Category Archives: லலிதா ஸஹ்ஸ்ர நாமம்

லலிதா ஸஹஸ்ரநாமம் 39-47

திரு நாமம் 39

காமேஶ ஞாதா ஸௌபாக்ய மார்த்வோரு த்வயான்விதா

Kāmeśa-jñāta-saubhāgya-mārdavoru-dvayānvitā 

कामेश-ज्ञात-सौभाग्य-मार्दवोरु- द्वयान्विता (39)

தேவி லலிதாம்பிகையின் துடைகளின் அழகு அந்த காமேசுவரனுக்கு மட்டும் தான் வெளிச்சம். அது பரம 

ரகசியம்.அவ்வாறு காமேசுவரனுக்கு மட்டும் அறிவான அமைந்த துடைகளுள்ள தேவீ, உன்னை 

வணங்குகிறோம்.

தேவியின் துடைகளின் அழகைக்குறித்து ஆதி சங்கரர் கூறியுள்ளதை பார்ப்போம்.

கரீந்த்ராணாம் ஶுண்டான் கனககதலீகாண்டபடலீம்

உபாப்யாமேதாப்யமுதயமபி ந்ர்ஜித்தி பவதி

ஸுவ்ருத்த்தாயாபயாம் பத்யு:: ப்ரமது கடினப்யாம் கிரிஸுதே 

விதிஞ்ஞே ஜானுப்யாம் விபுதகரிகும்பத்வயமஸி

( ஸௌந்தர்ய லஹரி 82)  

அன்னையே, , கடைமையை எப்பொழுதும் மறக்காததேவீ, தங்கள் துடைகள் , யானைகளின் 

தும்பிக்கைகளையும்,தங்கத்தாலான வாழத்தண்டுகளையும் தோற்கடித்து விட்டு, என்றும் தங்கள் பதியின் முன் 

நமஸ்கரித்ததால் உறுதிப்பட்டுவிட்ட உருண்டு திரண்டு,  தேவேந்திரனின் ஐராவதத்தின் மஸ்தகத்தையும் 

தோற்கடிக்க வல்லவையாக இருக்கின்றன.

இது ‘சக்தி கூட’ திருநாமங்களில் முதலாவது திருநாமம். தேவீ, ஜகன்மாதாவின் சிருஷ்டி சக்தி பரம 

ரகசியமானது; யாரும் அறிந்துகொள்ள முடியாதது என்பதை குறிக்கிறது.அதற்கு ஈடு இணை வேறு கிடையாது.

திரு நாமம் 40

மாணிக்ய முகுடாகார ஜானுத்வய விராஜிதா

Māṇikya-mukuṭākāra-jānudvaya-virājitā

माणिक्य-मुकुटाकार-जानुद्वय-विराजिता 

 அன்னை லலிதாம்பிகையின் இரு முழங்கால்கள் இரண்டு பெரிய இரத்தின கற்கள் பதித்த கிரீடங்கள் போல் 

காட்சியளிக்கின்றன. மீண்டும் சிவப்புக் கல் நினைவூட்டுப் படுவதன் மூலம் தேவியின் கருணையையும் நமக்கு 

உணர்த்தப்படும் படுகிறது.

திரு மந்திரம் 41    

இந்த்ரகோப பரிக்‌ஷிப்த ஸ்மாரதூணாபா ஜங்கிகா

Indragopa-parikṣipta-smaratūṇābha-jaṅghikā

 इन्द्रगोप-परिक्षिप्त-स्मरतूणाभ-जङ्घिका 

அன்னையின் கால்கள் மன்மதனின் அம்பறாத் துணி போல் அவனது அம்புகளை தாங்கி நிற்கின்றது.அவ்வளவு 

அழகு வாய்ந்ததாகவும் இருக்கிறது .அப்படி கவர்சசியான கால்களையுடைய தேவியை வணங்குவோம்.

திருநாமம் 42

கூட குல்பா

Gūḍha-gulphā

 गूढ-गुल्फा

அன்னையின் குதியங்கால்கள் உருண்டு திரண்டு ஆனால் அவள் பட்டாடையில் மறைந்திருக்கிறது.

திருநாமம் 43.

கூர்ம ப்ருஷ்ட ஜயிஷ்ணு ப்ரபதான்விதா

Kūrma-pṛṣṭha-jayiṣṇu-prapadānvitā 

कूर्म-पृष्ठ-जयिष्णु-प्रपदान्विता

அன்னையின் பாதங்களின் மேல்பாகம் ஆமையின் புறந்தோடு போல் வளைந்து பளபளப்புடன் அழகாக 

இருக்கிறது.ஆனால் ஆமையின் கடினமான புறந்தோடோடு அன்னையின் பாதங்களை உவமித்ததில் ஆதி 

சங்கரர் கோபம் கொண்டு சொல்கிறார்:

(ஸௌந்தர்யலஹரியில் 83 ஆம் சுலோகத்தில் ஆதி சங்கரன் சொல்வார்):

பராஜேதும் ருத்ரம் த்விகுணஶரகர்பௌ கிரிஸுதே

நிஷஅங்கௌ ஜங்கே தே விஷமவிஶிகே பாடமக்ருதே

யதக்ரே த்ருஶ்யன்தே தஶஶரபலா: பாதயுகலீ-

நகாக்ரசெத்தான: ஸுரமகுடஶாகணைகநிஶிதா: 

” உலக நாயகனான பரமேசுவரனின் இதயத்தை வெல்வதற்காக, அவனை தோற்கடிப்பதற்காக, , பஞ்ச 

பாணங்களையுடைய மன்மதன் ,அவைகளை இரட்டிப்பாக்கி அன்னையே தங்கள் கால்களின் நுனியில் உள்ள 

நகங்கள் என பொய்மைத்தோற்றத்துடன், தேவேந்திரனின் கிரீடத்திலுள்ள வைரங்களை பதித்து, பத்து 

அம்புகளுள்ள அம்பறாத்துணியாக அழகு படுத்தியுள்ளான்”. பத்து அம்புகள் பத்து கால் விரல்களைக் 

குறிக்கிறது.அன்னையின் கால் விரல்களுக்கு கூட பக்தர்களை வசீகரிக்கும் சக்தியுள்ளதாக குறிப்பிடுகிறார் 

ஆதி சங்கரர்

இந் வருணனைகள் சாமுத்ரிகா லக்ஷணத்தையும் ஒத்து போகிறது.

திரு நாமம் 44

நகத்திதி ஸஞ்சன்ன நமஜ்ஐன  தமோ குணா

Nakhadīdhiti-saṃchanna-namajjana-tamoguṇā

 नखदीधिति-संछन्न-नमज्जन-तमोगुणा

‘அன்னையே, உன்னை வணங்குபவர்களின் அவித்யை போக்கி அவர்களுக்கு சத்தியசாக்‌ஷாத்காரம் 

உண்டாவதற்கு அருளுகிறாய்

தேவர்களாயிருந்தாலும் அசுரர்களாயிருந்தாலும் உன் முன்னால் தலை வணங்கும்பொழுது அவர்கள் 

கிரீடங்களிலிருந்து ஒளிரும் பிரகாசமானது ,உன் நகங்களிலிருந்து வீசும் ஒளியின் முன் நிஷ்பிரபமாகிறது..

( ஒளியிழக்கிறது.) அது மட்டுமல்ல, உன் நகங்களிலிருந்து வீசும் ஒளி ஜீவாத்மாக்களிலுள்ள தமோ குணத்தை 

அழிகின்றது.’

தேவி லலிதாம்பிகை தன் கைகளால் ஆசீர்வதிப்பதில்லை. அவள் பாதஸ்பரிசம் ஜீவாத்மாக்களோ 

ஆசீர்வதிக்கிறது.

மற்ற கடவுள்களுக்குள்ளது போல் தேவி பய ஹஸ்தமோ, வரதஹஸ்தமோ காண்பிப்பதில்லை.அன்னை 

லலிதாம்பிகைக்கும் நான்கு கைகளுள்ளன. ஆனால் ஒவ்வொரு கைகளிலும் ஒவ்வொரு  தேவி 

அமர்ந்திருக்கிறார்கள்என்று ஏற்கனவே கூறப்பட்டுள்ளதை ஞாபகப்படுத்திப் கொள்வது நல்லது.

ராகஸ்வரூபா பஶாத்யா- அசுவாரூடா தேவி ( திருநாமம் 8)

க்ரோதாகாரங்குசோஜ்வலா-சம்பத்கரீ தேவி(திருநாமம் 9)

மனோருபேக்‌ஷு- கோதண்டா- ரூப மந்திரிணி அல்லது சியாமளா தேவி(திருநாமம் 10)

பஞ்சதன்மாத்ர ஸாயளகா-வராஹி தேவி( திரு நாமம் 11)

தேவி ஆசீர்வதிப்பதில்லை அருளுவதும் பாதஸ்பஇசத்தினால் தான்.

திரு நாமம் 45

பத த்வய ப்ரபா ஜால பராக்ருத ஸரோருஹா

Pada-dvaya-prabhā-jāla-parākṛta-saroruhā

 पद-द्वय-प्रभा-जाल-पराकृत-सरोरुहा 

அன்னை லலிதாம்பிகைக்கு நான்கு பாதங்கள் உள்ளதாக சொல்லப்படுகிறது. அவைகள் முறையே ஶுக்ளா, 

ரக்தா,மிஶ்ரா, மற்றும் நிர்வாணா ஆகும். முதல் இரண்டு பாதங்கள் ஆக்ஞா சக்க்ரத்திலும்,மூன்றாவது இதய 

சக்கரத்திலும், நான்காவது ஸஹஸ்ரார சக்கரத்திலும் நிலை கொள்கின்றன.இந்த நான்கு பாதங்களும் 

முறையே பிரம்மா, விஷ்ணு, ருத்ரன்,மற்றும் சதாசிவன் என்ற நான்கு தேவர்களையும் ஆளுகிறாள்.இந்த நான்கு 

பாதங்கள் முதல் மூன்று  முறையே படைத்தல், காத்தல், அழித்தல் என்ற முப்பெரும் கர்மங்களையும் 

நான்காவது முக்தி தாயகத்தையும் குறிக்கிறது.

ஸௌந்தரிய லஹரி  இரண்டாம் சுலோகம் கூறுகிறது:

தனியாம்ஸம் பாஸுரன் தவ சரண பங்கேரூஹபவம்

விரிஞசி: ஸஞ்சின்வன் விரசயதி  லோகானுவிகலம்

வஹத்யேனம் ஶௌரி: கதம்பமாக ஸஹஸ்ரேண ஶிரஸாம்

ஹராதி: ஸம்ஷுகதைனம் பஜிதி பஸித்தேதுலன விதிம்

அன்னையே, தங்களின் பாத தூளிகளில் ஒரு சிறு துளியும் கொண்டு பிரம்மா இந்த பிரபஞ்சங்களை எந்த 

குறையுமில்லாமல் சிருஷ்டிக்கிறார்.விஷ்ணுவோ அந்த பாத தூளியின் பலத்தாலும் இந்த பிரபஞ்சங்களை 

தனது ஆயிரம் மலைகளிலும் தாங்கி நடத்துகிறார்.ஹரனாகட்டும் அந்த தூசு இன்னும் பொடியாக்கி பஸ்மமாக 

தன் உடல் முழுவதும் பூசிக்கொண்டு மகிழ்கிறான்.

மூன்றாம் சுலோகத்தில் ஆதி சங்கரர் கூறுகிறார்:

அவித்யாநாமந்திமிர மிஹிர த்வீபநகரீ

ஜடானாம் சைதன்ய ஸ்தபக மகரந்த ஸ்ருதீத்தரீ

தரித்ராணாம் சிந்தாமணி குணனிகா ஜன்மஜலதௌ

நிமக்னானாம் தம்ஷ்ட்ரா முரரிபு வராஹஸ்ய பவதி

தாயே, உனது பாததூளிகள் அஞ்ஞானிகளின் அவித்யை அழித்து, அவர்களது உள்ளங்களிலுள்ள இருளை 

போக்கி, ஞான சூரியன் பிரகாசிக்கும் ஒளி மிகு நகரமாக மாற்றி விடும். அஞ்ஞானம் விலகி முக்தி பெறுவர்கள் 

உன்னை வணங்குபவர்கள்.மூடர்களுக்கு, தூய புத்தியுடைய, பூங்கொத்திலிருந்து அருவி போல் கொட்டுகிற 

தேனருவி போலவும், ஏழைகளுக்கு தேவையான எல்லாவற்றையும் வழங்குகின்ற சிந்தாமணி போலவும்,சம்சார 

சாகரத்த் கிடந்து உழலுபவர்களை  தன் தமஷ்டரங்களால் தாங்கி நிற்கின்ற  விஷ்ணுவின் வராஹ அவதாரம் 

போலவும் உன் பாத தூளிகள் சக்தி வாய்ந்ததாக இருக்கிறது.

 த்வதினய: பாணீப்யாவரதோ தைவதகணம:

த்வமேகா நைவாஸி ப் ரகடித வராப்யதபினயா,

பயாத்த்ராதும் தாதும்  பலமபி ச  வாஞ்சாஸமதிகம

ஶரணேய லோகானாம் தவ ஹி  சரணேவவ நிபுணௌ

எல்லா தேவதைகளும் அபய – வரத ஹஸ்தங்களை காண்பித்து அனுக்ரகிக்கிறார்கள். பிரபஞ்சத்திலுள்ள 

எல்லா ஜீவராசிகளுக்கும் அபயம் நல்குகின்ற தேவீ, தாங்கள் மட்டும் தான அம்மாதிரி சேஷ்டைகள் எதுவும் 

காண்பிக்காமல் தங்கள் சரணங்களை அபயம் அடைகிறவர்களுக்கு,கேட்பதிலும் அதிகம் 

வரங்களைஅளிக்கிறீர்கள். அவ்வளவு கருணை உள்ளம் கொண்டவள அன்னை என்கிறார் ஆதி சங்கரர்..

திரு நாமம் 46

ஸிஞ்ஞன மணி மஞ்சிர மண்டித ஶ்ரீபதாம்புஜா

Siñjāna-maṇi-mañjīra-maṇḍita-srīpadāmbujā

 सिञ्जान-मणि-मञ्जीर-मण्डित-स्रीपदाम्बुजा (46)

பல தப்பட்டு உயர்த்த ரக் இரத்தினங்களால் அழகுப்படுத்தப்பட்டுள்ள கொலுசுகளை அணிந்திருக்கிறார், 

அன்னை லலிதாம்பிகை.

திரு நாமங்கள் 43 லிரிந்து 46 வரை தாயின் கால்களையுடைய விவரிக்கின்றன. பாதங்களை இவ்வளவு 

வருணனைகளுக்கெல்லாம்்அப்பாற்பட்டவளான பாய்க்கனூர் இருக்கும்பொழுது , அன்னையின் முழு 

உருவத்தையும் வருணிப்பதற்கு மனிதர்களுக்கு வார்த்தைகளும் கிடைக்குமோ! இவ்வாறு அன்னையின் 

பிரகாச விமரிச மஹா மாயா ஸ்வரூபிணியின் உருவத்தை வாக் தேவதைகள் வருணித்துள்ளார்கள்.
திரு நாமம் 47

மாராலி மந்த கமனா

Marālī-manda-gamanā

 मराली-मन्द-गमना

அன்னையின் நடை அன்ன நடை என்று வாக்தேவதைகள் கூறுகிறார்கள்.இருந்தாலும் அன்னையின் நடை 

எதோடும் உவமிக்க இயலாத்து என்பது தான் உண்மை.

ஸௌந்தரிய லஹரி  91 வது சுலோகத்தில் ஆதி குரு கூறுகிறார்:

பதான்யாஸ க்ரீடாபரிசயமிவாரப்தமனஸ:

ஸ்கலந்தஸ்த கேலம் பவனகலஹம்ஸா ந ஜஹதி

அதஸ்தஷாம் ஶிக்‌ஷாம் ஸுபகமணிமஞ்சீரரணித

செலாதாசக்ஷணம் சரணகமலம் சாருபரிஸ்த

நளின நடை நடக்கும் அன்னையே, தங்கள் வீட்டினுள் அன்னப் பறவைகள் தங்களைப் போல் நடக்க முயற்சி 

செய்து, அடி பிறழும்போது நடை  பயிற்சியை நிறுத்தாமல் தொடருகின்றன. அதனால் தானோ தங்களின் 

இரத்தின கொலுசுகள் அசையும்பொழுது உளவாகும் ஓசைகள் மூலம்  அவைக்கு நளின நடைக்கான 

குறிப்புகளை கொடுக்கின்றயோ?

இந்த நாமத்துடன்  பஞ்சதசி மந்தரத்தின் ‘ சக்தி கூடா’ முடிவுறுகிறது.

Advertisements

லலிதா ஸஹஸ்ரநாமம் 48-51

47ஆவது திரு நாமம்  வரை அன்னை லலிதாம்பிகையின் கேசாதி பாத வருணனை வாக் தேவிகள் நமக்கு 

அருளுகிறார்கள். 48 ஆவது சுலோகத்திலிருந்து தேக சௌந்தரியத்தை முழுமையாக அருளுகிறார்கள்

திரு நாமம் 48

மஹாலாவண்யா ஶேவதி:     

Mahā-lāvanya-śevadhiḥ

 महा-लावन्य-शेवधिः 

அன்னை லலிதாம்பிகை ஒரு அழகு பெட்டகம்.அவளுக்கு இணை அவளே. வேறு யாரையும் எதையும் உவமிக்க 

இயலாது. 

சௌந்தரிய லஹரியில் 12ஆம் சுலோகத்தில்  ஆதி சங்கரர் சொல்வார்:

தத்விதீயம் ஸௌந்தர்யம் துஹிநகரிகன்யே  துலயிதும்

கவீந்தா: கல்பந்தே கதமபி விரிஞசி ப்ரபுதய:

யதாலோகௌத்ஸுகயாதமரலலனா யாந்தி மனஸா

ததோபஇரதுஷ்ப்ராபயமபி  கிரீஶஸாயூஜ்யபதவீம்

  
தேவீ, இமயவனின் புதல்வியான தங்கள் அழகை வேறு எதனுடனும் உவமிப்பதற்கு  இயலாமல் குழப்பம் 

அடைகிறார்கள் பிரம்மா விஷ்ணு மற்றும் பெருமைக்குரியவர் கவி சிரேஷ்டர்கள் கூட .தங்கள் 

சௌந்தரியத்தை அறிவதற்கு – உணர்வதற்கு அப்ஸரஸ் கள் ஆர்வமுற்று, கடுமை தவமிருந்து பரமசிவனில் 

ஐக்கியமாக முயலுகிறார்கள். ஏனென்றால் பரமசிவனை ஒருவனுக்குள்ளேயே தான்  தங்கள் சௌந்தரியத்தை 

அறியமுடியும்.ஆகவே தங்கள் பதியான பரமசிவனில் ஐக்கியமாகிவிட்டால் தங்களுக்குத் அந்த பாக்கியம் 

கிடைக்கும் என்று தேவ ஸ்த்ரீகளான அப்சரஸுகள் எண்ணுகிறார்கள்.அப்படிப்பட்டது உன் அழகு.

திருநாமம் 49

ஸர்வாருணா

Sarvāruṇā

 सर्वारुणा 

 அன்னையே, நீ சம்பந்தப்பட்டு எல்லாமே செந்நிறம் தான் ஏனென்றால் நீயே கருணையின் வடிவமைப்பு சிவப்பு என்றால் கருணை.

சௌந்தரிய லஹரி 93 ஆம் சுலோகத்தில் ஆதி சங்கரர் சொல்கிறார்:

அரால்ப் கேஶேஷுப்ரகிருதிஸரளா மந்தஹஸிதே

கிரீஷாபா சிஸ்த த்ருஷபலதேபா கசடதே

ப்ருஶும் தன்வீ மத்யே ப்ரிதிருரஸிஜா ரோஹ விஷயே

ஜகத்த்ஆதும் ஶம்பாருஜயதி கருணா காசிதருணா

அன்னையே, உன் சுருள் சுருளான கருமை நிறத்துடனும் கூடிய கூந்தலும்,உனக்கே உரித்தான ஸரளமான 

புன்னகையும்,தென்மேற்கில் வாகை மலரின் மிருதுத் தன்மையுடையதும் உன் மனமும், பாறை போல் இறுகிய 

மார்பகங்களும்,இடையே இல்லாதது போலுள்ள இடையும்,பரந்து விரிந்த மார்பும், நிதமபமும்,ஶம்புவின் 

அருணனின் நிறத்தோடு கூடினால் கருணா ஶக்தியும் இந்த பிரபஞ்சத்தை காப்பாற்றுவதற்காக விஜயாஸ்தாதி 

செய்துள்ளது.

ஆக ஆதி சங்கரனும் அன்னையின் அருணா நிறம் கருணையின் குறியீடு என்கிறார்.

லலிதா த்ரிஶதியில் 138 ஆம் சுலோகத்திலும்,யஜுர்வேதத்திலும் சுருதிகளிலும் அருணனின் சிவப்பு நிறம் 

கருணையின் அடையாளம் என்று கூறப்பட்டுள்ளதை.

திரு நாமம் 50

அனவத்யாங்கி

Anavadyāṅgī

 अनवद्याङ्गी

குறையஏ இல்லாத அங்கங்களுள்ளவள் அன்னை. அன்னையின் எபடி குறையிருக்க முடியும்? அவளே 

பிரம்மமல்லவா? நிர்குண பிரம்மம் ஆக இருக்கும் பொழுது குறை நிறைகளின் இருக்க முடியாது. சகுண 

பிரம்மமாக இருக்கும் பொழுது அவள் குற்றமற்றவளாக இருக்கிறாள்.

திரு நாமம் 51

ஸர்வாபரண பூஷிதா

Sarvābharaṇa-bhūṣitā

 सर्वाभरण-भूषिता (51)

அன்னை வித விதமான ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறாள். அவள் உடலில் ஒவ்வொரு அங்கமும் 

ஆபரணங்களால் மூடப்பட்டிருந்தது.காளிகா புராணம் நாற்பது வகை ஆபரணங்களையும் 

விவரிக்கிறது.பரசுராம கல்ப ஸூத்திரம் என்பது ஶ்ரீசக்ரபூஜை பற்றி எழுதப்பட்டுள்ளது ஒரு அதிகார பூர்வமான 

கிரந்தம்.அதில் தேவியின் இன்னும் நிறைய ஆபரணங்களைக் குறித்துள்ள விவரணங்கள் உள்ளது.லலிதா 

த்ரிஶதியில் 140 திரு நாமம் இதையே குறிக்கிறது.

இந்த திரு நாமத்துடன் தேவியின் ப்ரகாச மற்றும் விமர்ச உருவத்தைக் குறித்துள்ள விவரணப்படம் 

முடிவுறுகிறது..
.

லலிதா ஸஹஸ்ரநாமம் 32-38

தேவியின் பஞ்சதசி மந்திரங்களை மூன்று பகுதிகளாக பிரிக்கலாம்.ஒவ்வொரு பகுதியையும் ‘கூட’ என்று 

சொல்வார்கள்.தேவியின் திருநாமங்கள் பதின்மூன்றிலிருந்து இருபத்தியொன்பது வரையான திருநாமங்கள் ‘ 

வாக்பவ கூட’ என்றழைக்கப்படுகிறது.முப்பதிலிருந்து முப்பத்தியெட்டு வரையிலான திருநாமங்கள் ‘ மத்ய 

கூட’ என்றும் முப்பத்தியொன்பதிலிருந்து நாறபத்தியேழு வரையிலான நாமங்கள் ‘ஶக்தி கூட’  என்றும் 

அழைக்கப் படுகின்றன.

வாக்பவ கூட என்ற பகுதியில் தேவியின் கேசாதி பாத வருணனையில் அன்னையின் திருமுகத்தைக் 

குறித்துள்ள வருணனையும்,கழுத்திலிருந்து இடுப்பு வரையான அங்கங்களின் வருணனை மத்ய கூடா என்ற 

பகுதியிலும்,இடையிலிருந்து பாதம் வரையிலுள்ள அங்கங்களின் வருணனை ஶக்தி கூட என்ற பகுதியிலும் 

காணப்படுகிறது.

மத்ய கூட என்ற பகுதி ‘ காமராஜ கூட’ என்றும் அழைக்கப்படுகிறது. ஏனென்றால் இங்கு அன்னையின் 

சிருஷ்டி சக்தி விளக்கப் படுகிறது.

திரு நாமம் 32

ரத்ன க்ரைவேய சிந்தாக லோல முக்தா பலான்விதா 

Ratna-graiveya-cintāka-lola-muktā-palānvitā

 रत्न-ग्रैवेय-चिन्ताक-लोल-मुक्ता-पलान्विता 

இரத்தினங்களால் உருவானதும் வைர வைடூரியங்கள் பதித்ததுமான ஹாரத்தை கழுத்தில்  அணிந்து 

கொண்டிருக்கின்ற லலிதாம்பிகையை உபாசிப்பவர்களுக்கு அதற்கான பலன் நிச்சயம் கிட்டும். மனதை 

சஞ்சலங்களுக்கு இரையாக்காமல் அலைய விடாமல் அன்னை தேவி லலிதாம்பிகையின் முழு உருவத்தையும் 

மனதில் இருத்தி தியானிப்பவர்களுக்கு முக்தி நிச்சயம்.மனம் பூராவும் அன்னை நிறைந்திருந்தால், நாம் வேறு 

எதையும் குறித்து சிந்திக்க இயலாதல்லவா?. அங்கு வேறு எதற்கும் இடம் கிடையாது. நாம்  அன்னையிடம் 

ஐக்கியமாக்கி விடுகிறோம். அந்த ஐக்கியத்தில் நாம் இல்லாதாகி, நாம் விடுதலை பெற்று மறைந்து 

விடுகிறோம். இது தான் உண்மையான முக்தி. பரமாத்வான பரமேசுவரி, நம் எல்லோருடைய தாய் 

அவளிலிருந்து உண்டானவர்கள் நாம். அவளிலேயே ஐக்கியமாகிவிட்டால் அவளிலிருந்து நாம் 

வேறல்லமலாகிவிடுகிறோம்.அப்படிப் பட்ட முக்தியை தருபவளே அன்னை லலிதாம்பிகை.

திரு நாமம் 33

காமேசுவர ப்ரேமரத்ன மணி ப்ரதிபண ஸ்தனி

Kāmeśvara-premaratna-maṇi-pratipaṇa-stanī

 कामेश्वर-प्रेमरत्न-मणि-प्रतिपण-स्तनी

அன்னையின் மீது மிகுந்த பிரேமையுடைய காமேசுவரனுக்கு, அவன் செலுத்தும் அன்பிற்கு பிரதி பலனாக தனது 

அமுது சுரக்கும் இரு முலைகளையும் தருபவளே அன்னை லலிதாம்பிகை. தாயின் ஸ்தனங்கள் குழந்தைக்கு 

அமுதூட்ட உயிரூட்டுகின்றன. தாய்ப்பால் இல்லையேல் குழந்தையிடம் ஆரோக்கியம்  இராது. 

ஜீவாத்மாக்களின் இருப்பிற்குக் காரணம் பரமாத்வான அன்னையின் கருணை தான் அதே போல் தன்னிடம் 

அன்பு செலுத்தும் காமேசுவரனுக்கு தனது அமுத கலசங்களை அருளுகிறாள் அன்னை.. அதே போல் 

குழந்தைகளாகிய ஜீவாத்மாக்களுக்கும் கருணை காட்டுகிறாள் அவள் கருணைக்கு அளவு கிடையாது. 

அப்படிப்பட்ட கருணையின் உறைவிடமான ஸதனங்களையுடையவளான அன்னையை வணங்குவோம்.

திருநாமம் 34

நாப்யாலவால ரோமாலி லதா பல குசத்வயா

Nābhyālavāla-romāli-latā-phala-kucadvayā

 नाभ्यालवाल-रोमालि-लता-फल-कुचद्वया 

அன்னையின் நாபியில் முளைத்தெழும் உரோமங்களாகின்ற கொடிகளில் காய்த்து தொங்கும் இரு 

முலைகளாகின்ற கனிகளையுடைய தேவியை தியானிப்போம்.

ஸௌந்தர்யலஹரியில் ஆதி சங்கரன் சொல்வார்:” நிரந்தரம் பிரவஹித்துக்கொண்டிருக்கின்ற கங்கையின் 

மூலஸ்தானமான தேவியின் நாபியிலிருந்து முளைத்து வளரும் கொடியில் காய்த்துத் தொங்கும் கனிகளான 

அன்னையின் முலைகள் பரம சிவனை தன்னிடமே ஈர்த்து ரதி லீலைகளின் மைதானமாக மாறி பிரபஞ்ச 

உற்பத்திக்கு வழி வகுக்கிறது.’

ஸ்திரம் கங்காவர்த: ஸ்தனமுகுலஸாமாவலிலதா

கலாவாலம் குண்டம் குஸுமஶரதேஜோஹுதாபுஜ:

ரஸ்தர்லீலாகாரம்  கிமபி தவ நாஇர்கிரிஸுதே

பிலத்வாரம் ஸித்தயே கிரிஶேனஸ்தம் நயனானாம் விஜயதே(சிவானந்தன் லஹரி)

அதாவது தேவியும் பரம சிவனும் ஐக்கியமாவதால் பிரபஞ்சம் உற்பத்தியாகின்றது.

தவாதாரே மூலஸஹ ஸமயயா லாஸ்யபராய 

நவாத்மானாம் மனயே நவரஸமஹாதாண்டவநடம் 

உபாப்யாமேதாப்யமுதய விதிமுத்திஶ்ய தயயா

ஸனாதனாப்யாம் ஜஞ்ஞாஜனக ஜனனீமத் ஜகதிதம் ( சிவானந்தன் லஹரி)‘ தேவீ,தங்களுடைய மூலாதார சக்கரத்தில் ( நாபீ தடத்தில்) லாஸ்ய பிரியையான( லாஸ்யம் என்பது 

பெண்மை ததும்பும் நடனம்)ஸமயா தேவியும் மஹாபைரவனும் நவரஸங்களும் தரும் ஆனந்த நடனம்  ஆடி 

மஹாபிரளயத்திற்கு பின் பிரபஞ்ச உற்பத்திக்காக ஒன்று சேருகிறார்கள்’.இந்த சிவ சக்தி ஐக்கியம்  கண்டு 

நாம் வணங்குவோம்.

ஆதி பராசக்தியாகியாகிய லலிதாம்பிகை தான் ஜகன்மாதா;அவளிலிருந்து பிரபஞ்சமே உற்பத்தியாகின்றது; 

அவளில்லாமல் நாமில்லை.அவளே நாம்; நாமே அவள்.

திருநாமம் 35

லக்‌ஷ்ய ரோம லாதாரதா ஸமுன்னேய மத்யமா

Lakṣya-roma-latādhāratā-samunneya-madhyamā 

लक्ष्य-रोम-लताधारता-समुन्नेय-मध्यमा

அன்னையின் அரை அது இல்லாததும் போலவே இருக்கிறது. அங்கிருந்து உதயமாகும் 

உரோமங்களினால்த்தான் அப்படி யாருக்கும் பிரதேசமும் இருப்பதே தெரியவருகிறது. அதே போல் தான் 

ஆத்மாவும் இருக்குமிடமே தெரியாது.சத்தியான்வேஷண மர்ககத்தின் வழியாகத்தான் ஆத்மாவை 

கண்டறியமுடியும்.

 

திரு நாமம்் 36

ஸ்தனபார தலன்மத்ய பட்டபந்த வலித்ரயா

Stanabhāra-dalanmadhya-paṭṭabandha-valitrayā 

स्तनभार-दलन्मध्य-पट्टबन्ध-वलित्रया 

தேவி லலிதாம்பிகை தனது அரையில் தங்க ஒட்டியாணம் அணிந்துள்ளார்.அன்னையின் பருத்த முலைகளும் 

பாரம் தாங்காமல் இடை வளைந்து மூன்று மடிப்புகளையும் உண்டுபண்ணுகிறது.ஆகவே அன்னையே நீ 

‘ஸ்தனபார தலன்மத்ய பட்டபந்த வலித்ரயா’ என்றழைக்கப்படுகிறாய்.

இதே கருத்தை ஆதி சங்கரனின் ஸௌந்தர்ய லஹரியிலும் காணலாம்.எண்பதாவது சுலோகத்தை பார்ப்போம்

குசௌ ஸத்ய ஸ்விதயத்தடகடிதகுரபாஸபிதுரௌ

கஷந்தௌ தோர்முலையே கனககலஶபௌ கலயதா

தவ  த்ராதும் பங்கஆதலமிதி வலக்னம் தனுபவா

த்ரிதாம் ந்த்தம் தேவீ  த்ரிவலி லவலீவல்லீரபிரிவ

‘ அன்னையே, அவ்வப்பொழுது வியர்க்கின்றவையும் உன் மார்கச்சைகளை பிளர்ந்து கொண்டு வெளிவர 

பார்ககின்றவையும், கக்கம் வரை ஆக்கரமித்துக் கொண்டிருப்பவையுமான , தங்க 

கலசங்களையொத்திருக்கும்  உன் மார்பகங்களின் பாரம் தாங்காமல் உன் இடை ஒடிந்துவிடாமலிருக்க காம 

தேவன் தங்க ஒட்டியாணம் போல் மூன்று படிப்புகளையும் உருவாக்கியுள்ளானோ?’

தேவியின் கருணையுள்ளம்  தாங்கும் பாரம் சொல்லி மாளாது. ஏனென்றால் உலக மக்கள் யாவரையும் காப்பது 

அன்னையின் பொறுப்பல்லவா? அவளது இடையிலுள்ள  மூன்று மடிப்புகள் சிருஷ்டி( படைத்தல்), காத்தல், 

அழித்தல் என்ற மூன்று ஆளுமைகளைக் குறிக்கிறது.

திரு நாமம் 37

அருணாருண கௌஸும்ப வஸ்த்ர பாஸ்வத் கடிதடி

Aruṇaruṇa-kausumbha-vastra-bhāsvat-kaṭītaṭī

 अरुणरुण-कौसुम्भ-वस्त्र-भास्वत्-कटीतटी 

அன்னை தனது அரையில் சிவப்பு நிற பட்டாடை உடுத்தியிருக்கிறாள். ஏற்கனவே சொன்னது போல் சிவப்பு 

கருணை, தயையின் அடையாளம்.அன்னையோடு சம்பந்தப்பட்ட எல்லாமே சிவப்பு நிறத்துடனும் 

உள்ளது.அவளே கருணையின் வடிவம்.ஆகவே தான் அவள் ‘ஶ்ரீ மாதா’ என்றறியப்படுகிறாள்.அவளது 

முத்தொழிலும் – படைத்தல், காத்தல், அழித்தல் மூன்றுமே- கருணையை அடிப்படையாகக் 

கொண்டது.லலிதாஸஹஸ்ர நாமத்தை இசைத்த வாக் தேவிகளுள் ஒருவர் அருணா.அருணன் என்றால் 

சூரியன் . சூரியனின் நிறம் சிவப்பு.சூரிய ஒளி எல்லா ஜீவன்களுக்கும் ஜீவச் சக்தியை தருகிறது.ஆகவே சிவப்பு 

நிறம் ஜீவசக்தியைக் குறிக்கிறது.

மற்ற வாக் தேவிகள் வாஸினி, காமேஶ்வரி, ரோஹிணி,விமலா, ஜைனி,ஸர்வேஶ்வரி மற்றும் கோலினி அவர்.

.

திரு நாமம் 38

ரத்ன கிங்கினிக ரம்ய ரஸன தாம பூஷிதா

Ratna-kiṅkiṇikā-ramya-raśanā-dāma-bhūṣitā 

रत्न-किङ्किणिका-रम्य-रशना-दाम-भूषिता 

அன்னையின் ஒட்டியாணத்தில் மணிகளும் இரத்தினங்களும் அலங்கரிக்கின்றன.

ஸர்வம் சக்திமயம் -லலிதா ஸஹஸ்ரநாமம் 26-31

மந்திரம் 26
கற்பூரவீடிகாமோத ஸமாகர்ஷி திகந்தரா

  Karpūravīṭikāmodha-samākarṣi-digantarā

 कर्पूरवीटिकामोध-समाकर्षि-दिगन्तरा 

கற்பூரவீடிகாமோத என்பது தாம்பூலம். வெறும் தாம்பூலம் அல்ல; நறுமணம் கமழும், குங்குமப்பூ, 

ஏலக்காய்,கிராம்பு,இலவங்கம்,கற்பூரம்,கஸ்தூரி, பாக்கு,மற்றும் வெற்றிலையும் சேர்ந்த தாம்பூலம்.இந்த 

தாம்பூலத்தில் ஜாதிபத்திரியும் சேர்ந்து, சர்க்கரையின் தூளும் சேர்ந்தால் எப்படியிருக்கும்!இதை 

மென்றுகொண்டிருக்கும் தேவி இந்த பிரபஞ்சம் முழுவதும் நறுமணமானதாக இருக்க காரணமாக 

இருக்கிறாள்.இதே பொருளை 559 ஆம் நாமமும, லலிதா த்ரிஶதியில் 14 ஆம் நாமமும் தருகிறது.

இதன் பொருள் என்னவென்றால் தேவியின் ஸஹஜமான  நறுமணம் மூலம் அஞ்ஞானிகளை தன்பால் ஈர்த்து 

கொள்கிறாள்அன்னை லலிதாம்பிகை என்பதாகும்.

ஞானிகள் தங்கள் பக்தியினால் தேவியை அடைய முடியும். அஞ்ஞானிகளுக்கு வேறு தூண்டுதல்களும் 

வேண்டியுள்ளது.அவளது நறுமணம் சாமானியர்களை அவள் பக்கம் ஈர்ககின்றது.

மந்திரம் 27

நிஜ ஸல்லப மாதுர்ய விநிரபர்த்ஸ்தித கச்சபி.

Nija-sallāpa-mādurya-vinirbhartsita-kacchpī

 निज-सल्लाप-मादुर्य-विनिर्भर्त्सित-कच्छ्पी 

ஸரஸ்வதி தேவியின் கையிலிருக்கும் ‘ கச்சபி’ என்ற வீணை எழுப்பும் ஒலி- சங்கீதம் மிகவும் 

இனிமையானது.அதை விட இனிமையானது தேவி லலிதாம்பிகையின் குரல்.அப்படிப்பட்ட குரலுடைய 

தேவியை போற்றுவோம்.

ஸௌந்தர்ய லஹரி 66 ஆம் சுலோகத்தில் ஆதி சங்கரருக்கு இதையே சொல்லியுள்ளார்:

விபஞ்சயா காயந்தி விவிதம்பதானம் பதபமஸ்ந-

த்யயாரஸ்ப்த வக்தம் சலிதஶிரஸா ஸாத்ர்யவசஸ்ந,

ததீகயர்மாமாத்ர்யகரபலபிததந்த்ரீகலரவம்

நிஜாம் வீணாம் வாணி நிசுலயதி ஸ்சாஸ்ந நிப்யதம்.

அன்னையே, தேவீ, பரமசிவனின் பலவிதமான பெருமைகளை புகழ்ந்து சங்கீதமாக சரஸ்வதீ தேவி  தன் 

இனிமையான வீணையின் நாதத்தில் உளவாக்கிக் கொண்டிருப்பதை கேட்டுக் கொண்டிருக்கும் 

நீ,தலையாட்டிக்கொண்டே அதை ரசித்து, புகழும் பொழுது, தங்களது மிகவும் இனிமையான குரலின் முன் தன் 

வீணா நாதம் வெட்கி தலை குனிவதைக் கண்டு சரஸ்வதீதேவி அதன் உறையில் போட்டு மூட வேண்டி 

வருகிறது.

முன் மந்திர விளக்கத்தில் கூறியது போல் ‘அஞ்ஞானிகளை ஈர்பபதும் உன் குரலே’ என்று தான் கூற 

வேண்டும்.

மந்திரம் 28

மந்தஸ்மிதப்ரபாபூர மஜ்ஜத்காமேச மானஸா 

Mandasmita-prabhāpūra-majjatkāmeśa-mānasā

 मन्दस्मित-प्रभापूर-मज्जत्कामेश-मानसा (28)

தேவீ, லலிதாம்பிகையே, உன்புன்னகையை- இல்லை அதிலும் அதிக கவர்சசியான மென்னகையை கண்டு 

பூரித்துப் போயிருக்கின்ற ஈசனின்  இடது துடையில் அமர்நதிருக்கும் காமேஶவரியே உன்னை 

வணங்குகின்றேன்.’ஸ்மிதா’ என்றால் புன்னகை.’மந்தஸ்மிதா’ மெல்லிய புன்னகை.அது ஒரு தனிக்காட்சி 

அது கவர்சசியுடன் கூடிய மென்னகை. அதில் கருணை, தயா, பாசம்,ஆசை எல்லாம் ஒரு சேரவிளங்கும் 

மென்னகை. இப்படிப்பட்ட மென்னகையை தேவி எப்பொழுது உதிர்ககிறாள்? பரம சிவனின் இடது 

துடையில்  அமர்நதிருக்கும் பொழுது.அப்படியிருக்கும்பொழுது பரமசிவன் காமேசுவரன் 

என்றும்,லலிதாம்பிகை காமேசுவரி என்றும் அறியப்படுகிறார்கள். இது அர்த்த நாரீசுவரத்தோற்றம் அல்ல.இந்த 

நிலையில் தேவியின் மென்னகையில் பரம சிவன் தன்னையே இழந்து மெய் மறந்திருக்கிறான்.

இன்னொரு வித்த்திலும் இந்த மந்திரத்தை வியாக்கியானிக்கலாம்.. ‘காம’ என்றால் ‘பிந்து’ ‘ புள்ளி’என்றும் 

பொருள் உண்டு.பிந்து என்பது ‘ காமகலா’ பீஜத்தின் ஒரு பகுதி.( இ) இந்த பீஜ த்தில் இரண்டு பிந்துக்கள் 

உண்டு. அவை முறையே சூரியனையும்  சந்திரனையும் பிரதிநிதீகரிக்கின்றது.பிந்து என்பது ‘ அஹம’ ஐஉம்

‘ காம’ மற்றும் ‘கலா’ என்பது ஆசையும் குறிக்கும்.மனம் தான் ஆசைகளின் உறைவிடம்.பரமசிவனின் மனமே 

அன்னை லலிதாம்பிகையின் – காமேசுவரியின் புன்னகையில் இளகி ஆசையின் வசமாகி  விடும் பொழுது 

சாதாரண மனிதர்களைப் பற்றி கூறவும்  வேண்டுமோ? 

அன்னை நம்மை எல்லோரையும் தன் புன்னகையில் ஈர்த்து தன் வசமாக்கும் முக்திக்கு வழி காட்டுகிறாள்.

மந்திரம் 29

அனாகலித ஸாதுரிஶ்ய சிபுக ஶ்ரீ விராஜிதா

Anākalita-sādṛśya-cibuka-śrī-virājitā

 अनाकलित-सादृश्य-चिबुक-श्री-विराजिता

தேவீ, உனது தாடை மிகவும் அழகு வாய்ந்தது.அது மலர்நதும் மலராத பூ மொட்டு போல் இருக்கிறது. அங்கு 

ஸர்வ ஐசுவரியங்களின் தேவதை குடியிருக்கிறான்.ஸௌந்தர்ய லஹரி 67 ஆம் சுலோகத்தை இந்த 

தருணத்திலும் பார்ப்பது பொருத்தமாகவிருக்கும்.

கராக்ரண ஸ்பஷ்டம் துஹினகிரீணா வத்ஸலதயா

கிரிஶேனஸ்தம் முஹுராதரபானாகுலதயா

கரக்ராஹயம் ஶமபோர்முகமுகுரவிருந்தம் கிரிஸுதே

கதம்காரம் ப்ரூமஸ்தவ சுபுகமௌபமரஹிதம்

‘அன்னையே, மலைமகளே, தேவீ , நின் தந்தை இமயன் பாசத்தோடு தடவிய உன் மெல்லிய 

உதடுகள்,பரமசிவனில், அந்த அழகிய அதரங்களிலிருந்து அமுதை பருக வேண்டும் என்ற ஆர்வத்தை 

உண்டுபண்ணி,மீண்டும் மீண்டும் தன் கைகளை உயர்த்துவதற்கு தூண்டிய அதரங்கள்,உன் முகமாகின்ற 

கண்ணாடியின் கைப் பிடி போல் அவைகளை பற்றும்போது தோற்றமளிக்கின்றன.அப்படிப்பட்ட  உன் 

உதடுகளின்்அழகை எப்படி வருணிப்பேன்?’ என்கிறார் ஆதி சங்கரர்.

அபிராமி அந்தாதியில் அபிராமி பட்டர் பாடுகிறார்:

பவளக் கொடியில்  பழுத்த செவ்வாயும்
பனிமுறுகல்

தவள திருநகையாம் துணையா எங்கள்  சங்கரனை

துவளப் பொருத துடியிடை சாய்ககும் துண முலையாள்


அவைளப் பணிமின் கண்டீர் அமராவதி ஆளுகைகே

பவழங்கள் போல் ஒளிர்கின்ற உதடுகளும்,அதில் தவழ்கின்ற புன் முறுவலும் கொடியிடையும் அவைக்கு துணை 

செய்கின்ற இரு முலைகளும் எங்கள் சங்கரனையே வீழ்த்தி விட்டது! அப்படிப்பட்ட அழகியான உன்னை 

போற்றிப் பாடினால் இந்திரபுரியாம் அமராவதிக்கே எங்களை இட்டு செல்லமாட்டாயா, தேவீ , நீ.

மந்திரம் 30

காமேஶ பத்த மாங்கல்யா ஸூத்ர ஶோபிதாமகன் கந்தரா

Kāmeśa-baddha-māṅgalya-sūtra-śobhita-kandhara

कामेश-बद्ध-माङ्गल्य-सूत्र-शोभित-कन्धरा (30)

காமேசுவரன் அணிவித்த திருமங்கல்யத்துடன் , தேவீ, உன் கழுத்து என்னே அழகு!.
ஸௌந்தர்ய லஹரி 69 ஆம் சுலோகத்தில் ஆசாரியன் கூறுவான்:
கலே ரேகாதிஸ்திஸ்ர கதிகமக்கதைநிபுணிகா

விவாஹவ்யானத்தகுணகுணஸங்கயாப்ரதிபுவ:

விராஜந்தே நாநாவிதமதுரராகாகரபுவா:

த்ரயாணாம் க்ராமாணாம் ஸ்திதிநியமஸீமான இவ தே!

கதி, கமகம், மற்றும்,கீதம் அவையில் திறைமை வாய்ந்த தேவீ, முன்னொருநாள் பரமசிவன் த்ஙகள் 

கழுத்தில் அணிவித்த திருமங்கல்ய சரடுகளால் ஏற்பட்டவையோ அந்த மூன்றுகோடுகள்? இல்லை சங்கீத 

பிரிவுகளின் எல்லைக் கோடுகளோ அவை?

தேவியின் மணிக்கழுத்து அவ்வளவு நளினத்துடன் இருந்ததை குறிப்பிடுகிறது இந்த நாமம்.
மந்திரம் 31

கனகாங்கத கேயுர கமனீய புஜனவிதா

Kanakāṅgada-keyūra-kamanīya-bhujanvitā
 कनकाङ्गद-केयूर-कमनीय-भुजन्विता 

தங்க வளையல்களையும் கெயுராக்களையும் அணிந்துள்ள தேவீ, நீ எனக்கருள்வாய்எந்த ஆபரணம் 

அணிந்தாலும் அவை அழகிற்கு அழகூட்டுவது போல் உள்ளது.. தேவீ நீ எதை அணிந்தாலும் அது 

தங்கமல்லவா. ஜீவாத்மாக்கள் எந்த உருவில் தோன்றினாலும் அவை உன் குழந்தைகளே. நீயே அவை.

ஸர்வம் சக்திமயம் – லலிதா ஸஹஸ்ரநாமம் 19_25

மந்திரம் 19

நவசம்பக புஷ்பாப நாஸதண்ட விராஜிதா

Navacampaka-puṣpābha-nāsadaṇḍa-virājitā 

नवचम्पक-पुष्पाभ-नासदण्ड-विराजित

தேவியின் நாஸி மலர்நத சம்பகாசோகப் பூவைப் பொன்று காட்சியளிக்கிறது.

மந்திரம் 20

தாக்காந்தி திரஸ்கரி நாஸாபரண பாஸுரா

Tārākānti-tiraskāri-nāsabharaṇa-bhāsurā

 ताराकान्ति-तिरस्कारि-नासभरण-भासुरा

அந்த மலர்நத சம்பகப்பூவைப் போன்ற மூக்கில் தேவி அணிந்திருக்கும் மூக்குத்தி நட்சத்திரங்களையே 

தோற்கடிக்கும்படி பிராகாசித்துக் கொண்டிருக்கிறது.அந்த மூக்குத்தி சிவப்பு ரத்தின 

கற்களாலானவையாக இருக்கிறது.ஆகவே தாராகாந்தி  என்றழைக்கப்பட்டார் படுகிறாள். மேலும் தாரா 

என்பது மங்களாக மற்றும் சுக்லா என்ற இரு நட்சத்திரங்களையும் குறிக்கிறது.அந்த நட்சத்திரங்களையே 

தேவி தன் மூக்குத்தியில் கற்களாக அணிந்திருந்தான் போலும் இந்த இரு நட்சந்திரங்களும் இன்று 

செவ்வாய் மற்றும் சுக்கிரன் என்ற கிரகங்களாக அறியப்படுகிறது.ஒவ்வொரு கிரகங்களும் ஒவ்வொரு 

ரத்தின கற்களை ஆட்சி செய்கின்றன. செவ்வாய் கிரகம் மாணிக்க கற்களையும் சுக்கிரன் வைரக் 

கற்அளையும் ஆட்சி செய்வதாக 

புராதன கிரந்தம் மணி மாலா கூறுகிறது.அந்த கிரகங்களையே தனது மூக்கில் அணிந்திருப்பதாக 

சொல்லப்படுகிறது.தேவியே பிரம்மாண்டம் என்பதும் , கிரகங்களும் நட்சத்திரங்களும் அவளது 

அங்கங்களை அலங்கரிக்கின்றது என்பதும் இதனால் அர்த்தம் ஆகிறது.

மந்திரம் 21

கதம்ப மஞ்சரி க்ளப்த கர்ணபூர மனோஹரா

.
Kadamba-mañjarī-klpta-karṇapūra-manoharā

 कदम्ब-मञ्जरी-क्ल्प्त-कर्णपूर-मनोहरा (21)

கதம்ப மலர்களின் இதழ்கள் தேவி லலிதாம்பிகையின் காதுகளை அலங்கரிக்கின்றன.தேவியின் சிகயை 

அலங்கரிக்கின்ற மலர்களும் காதோரம் தொங்கி அழகிற்கு அழகு செய்து கொண்டிருந்தது.தேவியின் 

மணிமாளிகையான சிந்தாமணி கிரகத்தின் தோட்டத்திலே மலர்நத பூக்கள் தேவியை அலங்கரித்துக் 

கொண்டிருந்தன.இந்த மலர்கள் தெய்வீக மணம் கமழ்நதுகொண்டிருந்தது. அந்த நறுமணம் தேவியை 

தொட்டுக் கொண்டு இருப்பதால் மலர்களுக்கு  கிடைத்திருக்கும்.

அபிராமி அந்தாதியில் அன்னையை கீழ்க்கண்டவாறு பாடியுள்ளார் பராசக்தியின்பரம பக்தானாம் பிராமி 

பட்டர்.

அதிசயம் ஆன வடிவுடையள் அரவிந்தம் எல்லாம்

துதிசய ஆனன சுந்ததரவல்லி துணை இரதி

அன்னை பிராமி ஆதிசயமான வடிவு -உருவத்தை உடையவள;. அரவிந்தம்- தாமரை முதற்கொண்டுள்ள 

எல்லாமலர்களும் ஆராதிக்கின்ற அழகுடையவள்; என்று அபிராமி பட்டர் அபிராமி அந்தாதியில் பாடுகிறார்

மந்திரம் 22

தாடங்க யுகலி பூத தபனோடுப மண்டலா

Tāṭaṅka-yugalī-bhūta-tapanoḍupa-maṇḍalā 

ताटङ्क-युगली-भूत-तपनोडुप-मण्डला

தேவி லலிதாம்பிகையின் காதுகளில் சூரியனும் சந்திரனும் காதணிகளாக 

தொங்கிக்கொண்டிருக்கிறார்கள்.சூரியனும் சந்திரனும் இந்த உலகிலுள்ள எல்லா ஜீவ ராசிகளுக்கும் 

உயிர்சக்தியை வழங்குபவரகள் அவர்களும் லலிதாம்பிகையின் ஆட்சிக்கு கட்டுப்பட்டவர்களாக 

இருக்கிறார்கள்.

சூரிய சந்திரர்கள் அம்பிகையின் இரு கண்களென்றும், காதுகளென்றும் மற்றும் அவளது இரு 

யமார்பகங்களென்றும் வருணிக்கப்படுகின்றன.

க்ளிம் என்ற பீஜாக்‌ஷரம்  அன்னையின் இரு முலைகளை பிரதிநிதீகரிக்கின்றன. அவைகளை இரண்டு 

அரை சக்கர வடிவமாக பிரதிநிதீகரிக்கிறார்கள். அன்னையின் மார்பகங்கள் அவள் குழந்தைகளுக்கு 

உயிர்பபால் கொடுத்து போஷிப்பிக்கின்றன.

க்ளிம் பீஜத்தை காம பீஜம் என்றும் சொல்வார்கள்.

சௌந்தர்ய லஹரி 28 ஆம் சுலோகத்தில் ஆதி குரு சங்கரன் சொல்கிறான்: 

ஸுதாமபயாஸ்யவாதய ப்ரதிபய ஜரா ப்ரமது ஹரிணீம் விபதயஸ்னத விஸ்த்யு விதிஶதமகாதயா திவிஷத:,

கராலம் யத்ஸ்கஷ்யலம் கபலிதவத: காலகலனா ந ஶம்ஸ்பாதன்மூலம் தவ ஜனனி தாடங்கமஹிமா

தேவீ, இந்திரன், பிரம்மா முதலியவர்கள் அமுதை பருகியும் ஜரா-நரை பாதித்து மரணத்திற்க 

இரையாகிறார்கள்.பரமசிவனோ ஆலகால விஷத்தை அருந்தியும் எந்த பாதிப்பும் இல்லாமல் காலத்தின் 

கட்டுப்பாட்டிற்கு ஆளாகாமல் சிரஞ்சீவியாக வாழ்கிறார் என்றால் அது தன் உடலில் பாதியை 

உமைவளான உனக்கு தந்ததாலும் உன் கர்ணாபரணத்தை ஸ்பரிசித்துக் கொண்டிருப்பதாலும் தானோ? 

அவ்வளவு மகிமை வாய்ந்தது உன் கர்ணாபரணங்கள் என்கிறார் ஆசாரியர்.

மந்திரம் 23

பத்மராக சிலாதர்ஶ பரிபாவி கபாலபூ

Padmarāga-śilādharśa-paribhāvi-kapolabhūḥ

 पद्मराग-शिलाधर्श-परिभावि-कपोलभू:

தேவி லலிதாம்பிகையின் கன்னங்கள் மிருதுத் தன்மையுடையதும்,பள பளபளப்பாகவும் 

மினுமினுக்கின்றன.அவளது கன்னங்கள் பத்ம ராக கற்கள் போன்று சென்னிறமாக பளபளக்கின்றன.

மாணிக்ய கற்கள் நான்கு விதம்: விப்ரா,குருவிந்தா,ஸௌகந்திகம் மற்றும் மன்ஸ கண்டா. இவைகளில்  

விப்ரா தான் மிகவும் சிறந்தது.

தேவியின் கன்னங்கள், செந்நிற மாணிக்ய கற்களை காதுகளில் அணிந்திருப்பதால், செந்நிறமான 

காட்சியளிக்கிறது. மேலும் தேவியின் நிறமே சிவப்பு தானே!சந்திரன், சூரியன் மற்ற ஆபரணங்கள் 

எல்லாம் தேவியின் உடலை அலங்கரிப்பதால் செந்நிறமாகவே காட்சியளிக்கின்றனர்.சிவப்பு 

கருணையின் நிறம் என்று ஏற்கனவே சொல்லப்பட்டதல்லவா!

ஆதி சங்கரனின் சௌந்தரியத்தைத் லஹரி 59ஆம சுலோகத்தில் கூறுகிறார்:

ஸ்புரத் கண்டோபாகப்ரதிபலிததாடங்க யுகலம்

சதுஶ்சக்ரம் மனய தவ பூமுகமிதம் மன்மத ரதம்

யமாரூஹய த்ரூஹயதயவநிரதமர்ஸ்கந்தசரணம்

மஹாவீரோ: மார: ப்ரமதபதயே  ஸஜ்ஜிதவதயே! 

தேவீ, உன் மின்னுகிற கன்னங்கள் தங்கள் காதணிகளின் செந்நிறத்தை பிரதிபலிப்பதனால், தங்கள் முகம் 

சூரிய சந்திரரர்களாகின்ற இரு சக்கரங்களுடனான மன்மத ரதம் போல் காட்சியளிக்கின்றது.அந்த 

மன்மதன் அப்படிப்பட்ட ரதத்திலேறி பரம சிவன் மீது போர்தொடுக்கிறான்.அதாவது பரமசிவன் மன்மத 

பாணத்திலிருந்து தப்ப முடியாமல் தங்களால் ஈர்ககப்படுகிறார்.

மணியே மணியின்  ஒளியே ஒளிரும்  மணி  புனைந்த
அணியே அணியும்   அணிக்கழகே  அணிந்தவர் —-

என்று பா டுகிறார் அபிராமி பட்டர் அபிராமி அந்தாதியில்  .

மந்திரம் 24

நவவித்ரும பிம்பஶ்ரீ ந்யாக்காரி ரதனச்சதா

Navavidruma-bimbaśrī-nyakkāri-radanacchadā

 नवविद्रुम-बिम्बश्री-न्यक्कारि-रदनच्छदा (24)

தேவியின் உதடுகள் புது பவழம் போலவும் நாவல் பழத்தை ஒத்தும் இருக்கின்றன. அன்னையின் 

செந்நிறத்திற்கு ஏற்றார்ப்போல் அவையும் அமைந்திருக்கின்றன.

மந்திரம் 25

ஶுத்த வித்யாங்குராகாரா த்விஜபங்க்தி த்வாயோஜ்வலா 

Śuddha-vidhyāṅkurākāra-dhvijapakṅti-dvayojvalā

 शुद्ध-विध्याङ्कुराकार-ध्विजपक्ङ्ति-द्वयोज्वला (25)

‘அன்னையே, உன் பற்கள் சுத்த வித்யாவை ஒத்திருக்கிறது’. சுத்த வித்யா என்றால் ஶ்ரீ வித்யாவை 

குறிக்கும்.ஶ்ரீ வித்யா என்பது தேவி உபாசனையில் மிகவும் முக்கியமானதும் மிகவும் இரகசியமானதும் ஆக 

உள்ளது. இந்த உபாசனைக்கு நிறைய அனுஷ்டான கர்மங்கள் உள்ளன.ஒவ்வொரு அனுஷ்டானத்திற்கும் 

ஒவ்வொரு அர்த்தமும் உண்டு.

சுத்த என்றால் தூய்மையானது. வித்யா என்றால் ஞானம் அல்லது அறிவு.இந்த வித்யா தூய்மையானது 

என்று ஏன் கூறப்படுகிறதென்றால் இந்த உபாசனை ‘ தத்வமஸி’ என்ற அத்வைத தத்துவைத்தை

அடிப்படையாகக் கொண்டது. ஸர்வம் சக்தி மயம்; சக்தியின்றி வேறொன்றில்லை என்ற அடிப்படையில் 

அனுஷ்டிக்கப்படுகின்றது.

சோடஸி  மந்திரம் தான் ஶ்ரீ வித்யாவின் பீஜமாக கருதப்படுகிறது. ஏற்கனவே குறிப்பிட்டது போல் அதற்கு – 

சோடஸி மந்திரத்திற்கு – பதினாறு பீஜங்கள் உண்டு. ஒவ்வொரு பீஜமும் முளை விடும்பொழுது இரு 

இலைகளுடன் விரிகின்றன. ஆக முப்பத்திரண்டு இலைகள் முளை விடுகின்றன.நமது பற்களின் 

எண்ணிக்கையும் முப்பத்தி இரண்டு.நமது பற்கள் இரட்டை வரிசையிலே காணப்பட்டாலும் தாடைகள் 

இரண்டுமே உள்ளே ஒன்று சேருகின்றன.அதே போல் ஜீவாத்மாவும் பரமாத்மாவும் வேறு வேறாக 

தென்பட்டாலும் அவை ஒன்றே .

இன்னொருவிதத்தில் பார்த்தால் தேவீ உபாசனைக்கு தீக்‌ஷை முப்பத்திரண்டு விதங்கமாக 

வழங்கப்படுகிறது.

மேலும் சம்ஸ்கிருதத்தில்உள்ள 52 எழுத்துக்களில் 32 மட்டுமே இந்த ஸஹஸ்ரநாம மந்திரங்களின் 

ஆரம்பத்தில் பயன்படுத்தப் பட்டுள்ளது.

ஆக தேவியின் 32 பற்களுக்கு பல விதமான அர்த்தங்களை உண்டு. 

ஸர்வம் சக்தி மயம்- லலிதா ஸஹஸ்ரநாமம்

பாகம் 1.                             லலிதா ஸஹஸ்ர நாமம்

அத்தியாயம்                        மந்திரம் 12-18

மந்திரம் 12

நிஜாருண்-ப்ரபா- பூர-மஜ்ஜத்-பரமஹ்மாண்ட- மண்டலா

தேவியின்  சிவப்பு நிறம் பிரபஞ்சம் முழுவதும்- இல்லை இந்த பரம்மாண்டத்தையே ஒளி 

வெள்ளத்தில்  மூழ்கடிக்கின்றது. வெறும் சிவப்பு நிறமில்லாத்து; அது சூரியனின சிவப்பு நிறம்.

அருண் – அருணன் என்றால் சூரியன். நிஜ- தன்னுடைய

 ப்ரம்மாண்டத்தை முழுவதையும் பிரகாசமானமாக்கிற அம்மையே என்றழைக்கிறது  இந்த நாமம்

பௌதிக வருணனை இந்த நாமத்திலிருந்து ஆரம்பிக்கிறது.சாதாரணமாக கடவுள்களை வருணிக்கும்பொழுது

 ‘ பாதாதிகேசம் ‘ தான் வருணிப்பார்கள்.ஆனால தேவியரை வருணிக்கும்பொழுது தலையிலிருந்து பாதம் 

வரை என்ற  முறையில் வருணிப்பார்கள் சிவனுக்கு மட்டும் இரண்டு விதமாகவும் வருணிக்கலாம். ஏனென்றால் 

சிவன். அர்த்த நாரீசுவரர்.தான் பாதி, சக்தி ப்பாதி. ஆகவே உமையொரு பாகன் என்று அழைககிறார்கள்.

பஞ்சதசி மந்திரத்தில் மூன்று பாகங்கள் உண்டு. அதில் ஒன்று கேசாதிபாதம் பாத வருணனை. ; அதாவது 

தேவியின் உச்சந்தலையில் மையமாக வைத்த தியானிப்பது என்று பொருள்.

தேவி லலிதாம்பிகையின் உச்சந்தலையிலிருந்து சிதறி விழும் ஒளிக்கதிர்கள் இந்த ப்ரம்மாண்டத்தையே 

பிரகாசமானமாக்க வல்லது என்று இந்த மந்திரத்திற்கு பொருள்.

ஞானப்பிராகாசம் என்பது தேவி லலிதாம்பிகையின் சிரஸிலிருந்து தான் உற்பத்தியாகின்றது. அவளே 

ஞானத்தின் உறைவிடம். அவளே ஞானமலை; ஞான ஒளி. அவளை உபாசிக்கிறவர்களுக்கு ஞானம் எளிதில் 

கிடைக்கும். மற்றவர்கள் அஞ்ஞானம் எனும் இருளில் உழல வேண்டியது தான்.

மந்திரம் 13

சம்பகாசோக புன்னாக் ஸௌகந்திக லஸத் கசா    

சம்பகாசோக,புன்னாகம்,ஸௌகந்திகம் என்பன தேவியின் முடியை அலங்கரிக்கும் நறுமணமுள்ள 

மலர்கள். இந்த மலர்கள் தேவியின் முடிக்கு நறுமணம் நல்குவதில்லை.இந்த மலர்கள்தான் தேவியின் முடியில் 

வசிப்பதால் நறுமணம் பெறுகிறது.

இதற்கு முன் கூறப்பட்டுள்ள மந்திரங்களில் தேவியின் ஆபரணாதிகளையும் ஆயுதங்களையும் 

விவரிக்கப்பட்டுள்ளது. இவைகள் எதுவுமே தேவிக்கு அழகையும் சக்தியையும் அளிப்பதில்லை. அவை 

தேவியிடம் இருப்பதால்த்தான் அழகும் சக்தியும் ஆர்ஜிக்கின்றன.

தேவியின் சக்தியும் அழகும் நறுமணமும் தாயின் உள்ளிலிருந்து வருபவை. அதே போல் ஒவ்வொரு 

மனிதனுடைய சக்தியும் அழகும் அவனுள்ளிருந்து அவர் வேண்டும்.அவை வெளியுலகுக்கு லௌகீக- பௌதிக 

வஸ்துக்களால் வருவதில்லை.அவனுள் இருக்கும் பிரம்மம் தான் அவைகளை வழங்குகின்றன. செல்வம், பதவி, 

ஆடையலங்காரம் எல்லாம் நாசமடையக் கூடியவை. அவை எதுவும் ஒருவனுக்கு அழகையும் பலத்தையும் 

அளிக்காது. அவனது ஆத்ம சக்தி மட்டும் தான் அதை அளிக்க முடியும் ஆகவே வெளி அழகை பாராதீர்; 

உங்கள் கவனத்தை உன்முகமாக திருப்பி ஆத்ம விசாரணையின் ஈடுபடுங்கள்;உங்களுக்கு சக்தியும் அழகும் 

கிட்டும் என்பதை இந்த மந்திரம் ஞாபகப் படுத்துகிறது.

   ஆகவே தான் பகவான் ரமண மஹர்ஷி கூறுவார்:

                    சீரை யழித்து நிர்வாணமாகச் செய்துன்னருட்சீரையளித்தருளருணாசலா

ஸௌந்தர்ய லஹரியில் ஆதி சங்கரன் கூறுவார்:

துனேது த்வாந்தம் நஸ்துலிததலிதேந்தீவரவனம்

கனஸ்னிக்பிதஶ்லஷ்ணம் சிகுரநிகுரும்பம் தவ சிவே,

யதீயம் ஸௌரபயம் ஸஹஜமுலப்தம் ஸுமனஸ்ஸா

வஸந்தயஸ்மின்மன்யே வலமதனவாடீ விடபினாம்.

‘ அம்மா தாயே தேவீ, ( சிவே) அடர்த்தியானதும் மலர்ந்த நீலத் தாமரை பூக்களின் கருமை நிறத்துடனானதும் 

பளபளப்புடனும் காணப்படும்  உன் கூந்தல் எங்கள் அஞ்ஞானமாகின்ற இருளை அகற்றி எங்களுக்கு முக்தியை 

நல்கட்டும். இந்திரனின் பூந்தோட்டத்திலுள்ள மலர்கள் உன் கூந்தலின் நறு மணத்தை பெறுவதற்காக அங்கு 

வந்து வசிக்க விரும்புகின்றன.’

தேவியின் தலைமுடியின் மிருதுத்தனமை தாய்மையின் அன்பை சுட்டிக்காட்டுகிறது.

“ஆதியந்தம் வாலையவள் இருந்த வீடே ஆச்சர்யம் மெத்த மெத்த அது தான் பாரு“

என்று கருவூர்த் சித்தர்  பாடி அருள்கிறார். ஆதியும் அந்தமும் இல்லாத வாலை இருப்பிடமே ‘ மெத்து மெத்து’ 

என உள்ள உன் தலைமுடியே !

அதாவது நம் சிரசில் உள்ளே மத்தியிலே , நம் இரு கண்ணும் உள் சேரும் இடத்திலே , நம் உச்சிக்கு கீழே 

அண்ணாக்குக்கு மேலே உள்ள அந்த இடமே, அந்த அரங்கமே – அந்தரங்கமான வாலை இடம்.

இதுவே ஞான ரகசியம்.அந்த சிரஸிலிருந்து ஞான ஸ்தானம் நமக்கு ஞான ஸ்நானம் செய்விக்கட்டும் 

என்கிறார் கருவூரார்.

முதலும் முடிவுமான அவளே வாலை. அவளே பாலா .அவளே  சக்தி .

உன்னை படைத்து உன்னுள்ளே ஒளிர்கிறாள் உலகத்தாய் வாலை.அவளை பாரு என்கிறார் கருவூர் சித்தர்.

 மனதை அங்கே- சிரஸில்  நிறுத்தி மனக்கண்ணாலே உணர்ந்து  இருந்தாலே தவம் செய்தாலே ஞானம் 

பெறுதலுக்கு வழி.

ரிஷி துர்வாஸர் தனது ‘ சக்தி மஹிமை’ எனும் கிரந்தத்தில் கூறுவார்’ தேவியின் தலைமுடியின் நறுமணத்தை 

நமது இதய சக்கரத்தில் இருத்தி , தியானம் செய்ய வேண்டும்’ என்று.

உலக மாதாவின் தலைமுடிக்கே அஞ்ஞானத்தை விரட்டியடிக்கக் கூடிய சக்தியிருக்குமெனில் அவளது முழு 

உருவத்திற்கு எவ்வளவு சக்தியிருக்கும்? 

அவளது தலைமுடியிலுள்ள நான்கு மலர் களின் வாசனை என்பது நமது அந்தக்கரணத்தைக் 

குறிக்கிறது.மனது, புத்தி, போதம்,அஹம் இவை நான்கும் சேர்ந்தது தான் அந்தக்கரணம் . மாதாவின் 

தலைமுடியோடு சேரும்பொழுது அந்தக்கரணம் அசுத்தம் செய்யப்படுகிறது. அந்தக்கரணம் 

சுத்தமானால்த்தான் ஞானம் – ஆத்ம சாக்‌ஷாத்காரம் பெறமுடியும்.

மந்திரம் 14

குருவிந்தா,மணிஸ்ரேணி, கனத்,கோடாரி,மண்டிதா

செல்வ செழிப்பையும்,அன்பையும், பக்தியையும்ம் அதிகப்படுத்துகிறது சிவப்பு வைரம் ( ரூபி)பதித்த கிரீடத்தை 

அணிந்துள்ள தேவி லலிதாம்பிகையை உபாசிக்கின்றவர்களுக்கு சர்வ ஐசுவரிங்களும் சித்திக்கும் ஏனென்றால் 

சிவப்பு வைரம் விஷ்ணுவிற்கு பிரியமானது.விஷ்ணு ஶ்ரீநிவாஸன். அவனிடம் ஶ்ரீ – லகஷ்மி வசிப்பதால் அவனை 

சந்தோஷப் படுத்துபவர்களுக்கு செல்வ செழிப்பு உண்டாகும்.

ஸௌந்தர்ய லஹரியில் ஆதி சங்கரர் சொல்லுவார்:

கதைர்  மாணிக்யத்வம் க்கனமணிபி: ஸாத்த்யம் கடிதம்

கிரீடம் ஸ்திதி ஹைம ஹிமகிரிஸுஸ்த கீர்யதி ய:

ஸ நீடசொயாசேரண ஶபலம் சந்தரஶக

தனு: ஶௌனசீரம கீமிதி ந நிபத்தாதி திஷணாம்

தேவி மாதா லலிதாம்பிகையே, பன்னீரண்டு சூரியர்கள் ஒன்றுசேர்நது உருவான தங்கள் தங்க மகுடத்தை 

எவ்வாறு விவரிக்க இயலும்?அதிலுள்ள இரத்தின கற்களின் ஒளியினால் பிரகாசிக்கின்றன சந்திரனை இந்திர 

தனுஷ் என்று கவிஞர்கள் வருணித்தால் அதில் என்ன ஆச்சரியம்?

துர்வாச முனிவரும் சக்தி மகிமையில் தேவியின் மகுடத்தை வருணிக்கிறார்கள் 

மந்திரம் 15

அஷ்டமி சந்திர விப்ரஜா தளிக்க ஸ்தலா ஶோபிதா

தேவியின் முன் நெற்றி அர்த்த சந்திர ரூபத்தில் எட்டாம் நாள் பிறை போல்- அஷ்டமி தினத்து சந்திரனை 

போல் காட்சியளிக்கிறது. எட்டாம் நாள் சந்திரினில் காணும் நெளிவுகள் ஒரு அழகே!.

மந்திரம் 16

முக சந்த்ரா களங்காபா ம்ரிகநாபி விஶேஷகா

நெற்றியில் நறுமணம் உமிழ்கின்ற கஸ்தூரி திலகத்துடன் தேவி காணப்படுகிறாள் தேவியின் திலகமிட்ட 

சந்திரனில் காணப்படுகின்ற கரும்புள்ளி போல் தோற்றமளிக்கின்றது.சக்தி மகிமையில் துர்வாச மாமுனிகள் 

தேவியின்  நெற்றியில் மனதை ஒருமைப் படுத்தி தியானம் செய் வேண்டும் என்று சொல்கிறார்.

மந்திரம் 17

. வதனஸ்மர மாங்கல்யா க்ரஹதோரண சில்லிகா

தேவி லலிதாம்பிகையின் வத னம் மன்மதனின் அரண்மனை போன்றும் அவளது பருவங்கள் அரண்மனை 

வாயிலில் கட்டப் பட்டுள்ள தோரணங்கள் போலவும் தோற்றமளிக்கின்றன. மன்மதன் தேவியின் முகத்தைப் 

பார்த்துத் தான் அரண்மனையை கட்டினான் போலும்!.மன்மதன் எல்லோரையும் ஈர்க்க கூடிய வசீகர 

சக்தியுடையவனாக இருக்கிறான். அந்த சக்தியை அவனுக்கு நல்கியதே உலக மாதா லலிதாம்பிகை தான். 

பிரபஞ்சத்தின் தொடர்இயக்கத்திற்கு மன்மதனின் சேவை மிகவும் அவசியம். அதே போல் ஆத்மாவின் 

சாக் ஷாத்காரத்திற்கு தேவியின் அருள் அவசியம். தேவியின் முகத்தை தரிசித்தாலே முக்தி நிச்சயம்.

மந்திரம் 18

வக்த்ர லக்‌ஷ்மி பரிவாஹ சலன் மினாப லோசனா 

தேவி லலிதாம்பிகையின் முக கமலம் ஒரு குளம் போலவும் அவளது கண்கள் அங்கு நீந்தி விளையாடுகின்ற 

மீன்களைக் போலவும் காணப்படுகின்றன.மீன்களின் தனித்தன்மை என்னவென்றால் அவை ஓரிடத்தில் 

நிலையாக நிற்காது. அவை இடம் மாறிக்கொண்டேயிருக்கும். அதே போல் தேவியின் கண்களும் சகித்துக் 

கொண்டேயிருக்கும். அவள் உலகத்திற்கு தாயல்லவா? அவளுக்கு தன் எல்லா குழந்தலைகளின் மீதும் கண் 

இருக்க வேண்டுமல்லவா?மீனின் முட்டைகளை யாரும் அடை காக்க வேண்டியதில்லை. தாயின் கண்பார்வை 

பட்டே முட்டை விரிந்து குஞ்சுகள் வெளி வருகின்றன. அது போல் உலக மாதாவின் கண்பார்வை பட்டாலே 

நமக்கு முக்தி கிட்டும்.  பிரபஞ்ச- லௌகீக வாழ்விலிருந்து வெளிவந்து விடுவோம்.ஆகவே தான் அவளை 

மீனாக்‌ஷி , மீன லோசனா என்றெல்லாம்  அழைக்கின்றோம்.

இன்னொரு விதத்தில் பார்த்தால், மீன் குளத்து நீரிலுள்ள அழுக்கையெல்லாம் தன்னுள் வாங்கி, குளத்தை 

சுத்தப்படுத்துகிறது. அது போல் லலிதாம்பிகையும் தன் கண்களால் நம்மை நோக்கியே நம் 

பாபங்களையெல்லாம் தன்னுள் இழுத்துக்கொண்டு  நம்மை மாசற்றவர்களாக்கி, சத்திய சாக்‌ஷாத்காரத்திற்கு 

தகுதியுள்ளவர்களாக்கி விடுகிறாள்.

 இதையே பகவான் ரமண மஹிரிஷி பிரார்த்தனை ரூபத்தில் சொல்கிறார்:

                     ஔவை போலெனக்குன் னருளைத் தந்தெனை

                        யாளுவதுகடனருளருணாசலா !

என்றும்

                   நோக்கியே கருதிமெய் தாக்கியே பக்குவ

                                   மாக்கி யாண்டரு ளருணாசலா!