எல்லா பந்தங்களும் அற்றுப் போய்விட்டன. என் சித் சக்திக்கு ( மேதா – புத்தி சக்திக்கு) ஸ்படிகத்தை விட அதிக ஒளி உள்ளது.இன்னும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆதங்கம் ஏதும் என் மனதில் இல்லை.எனக்கு எதிலும் பந்தமில்லாத; பற்றுமில்லாமல்.பந்தங்களோ சாஸ்திர நூல்களை என்னில் எந்த மாற்றத்தையும் உண்டு பண்ணுவதில்லை. சன்னியாசம் கூட என்னை ஈர்க்கவில்லை.
நான் இந்த உலகை தூயதும் எல்லைகளற்றதும், பகுத்துப் பார்க்க முடியாததுமான போதமாக காண்கிறேன். இன்னொரு விதத்தில் சொல்லப் போனால் உலகம் என்பது ஒன்றுமேயில்லை; வெறும் சூன்னியம் தான்! ஏனென்னறால் பிரமைகள் நீங்கி மாயக்காட்சிகள் முடிவிற்கு வரும்போது உலகமும் இல்லாமலாகி விடுகிறதல்லவா? தாங்கள் கூறும் எதையும் செய்வதற்கு நான் தயார்! நான் என்னிடம் வருகின்ற இயற்கை கர்மங்களை. எந்த விதமான ஒரு பிடிப்பும் இல்லாமல் மகிழ்ச்சியோ, வருத்தமோ இல்லாமல் செய்து கொள்கிறேன். எனக்கு இனிமேல்ததான் எந்த விதமான பிரமைக் காட்சிகளும் இல்லை.
இந்த சிருஷ்டி விளையாட்டு வேறு எதாவது ஆக மாறவும், விசுவப் பிரளயமோ, புயலாகவோ வரட்டும்.என் நாடு செல்வச் செழிப்பாக இருந்தாலும் இல்லையென்றாலும் நான் ஆத்ம ஞானத்தில் ஆழ்ந்திருப்பேன்.
நான் முற்றிலும் அமைதியாக உள்ளேன்.என் பார்வை மிகவும் தெளிவாக உள்ளது.என் சஹஜபாவம் – இயற்கை என்ன என்பதை வார்த்தைகளில் விவரிப்பது மிகவும் கஷ்டமான விஷயம்.அதை புரிய வைப்பதும் மிகவும் கஷ்டமே! என்னுள் ஆசைகளோ ஆஸக்திகளோ கிடையாது.நான் மற்ற அரசர்களும் சமன் போல் அரசாட்சி செய்வேன்.மற்றவர்கள் போதம் தெளிந்தவர்களானாலும் இல்லையென்றாலும் அது என்னை எந்த விதத்திலும் பாதிக்காது.நான் சமன் மனோ நிலையை அடைந்து விட்டேன்.
” இந்த சரீரம் இருக்கும் வரை நான் இந்த அரசு பொறுப்பை நிர்வகிப்பேன்.தூய பார்வையோடு, சம்சாரத்தைக்குறித்து எந்த சந்தேகங்களோ சஞ்சலங்களோ இல்லாமல், ஒரு குழந்தை எப்படி விளையாட்டில் ஈடுபடுமாறு அது போல் நானும் வாழ்க்கையை நடத்துவேன்.”
வசிஷ்டர் சொன்னார்:” பேஷ் , இராமா, பலே இராமா! நீ உறுதியாக இன்ப- துன்பங்களுக்கு அப்பாற்ப்பட்ட ஒரு பரம பதத்தை அடைந்து விட்டாய்.இகலோகத்திற்கும், பரலோகத்திற்கும் புறம்பான சத்தியத்தை கண்டு விட்டாய்! இனி நீ, விசுவாமித்திர முனியின் உபதேசங்கள் படி நடந்து கொண்டு அந்த கடமைகளை முழுமிப்பித்து விட்டு அரசு பொறுப்பை ஏற்றுக் கொள்ளலாம்!”
மீண்டும் அரசவை மகிழ்ச்சி ஆரவாரம் செய்தது.
இராமன் கூறினான்:” பகவான் , அக்னி எப்படி தங்கத்தை புடம்போட்டு மாசற்றதாக்குகிறதோ, அதுபோல் தாங்கள் எங்கள் இதயங்களை தூய்மைப்படுத்தி விட்டீர்கள். தன் சரீரம் தான் எல்லாம் என்று எண்ணியிருந்த நாங்கள் இப்பொழுது விசுவத்தை ஒரே ஆத்மாவாக காண்கிறோம்.நான் சந்தேகம் ஏதும் இல்லாதவன் . நான் இருப்பின் பரமோன்னதமான நிலையிலுள்ளேன்.அழிவில்லாத அதற்கு இணையில்லாத, வார்த்தைகளில் விளக்க முடியாத ஆனந்தம் என்னில் உதயமாகியுள்ளது.பரம விஞ்ஞானமுளவாக்கின்ற வார்த்தைகளான அமுதை உண்டு என் இதயம் தூய ஆனந்தத்தை அனுபவிக்கின்றது.உலகம் அழிவில்லாததும் எல்லைகளில்லாததும் ஆன சத் ஆக அது என்னில் ஒளிர்கிறது என்றால் தங்கள்கிருபையால்த்தான்.