Category Archives: அஷடாவக்கிரரின் மணிகள்

அஷ்டாவக்கிரமணிகள்

Wednesday, 29 July 2015அஷ்டாவக்கிர மணிகள்

 அஷ்டாவக்கிர மணிகள்
மணி 1 ஓசை 5

சாஸ்திரம் பொய்ப்பதில்லை !

கதம் ஞானமவாப்நோதி

கதம் முக்திர்பவிஷ்யதி

வைராக்யம் ச கதம் ப்ராப்த

மேதத் ப்ருஹி மம ப்ரபோ!
ஞானத்தை எவ்வாறு அடைவது? மோக்ஷம்( முக்தி) எவ்வாறு பெறுவது? எவ்வாறு வைராக்யத்தை உறுதிப் படுத்திக் கொள்வது? என்கின்ற ஜனகரின் மூன்று முக்கியமான கேள்விகளுடன் துவங்குகின்ற அஷ்ட வக்கிர சம்வாதம் 20 அத்தியாயங்களில் முன்னூற்றிற்கும் மேற்பட்ட சுலோகங்களாக விரிவடைந்து உலக சிருஷ்டி தத்துவத்தையும் ஆத்ம சாக்ஷத்காரம் அடைவதற்கான வழி முறைகளையும் தெளிவாக விவரிக்கின்றது.

பகவத் கீதை போன்ற விரிவான நூல் அல்ல இது. என்றாலும் மிகவும் சுருங்கச்சொல்லி புரியவைக்கின்ற நூல் இது.
எல்லா மிதிலை மன்னர்களையும் ஜனகர் என்றே அந்த நாட்களில் கூறி வந்தார்கள். ராமாயண சீதா பிரட்டியின் தந்தை ஜனகனும் அந்த வரிசையில் வந்த ஒரு மிதிலாதிபதி தான். .ஆனால் இந்தக் கதை சீதாபிராட்டியின் தந்தை ஜனகர் சம்பந்தப் பட்டதாக தெரியவில்லை ஆனால் ஒன்று மட்டும் உறுதி: அன்றைய அரசர்கள் ராஜ்ய பரிபாலனத்தில் மட்டுமல்லமல் வேத-வேதாந்தங்களிலும் தேர்ச்சி பெற்றவர்களாயிருந்தார்கள்.
மேற்கூறிய கேள்வியை கேட்ட ஜனகர் வேத-வேதாந்த பயிற்சியில் முதற்படியில் நிற்கின்ற மாணவனல்ல. நன்றாக கற்றறிந்தவர். அறிவு வேறு, ஞானம் வேறு, என்று புரிந்துகொண்டு மேற்கண்ட கேள்விகளை கேட்கிறார்.
ஆகவே அஷ்டவக்கிரரின் பதில்களும் வேதாந்தத்தின் அரிச்சுவடியாக இல்லாமல் ஒரு உயரிய நிலையிலேயே ஆரம்பிக்கின்றது

   முக்திமிச்சசி சேத்தா த

விஷயான் விஷவ்த்ய ஜ

க்ஷமா ர்ஜ்ஜவதயா தோஷ

சத்யம் பீயூஷ வல் பஜ

அஷ்டவக்கிரர் நேரடியாக பதில் கூறுகிறார்:

“குழந்தாய், உனக்கு முக்தி வேண்டுமென்றால், நீ விஷயங்களிலுள்ள வாசனைகளை விஷம் என புறந்தள்ள வேண்டும். நீ க்ஷமை( பொறுமை), ஆர்ஜ்ஜவம் (நேர்மை), தயா (கருணை), சம்திருப்தி( போதும் என்ற மனம்), சத்யம என்கின்ற குணங்களை அமுது போல் கைவரிக்க வேண்டும்
அஷ்டவக்கிரரின் இந்த பதிலிருந்து நாம் புரிந்து கொள்ளவேண்டியது இஹலோக விஷயங்களால் ஒரு பொழுதும் நாம் திருப்தி அடைய முடியாது. நிறைவு என்பது கானல் நீராகத் தான் இருக்கும். விஷய வாசனைகளை விட்டொழித்தால்த் தான் நிரந்தரமான மகிழ்ச்சியையும் நிறைவையும் பெறமுடியும். உலக விஷயங்களில் ஈடுபட ஈடுபட நமது அவைகள் மீதுள்ள ஆசைகள் பெருகிக்கொண்டே இருக்கும். அவைகளை விஷம் போல் ஒதுக்க வேண்டும்.
இதன் பொருள் உலக விஷயங்களை அறவே தவிர்க்க வேண்டும் என்பதல்ல; அப்படி ஒதுக்கினால் அந்த ஆசைகள் மீண்டும் மிகவும் அதிக சக்தியுடன் முளைத்து புறப்படும்..

அந்த விஷயங்களால் கிடைக்க கூடிய மகிழ்ச்சி நிலையானதல்ல என்று புரிந்து கொண்டு, அவை விஷ சமானமானவை என்று உணர்ந்து அவைகளிலுள்ள ஈடுபாட்டை குறைத்துக் கொண்டே வந்து ஒரு நாள் அறவே ஒழித்து விட வேண்டும் என்பது தான்.

முயற்சி திருவினையாக்கும் என்பதற்கு ஒப்ப அதற்கு ஆறு குணங்கள் அவசியம்

அவை தான்,

பொறுமையும் விடா முயர்ச்சியும்,

மற்றவர்களின் தவறுகளை மன்னிக்கும் குணம், அல்லது சகிப்புத்தன்மை,

எதையும் நேர்வழியில் அணுகும் மனபக்குவம்,

 பிற உயிரினகளிடம் அன்பும் கருணையும் ,

எல்லாவற்றிற்கும் மேலாக உண்மையை கடைபிடிக்கின்ற துணிவு.

இந்த இடத்தில் ஒன்றை குறிப்பிடவேண்டும். சத்யம் என்றால் கண்ணால் காண்பதும் காதால் கேட்பதும் அல்ல.

மற்றவர்களுக்கு எது நன்மை பயக்குமோ அது தான் சத்யம். நன்மை பயக்க கூடியது என்றால் அவர்களுக்கு பிரியமானது என்று பொருளல்ல. அவர்களுக்கு அப்பிரியமானதாக இருந்தாலும் நாளடைவில் அவர்களுக்கு நன்மை பயக்கும் என்றால் அதைத்தான் நாம் சொல்ல வேண்டும்,ஆதரிக்க வேண்டும்.
அஷ்டவக்கிரர் இந்த சம்வாதத்தில் நிறைய இடங்களில் ஜனகரை கண்டித்து அவரது தவறுகளை சுட்டிக் காட்டி கடைசியாக ஜனகரின் அஹந்தையை அழித்து அவருக்கு ஞான ஸாக்ஷாத்காரம் பெறும்படி செய்கிறார்.

இப்படிப்பட்ட இந்த சம்வாதம் தோன்றுவதற்கான சூழ் நிலை மிகவும் சுவாரசியமானது. எப்படி ஒரு குருவால் ஒரு சில நொடிகளில் ஒரு உத்தம சீடனை உண்மையை புரிய வைக்க முடியும் என்பதற்கான ஒரு சிறந்த உதாரணம் இந்த கதை.
ஜனகர் மிகுந்த அறிவாளி என்றும் அவர் எப்பொழுதும் வித்துவான்களை தனது அரசவையில் ஆதரித்து வந்தார் என்றும் கூறினோம் அல்லவா?

அதன்படி தினமும் ஒரு பிரம்மசாரி வேதங்களை ஜனகர் முன்னிலையில் படித்துக் காண்பிப்பது வழக்கம் ஒரு நாள் வேதத்தில் வருகின்ற கீழ்கண்ட வாக்கியத்தை அவன் படித்தான்:
“குதிரையின் அங்கவடியில் ஒரு காலை வைத்து ஏறி இரண்டாவது காலை உயர்த்துவதற்கு முன் பிரம்மஞானம் பெறலாம்.”

ஜனகனுக்கு இந்த வாக்கியம் உண்மையாக இருக்க முடியாது என்று தோன்றியது.

ஆகவே திரும்பத் திரும்ப இந்த வாக்கியத்திலுள்ள பொருள் கற்பனை இல்லையே என்று கேட்டான். அந்த பிரம்மசாரியும் ,”ஆமாம், உண்மை தான்”. என்று கூறினான்.

“அப்படியானால் நிரூபித்து காட்டு, நான் ஒரு குதிரையை வரவழைக்கிறேன்,” என்றான் ஜனகராஜன்.

அதற்கு அந்த பிரம்மசாரி,’’எனக்கு அவ்வளவு திறைமை இல்லை. ஆனால்,அந்த வாக்கியம் பொய்யில்லை.” என்று பதில் கூறினான்.

ராஜா அந்த பையனை சிறையிலிட்டார். பிறகு அரசவையிலுள்ள ஒவ்வொரு பண்டிதர்களிடமும் அதே கேள்வியை கேட்டான் ஜனகன்.

எல்லோரும் ஒரே மாதிரியான பதிலையே கூறினார்கள்.

“அந்த வாக்கியம் உண்மை, ஆனால் அதை நிரூபிக்கக் கூடிய திறமை என்னிடம் இல்லை.”

அரசன் அவர்கள் எல்லோரையும் சிறையிலிட்டான்.

எந்த ஒரு பண்டிதன் மிதிலா நகருக்கு வந்தாலும் அதே கதி தான்.

அப்படியிருக்கும் பொழுது ஒரு நாள் அஷ்டாவக்கிர மகா முனிகள் மிதிலா நகரின் கோட்டைக்கு வெளியே ஒரு மரத்தடியில் இளைப்பாறிக்கொண்டிருந்தார். அங்கு வந்த பிராம்மணர்களிடம் இந்த நாட்டை ஆளும் ராஜா எப்படிப்பட்டவர்? மிகுந்த அறிவாளியா? தான தருமம் செய்யக் கூடியவரா? என்றெல்லாம் கேட்டார். அவர்கள் அங்கு நடக்கின்ற சம்பவத்தை விவரமாக கூறினார்கள்.

முனிகள் அவர்களிடம், “எப்படியாவது ஒரு பல்லக்கிற்கு ஏற்பாடு செய்து என்னை ராஜனிடம் அழைத்து செல்லுங்கள்,” என்றார்.

“அந்த சாஸ்திர வாக்கியத்தை நிரூபித்து சிறையிலிருக்கும் எல்லா பண்டிதர்களையும் விடுவிக்கிறேன்” என்றும் கூறினார்.
அப்படி அஷ்டாவக்கிர முனிகள் அரசவைக்கு வந்து சேர்ந்தார்.

அந்த தேஜோமயமான முனிவரைக் கண்டதும் ராஜன் சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்து விட்டு,,”சுவாமி தாங்கள் இங்கு எழுந்தருளியதற்கான காரணம் யாதோ? என்னால் ஆகவேண்டிய காரியம் ஏதேனும் இருப்பின் தயை கூர்ந்து தெரிவிக்க வேண்டும்” என்று வினயமாக கேட்டுக்கோண்டான்.
முனிவருக்கு ராஜனின் பணிவைக் கண்டு மகிழ்ச்சி ஏற்பட்டாலும்,அதை காண்பித்துக் கொள்ளாமல், “எந்த அபராதத்திற்காக பண்டிதர்களையெல்லாம் சிறையிலிட்டுள்ளாய்? அதை முதலில் கூறு . பிறகு என்னைப் பற்றி விசாரிக்கலாம்” என்றார்.
ராஜனும் நடந்ததை எல்லாம் கூறி தன் சந்தேகத்தையும் கூறினான்

“ஒரு சாஸ்திர வாக்கியத்தை நிரூபிக்கவில்லை யென்பதற்காக அதை கற்பனையென்றோ பொய் என்றோ.கூறலாமா? நான் அதை அக்ஷரம் பிரதி சரியென்று உறுதி கூறுகிறேன்,” என்றார் முனிவர்.
ராஜன் அவரிட்மும் ,” அப்படியென்றால் நான் குதிரையை வரவழைக்கிறேன்; தாங்கள் நிரூபித்து காண்பித்து என்னை அனுக்கிரகிக்க வேண்டும்,” என்றான்.
“சந்தோஷம். உன் எண்ணம் உத்தமமானது தான்.ஆனால் அதை தெரிந்து கொள்வதற்கு நீ என் சீடனாக வேண்டும். சீடனாவதற்கு நீ தகுதியானவன் தானா என்று நான் சோதித்து அறிந்து கொள்ளவேண்டும். முதலில் குருவின் வார்த்தையில் நம்பிக்கை வேண்டும். என் மீது நம்பிக்கை இருந்தால் பண்டிதர்களை யெல்லாம் சிறையிலிருந்து விடுவித்து விட்டு என்னுடன் காட்டிற்கு வா. உன் தகுதியை சோதித்து பிறகு உபதேசம் செய்கிறேன்,” என்றார் முனிவர்.
ஜனகருக்கும் முனிவரின் மீது அதீதமான பக்தியேற்பட்டு பண்டிதர்களையெல்லாம் சிறையிலிருந்து விடுவித்து விட்டு ஒரு குதிரையில் ஏறி பரிவாரங்கள் சகிதம் முனிவரை பின் தொடர்ந்தான்.
கோட்டைக்கு வெளியே ஒரு ஆலமரத்தடியில்,முனிவர் பல்லக்கிலிருந்து இறங்கி ,அரசனையும் குதுரையிலிருந்து கீழே இறங்கச் சொன்னார்.

“ இந்த பரிவாரங்களெல்லாம் உபதேசதிற்கு தேவையில்லையே? அவர்களை அனுப்பிவிடு ,” என்று முனிவர் கூற அரசனும் அங்கனமே செய்தான்.
பிறகு முனிவரின் அனுமதியுடன் அரசன் குதிரையின் அங்கவடியில் ஒரு காலை வத்து ஏறி இரண்டாவது காலை உயர்த்த முயன்ற பொழுது, “ இரண்டாவது காலை அங்கவடியில் வைப்பதற்கு முன் என்னுடைய கேள்விகளுக்கு பதில் சொல்.” என்றார் முனிவர்.

“அப்படியே ஆகட்டும் “ என்றான் அரசன்.

“சாஸ்திரத்தில் ஞானம் பெறுவதற்கு குரு வேண்டுமென்று கூறியிருக்கிறதா ? இல்லையா?”

‘இருக்கிறது முனிவரே”

“அப்படியென்றால் எனக்கு குரு தக்ஷிணை கொடுத்து குருவாக எற்றுக்கொண்டால் தான் நான் உனக்கு உபதேசம் செய்ய முடியும்” என்றார் முனிவர்.

அரசனும் தயங்காமல்,” இந்த க்ஷணமே என் உடல், உள்ளம்,பொருள் எல்லாவற்றையும் தங்கள் பாதங்களில் சமர்ப்பிக்கிறேன். என்னை சீடனாக ஏற்றுக்கொள்ளுங்கள் குருவே,” என்று ஜனகன் வேண்டினான்.
“அப்படியே ஆகட்டும்” என்று கூறிவிட்டு முனிவர் பக்கத்திலிருந்த புதருக்குள் சென்று மறைந்து விட்டார்..
ராஜா குதிரையின் அங்கவடியில் ஒரு கால் வைத்த நிலையிலும் மறு கால் பூமியிலிருந்து எடுக்கும் நிலையிலும் அப்படியே நகராமல் நின்றார்.

பகல் சென்று இரவு வந்தது. அரசன் அசையவில்லை.
அரசன் திரும்பி வரவில்லையே என்று மந்திரி பிரதானிகளும் ஏனையோரும் கவலையடைந்து காட்டிற்கு வந்து பார்த்தார்கள்.

ராஜன் அசையாமல் சிலை போல் அங்கவடியில் ஒரு காலும் பூமியில் ஒரு காலுமக நின்று கொண்டிருந்தார். முனிவரை எங்கு தேடியும் காணோம்

 மந்திரி பிரதானிகள் ராஜனிடம் “வாருங்கள் அரண்மனைக்குப் போகலாம்”, என்றார்கள். அரசன் அசையவும் இல்லை ; பதில் எதும் கூறவுமில்லை.

 இரவு ஏறிக்கொண்டே போயிற்று

மிகுந்த நேரத்திற்குப் பின் மந்திரி பிரதானிகள் ராஜாவை அப்படியே பல்லக்கில் தூக்கி வைத்து அரண்மனைக்கு கொண்டு வந்து கட்டிலில் படுக்க வைத்தார்கள்.

அரசன் சலனமில்லாமல் கட்டிலில் படுக்க வைத்த நிலையிலேயெ படுத்து கிடந்தார்.

பேசவில்லை என்றுமட்டுமில்லாமல் ஆகாரமோ ஜலமோ கொடுத்தாலும் விழுங்கவுமில்லை.

ராணி மற்றும் அரசவை பிரதானிகள் எல்லாருக்கும் மிகவும் கவலையாகிவிட்டது.

எல்லோருக்கும் ஒன்றுமட்டும் புரிந்தது, ‘அஷ்டவக்கிர முனிவர் வந்தால் தான் நிலைமை மாறும்’

மறு நாள் சூரியாஸ்தமனத்திற்குப் பின் சேவகர்கள் எங்கெல்லாமோ தேடி அலைந்து அஷ்டாவக்கிரரை கண்டு பிடித்து பல்லக்கிலேற்றி கூட்டிக் கொண்டு வந்தார்கள்.

அவரிடம் மந்திரி பிரதானிகள் நிலைமையை விளக்கிக் கூறினார்கள்.

முனிவர் ராஜன் அருகில்ச் சென்று ,” ராஜன்!” என்று அழைத்தார்.

“என்ன சுவாமி ஆக்ஞை?” என்று பதில் கொடுத்தார் ஜனகர்.

எல்லோருக்கும் ஆச்சரியமாகிவிட்டது. தாங்கள் எவ்வளவு கேட்டும் பதில் கூறாத அரசர் முனிவரின் முதல் கேள்விக்கே பதில் கூறியது வியப்பாக இருந்தது.

“நீ எழுந்து ஆகாரம் எடுத்துக்கொள்,” என்றார் முனிவர்.

அரசர் எழுந்து ஆகாரம் உட்கொண்டுவிட்டு மறுபடியும் எந்த அசைவும் இல்லாமல் உட்கார்ந்து விட்டார்..

“தயவு செய்து எங்கள் பிரபுவைப் பழைய நிலைக்கு வரச் செய்யுங்கள்,” என்று மந்திரி கேட்டுக் கொண்டார்.

முனிவர் ‘சரி ‘ என்று சொல்லி எல்லோரையும் வெளியே அனுப்பிவிட்டு கதவை சாத்தினார். பிறகு ராஜனிடம் வந்து

“ராஜன் ஏனிப்படி நிச்சலனமாக உட்கார்ந்திருக்கிறாய்?”என்றார்.

அதற்கு ஜனகர் “சுவாமி,இந்த சரீரத்தின் மீது எனக்கு எந்த விதமான சொந்தமும் கிடையாது. இந்த கைகள்,கால்கள்,நாக்கு காது, கண்கள் முதலிய சர்வேந்திரியங்களும் எனதில்லை.இந்த ராஜ்ஜியம் எனதில்லை.உண்மையாகவே என் உடல் ,பொருள்,உள்ளம், அனைத்தையும் உங்கள் பாதங்களில் அர்ப்பித்து விட்டேன்.ஆகையால் உங்கள் அனுமதி இல்லாமல் எவ்விதமான செயலுக்கும் நான் உரிமை இல்லாதவன்.அதனால்தான் இப்படியிருக்கிறேன்.” என்றார்.

 அஷ்டவக்கிரர் மிகவும் மகிழ்ச்சியடைந்து, “நீ ஞானோபதேசத்திற்கு சர்வ தகுதியையும் பெற்றுவிட்டாய்.நீ இப்பொழுது பிரம்ம சொரூபம். நீ முக்தனாகிவிட்டாய்.அகண்ட சச்சிதானந்த ஸ்வரூபமே நீ,” என்று ஆசீர்வதித்தார்.

ஜனகரோ ‘எப்படி நான் ஒரு நாளில் இப்படி பிரம்ம சொரூபமானேன்? பேத உண்ர்ச்சியும்,மனோ விகாரமும் போகாத அஞ்ஞானியன்றோ நான்,” என்று மனதுக்குள்ளேயே தர்க்கித்துக் கொண்டு,முனிவரை நமஸ்கரித்து கேட்டுக்கொண்டார்,

கதம் ஞானமவப்னோதி கதம் முக்திர் பவிஷ்யதி

வைராக்யஞச கதம் ப்ராப்தம் ஏதத் ப்ருஹி மம ப்ரபோ?
இந்த கேள்வியுடன் ஆரம்பித்த ஜனக-அஷ்டாவக்கிர சம்வாதம் இரவு முழுவதும் நீண்டு நின்றது.

காலையில் கதவை திறந்து கொண்டு வந்த மன்னரையும் முனிவரையும் பார்த்து எல்லோரும் வியந்தார்கள்.

அப்பொழுது, முனிவர் “ராஜன் இன்னும் உனக்கு சந்தேகம் ஏதாவது இருக்கிறதா?ஒருகாலை குதிரையின் அங்கவடியில் வைத்து அடுத்த காலை வைப்பதற்கு முன் பிரம்ம ஞானம் பெறமுடியுமா?” சிரித்துக்கொண்டே கேட்டார்.

ஜனகர் சொன்னார்,”இப்பொழுது எனக்கு எந்த விதமான சந்தேகமும் இல்லை.எல்லா சாஸ்த்திர வாக்கியங்களும் உண்மை தான்.”.

குருவென்பவர் பிரம்ம ஞானி. அவர் பரமாத்மாவே. அவரிடம் பூரணமாக சரணடைந்து விட்டால் நாம் ஆத்ம ஸாக்ஷாத்காரம் அடைந்து விடுவோம் என்பதை விளக்குகிறது மேற்கூறிய கதை.

வைஷ்ணவத்திலுள்ள பூரண சரணாகதி தத்துவமும் இதையே தான் அடிக்கோடிட்டுக் காண்பிக்கிறது. பூரண சரணாகதி அடைந்து விட்டால் பிறகு நமக்கு என்று ஒன்றும் கிடையாது. அங்கு ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்றாகிவிடுகிறது. நமது விஷய வாசனைகள் எல்லாம் அற்றுப் போய்விடும்.

.

Posted by RHS 

அஷ்டாவக்கிரமணிகள்1

Sunday, 15 February 2015Ashta vakara maanikaL
மணி ஒன்று—ஓசை 1

முன்னுரை

ஆலயங்களில் மணியடிக்கும் பொழுது அதில் ஒரு தாளம் இருக்கும்.ஒரு முறை ஆலய மணியை அடித்தால் அப்பொழுது எழும் ஓசை சில வினாடிகளுக்கு ரீங்கரித்துக்கொண்டிருக்கும். அந்த ரீங்காரம் ஓயும் முன் அடுத்த மணி ஒலிக்க ஆரம்பிக்கும்..தொடர்ந்து மணியின் ஓசை கேட்டுக்கொண்டே இருக்கும்.
ஆலயத்தில் தீபாரதனை நேரத்தில் ஆலய மணிகளின் ரீங்காரம் நம் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கும்.அந்த ரீங்காரம் நம் மன அழுக்குகளைய்எல்லாம் நீக்கி நம்மை புனிதப்படுத்தும்.

அது போல் அஷ்டா வக்கிர கீதை அல்லது அஷ்டாவக்கிர சம்ஹிதை அல்லது அஷ்டாவக்கிர ஜனக சம்வாதம் நமது மனதை புனிதப் படுத்தி ஆத்மசாக்ஷாத்காரம் அடைவதற்கு உதவும்.

இந்த கீதையில் ஜனகர் கேட்கும் தெள்ளத் தெளிவான கேள்விகளும்,அஷ்டாவக்கிர முனீவர் அளிக்கின்ற நெற்றியடி போன்ற பதில்களும் ஏற்படுத்துகின்ற ரீங்காரம் நமது காதுகளில் நீண்ட நாட்களுக்கு ஒலித்துக் கொண்டேயிருக்கும்.அது ஏற்படுத்துகின்ற தாக்கம் நம்மை சிந்திக்க வைத்து நாம் யார் என்ற உண்மையை வெளிக்கொணரும். 
இப்படிப்பட்ட நூலினுள் புகுந்து அதன் மணி நாதம் எழுப்பும் சங்கீதத்தை அனுபவிக்கும் முன் நாம் இந்த நூலப் பற்றி சில விவரங்களைத் தெரிந்து கொள்வோம்

இந்த கீதை பகவத் கீதையைப் போல் அவ்வளவு பிரபலமானதல்ல. இதற்கு எழுதப் பட்டுள்ள வியாக்கியானங்களும் பகவத் கீதையோடு ஒப்பிடும்பொழுது எண்ணிக்கையில் மிக குறைவே.

இதற்கு முக்கியமான காரணம் இதில்கூறப்பட்டுள்ள ஞானமார்க்க விசாரங்கள் யாருடைய வாழ்க்கையையும்   

அடிப்படையாக கொண்டதல்ல. இதில் அரசியல் இல்லை;ராஜ தந்திரங்கள் இல்லை;போட்டாப்போட்டிகள் இல்லை. இதில் உணர்ச்சிகளுக்கு இடமில்லை. கால தேச பாகுபாடுகள் இல்லை.

இது ஒரு முனை வாள். இந்த கீதையில் சமரசம் இல்லை.

பகவத் கீதை பக்தி மார்க்கம்,கர்ம மார்க்கம்,மற்றும் ஞான மார்க்கம் மூன்றின் ஒருங்கிணைந்த சமரச வேதாந்தம்.ஒவ்வொருவரும் அவரவர்களுக்கு வேண்டியதை எடுத்துக்கொள்ளலாம். அவரவர் மனோ தர்மப் படி வியாக்கியானமும் செய்து கொள்ளலாம். செய்திருக்கிறார்கள். இரண்டு எதிர் மறையான வியாக்கியானங்களை மட்டும் நினைவு படுத்திக்கொள்ளலாம்.பகவத் கீதை ஒரு யுத்தத்தை ஊக்குவிக்கும் நூல் என்று ஒரு சாராரும்,பகவத்கீதை சமாதானத்திற்கும் மனித சாந்திக்கும் வழி வகுக்கும் நூல் என்று இன்னொரு சாராரும் வாதிடுகிறார்கள். நீதிமன்றங்களின் படிகளேறுகிறார்கள்.

அஷ்டவக்கிர கீதையில் மாற்று வியாக்கியானங்களுக்கு சற்றும் இடமில்லை.அஷ்டவக்கிரர் உண்மையின்-உண்மையின் மட்டுமே வக்காலத்து வாங்குகிறார்.

பகவத் கீதை துவைதிகளுக்கும், அத்வைதிகளுக்கும் விசிஷ்டாத்வைதிகளுக்கும் ஏன் நாத்திகர்களுக்கும் கூட இடமளிக்கிறது. சகுணோபாசனை, நிற்குணோபாசனை இரண்டையும் எற்றுக்கொள்கிறது,

அஷ்டாவக்கிரர் கேட்பவனைக் குறித்து அதிகம் கவலை கொள்ளவில்லை. கேட்பவன் புரிந்துகொண்டால் அவனுக்கு நல்லது;புரிந்து கொள்ளாவிட்டாலும் உண்மை உண்மையல்லாமலாகி விடாது.

.

புரிந்துவிட்டது என்றாலும் அவர் விடுவதாயில்லை.கேட்பவர் புரிந்துகொண்டுவிட்டார் என்று அவருக்கு நிரூபணமாக வேண்டும். அஷ்டாவக்கிரரிடமிருந்து நமக்கு எந்த விதமான மத கோட்பாடுகளும் கிடைப்பதில்லை.நாம் அதில் ஒன்றையும் சேர்க்க இயலாது.நம்மை இழந்தால் தான் அவர் சொல்லுகின்ற உண்மை நமக்குப் புரியும்.

ஆகவே இந்த பயணம் ஒரு வித்தியாசமான பயணம்.

 நவீன இந்தியாவின் சிற்பிகளில் யாரும் திலகரோ, காந்திஜியோ, அரவிந்தரோ வினோபாவோ யாரும் அஷ்டாவக்கிரரை மேற்கோள் காட்டியதில்லை.

அஷ்டாவக்கிரர் ஒரு நிர்மலமான ஆகாயம்;அதில் மேகங்கள் இல்லை;சூரிய சந்திரர்க்ளில்லை;உண்மை மட்டுமே உள்ளது.

நாம் எல்லா நாம ரூபங்களையும் அவிழ்த்து விட்டு நிர்வாணமாக இருக்க வேண்டும் .அப்பொழுதுதான் உண்மை கண்ணுக்குத் தெரியும்.

அஷ்டாவக்கிரரை புரிந்துகொள்ள நாம் எந்த விதமான தியானமும் செய்ய வேண்டாம்;கண்ணை மூடிக்கொண்டோ திறந்துகொண்டோ, துளசிமணி மாலையை உருட்டிக்கொண்டோ உருட்டாமலோ ராம நாமமோ வேறு எந்த நாமமோ ஜபிக்கவேண்டாம்..நாம் சாக்ஷி மாத்திரமானால் போதும்.

அஷ்டாவக்கிர கீதைக்குள் நுழையும் முன் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய சில விவரங்கள் கீழ்க்காணும் கேள்விகளுக்கான பதில்களிலுள்ளது.
 .

இந்த நூல் எந்த காலகட்டத்தில் எழுதப்பட்டது? பகவத் கீதைக்கு முன்னா? பின்னா ?

 

இதை எழுதியது யார் ?

 

இந்த நூலின் தன்மை எப்படிப்பட்டது?

 

இந்த நூல் மற்ற வேதாந்த கிரந்தங்களிலிருந்து எப்படி மாறுபடுகிறது?

 

இதன் உள்ளடக்கம் யாது

இவைகளுக்கான பதில்களை அடுத்த ஓசையில் கேட்போம்.

.

Posted by RHS at 19:59 

Email This

அஷ்டாவக்கிரமணிகள் 11

மணி 3.                       ஓசை 2

நானே பரமன், பரமனே நான்!

‘நானன்றி வேறில்லை.ஏகவும் ஒன்றேயொன்றுமான பரமாத்மாவே அனேகமாக காட்சியளிக்கின்றான். ஆகவே நானே அந்த பரமமனாக இருப்பதால்

 எல்லாமே என்னுடையது தான்.ஆனால் என்னையின்றி வேறொன்றில்லையெனும்பொழுது எனது என்று சொல்வதற்கு என்ன இருக்கிறது. ‘எனது’ என்று ஒன்றுமேயில்லை. நானுமில்லை. நானே அந்த பரமன். பரமனே நான்.’ என்று புரிந்துகொண்டு விட்டேன் என்று கூறிய ஜனகர் உபநிஷத்துக்களிலும் மற்ற வேத சாஸ்திரங்களிலும் கூறப்பட்டுள்ள உதாரணங்களைக் கொண்டு தனது கருத்தை வலுப்படுத்துகிறார் அடுத்த மூன்று சுலோகங்களில்.

ஸ ஶரீரம் அஹோ விஶ்வம் பரித்²யஜ்ய மயாது⁴னா

குத²ஸ்சித² கௌஶலாதே³வ பரமாத்²மா விலோக்யதே²

स शरेएरम् अहो विश्वम् परिथ्यज्य मयाधुना

कुथस्चिथ कौशलादेव परमाथ्मा विलोक्यथे-2

sa shareeram aho vishvam parithyajya mayaadhunaa

kuthaschitha kaushalaadeva paramaathmaa vilokyathe

வார்த்தைகளின் பொருள்

Sasareeram-ஸ ஶரீரம்.    =     சரீரத்துடன் with body, Aho-அஹோ.   =      ஓ ! Oh!

Viswam- விஶ்வம்.=   உலகம் Universe, Parithyajya -பரித்யஜ்ய = கைவிடுதல் abandon

Maya -மயா     =        என்னால் by me,  Adhuna. .-   அதுனா.  =   இப்பொழுது now

Kuthaschit -குதாஶ்சித்.   =   எதனாலும் through some, Kaushala.  – கௌஶல.=    

சாமர்த்தியத்தினால் skill or dexterity,  Eva- ஏவ.      =       மட்டுமே Only

ParamAthma -பரமாத்மா. =    பரமாத்மனால் by supreme self 

Vilocyate -விலோக்யதே. =புரிந்து கொள்ள apprehend    

பொருள் சுருக்கம்

சரீரத்தையும் உலகத்தையும் தியாகம் செய்து விட்டபின் என் போதம்  பரமாத்மனை காண்கிறது.இது எப்படி சாத்தியமாயிற்று என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. . இனம் தெரியாத ஏதோ ஒரு சாமர்த்தியத்தினால் மட்டுமே, பரமனால் மட்டுமே புரிந்து கொள்ளக் கூடிய , சாமர்த்தியத்தினால் நான் சத்தியத்தை உணர்ந்துள்ளேன்.

விளக்கவுரை

சரீரத்தின் மீதுள்ள பிடிப்பையும், பிரபஞ்ச வஸ்துக்களிடமுள்ள ஈர்ப்பையும் கை விட்டால் தான் பரமாத்மனை காண முடியும். ஏன் இந்த ஈர்ப்புக்களை கைவிட வேண்டும்?  ஏனென்றால் இரண்டுமே சத் அல்ல. அவை இரண்டும் ஆத்மாவின் பிரதிபலிப்புக்கள்தான். அவை பிரமைகளை உண்டு பண்ணுகின்றன. அந்த ஈர்ப்புக்களோ ஜீவாத்மாவை பந்தனித்திற்காட்படுத்துகிறது.இன்னுமொரு காரணம் இவை இரண்டும் மனதின் போக வஸ்துக்கள்.பிரபஞ்சமும் அதிலுள்ள வஸ்துக்களும் ஜீவாத்மாவை பரமாத்மாவின் மீதுள்ள பற்றை மற்ற பொருட்களின் மீது திருப்பி விடுகிறது.அவை ஆஸக்திகளாக பரிணமித்து பகவானிலிருந்து நம்மை அகற்றுகிறது.மனமும் சரீர இந்திரியங்களும் பிரபஞ்ச வஸ்துக்களுடன் சதா தொடர்பு ஏற்படுத்திக்கொண்டு, கண நேர இன்பத்திற்காக சஞ்சலப்படுகிறது. உலக விஷயங்கள் சரீரத்திற்கும் மனதிற்கும் உணவாக அமைகிறது. அவை மாசு தான். தூய்மை வேண்டுகிறவர்கள் இந்த மாசுகளை அகற்ற வேண்டும்.

தேகத்தின் மீதுள்ள பற்றையும் பிரபஞ்ச வஸ்துக்களின் மீதுள்ள பற்றையும் ஒரே நேரத்தில் தியாகம் செய்தால்த் தான் பரமனை காண முடியும்.

இவைகளை தியாகம் செய்வது என்றால் இவைகளிடமுள்ள ஆஸக்தியை- ஆசைகளை தியாகம் செய்ய வேண்டும்; நம் செயல்களின் பலன்கள் மீதுள்ள எதிர்பார்ப்பை தியாகம் செய்ய வேண்டும். ஆசைகளுடன் செய்யப்படும் செயல்கள் கர்மங்களாக பரிணமித்து பந்தத்தை- பந்தனத்தை உண்டு பண்ணுகிறது. ஆகவே தான் வேத சாஸ்திரங்கள்  நிஷ்காமிய கர்மத்தை வலியுறுத்துகின்றன. நாம் வாழ்வது இந்த சரீரத்திற்காக இல்லை; சரீரத்தின் மீதுள்ள ஆசைகளை விடுவது தான் நமது வாழ்வின் இலட்சியமாகிய இருக்க வேண்டும்.அப்படி செய்யப்படுகின்ற தியாகம் ஆத்மாவை உலக பந்தங்களிலிருந்தும் விடுவிக்கின்றன.ஆகவே இந்த தியாகம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.அந்த விடுதலை காமக் குரோத பொறாமை, பேராசை, அகங்காரம் எல்லாவற்றிலிருந்தும் கிடைக்கும் விடுதலையாகும்.

ஜனகர் சொல்கிறார்,” என்னே ஆச்சரியம்! நான் இந்த தேகத்தின் மீதிருந்த ஆசையையும் பிரபஞ்ச வஸ்துக்களின் மீதிருந்த ஈர்ப்பையும் கைவிட்டு விட்டேன்.”

‘ அஹோ’ என்ற ஒரு வார்த்தையின் வழியாக தனது சாதனையையும் அஷ்டாவக்கிர முனிகளின் உபதேசத்தின் சக்தியையும் வெளிக்கொண்டு வருகிறார்.

ஜனகர் சொல்கிறார் ,’ தனக்கு விடுதலை கிடைத்தது ஏதோ தனக்கு புலப்படாத சக்தியினால்த் தான். ‘ என்று.

அந்த சக்தி எங்கிருந்து அவருக்கு கிடைத்தது? அது தானாக வந்து விடுவதில்லை.உங்கள் வழியை தேர்ந்தெடுப்பதில் மிகுந்த திறைமை வேண்டும்.அந்த திறைமை, சிதறாத கவனமும், ஆசையின்மையிலிருந்தும் தான் கிடைக்கும். அந்த விவேகம் ‘எதில் ஆசை வைக்கலாம் எதில் வைக்கக் கூடாது’ என்பது தான்!   எது ஒன்று என்றும் அழியாமலிருக்கிறதோ, எது ஒன்று மாற்றத்திற்குள்ளாகாமலிருக்கிறதோ, அதன் மீது தான் கவனம் செலுத்தவேண்டும்.அதற்கு தேவையான வைரக்கியம் வேண்டும்.

விவேகம் என்றால், சத் எது , அசத், எது  என்று பகுத்தறியும் விவேகம்! அந்த விவேகம் அஷ்டாவக்கிர மாமுனிகளின் உபதேசத்தை கேட்டதால் தனக்கு கை வந்து விட்டது என்று ஜனகர் சொன்னாலும் அது ஒரு நாள் இரண்டு நாள் முயற்சியினால் வருவதல்ல. வேத சாஸ்திரங்களை படிப்பதிலும் சத் குருவின் உபதேசத்தை கேட்பதாலுமே கைவரிக்க முடியும். எல்லாவித விஷய வஸ்துக்களையும் உதறித் தள்ளுவது அவ்வளவு எளிதல்ல! வெறும் காவியுடை அணிவதாலோ, தலையை முண்டனம் செய்து கொள்வதால் மட்டுமே இந்த தியாக மனப்பாங்கு வந்து விடாது. அதற்கு விவேகமும் வைராக்கியமும் வேண்டும். இந்த சுலோகத்தின் மூலம் தான் அவைகளை பெற்று, சரீர மோகத்தையும், விஷய ஆஸக்தியையும் உதறித்தள்ளிவிட்டேன் என்று சொல்கிறார்.

அப்படி உதறித்தள்ளி விட்டால் அங்கு வெறும் சூன்னியம் தான்  மிஞ்சுமோ? ஜனகர் சொல்கிறார் , ‘ இல்லை, இல்லை! உலக வாழ்வில் நாம் சேர்த்து வைத்துள்ள அழுக்கு மூட்டையை தூக்கி எறிந்து விட்டோமென்றால் நம் கண்கள் தெளிந்த பார்வையை பெற்று விடுகிறது. அப்பொழுது அங்கு சுயம் பிரகாசமாக எங்கும் நிறைந்து நிற்கின்ற ஆதியும் அந்தமுமில்லாத சத் சிதானந்தனை காணமுடிகிறது.அங்கு அவன் மட்டுமேயிருக்கிறான். தானும் அவனும் ஒன்று தான் என்று புரிகிறது.’..

.இந்த புரிதலை அடுத்து வரும் சுலோகங்களில் ஜனகர் உதாரணங்களுடன் விளக்குகிறார்.

यथा न तोयतो भिन्नास्तरंगाः फेनबुद्बुदाः 

आत्मनो न तथा भिन्नं विश्वमात्मविनिर्गतम्

 யதா² ந தோயதோ பி⁴ன்னாஸ்தரங்கா³꞉ பே²னபு³த்³பு³தா³꞉ 

ஆத்மனோ ந ததா² பி⁴ன்னம்ʼ விஶ்வமாத்மவினிர்க³தம்

yathā na toyato bhinnāstaraṃgāḥ phenabudbudāḥ 

ātmano na tathā bhinnaṃ viśvamātmavinirgatm

வார்த்தைகளின் பொருள்

யதா-yayha=As, போல்,   ந–Na =Not, அல்லாமல், தோயதா:—Thoyathah=from water-

நீரிலிருந்து,  பின்னா:—-bhiinnah=Different—வேறு,  தரங்கா:—tharangah=Waves–

அலைகள்,  பேனபுத்புதா: –fens bud-Buddhah=நுரையும்’ நீர்குமிழியும்– foam and bubbles

ஆத்மன:-Atmanah=from the self- ஆத்மாவிலிருந்து , ந- Na=Not–இல்லை

ததா-that ha=  entirely– அதே போல், பின்னம்– bhiinnam= different-  வேறு

விஸ்வம்- viswam=Universe- உலகம், 

 ஆத்ம வினிர்கதம்- Atma vinirgatam.=Streaming out from self – ஆத்மாவிலிருந்து உருவானது

பொருள் சுருக்கம்

சமுத்திரத்தில் தோன்றுவகின்ற அலைகள், நுரை, நீர்குமிழிகள்  எல்லாமே அடிப்படையில் நீர் தான். எது ஒன்று 

ஒன்றிலிருந்து உருவாகிறதோ , அது மூலப் பொருளிலிருந்து வேறில்லை.

விளக்கவுரை

ஆத்மாவும் பரமாத்மாவும் இரண்டல்ல.  இருப்பது ஒன்றே! ஒன்றன்றி வேறில்லை. ஆத்மாவில் அவித்யையினால் உதயமாகும் மாயா உலகமும், தேகத்தோடுள்ள பிரியமும் உலக வஸ்துகளும் அவை தரும் விஷய சுகங்களும் எல்லாம் அசத் வஸ்துக்களே! சத் வஸ்து ஒன்றே ஒன்று தான்.அது தான் ஆத்மா. மற்றவையெல்லாம் கண நேரத்திற்கு தோன்றி மறையும் அனுபவங்களே! இதை உறுதிப்படுத்துவதற்காக  ஜனகர் சமுத்திரத்தின் உதாரணத்தை எடுத்துக்கூறுகிறார். அலைகள் ஓய்வதில்லை. நீர்க்குமிழிகளும், நுரையும் இருந்து கொண்டே தான் இருக்கும். அவையின் உண்மைத் தன்மை புரியும் பொழுது இருப்பது ஒன்றே என்று புரியும்.இது தான் அவித்யையினால் அஞ்ஞானத்தில் மூழ்கியிருக்கும் அஞ்ஞானியின் நிலையும் . அவித்யை விலகி அஞ்ஞானமெல்லாம் அழிந்து ஆத்மா நிர்மலமாகும் பொழுது இருப்பது ஒன்றே ;அது பரமனே என்பது தெளிவாகும். ‘அந்த தெளிவு நான் அடைந்து விட்டேன்’ என்று ஜனகர் அதீத நம்பிக்கையுடன் கூறுகிறார்.

மேலும் கூறுகிறார் ஜனகர்:

தந்துமாத்ரோ ப⁴வேத்³ ஏவ படோ யத்³வத்³ விசாரித꞉

ஆத்மதன்மாத்ரமேவேத³ம்ʼ தத்³வத்³ விஶ்வம்ʼ விசாரிதம்

तन्तुमात्रो भवेद् एव पटो यद्वद् विचारितः

आत्मतन्मात्रमेवेदं तद्वद् विश्वं विचारितम्!

tantumātro bhaved eva paṭo yadvad vicāritaḥ

ātmatanmātramevedaṃ tadvad viśvaṃ vicāritam 

வார்த்தைகளின் பொருள்

தந்து – மாத்ர—Thanthu- mat rah=thread only- நூல் மட்டுமே, பவேத்- bhaved= is– 

இருக்கிறதோ,  ஏவ- Eva=Certainly— உறுதியாக,  பட:–patah=Cloth-துணி, யத்வத்-

Yafvath=As– போல், விசாரித:— vicharithah= Analysed-ஆராய்ந்து

ஆத்ம- Atma=Self- ஆத்மா, ஏவ– Eva=Certainly— நிச்சயமாக

இதம்- Idham=This—இது,  தத்வத்— Tadvath=even so –அதே போல்

விஸ்வம்–viswam=Universe–உலகம், விசாரித்து Vicharitam =Examined carefully– ஆராய்ந்து 

பார்க்கையில்

பொருள் சுருக்கம்

துணி என்பது நூலே தான் . ஊடும் பாவும் சேர்ந்து துணி உருவாகிறது. ஆனால் சாதாரணமாக பார்க்கும் பொழுது துணி தான் கண்ணுக்குத் தெரியுமே தவிர நூல் கண்ணுக்குத் தெரியாது.  ஆராய்ந்து பார்த்தால் மட்டுமே துணியென்பது நூல்தான் என்று புரியும்.

விளக்கவுரை

நமது தினசரி வாழ்வில் நாம் பார்க்கும் பொருளின் வெளித்தோற்றத்தை வைத்து மட்டு மே எடை போடுகிறோம்.

ஆடைகள் அணிவதற்கு பயன்படுகின்றன. ஆகவே ஆடைகளை அப்படியே பார்க்கிறோம்.அவை உண்மையில் பருத்தி இழைகள் தான்; இல்லை , இல்லை பருத்தியே தான் என்று புரிந்துகொள்வதில்லை.ஒரு துணிக்கடையில் போய் ஒரு கிலோ பருத்தியோ அல்லது பஞ்சோ கிடைக்குமா என்று கேட்டால் எங்களிடம் பருத்தியோ பஞ்சோ கிடையாது என்று தான் பதில் வரும். ஆனால் உண்மையில் அவர்களது அலமாரியில் அடுக்கி வைத்திருப்பதெல்லாம் பருத்தியின் மாறுபட்ட தோற்றங்கள் தான் என்பதை அந்த கடைக்காரர் உணருவதில்லை. அதே போல் நமது அறியாமையினால் மனதிலுண்டாகின்ற கற்பனைகளும் பொய்த்தோற்றங்களும் தான் இந்த பிரபஞ்சம். எல்லாமே பிரம்மம் தான். இந்த அறியாமை விலகும் பொழுது மீதமிருப்பது ஆத்மா மட்டும் தான் என்று புரியும்.இந்த ஆராய்ச்சி தான் ஆத்ம விசாரணை.

இப்படி சொன்ன ஜனகர் ஒரு படி மேலே போய் எல்லாமே பரமன் தான் என்கிறார் அடுத்த சுலோகத்தில்.

யதை²வேக்ஷுரஸே க்ல்ருʼப்தா தேன வ்யாப்தைவ ஶர்கரா .

ததா² விஶ்வம்ʼ மதி க்ல்ருʼப்தம்ʼ மயா வ்யாப்தம்ʼ நிரந்தரம்

यथैवेक्षुरसे क्लृप्ता तेन व्याप्तैव शर्करा ।

तथा विश्वं मति क्लृप्तं मया व्याप्तं निरन्तरम् ।।

yathaivekSurase klRptA tena vyAptaiva zarkarA .

tathA vizvaM mati klRptaM mayA vyAptaM nirantaram

नவார்த்தைகளின் பொருள்

Yatha–யதா =போல்-As,  Eva—ஏவ= மட்டுமே–Just

Iksures–இக்‌ஷுரஸே=கரும்பின் சாற்றில்-–in the juice of the sugar cane

Kripta-க்ல்ருப்த=உண்டாகிறதோ–produced, Tena—தேன —அதனுடன்( கரும்பு ரசத்துடன்) with 

that ( juice), Vyaptha—வ்யாப்தா=பரவியிருக்கிறது—pervaded, Eva—ஏவ=முழுவதும்—

entirely, Sarkara–ஶர்கரா=சர்க்கரை( இனிப்பு)—sugar,  Yatha–ததா= அது போல்–so

Viswam–விஶ்வம்=உலகம்–universe, 

May I-மயி =என்னில்–in me, Klrptam–க்ர்ளுப்தம்=உருவாயுள்ளது—produced

Maya–மயா= என்னால்– by me, Vyaptam–வ்யாப்தம்=நிறைந்துள்ளது—permeated

Nirantaram–நிரந்தரம்—-உள்ளேயும் வெளியேயும்–within and without

பொருள் சுருக்கம்

சர்க்கரையின் ஒவ்வொரு அணுவிலும் எப்படி கரும்பின் – கரும்பு ச்சாறின் இனிப்பு பரவியுள்ளதோ, அது போல் என்னால் சிருஷ்டிக்கப் பட்ட இந்த பிரபஞ்சத்தின் ஒவ்வொரு அணுவின் உள்ளேயும் வெளியேயும் நானே நிறைந்திருக்கிறேன்

விளக்கவுரை 

இதற்கு முன் சொன்ன உதாரணங்கள் பரமாத்மனின் சர்வ வியாபியான குணத்தை முழுவதுமாக விளக்க வில்லை என்று ஜனகருக்கு தோன்றியதோ என்னவோ, மேலும் ஒரு உதாரணத்தை தருகிறார் இந்த சுலோகத்தில்.

துணியின் மூலப்பொருளே பருத்தி இழைகள் தான் என்பதில் சந்தேகமில்லை.ஆனால் ஊடும் பாவும் உருவான துணியில் ஊடிற்கும் பாவிற்கும்  இடையில் சிறு சிறு இடை வெளிகளும் இருக்கும். அங்கு பருத்தியில்லையே? ‘ அதே போல் பரமன் இல்லாத இடங்களும் இவ்வுலகிலுண்டோ’ என்ற சந்தேகம் வரலாமல்லவா! ஆகவே சர்க்கரையின் துண்டுகள் இடைவெளியில்லாத கனப் பொருள். அதன் உள்ளும் வெளியேயும் இனிப்பு தான் உள்ளது. இனிக்காத பகுதி சர்க்கரையில் கிடையாது. இந்த சர்க்கரை கரும்புச் சாறிலிருந்மு உருவானது. கரும்புக் சாறின் இனிப்பு சர்க்கரையில் எங்கும் பரவியிருக்கிறது. அது போல் பரமனால் சிருஷ்டிக்கப்பட்ட இந்த பிரபஞ்சத்தின் ஒவ்வொரு அணுவிலும் பரமனே நிறைந்திருக்கிறான். அவன் எங்கும் எப்பொழுதும் நிறைந்திருக்கிறான் என்று ஜனகர் சந்தேகத்திற்கிடமின்றி உறுதியாக கூறுகிறார் இந்த சுலோகத்தில். ஆக  பிரம்ம ததத்துவத்தை புரிந்து கொண்டு விட்டேன் என்று குருவான அஷ்டாவக்கிர முனிகளிடம் ஜனகர் மார்தட்டிக் கொள்கிறார் இந்த சுலோகத்தில் வழியாக!

(தொடரும்)

 அஷ்டாவக்கிரமணிகள் 10

மணி 3.               ஓசை 1      

ஜனகரின் புரிதல்

கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் ‘ என்னை‘     !

கோயில் மணி ஓசைகள் ஒன்று முடிந்து இடை வெளியில்லாமல் அடுத்தது ரீங்கரிக்க ஆரம்பிக்கும். 

ஒன்றுக்கொன்று தொடர்புடையவையாகவே இருக்கும். 

ஜனகரின் கேள்வியை முதல் மணியோசையில்  கேட்டோம்

கதம் ஞானமவாப்நோதி

கதம் முக்திர்பவிஷ்யதி

வைராக்யம் ச கதம் ப்ராப்த

மேதத் ப்ருஹி மம ப்ரபோஞானத்தை எவ்வாறு அடைவது? மோக்ஷம்( முக்தி) எவ்வாறு பெறுவது? எவ்வாறு வைராக்யத்தை உறுதிப் படுத்திக் கொள்வது? என்கின்ற ஜனகரின் மூன்று முக்கியமான கேள்விகளுடன் துவங்குகின்ற அஷ்ட வக்கிர சம்வாதம் 20 அத்தியாயங்களில் முன்னூற்றிற்கும் மேற்பட்ட சுலோகங்களாக விரிவடைந்து உலக சிருஷ்டி தத்துவத்தையும் ஆத்ம சாக்ஷத்காரம் அடைவதற்கான வழி முறைகளையும் தெளிவாக விவரிக்கின்றது.

இரண்டாவது மணியோசையில் குரு அஷ்டாவக்கிரர் தன் சீடன் ஜனகரின் கேள்விக்கு அளிக்கும் பதிலை கேட்டோம்

.

முக்திமிச்சசி சேத்தா த

விஷயான் விஷவ்த்ய ஜ

க்ஷமா ர்ஜ்ஜவதயா தோஷ

சத்யம் பீயூஷ வல் பஜ

அஷ்டவக்கிரர் நேரடியாக பதில் கூறுகிறார்:

“குழந்தாய், உனக்கு முக்தி வேண்டுமென்றால், நீ விஷயங்களிலுள்ள் வாசனைகளை விஷம் என புறந்தள்ள வேண்டும். நீ க்ஷமை( பொறுமை), ஆர்ஜ்ஜவம் (நேர்மை), தயா (கருணை), சம்திருப்தி( போதும் என்ற மனம்), சத்யம என்கின்ற குணங்களை அமுது போல் கைவரிக்க வேண்டும்

அதோடு நிற்காமல் அஷ்டாவக்கிரர் மேலும் கூறினார்:

‘நீ தேஹமல்ல, நீ பஞ்சபூதங்களுமல்ல; நீ எந்த வர்ணத்தை சேர்ந்தவனுமல்ல; நீ பிரம்மசாரி முதலிய எந்தவொரு ஆசிரமத்தைச் சேர்ந்தவனுமல்ல. நீ சர்வசாக்ஷி மட்டும் தான் ‘

ஜனகா, நீ அஹங்காரம் எனும் காளசர்ப்பத்தால் தீண்டப்பட்டிருக்கிறாய்; ஆகவே,’ நான் செய்கிறேன்’ என்ற கர்த்ருத்வ எண்ணத்தில் ஆட்ப்பட்டிருக்கிறாய்.. ஆகவே ‘நான் கர்த்தா அல்ல’ என்ற அமுதைப் பருகு; நித்திய சந்தோஷத்தை அடைவாய்.”

அஷ்டாவக்கிரர் தொடர்கிறார்

அஹம் கர்தேத்யஹமானமஹாக்ருஷ்ணாஹிதம்ஸித: !
நாஹம் கர்தேதி விஸ்வாசாம்ருதம் பீத்வா சுகிபவ: !!

अहम् कर्तेत्यहमानमहाक्रुष्णाहिदम्शित: !
नाहम् कर्तेति विश्वासाम्रुत् पीत्वा सुखि भव !!

.

அஷ்டாவக்கிர முனிகள் மேலும் கூறினார்

धर्माधर्म सुखम् दुखम् मानसानिन ते विभो

न कर्ताअसि न भोख्तासिसि मुक्त एवासि सर्वदा !

:

தர்மாதர்ம சுகம் துக்கம் மானசானி தே விபோ

ந கர்தாசி ந போக்தாசி முக்த ஏவாசி சர்வதா !

நல்லது –கெட்ட்து, நியாய0 அனியாயம், இன்ப- துன்பம் என்பவையெல்லாம் புத்தியையும் மனதையும் பொறுத்த்தே. அவைகளுக்கும் உனக்கும் சம்பந்தம் எதுவுமில்லை.
.

,ஜனகா, நீ அறிவாய், ‘ எதொன்று உருவத்துடன் உள்ளதோ அது நிஜமல்ல. ஏதொன்று உருவமில்லாததாக இருக்கிறதோ அது உண்மை . ஆனால் மாற்றத்திற்கு உள்ளாகதது.இந்த ததத்துவத்தைத் உணர்ந்து விட்டால் உனக்கு மறு பிறவி என்பது கிடையாது.’

என்று முடிக்கிறார் அஷ்டாவக்கிரர் இரண்டாவது மணியோசை அடங்கும்பொழுது.குருவின் இந்த உபதேசங்களைக் கேட்ட ஜனகர், தான் புரிந்து கொண்டவற்றை குருவிடம் எடுத்துரைக்கிறார் மூன்றாவது மணியோசையில்.

சாதாரணமாக குரு ஒரு பாடத்தை முடித்து விட்டு ‘புரிந்ததா ‘ சீடர்களிடம் என்று கேட்பார். அல்லது ‘ புரிந்ததை கொஞ்சம் சொல்லுங்கள், பார்ப்போம்’ என்பார். இங்கு ஜனகர் குருவின் கேள்விக்கு காத்திராமல் தான்புரிந்து கொண்டதை விளக்குகிறார்.

நாமும் கேட்போம் ஜனகரின் கூற்றை.

அஹோ நிரஜ்ஞ்ஜ்ஞன் : ஸா²ந்தோ போ³தோ⁴அஹம் ப்ரக்ருதே: பர:

ஏதாவந்தமஹம்ʼ காலம்ʼமோஹேனைவவிட³ம்பி³த: |
अहो निरज्ञ्ज्ञन् : शान्तो बोधोअहम् प्रक्रुते: पर:

एतावन्तमहं कालंमोहेनैवविडम्बित:  । 

aho nirajJjJan : zAnto bodhoaham prakrute: para:

etAvantamahaM kAlaMmohenaivaviDambita: | 

சொற்களின் பொருள்

அஹோ———————-ஓ!(ஆச்சரியம்!)

நிரஞ்சன்———————களங்கமில்லாமல், தூய

ஶாந்தோ———————சாந்தமான, அமைதியான

போதோ———————–போதம், பிரம்மம்

அஹம்————————நான்

ப்ரக்ருதே———————-இயற்கையிலேயே

பரா:————————புறம்பாக

ஏதவந்த———————-எவ்வளவு நாட்களாக

அஹம்————————-நான்

காலம்————————-காலம்

மோஹேன———————–மோகத்தின்

விடம்பித:————————–மயங்கி

பொருள் சுருக்கம்

இன்று நான் இயற்கைக்கு அப்பாற்பட்டு களங்கமற்ற தூய  போதம்( பிரம்மம்) தான்  என்று உணர்ந்து விட்டேன்.எத்தனை நாட்களாக மோகத்தின்பாற்பட்டு மயங்கி கிடந்தேன்!

விளக்கவுரை

குருவின் உபதேசங்களைக் கேட்ட ஜனகர், ‘ தான்’ ( நான்) தூய, மாசற்ற, போதம் தான் என்று உணர்ந்து,லௌகீக வஸ்துக்களுக்கெல்லாம் அப்பாற்பட்டவன் என்பதை உணர்ந்து இத்தனை யுகங்களாக வாசனைகளால், மோகங்களால், தாக்கப்பட்டு மாயா மயக்கத்தில் இருந்து விட்டோமே என்று வருந்துகிறார்.

‘ அஹோ’ என்ற வார்த்தையுடன் ஆரம்பிக்கும் ஜனக வசனம் அவரது மனதிலுண்டான ஆச்சரியத்தை ( இல்லை அது சுய பச்சாத்தாபமோ) குறிப்பிடுகிறது. ‘இவ்வளவு காலம் – இந்தப் பிறவியில்  மட்டுமல்லாமல்- எண்ணிக்கையற்ற பிறவிகளில் எப்படி தன்னை மறந்து, ( உண்மையான ‘ தன்னை ‘ மறந்து), இந்த உடல் தான் ‘ தான் என்று  எண்ணி, இந்த புத்தி, மனம், தான் ‘ நான்’ என்று நம்பி  எப்படி மயக்கத்தில் இருந்தேன்’ என்று வியக்கிறார் ஜனகர்.

மனமும் புத்தியும் சேர்ந்து விஷய வாசனைகளை உளவாக்கி தன்னை மயக்கத்திலாழ்த்தியிருந்த பிரகிருதியை நினைத்து ஜனகர் பச்சாத்தாபமடைகிறார். 

சாங்கிய சித்தாந்தத்தின்படி பிரகிருதி தான் உயிரினங்களுக்கும் லௌகீக விஷயங்களில் இச்சையை உண்டாக்கி , அவைகளை விருப்பு- வெறுப்புகளுக்கும் ஆட்படுத்தி கோப தாபங்களை உருவாக்கி துன்பத்திற்கும் ஆளாக்குகிறது. புருஷன் பரமனை, ஈசுவரனை பிரதிநிதீகரிக்கிறார். அவன் எல்லா விஷயங்களுக்கும் அப்பாற்பட்டவன்.

பகுத்தறிவு வாதத்துடன் ஒத்துப் போக முயல்கிறது சாங்கியர்களின் வாதம். ஜனக-அஷ்டாவக்கிர சம்வாதம் இதிலிருந்து மாறுபட்டு ‘  ‘ஒன்றன்றி வேறில்லை’. அதுவே பரமன், பரமாத்மா, பரமேசுவரன் என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. அதுவே சத். மற்றவையெல்லாம் அவித்யையினால் உளவான மாயா மயக்கத்தினால் உண்டானவை. அவைகளெல்லாமே அநித்தியம்’ என்று தெள்ளத் தெளிவாக எடுத்து கூறுகிறது.

‘இந்த உண்மையை நான் உணர்ந்து விட்டேன்’ என்று  மேற்கூறிய சுலோகத்தில் ஜனகர் கூறுகிறார்.

ஜனகர் மேலும் கூறுகிறார்:

யதா² ப்ரகாஸ²யாம்யேகோ தே³ஹமேனம்ʼ ததா² ஜக³த் | 

அதோ நம ஜக³த்ஸர்வமத²வா ந ச கிஜ்ஞ்ஜ்ஞன ||

यथा प्रकाशयाम्येको देहमेनं तथा जगत् ।

अंतों नम जगत्सर्वमथवा न च किज्ञ्ज्ञन ।।

yathA prakAzayAmyeko dehamenaM tathA jagat |

ato nama jagatsarvamathavA na ca kijJjJana || 

வார்த்தைகளின் பொருள்

யதா————–எவ்வாறு

ப்ரகாஶயாம—ஒளிமயமாக்குகின்றேனோ

ஏக:———ஒன்று

தேஹம்——தேகம

ஏனம்———–இந்த

ததா———-அதே போல்

ஜகத்———பிரபஞ்சத்தையும் 

அத:———-ஆகவே

மம———–என்னுடைய

ஜகத்—– பிரபஞ்சம்

ஸர்வம்——-எல்லா

அதவா——அல்லது

ந——-இல்லை

ச———உறுதியாக

கிஞ்சன —-சிறிதும்

பொருள் சுருக்கம்

இந்த தேகத்தை எவ்வாறு ஒளிமயமாக்கி காட்டுகிறேனோ அது போல் இப்பிரபஞ்சத்தையும் நானே ஒளிமயமாக்குகிறேன்.ஆகவே இப்பிரபஞ்சமே  நான்; அல்லது நான் ஒன்றுமேயில்லை.

விளக்கவுரை

‘ நான்’ யார் என்று உணர்ந்து விட்ட ஜனகர் – தான் தான் ஆத்மா- பரமாத்மா என்று உணர்ந்து விட்ட ஜனகர் கூறுகிறார் , “எப்படி நான் ( பரமாத்மா) இந்த உடலுக்கு சைதன்யம் தருகிறேனோ அதே நான் இந்த பிரபஞ்சத்தையும் ஒளிமயமாக்குகிறேன்.” என்று.

பிரபஞ்சத்திலுள்ள பொருட்கள் எதற்கும் ‘தனது’ என்று சைதன்யம்- உயிரோட்டம் கிடையாது.அந்த பொருட்களை ஒளிர் விடச் செய்வது வேறு ஒரு சக்தி. தேகம், மனம், புத்தி எல்லாமே அநித்திய வஸ்துக்கள்தான். அவைகளுக்கு தனதான சைதன்யம் கிடையாது.அவைகள் கர்மேந்திரியங்கள் தான்.மனமோ புத்தியோ புலன்களால் உந்தப்பட்டு கர்மங்கள் ஆற்றுகின்றன.அந்த புலன்களும் உயிரற்ற ஜடப்பொருட்களே! என்னுள் அந்த பரமன் குடியிருக்கவில்லையென்றால் எப்படி இந்த பிரபஞ்சமும் அதிலுள்ள பொருட்களும் காணப்படும்? 

புலன்களின் கற்பனைகளும்( இது இனிக்கும் இது கசக்கும் போன்ற கற்பனைகள்)மனதின் உணர்ச்சிகளும் புத்தியின் எண்ணங்களும் நமது அனுபவங்களாக மாறுவது ஆத்மாவின் சைதன்யத்தில்த் தான்.அந்த ” நான்” இல்லாவிட்டால் இந்த பிரபஞ்சமே இராது.அறிபவன், அறியும் பொருள், அறிதல் எல்லாமே ‘ நான்’ தான்.அந்த நானில்லை என்றால் எங்கும் வெறுமை- சூன்னியம் தான்! 

இந்த புதிய ஞான ஒளியில் ஜனகரெனும் ராஜரிஷி கூறுகிறார், ‘ இந்த பிரபஞ்சம் முழுவதுமே நானுட்பட எல்லாமே அந்த பரமனால் ஒளி பெறுகின்றன’.

நானன்றி வேறில்லை.ஏகவும் ஒன்றேயொன்றுமான பரமாத்மாவே அனேகமாக காட்சியளிக்கின்றான். ஆகவே நானே அந்த பரமமாக  இருப்பதால் எல்லாமே என்னுடையது தான்.ஆனால் என்னையின்றி வேறொன்றில்லையெனும்பொழுது  எனது என்று சொல்வதற்கு என்ன இருக்கிறது. ‘எனது’ என்று ஒன்றுமேயில்லை. நானுமில்லை. நானே அந்த பரமன். பரமனே நான்.

அஷ்டாவக்கிரமணிகள்.    மணி 2. ஓசை 8

 

ஆத்ம இரகசியம்

 

அஷ்டாவக்கிரர் தொடர்ந்து சொல்கிறார்:
த்வாயம்ʼஸ வ்யாப்தமித³ம்ʼ விஸ்²வம்ʼ தம்ʼவயிபம்ʼரோதம்ʼ யதா²ரத²த:

ஸு²த³த⁴பு³த³ந்த⁴ஸம்ʼவரூபஸந்தவம்ʼ மாம் ̐ க³ம: க்ஷுத³ம்ʼரசிதந்ததாமம்ʼ!

त्वायंस व्याप्तमिदं  विश्वं तंवयिपंरोतं यथारथत:

शुदधबुदंधसंवरूपसंतवं  माँ गम: क्षुदंरचितंततामं!!

tvAyaMsa vyAptamidaM vizvaM taMvayipaMrotaM yathArathata:

zudadhabudaMdhasaMvarUpasaMtavaM mA~ gama: kSudaMracitaMtatAmaM!! 

வார்த்தைகளின் பொருள்

 

@த்வயா——- உன்னால் 

வ்யாப்தம்——-நிறைந்துள்ளது

இதம்———இந்த

விஶ்வம்——பிரபஞ்சம்

த்வயி———– உன்னில்

ப்ரோதம்——-உருவாக்கப்பட்டு, நெய்யப்பட்டு

யதார்த்த——-உண்மையில்

ஶுத்தபுத்தஸ்வரூபஸ் —-இயற்கையிலேயே தூய்மையான 

த்வம்——–நீ

மா அகம்:———பெறாமலே

க்ஷஉத்ரசித்ததம்——-ஈனபுத்தி- சிந்தைகளை

 

வாச்யார்த்தம்

 

இந்த பிரபஞ்சத்தில் நீயே நிறைந்துள்ளாய்.உன்னால் உருவாக்கப் பட்ட – நெய்யப்பட்ட- இதன் ஊடும் பாவுமாகவும் நீயே இருக்கின்றாய். இயற்கையிலேயே தூயதாக- கலப்படமற்றதாக நீ இருக்கிறாய். ஆகவே  சிறுமையான- ஈன சிந்தனைகளை பெறாமலிருப்பாயாக.

 

விளக்கவுரை

 

எந்த ஒரு பொருளும் அது எதனால் உருவாக்கப்பட்டுள்ளதோ அதுவாகவே தான் இருக்கும். தங்கத்தால் செய்த நகை தங்கத்திலிருந்து வேறல்ல. அந்த நகை முழுவதும் தங்கமல்லவா நிறைந்திருக்கும். இந்த பிரபஞ்சம் உன் மனோ விருத்தியினால் உருவாக்கப்பட்டது. ஆகவே இந்த பிரபஞ்சம் முழுவதும் நீயே வியாபித்திருக்கிறாய். 

ஒரு மண்பாண்டம் களி மண்ணால் செய்யப்பட்டதாகவிருந்தும் அது மண்ணல்லாமல் வேறு ஒரு பொருளாக முடியாது.

பருத்தியிலிருந்து நெய்தெடுக்கப்பட்ட வஸ்திரத்தின் ஒவ்வொரு இழையிலும் பருத்தி தான் உளது.அப்படிப் பட்ட நீ எந்த மாசும் கலக்காமல் தூய தாக இருக்கிறாய் அது தான் உனது சொரூப சுபாவம்.

அப்படிப் பட்ட உன்னில்   ஈன    எண்ணங்களுக்கு இடம் கிடையாது. நீ காணுகின்ற ஒவ்வொரு கனவிலும் நீயே இருக்கிறாய். 

எதாலும் உன்னை களங்கப் படுத்த இயலாது.

நீ உன்னை உன்னால் உருவாக்கப்பட்டுள்ள பிரபஞ்சத்துடன்  இணைத்துக்கொண்டுவிடாதே. 

மண்பானைகளின், தங்க ஆபரணங்களின், எப்படி மண்பாண்டங்களின், நகைகளின்  குண நலன்கள் அல்லவா அது போல் இந்த பிரபஞ்சத்தின் குணங்களை உனது குண நலன்களல்ல. அப்படித்தான்  என்று தோன்றுவது மனோ மயக்கமே.அந்த மனோமயக்கத்திற்கு ஆளாவது  கீழ்த்தரமான குணம். உன் மனதால் உருவாக்கப்படுகின்ற கனவுகள் , காட்சிகள் நிஜமல்ல. அவை உண்மை என்று எண்ணி மயங்கிடுவது ஈன குணம். ஜனகா, நீ அப்படிப்பட்ட ஈன ஞகுணத்திற்கு ஆட்படாதே!

அடுத்த சுலோகத்தில் இன்னும் ஒருபடி மேலே போய், ‘நீ எதையும் சார்ந்திருக்கவில்லை;ஆகவே உன்னில் எதன் குணங்களாலும் ஒட்டிக்கொள்ள முடியாது,ஒட்டிக்கொள்ளாது என்கிறார் அஷ்டாவக்கிரர்.

nirapekSo niravikAro nirbhara: zItalAzaya:

agAdhabuिrkSubdho bhava cinmAtravAsana: निरपेक्षो निरविकारो निर्भर: शीतलाशय:

अगाधबुिर्क्षुब्धो भव चिन्मात्रवासन::।

நிரபேக்ஷோ நிரவிகாரோ நிர்ப⁴ர: ஸீ²தலாஸ²ய:

அகா³த⁴பு³ிர்க்ஷுப்³தோ⁴ ப⁴வ சின்மாத்ரவாஸன:

வார்த்தைகளின் பொருள்

 

நிரபேக்‌ஷோ——-சார்ந்திருக்காமல்

நிர்விகாரோ——–விகாரங்கள்-மாற்றங்கள் எதுவுமில்லாமல்

நிர்பரோ—-   பூர்ணமாக, நிறைந்து, இடைவெளியில்லாத

ஶீதலாஶய ——-குளிர்மையான, தூய, மாசற்ற சிந்தைகளுடன்

 அகாத புத்தி— அளவிடமுடியாத ஆழமான புத்தியுள்ளதாக

அக்‌ஷுப்த———–எதனாலும் பாதிக்கப்படாத, அசைக்கமுடியாத, சஞ்சலமற்ற

சின்மாத்ரவாஸனா:——-சின் மாத்திரமான, சித் சொரூபமான ஆன்மாவை அறிதல் மட்டுமே விரும்புகின்றவனாக

பவ—————–ஆவாய்


 

வாச்யார்த்தம்

 

ஆத்மா எப்படிப்பட்டது என்றால் அது எதையும் சார்ந்திருப்பதில்லை. அதற்கு எந்த விதமான விகாரங்களும் கிடையாது. பிறப்பு, வளர்ச்சி, இறப்பு எதுவும் கிடையாது. அது எங்கும் நிறைந்திருக்கிறது; எதிலும்  நிறைந்திருக்கிறது. அதற்கு விகார விசாரங்கள் எதுவும் இல்லாததால் எப்பொழுதும் மிகுந்த அமைதியுடனும்  குளிர்மையானதாகவும் இருக்கிறது. நீ அதி புத்தியுடையவனாகவும் எதனாலும் அசைக்க முடியாதவனாகவும் இருப்பாயாக .நீ சித்சொரூபமான ஆன்மாவை மட்டுமே நாடுபவனாக இருப்பாய்.

 

விளக்கவுரை

 

ஆத்மாவிற்கு எந்த விதமான ஆதாரமும் தேவையில்லை. அது தானாகவே உண்டாயி தானாகவே நிலைத்து நிற்கின்றது. அதற்கு எந்த விதமான வரையறைகளும் கிடையாது. கால தேச வித்தியாசங்களுக்கு அது ஆட்படுவதில்லை . ஆகவே அது எங்கும் எப்பொழுதும் இருந்து கொண்டிருக்கிறது. அது பூரணமானது. அது அடர்த்தியானது. அதில் வெற்றிடம் கிடையாது. அதில் வேறு எந்த  வெளிப்பொருளும் பிரவேசிக்க முடியாது. இன்னும் சொல்லப்போனால் வெளிப்பொருளும் கிடையாது. அது எந்த விதமான விகார விசாரங்களுக்கும் ஆட்படாததால் எப்பொழுதும் சாந்தமாகவே இருக்கிறது. அந்த அமைதி குளிர்மையானதாகவும். இருக்கிறது.

அதி புத்தி சாலியான ஆத்மா  ஆழ்ந்த அறிவுடன் சத்தியமான சித் மூர்த்தியை மட்டும்  நினைக்கின்றதாக இருக்கிறது. நீயும் அதே போல் சின் மாத்திர நினைவுடன் பரம சாந்தியுடன் இருப்பாயாக.

நீயே இந்த பிரபஞ்சம் ; இந்த பிரபஞ்சமே நீ. ஆனால் இந்த பிரபஞ்சத்தின் எந்த விதமான குண நலன்களும் உன்னை பாதிக்காது. நீ மாசற்றவனாக, தூய்மையுடன் இருக்கிறாய். மண்பாண்டத்தில் சமையல் செய்யலாம். சமைக்கப்படும. பொருட்களின் வாசனைகள் பாத்திரத்தில் ஒட்டிக்கொள்ளலாம்; ஆனால் பாத்திரம் எதனால் செய்யப்பட்டதோ அந்த  மண்ணின் குணம் மாறுவதில்லை. அது தான் ஆன்மாவின் தன்ம.பாத்திரம் உடைந்து தூள் தூளாகலாம் . ஆனால் மண் மண்ணாகவே இருகிறார்போல் நீ நீயாகவே இருப்பாய்’

அஷ்டாவக்கிரர்  ஜனகருக்கு இந்த சுலோகத்தின் மூலம் எச்சரிக்கை விடுக்கிறார்- நீ உன்னை அந்த பாத்திரத்துடன்- இந்த அழியும் பிரபஞ்சத்துடன் ஐக்கியப்படுத்திக் கொண்டால்  இந்த பிரபஞ்சத்தின் இன்ப துன்பங்களுக்கு ஆட்படவேண்டி வரும். ஆகவே உன்னை உணர்ந்து உன்னால் சிருஷ்டிக்கப் பட்ட அந்த பிரபஞ்சத்திலிருந்து வேறுபட்டு நிற்பாயாக!

இது தான் ஆன்ம இரகசியம். ஆன்மா பிரபஞ்சத்தை தன்மனோ விருத்திகளால் சிருஷ்டிக்கின்றது; அதிலேயே நிலை கொள்கின்றது; ஆனால் பிரபஞ்சத்தின் எந்த நிகழ்வுகளுமே ஆன்மாவை பாதிப்பதில்லை.

இந்த உண்மையை உணர்நதவன் ஆத்ம சாக்‌ஷாத்காரம் அடைந்தவனாகிறான்.
அஷ்டாவக்கிரமணிகள். மணி 2 ஓசை 5

ஏகோ விஶுத்த போதோஅஹமிதி நிஶ்சயவஹ்னின:
ப்ரஜ்வல்யா-ஞானகஹனம் வீதஶோக:ஸுகீ பவ:

ऐकोविशुद् बोधोअहमिति निश्चयवह्नीन:
प्रजवल्या-ज्ञानगहनम् वीतशोक :सुखीभव:।

வார்ததைகளின் பொருள்

ஏக—ஒன்றேயான
விஶுத்த போதோ–சுத்த போதம்
அஹம்—-நான்
இதி——-இவ்வாறு
நிஶ்சயவஹ்னின –தீர்மானமாக அக்னியில்
ப்ரஜவல்யா——–புடம்போடப்பட்ட
ஞானகஹனம்– ஞானம் அடைந்த
வீதகஶோக– துக்கங்கள் எல்லாம் இல்லாதாகி
ஸுகீ பவ:—––இனபுற்றிருப்பாய்்

சுலோகத்தில் பொருள் சுருக்கமாக

‘நான் கர்தா’ என்ற அஹங்காரம் அழிந்து, போத-சுத்த போதமன்றி வேறொன்றில்லை என்ற ஞானம் உளவாகி எல்லாத் துனபங்களிலிருந்தும் விடுபட்டு நீ சுக மடை வாய்’ என்கிறார் அஷ்டாவக்கிரர் இந்த வரிகளில்.

விளக்கவுரை

இதற்கு முன்னாலுள்ள வரிகளில் முனிவர் சொன்னார்,
” நீ ‘நான்’ என்ற காள சர்பபத்தால் தீண்டப்பட்டிருந்தால் முக்தி கிடைக்காது. அந்த விஷம் இறங்க வேண்டுமென்றால், தொடர்ந்து ‘நான் கர்தா அல்ல;போக்தாவும் அல்ல ‘ என்ற எண்ணத்தை மனதில் உறுதிப்படுத்திக்கொள்வது ஒன்று தான் வழி”
.இந்த சுலோகத்தில் கூறுகிறார் ,’அப்படி விஷம் இறங்கி விட்டால், ‘நான் கர்தா- நான் போக்தா’ என்ற எண்ணம் மன உறுதியெனும் நெருப்பில் எரிந்து சாம்பலாகிவிட்டால்் ‘ நான்’ என்ற அஹம்போதம் இல்லாதாகி, ‘சுத்த போதம் ஒன்று தான் உண்மை ‘ என்ற எண்ணம் மனதில் உறுதிப்பட்டு விட்டால் எல்லாத்
துன்பங்களும் உன்னை விட்டு விலகியோடிவிடும்; நீ நிரந்தர சுகத்தை அனுபவிப்பாய்’
‘நான் பிரம்மம்,’ ‘ பிரம்மமே நான்’ என்ற உண்மையை உணராதவர்கள் அஞ்ஞானம் எனும் காட்டினுள் சிக்கி வழி தெரியாமலே திண்டாடுபவர்கள்..அஞ்ஞானம் என்ற காட்டிற்குள் சிக்கிக்கொண்டு விட்டால், எவ்வளவு தான் புத்திசாலித்தனமாக செயலாற்றினாலும் ஒவ்வொரு செயலும் மேலும் மேலும் கர்ம பந்தத்தை
உண்டாக்குமே தவிர ஏற்கனவே உண்டான பந்தத்திலிருந்து விடுதலைத் தேடித்தராது.அஞ்ஞானக் காட்டியிருந்து வெளியேறுவதற்கு ஒரே வழி அந்தக் காட்டை அழிப்பது தான்.அஞ்ஞானம் அழிந்து விட்டால் இருப்பது புடம்போடப்பட்ட தங்கம் மட்டும் தான் . அது தான் ‘சுத்த போதம்’.
மனம் வெளியிலுள்ள பிரபஞ்ச வஸ்துக்களை நோக்கி நகரும் பொழுது போதம் மலினப்படுகிறது. அந்த மாசு நீங்குவதற்குத்தான் நமது முயற்சிகளெல்லாம். மனமும் புத்தியும் வெளி வஸ்துக்களைக் குறித்து விவரங்களை சேகரித்து உபயோகப்படுத்த முயலும்பொழுது அமைதியை இழக்கிறது.அங்கும் இங்கும் அலை பாய்கிறது.
‘அதைச செய்தால் அமைதியும் ஆனந்தமும் கிடைக்குமா, இதைச்செய்தால் அமைதியும் ஆனந்தமும் கிடைக்குமா’ என்று ஜீவாத்மா நீரில் விழுந்த எறும்பு போல் தத்தளிக்கிறது.அது கரை ஏற வேண்டுமென்றால் நீர் வற்ற வேண்டும்.வெளியுலக ஈர்ப்பு இல்லாதாக வேண்டும்.பிரபஞ்ச வஸ்துக்களிடமுள்ள ஈடுபாடுகள் அற்றுப்போய் மனம் உள்முகமாக திரும்பும் பொழுது ஆனந்த நடனம் புரியும் சத்சிதானந்தனைக் காண்போம்
அந்த சத்சிதானந்தன் தான் சுத்த போதம்-பரம புருஷன் -பரப்பிரம்மம்.அது தான் நமது உண்மையான சுபாவம். களங்கமற்ற ஆனந்தம் நமது சொரூப சுபாவம்.
ஞானாக்னியில் அஞ்ஞானம் எனும் காடு எரிந்து, சுத்த போதமாக நீ மீதமா மிருக்கும்பொழுது துக்கங்கள் எல்லாம் உன்னை விட்டு விலகி நீ நிரந்தர சுகம் அனுபவிப்பாய்.
துக்கம் என்பது நமக்குப் பிரியமான ஒன்று இல்லாதாகும் பொழுது அல்லது அதற்கு ஏதாவது கேடு விளையும் பொழுது உண்டாகின்ற விகாரம்.அது பிரபஞ்ச வஸ்துக்களுடன் நமக்கு உண்டாகும் பந்தத்தினால் ஏற்படுவது் அந்த வஸ்து வே உண்மையில்லை என்ற விவேகம் உதிக்கும்பொழுது அம்மாதிரியான துன்பங்களுக்கு ஏது இடம்? மனமும் புத்தியும் உள்முகமாக திரும்பி உன் சொரூப சுபாவத்தை அனுபவிக்கும் பொழுது கிடைப்பது நிரந்தர ஆனந்தம் தான்.
ஆனால் இப்படிப்பட்ட சுத்த போதம் தான் நமது சொரூப சுபாவம் என்றால் , ‘நான்’ ‘எனது ‘ என்ற மாசு எப்படி அந்த சுத்த போதத்தின் மீது படிகிறது? அடுத்த இரண்டு வரிகளில் மகா குரு அஷ்டாவக்கிரர் இதற்கு பதில் கூறுகிறார்.

யத்ரவிஶவமிதம்பாதி கல்பிதம் ரஜ்ஜுஸர்ப்பவத்
ஆனந்தபரமானந்த: ஸ போதஸ்த்வம் ஸுகம்சர !

यत्र विश्वमिदम्भाति कल्पितम् रज्जुसर्पवत्
आनन्दपरमानन्द: स बोधस्त्वम् सुखम् चर ।

வார்த்தைகளின் பொருள்
யத்ர. —————— யாதொன்றில்
விசுவமிதம் பாதி———–விசுவம் நிலை கொள்கின்றதோ
கல்பிதம். ————— கற்பனை செய்யப்படுகின்ற
ரஜ்ஜு—————– கயிறு
ஸர்பபம்—————— பாம்பு
ஆனந்தபரமானந்த: ———- பரம சுகம்- அதீவ சந்தோஷம்
போதஸ்த்வம் ——– போத- ஸ த்வம்——- அந்த போதம் நீ
ஸுகம் ———–சுகமாக
சர————–வாழ்வாய்
உனது போதத்தில்த் தான் விசுவம் நிலை கொள்கின்றது . இது ஒரு மாயத்தோற்றம்.இருட்டில் கயிறை பாம்பாக நினைத்து அச்சத்திறகு ஆளாகிறோமோ அது போல்த் தான் இதுவும்..அந்த மாயத்தோற்றம் – கயிறு
பாம்பு என்ற பொய்யான தோற்றம் – இருள் விலகி ஒளியுண்டாகின்ற பொழுது மறைந்து விடுகின்றது.நமது பயமும் இல்லாமலாகிவிடுகிறது. ஆகவே கயிறை பாம்பாக காண்பதற்கு இருள் எப்படி காரணமாகிறதோ அது போல் அவித்யை என்ற அஞ்ஞானம் “இந்த உடல்தான் உண்மையில் ‘நான்’ ” என்ற பொய்யான அறிவை உண்டுபண்ணி, உடலும் அதைச்சார்நத இந்திரியிங்களும் விரும்புவதெல்லாம் சுகம் தரும் சாந்தியைத் தரும் என்ற ஒரு பொய்யான எண்ணத்தை உருவாக்குகிறது. அவித்யையினால் உண்டாகின்ற இந்த மயக்கம்
தெளிந்து ‘நீ’ அந்த ‘சுத்த போதம்’ தான் என்ற ஒளி உண்டாகின்ற பொழுது, நீ பரமானந்தத்தை அனுபவிப்பாய்.
அதாவது நமது சொரூபமான ஆத்மாவின் மேல் பல நாம ரூபங்களும் விக்‌ஷேபிக்கப் படுகின்றது. நாம் அந்த நாம் ரூபங்களாகவே மாறிவிடுகிறோம். இந்த மயக்கம் தான் நமது துன்பத்திற்கெல்லாம் காரணம். குரு வரியன்
முன்னால் கூறியது போல் நாம் எந்த ஒரு வர்ணத்தைச் சேர்நதவனுமல்ல; எந்த ஒரு ஆசிரமத்தைச் சேர்நதவனுமல்ல; கேவலம் சாக்‌ஷி மாத்திரமான ஸத் தான்; ஆத்மா வேறு, ஸத்சிதானந்தன் வேறு என்ற எண்ணம் இருக்கும் வரை இகலோக இன்ப- துன்பங்களும் நம்மைத தொடரத்தான் செய்யும்.அந்த எண்ணத்தை சாதனா மார்ககமாகவும் ஆத்ம விசாரத்தின் மூலமும் அழித்தாலன்றி நித்ய சாந்தி கிடைக்காது.
நித்ய சாந்தி அல்லது பரமானந்தம் எங்கிருந்தும்- வெளியிலிருந்து வர வேண்டியதில்லை்; அது தான் நம் சொரூப சுபாவம். நாம் தான் அதன் இருப்பிடம் ; அதை நாம் உணர வேண்டும். உணர்ந்து விட்டால் நாமே பரமானந்தம் தான். நம்மை எந்த துன்பங்களுக்கு அண்டாது.
அடுத்த இரண்டு வரிகளில் மாமுனிகள் இன்னும் ஒரு படி மேலே போய், ‘ நீ ஒன்றுமே செய்ய வேண்டாம்; நீ எது என்று நினைக்கின்றானோ அதுவே ஆகிறாய்’. ‘ நீ முக்தன் என்று நினைத்தால் முக்தன்,பந்தினத்திலிருக்கிறாய் என்று நினைத்தால் பந்தனஸ்தன். ஆகவே உன் மனம் தான் உன்னை ‘ நீ’ யாக்குகிறது என்கிறார்.
முக்தாபிமானி முக்தி ஹி பத்து பத்தாபிமான்யாபி
கிம்வதந்திஹ ஸத்யேயம் யா மதி: ஸா கதி பவேத்
मुक्ताभिमानी मुक्त हि बद्धो बद्धभिमान्याभि
किम्वदन्तिह सत्येयम् या मति : सा गति भवेत् ।
வார்த்தைகளின் அர்ததம்
முக்த————–விடுபட்டவன்
அபிமானி————- நினைப்பவன்
முக்த ஹி————-விடுபட்டவனே
பத்தோ————— பந்திக்கபட்டவனே
பத்தாபிமான்யாபி———பந்திக்கபட்டவன் என்று நினைப்பவன்
கிம்வதந்திஹ ஹி——– பழமொழி
ஸத்யேயம்————–உண்மையே
யா மதி———– மனம் என்ன நினைக்கின்றதோ
ஸா—————–அதே போல்
கதி பவேத்———–அதே யாகிறாய்
பொருள் சுருக்கம்
‘ எவனொருவன் முக்தன் என்று எண்ணுகிறானோ. அவன் முக்தனே யாகி விடுகிறான். நான் பந்தனத்திலிருக்கிறேன் என்று எவன் நினைக்கின்றானோ அவன் பந்தனஸ்தனே. மனம் என்ன நினைக்கின்றதோ அதுவே யாகிறாய் நீ’ என்ற பழமொழி உண்மையே.’என்று உண்மையான ‘ நானை’ மறைந்திருக்கும் மாயத்திரை விலகும்; என்று சுத்த போத்த்தை உணருவேன்; என்று நான் முக்மனாவேன்; எவ்வளவு நாள் நான் சாதனை செய்ய வேண்டும்; என்றெல்லாம் கவலைப்படுகின்ற சீடருக்கு குரு அஷ்டாவக்கிரர் சொல்கிறார்,’ கவலை வேண்டாம் ; நீ முக்தனாவது உன் கையில்ததான்
இருக்கிறது; அதாவது உன் மனதில் தான் இருக்கிறது. நீ முக்தன் என்று நினைத்துவிட்டால் அந்தக் கணமே முக்தனாகிவிடுவாய். இல்லை, நான் பந்தங்களில் சிக்குண்டு கிடக்கிறேன், யார் வந்து என்னை முக்தனாக்குவார்கள் என்று அழுது கொண்டிருந்தால் நீ பந்தனஸ்தனாகவே இருக்க வேண்டியது தான்.
நீ எது ஆக வேண்டும் என்று விரும்புகிறாயோ அதுவே ஆகிறாய் என்கிறது பழமொழி.
உபநிஷத்துக்களும் இதே கருத்தை வலியுறுத்துகிறது.
ஓம்ஆப்யாயந்து மமாங் கானி வாக் ப்ராணஶசக்‌ஷு:
ஸ்ரோத்ரமதோ பலமிந்த்ரியாணி ச ஸர்வாணி ஸர்வம்
ப்ரம்மோபநிஷதம் மாஹம் ப்ரம்ம நிராகர்யாம்மா மா ப்ரம்ம
நிராகரோதனிராகரணமஸ்த்வநிராகரணம்மே அஸ்து
ததாத்மனி நிரந்தர ய உபநிஷத்ஸ தர்மாஸ்தே மயி
ஸந்துஷ்ட அதே மயி ஸந்து ஓம் ஶாந்தி ஶாந்தி ஶாந்தி:
‘ என் அவையவையங்களும் வாக்கும் , ப்ராணனும், கண்ணும் காதளும்,
சக்தியும்,சகல இந்திரியங்களும் ,புஷ்டியாகட்டும்.எல்லா உபநிஷத்துக்களும்
பிரம்ம ரூபம் தான்.நான் அந்த பிரம்மத்தை நிராகரிக்காமல் இருப்பேனாக.
பிரம்மம் என்னை நிராகரிக்காமலிருக்கட்டும். பிரம்ம ரதனான எனக்கு உபநிஷத் தர்மங்கள் கிடைக்கட்டும்’ என்ற சாந்தி பாடத்துடன் ஆரம்பிக்கும். மைத்ரேயோபநிஷத் அஷடாவக்கிரரின் கருத்தை விளக்கமாக சொல்கிறது.
மைத்ரேயோபநிஷத் நிஷத்- ஓரு சிறு அறிமுகம்
பிரகத்ரதன் என்ற அரசன் நாசமடையக்கூடிய சரீரத்தினாலோ அதனால் கிடைக்கின்ற சுக போகங்களினாலோ நிரந்தர சாந்தி கிடைக்காது என்று புரிந்து கொண்டு நித்ய சாந்தியைத் தேடி கடும் தவம்இருந்தான்.ஶகாயன்யன் என்ற மாமுனிவர் தோன்றி ‘உனக்கு என்ன வேண்டும் கேள், தருகிறேன்’
என்றார். பிரகதரதனும்,’ எனக்கு நிரந்தர சாந்தி வேண்டும்’ என்றான்.
அந்த முனிவர் பிரகத்ரதனுக்கு அருளிய உபதேசங்கள் தான் த்ரேயோபநிஷத் என்ற பெயரில் அறியப்படுகிறது.
பிரகத்ரதனின் முதல் கேள்வியே மிகவும் பொருள் பொதிந்தது பகவன், சரீரமிதம்மைதுனாதேவாத் பூதம் ஸம்விதபேதம்
நீரய ஏவ மூத்ர த்வாரேண நிஷ்க்ராந்தமஸ்திபிஶசிதம்
மாமஃஸேனானுலிப்தம் சர்மணாவபத்தம் விண் மூத்ரவாத
பித்தகபமஜைஆமேதோவஸாபிரநைருஶச மலைர்
பஹுபி: பரிபூர்ணமேதாத்ருசே சரீரே வர்தமானஸ்ய
பகவம்ஸத்வம் நோய்க்குறி கதிரிதி
.

‘ பகவான், மைதுனத்திலிருந்து உருவான இந்த சரீரம் னசூன்யவுமாகிவிட்டால் நரகத்தில் விழவேண்டியது தான் என்பதை புரிந்து கொண்டுள்ளேன்.. ஏனென்றால் , இந்த சரீரம் மூத்திர துவாரத்தின் வழியாக வெளி வந்ததும் எலும்புகளால். உருவானதும் மாமிசம் நிறைந்ததும் தோலால் மூடப்பட்டுள்ளதும் மலம், மூத்திரம்,வாதம், பித்தம், கபம்,ஜவ்வு, மேதஸ்,என்பன போன்ற பலவிதமான அழுக்குகளால் நிறைவுற்றதுமான இந்த உடலில் குடியிருக்கின்ற எனக்கு உங்களைத் தவிர வேறு யாரும் துணை இல்லை. ஆகவே ஆத்மஞானத்திற்கான வழியைக் காட்டி தாருங்கள்’ என்று இறைஞ்சுகிறான் ஜகத்ரதன்.
முனிகள் ஆத்மா யாது அதை அடைவது எவ்வாறு என்று விளக்குகிறார்.
ஶப்தஸபர்சமயாயேஅர்த்தா அனர்த்தா இவ அதே ஸ்ஆ:
யேஷாம் ஸக்தஸ்து பூதாத்மா ந பரமாத்மா பதா
சப்தம், ஸ்பரிசம்முதலிய விஷயங்களில் ஈடுபாடுள்ள பஞ்ச பூதங்களால் உருவாகியுள்ள ஜீவாத்மாவிற்கு பரம பதம் அடைய முடியாது..
தவத்தால் கிடைக்கும் ஞானம் தான்அதற்குதவமுடியும் அந்த ஞானம் பெற்று விட்டால், மனம் கட்டுப்பாட்டிற்கு வந்து விடும். மனம் அடங்கி விட்டால் ஆத்ம ஞானம் உண்டாகும் ஆத்ம ஞானம் பெற்று விட்டால் முக்தி எளிது.
விறகு எரிந்து அடங்கும்பொழுது, எவ்வாறு நெருப்பு தானாகவே அணைந்து போகுமோ அது போல், மனோ விருத்திகள் அடங்கும்பொழுது, சித்தம் அதன் காரண ரூபமான ஆத்மாவில் சாந்தமாக லயித்து விடுகிறது.
ஆகவே மனம் அடங்கினால் தான் ஆத்மஞானம் பெறமுடியும் என்கிறார் முனிவர். இதையே தான் பிற்காலத்தில் ஆதி சங்கரர் ‘மனோ நிவ்ரித்தி பரமோபசாந்தி ‘ என்கிறார் காசி பஞ்சகத்தில்.
தபால் ப்ராபயதேஸத்வம் ஸத்வாத்ஸம்ப்ராபயதே மன:
மனஸா ப்ராபயதேஸத்வம் ஹ்யாத்மாபத்த்யா நிவர்தததே
யதா நிரிந்தனோ வஹ்னி: ஸ்வயோனாவுபஶா்ம்யதி
ததா வ்ரித்தி க்‌ஷயாசித்தம் ஸ்வயனாவுஶாம்யதி
மேலும் முனிகள் சொலவார்:
ஸவயனோபஶாந்தஸ்ய மனஸைவ: ஸத்ய காமினி:
இந்த்ரயார்தத விமான ஸ்யான்ருதா: கரம் வஶானு கா:
சித்தமேவஹி ஸம்ஸாரஸ்தத் ப்ரயதனேன ஶோதயேத்
யத்சித்த ஸ்தன்மயோ பவதி குஹ்யமேதத் ஸனாதனம்
தன்னுடைய உற்பத்தி ஸ்தானத்தில் சேர்ந்து அடங்கி விட்ட மனம் ச்த்தியத்தை நோக்கி செல்கின்றது. அதற்கு இந்திரிய விஷயங்களின்
அர்த்தமற்ற தன்மை விளங்குகிறது.அப்பொழுது கர்மம் மற்றும் அது சம்பந்தமான எல்லாமே அசத்தியம் என்பது புலனாகும். சித்தம் தான் பிரபஞ்சம்; முயன்றால் அதை சுத்தப்படுத்தலாம் என்பது தெரியறவருகிறது. ஒருவனின் மனம் எவ்வழியோ அவ்வழி அவனது கதியும் என்பது மிகப்பெரிய சனாதன இரகசியம் என்கிறார் மாமுனிகள்.
அதே போல் ‘ யா மதி: ஸ கதி: ‘என்பதற்கு யோக வாஸிஷ்டதில் வரும் ஐந்தவோபாக்கியானம்-அகலிகையின் கதை சிறந்த எடுத்துக்காட்டாக. இருக்கும் என்று எண்ணுகிறேன்.
மனோ ஹி ஜகதாம் கர்த்ய மனோ ஹி புருஷ்: பர:
மன: க்ருதம் க்ருதம் லோகே ந சரீரக்ருதம் க்ருதம்!
मनो हि जगताम् कर्त्य मनो हि पुरुष: पर:
मन: कृतम् कृतम् लोके न शरीरकृतम कृतम् ।
“மனம்தான் உலகின் சிருஷ்டி கர்ததா.மனம் தான் பரமபுருஷன்.மனதால் செய்யப்படுவது தான் கர்மம்.சரீரத்தினால் செய்வது கர்மமல்ல”
எவனொருவன் ‘நான் இந்த சிறிய சரீரம் தான் ‘ என்று நினைக்கின்றானோ அவனுக்கு மரணம் திண்ணம்.
எப்பொழுது ஒருவனின் போதம், வெளி உலகை நோக்கி திரும்புகின்றதோ, அப்பொழுது அவன் சுகம், துக்கம் என்ற இரட்டைகளினால் பாதிக்கப் படுகிறான்.யோகியின் திருஷ்டா உன்முகமாக இருப்பதால்ததான்,அவனுக்கு சுக-துக்கங்கள் கிடையாது. இந்த தத்துவத்தை விளக்குவதற்காக வஸிஷ்டர்
இராமனுக்கு ஒரு கதை கூறுகிறார்