Category Archives: Athmabhodham

Ashtavakramanikal 7

Friday, 1 January 2016

அஷ்டாவக்கிரமணிகள் 7

மணி இரண்டு 

ஓசை ஒன்று

ஜனகரின்  மூன்று கேள்விகள்.

              कथम् ऩानमवप्नोति कथम् मुक्थिर्भविश्यति !

          वैराग्यम् च कथम् प्राप्तम् एतद् ब्रूहि मम प्रभो !

கத²ம் னானமவப்னோதி கத²ம் முக்தி²ர்ப⁴விஶ்யதி !

வைராக்³யம் ச கத²ம் ப்ராப்தம் ஏதத்³ ப்³ரூஹி மம ப்ரபோ⁴ !

         புராதன பண்பாட்டின் படி சீடன் குருவை அணுகி தனக்கு தெரிய வேண்டியதை கேட்க வேண்டும்; அதற்கு பின் தான் குரு அவனுக்கு கல்வியறிவை புகட்ட ஆரம்பிப்பார்.

’தெரிந்து கொள்ள வேண்டும்’ என்ற அவா சீடன் மனதில் இருக்க வேண்டும்.அப்பொழுது தான் கல்வியின் பயனை அவன் அடைய முடியும்.

இன்றைய கல்வி முறையில், ஓட்டல்களில் காணப்படும் பலகாரப் பட்டியல் போன்ற ‘சிலபஸ்’ எனப்படும் விஷயங்களின் பட்டியலை மாணவர்களின் தலையில் கட்டி வைக்கிறார்கள்;அவர்களும் பெற்றோர்களின் வறுப்புறுத்தலுக்கும், உலக நடைமுறையிலிருந்து வேறுப்பட்டு சஞ்சரிப்பதிலுள்ள அபாய பயத்தினாலும் தனக்கு பிடித்ததோ பிடிக்காததோ, கல்விக்கு(கூ)டங்களில்-குடத்திலிருந்து  நீரை கொட்டுவது போன்று  அவர்களின் செவிப்பறையில் சொரிகிறார்க்ள். வருடாந்திர தேர்வுகளில் அவர்கள் செவிகளின் மூலம் உட்கொண்டவைகளை வெளியேற்றிவிட்டு நிம்மதியாக தன் வழியை தேடி செல்கிறார்கள். ஆகவே நாம் மருத்துவம் படித்தவர்கள் ஆட்சியாளர்களாகவும், விஞ்ஞானம் படித்தவர்கள் கணக்கர்களாகவும் அவர்களுக்கு அளிக்கப்பட்ட கல்வியறிவிற்கு சம்பந்தமில்லாத தொழிலில் ஈடுபடுவதை காண்கிறோம்;அதன் விளைவுகளை அனுபவிகிறோம்.

ஜனகர் காலத்தில் அப்படியில்லை; மாணாக்கன் எவ்வளவு பெரிய பதவியிலிருந்தாலும் தனக்கு தெரிய வேண்டியதை குருவினிடம் பணிவுடன் கேட்கின்ற கலாச்சாரம் நிலவிலிருந்தது.

அவன் கேட்கின்ற கேள்விகள் மூலம் தனது அறிவு நிலையையும் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன என்பதையும், தெரிந்துகொள்ள உள்ள ஆர்வத்தையும் கேட்கின்ற முறையில் தனது பணிவையும் வெளிப்படுத்துகிறான்.

ஜனகர் சர்வ ஐஸ்வரியங்களும் பெற்றவராயிருந்தும், சர்வ அதிகாரங்கள் படைத்த சக்கரவர்த்தியாக இருந்தும் தனது சந்தேகங்களை மிகவும் பணிவுடன் கேட்கிறார்.

” ப்ரூஹி மம பிரபோ” என்ற சொற்றொடர் அவரது பணிவை காண்பிக்கிறது.

“ப்ரூஹி” சொல்லாலும் என்னுடைய பிரபோ என்கிறார். 

அந்த ‘பிரபோ’ எனும் சொல் மிகவும் கவனிக்க வேண்டிய ஒன்று. பிரபு என்றால் ‘பிரபைக்குடையவன்,ஒளிபடைத்தவன், எல்லாவித ஐசுவரியங்களுக்கும் உடையவன், அறிவின் பொக்கிஷம் என்றெல்லாம் பொருள் கொள்ளலாம். மாணாக்கன் குருவை அணுகும்பொழுது குரு தன் அறிவுக்கண்களை திறக்கும் வல்லமை படைத்தவர் என்ற நம்பிக்கையுடன் அணுக வேண்டும் என்பது நமது மரபு.

மாதா, பிதா, குரு எல்லோரும் தெய்வத்திற்கு சமானமானவர்கள்; ஏனென்றால் மூவரும் நம்முடைய அறிவுக்கண்களை திறக்க உதவுகிறார்கள்.மாதா சிசு தனது கர்ப்பத்திலுள்ள பொழுதே நல்ல எண்ணங்களை உள்ளத்திலே கொண்டும்  நல்லவைகளை கண்களால் கண்டும், நல்லவைகளையே காதுகளால் கேட்டும், நல்ல உணவுகளை உண்டும், நல்ல கருமங்களையே செய்தும் சிசுபவிற்கு நல்லறிவை புகட்டுகிறாள். அப்படிச் செய்ய தவறினால் பிறக்கின்ற சிசுவிற்கு பாதிப்பு ஏற்படுகிறது. 

மாதாவிற்கு அடுத்த படியாக தந்தை,தன் குழந்தைக்கு நடக்கவும் பேசவும், உலக அறிவை புகட்டியும் அடித்தளம் அமைத்துக் கொடுக்கிறார். 

குருவாகப்பட்டவர் இந்த இருவரின் மொத்த உருவமாக மட்டுமல்லாமல் ஞானத்தையும் கொடுக்கிறார்.ஆகவே குரு சிஷ்ய பந்தம்- அன்யோன்யம்- விவரிக்க இயலாத ஒன்று.

இன்றைய கல்வி முறையில் தாய் தந்தையிரின் கடைமை கல்விக்கூடங்களுக்கு கட்டணம் கட்டுவதோடு முடிந்து விடுகிறது. மாணவர்களுக்கோ தன் பெற்றோர் கட்டணம் கட்டிவிட்டார்கள்; குருவின் கடன் கற்பிப்பது.அதைக் கடந்த ஒரு மரியாதை கலந்த அன்யோன்ய பந்தம் ஏற்படுவதில்லை. 

கற்பிக்கின்ற ஆசிரியர்களுக்கு சம்பளம் கல்விக்கூடங்கள் கொடுக்கின்றன. அவர்களது விசுவாசம் கல்விக்கூடங்களிடம் தானே தவிர மாணவர்களின் நலனில்லை.

ஜனக-அஷ்டாவக்கிர பந்தம் எந்த விதமான வக்கிரமும் இல்லாமல் உண்மையான குரு சிஷ்ய பந்தமாக இருந்தது.

ஜனகர் மூன்று கேள்விகள் கேட்கின்றார்: 

ஞானம் எப்பொழுது உண்டாகிறது? 

விமோசனம்-முக்தி-எப்பொழுது சம்பவிக்கின்றது? 

வைராக்யம் எப்பொழுது உண்டாகிறது?

அவரது கேள்விகள் அவர் தெரிந்துகொள்வதில் ஆர்வம் உள்ளவர் என்பதை நிதரிசனமாக்கிறது.அம்மாதிரி அறிவுப்பசியுள்ளவர்களுக்குத் தான் கல்வி புகட்டலாம் என்பது நமது கலாச்சாரத்தின் இன்னொரு மாண்பு.

மாணாக்கன், ‘ஜிக்ஞாஸு” ஆக இருக்கவேண்டும்.

ஞானம், முக்தி, வைராக்யம் மூன்று சொற்களையும் ஒரே மூச்சில் சொன்னது மூலம் இவைகளுக்குள் ஏதோ தொடர்புள்ளது தனக்குத் தெரியும் என்பதை வெளிப்படுத்துகிறார் ஜனகர் .

முதலில் ஞானம் என்றால் என்ன என்று பார்ப்போம்.

ஜனகர் வேத வேதாந்தங்களில் நிறைய கற்றுத் தேர்ந்தவர். அப்படிப்பட்டவர் அந்த நூல்களில் காணாத-கிடைக்காத ஞானத்தை தேடி அஷ்டாவக்கிரரிடம் வந்து சேருகிறார். கேள்விகளை தொடுக்கிறார். அப்படியென்றால் இந்த நூல்களிலெல்லாம் ஞானம் இல்லையா? வேத வேதாந்தங்களில் பிறகு என்ன தான் உள்ளது? 

இந்த நூல்களிலெல்லாம் ஞானத்தை அடைவதற்கான வழி முறைகள் தான்.இல்லை,இல்லை; வழிமுறைகளைக்  குறித்துள்ள தகவல்கள் தான். அவைகளெல்லாம் தகவல் களஞ்சியம் தான்.ஆனால் அந்த தகவல்கள் ஞானத்தை ஒருவருக்கும் பெற்றுத் தருவதில்லை.

ஏனென்றால் ஞானம் பெறப்படுகின்ற பொருளல்ல; அது ஒரு நிலை; வார்த்தைகளில் விளக்க முடியாத ஒரு குண விசேஷம்.அதை எப்படி விளங்க வைப்பது?

ஸ்வாமி சின்மயானந்தா அஷ்டாவக்கிர கீதைக்கான தனது விளக்கவுரையில் கூறுகிறார்:

“இருட்டில் விளக்கு கம்பத்தை பேய் என்று மிரளுகிறான் ஒருவன்.அவனது முன் அனுபவம், மற்றும் தன்னை சூழ்ந்துள்ள இருள்,அவனுக்கு அப்படி ஒரு மயக்கத்தை உண்டு பண்ணுகின்றன.அது வெறும் விளக்கு கம்பம் தான் என்ற அறிவின்மை,பேய் எனும் மாயத்தோற்றத்தை உருவாக்குகிறது.அது அவனுள் பயத்தை உளவாக்குகின்றது. அம்மாதிரியான பயம் அவனுக்கு துயரத்தை அளிக்கின்றது.”

தான் யார் என்ற ஆத்மபோதம் இல்லாத்தாலும்,இருள் பின்னிய மாயத் தோற்றத்தினாலும் அவனுக்கு துயரம் உண்டாகிறது.

இப்படிப்பட்ட ஒரு நிலையைத் தான் நம் முன்னோர்கள் ஞானமின்மை என்றோ அவித்யை என்றோ குறிப்பிட்டார்கள்.இம்மாதிரியான அவித்யை நீங்குவதற்கு நமக்கு ஆத்மபோதம் உண்டாக வேண்டும்.இந்த ஆத்மபோதம் உண்டாகிவிட்டால் மாயத்தோற்றங்கள் மறைந்துவிடும்.

“இத்தனுவே நானா மெனுமதியை” என்கின்ற அவித்யை நீங்கப்பெறவேண்டும்.   நாம் பிரபஞ்ச சிருஷ்டிகளை பௌதிக சரீரத்தை அடிப்படையாகக் கொண்ட இந்திரியங்கள் வழியாக உணருகின்றவரையிலும் அவனது ஞானம் குறைபாடுடையதே.அதற்கு எல்லைகள் உண்டு.அவன் முழு சத்யத்தை அறிவதில்லை; ஆகவே மனக்குழப்பத்திற்கும் சஞ்சலத்திற்கும் ஆளாகிறான்.  விருப்பு-வெறுப்பு உடையவனாகிறான்.அவன் பந்தங்களில் சிக்கி உழலுகிறான்.

புத்திசாலி மாணாக்கன் ஞானம் என்பதை தெரிந்துகொள்வதால் மட்டும் திருப்தி அடைந்துவிட முடியாது.அப்படிப்பட்ட அறிவு வெறும் ‘ஏட்டு சுரைக்காய்; கறிக்குதவாது” அவித்யை எனும் மாய வலையிலிருந்து விடுபடவேண்டும்.அதற்கான வழிமுறையை தெரிந்துகொள்ள வேண்டும்.அதைத்தான் ஜனகர் தனது இரண்டாவது கேள்வியாக முன்வைக்கிறார்.

’பௌதிக உடலே நான்’என்ற நினைப்பிலிருந்து எவ்வாறு விடுபடமுடியும்?

 “கதம் முக்திர்பவிஷ்யதி”

அவரது மூன்றாவது கேள்வி, இரண்டாவது கேள்விக்கான பதிலை ஓரளவிற்கு குறிப்பிட்டுக் காண்பிக்கின்றது.

’ராகமின்மை”-‘விராகதை”, பற்றின்மை, ஆசையின்மை உண்டானால்த்தான் விடுதலை கிடைக்கும். ஆசையின்மை எனும் வைராக்யம் எவ்வாறு அடைவது என்று கேட்கிறார் ஜனகர்.

தன்னை பௌதீக உடலுடன் பந்தப்படுத்திக்கொண்டு தன்னைச் சுற்றி ஒரு பிரபஞ்சத்தை சிருஷ்டித்துக்கொள்கிறோம்.

அந்த  பிரபஞ்சத்திலுள்ள எந்தப் பொருளும் பூரண திருப்தியை  அளிப்பதில்லை. ஆகவே நாம் மேலும் மேலும் பொருள்களையும் பந்தங்களையும் தேடிக்கொள்கிறோம்.இப்படி

ப்பட்ட பந்தங்கள் அதிகரிக்க அதிகரிக்க, உண்மையான ‘நான்’ யார் என்று தெரிந்து கொள்வது கடினமாய்க் கொண்டேயிருக்கிறது. நமது இந்திரியங்கள் மூலமும், மனஸின் மூலமும் இந்த பிரபஞ்சத்தை காண்கின்ற வரை, நாம் உணர்ச்சிகளுக்கும், விருப்பு-வெறுப்பு போன்ற உணர்வுகளுக்கும் ஆளாகிறோம்.இந்த பந்தங்கள் நம்மை கட்டிப்போட்டுள்ளதாக உண்ருகிறோம்.ஞானம் நம்மை விட்டு அகன்று அகன்று போய்க்கொண்டிருக்கிறது.

ஆனால் மிக்கவரும் இந்த பந்தனங்களிலிருந்து விடுபட வேண்டும் என்று விரும்புவதில்லை. ஜனகரைப் போன்ற புத்திசாலி மாணாக்கன் விடுபடவில்லை என்றால்த் தான் ஆச்சரியப் பட வேண்டும். ஆகவே அவர் தனது இரண்டாவது கேள்விக்கணையைத் தொடுக்கிறார்.

அப்படிப்பட்ட விடுதலை- பந்தங்களின் முறிவு- உலகப் பொருள்களுடன் பற்றுள்ளவரை நமக்கு கிடைக்காது. 

‘பற்றின்மை’ என்றால் உலகத்திலுள்ள பொருள்களையெல்லாம் பிறருக்கு தானமாக கொடுத்து விட்டு காட்டிற்கு ஓடிவிட வேண்டுமென்பதல்ல.அது நடக்கவும் நடக்காது. காட்டிலும் ‘பற்றுதல்’ ஏற்படக்கூடும். அங்கும் நிழல் தேவைப் படும்; சூட்டிலிருந்தும் குளிரிலிருந்தும் பாதுகாப்பு தேவைப் படும்,மழைக்காலத்திற்கென உணவுப் பொருள்களை சேகரிக்கத்தோன்றும்.ஆகவே  இருக்குமிடத்திலேயே இருந்து கொண்டு பௌதீகப் பொருள்களின் மீது பற்று வைக்காமலிருப்பது தான் முக்திக்கு சரியான வழி.அதற்கு வைராக்கியம் வளர வேண்டும். இவ்வளவும் ஜனகருக்கு புரிந்ததால் மூன்றாவது கேள்வியெழுகிறது. “வைராக்யம் ச கதம் ப்ராப்தம்”

Posted by RHS at 01:52 

.

ரமணஜோதி 73

Spiritual
Monday, 23 February 2015
ரமணஜோதி 73
ரமணஜோதி 73
எது ஞானம்?
          நூலறி வறியாப் பேதைய னென்றன்

         மாலறி வறுதரு ளருணாசலா
‘நூல்கள் வழியாக கற்று அறிந்துகொள்ளும் அறிவே அறிவு என்று நினைத்துக் கொண்டிருக்கின்ற பேதை நான். இந்த பேதையின் ‘மாலறிவை’ அறுத்து எனக்கு முக்தியளிப்பாய் அருணாசலா” என்கிறார் பகவான் இந்த சுலோகத்தில்.

வேதங்களும் சுருதி ஸ்மிரிதிகளும் பிரம்மனைக் குறித்த உண்மையை தெளிவாக எடுத்துச் சொல்கின்றன. வேத-வேதாந்தங்களைக் கற்றதினால் மட்டுமே ஒருவன் ஞானியாகி விடமாட்டான்; அவனுக்கு முக்தி கிடைக்கும் என்பதற்கு எந்த உறுதியுமில்லை.

இதன் மூலம் பகவான் வேத வேதாந்தங்களின் உபயோகத்தை நிராகரிக்கிறார் என்றர்த்தமில்லை.அது மட்டும் போதாது என்கிறார்.

பரமன் அருள் இருந்தால் மட்டும் தான் நாம் பரமனை அணுக முடியும்; பரமனுடன் இரண்டற கலந்திட முடியும். அதற்கு விஷய வாசனைகள் அற்றுப் போகவேண்டும் ;வைராக்கியம் வரவேண்டும்.அவித்யை அழிய வேண்டும்.

மாலறிவு அல்லது அவித்யா அழியவேண்டுமென்றால் பரமன் அருள் வேண்டும் .அதை வேண்டுகிறார் பகவான் இந்த செய்யுளில்.
ஞானத்தைப் பற்றியும் மாலறிவைப்பற்றியும் அஷ்டாவக்கிர சம்ஹிதையில் ஜனகர் மிகவும் விரிவாக கூறுவார்.அதைச் சற்றே பார்ப்போம்.
  “ஆச்சரியம்! ஆச்சரியம்! ‘அப்பழுக்கில்லாததும்,சாந்தியின் சொரூபவுமான இந்த உலக நியதிகளுக்கெல்லாம் மேலானதுமான அறிவே நான் என்கின்ற உண்மை’ தெரியாமல் எவ்வளவு பெரிய அறிவிலியாக இருந்திருக்கிறேண் ?” என்று ஜனகனின் ஒப்புதல் வாக்குமூலத்துடன் ஆரம்பிக்கறது அஷ்டாவக்கிர சம்ஹிதையின் இரண்டாம் அத்தியாயம். ஜனகர் மிகவும் பெரிய அறிவாளி. வேதங்களையும் சாஸ்திரங்களையும் கரைத்துக் குடித்த மாஹா ஞானியான ராஜரிஷி..அவருக்கே இப்படி அங்காலாய்க்கின்ற ஒரு நிலைமை ஆன்மாவைப்பற்றின உண்மை ஞானம் உதயாமாகும் போது உண்டாகிறது.
          அஹோ நிரஞ்சன: சாந்தோ

          போதோ அஹம் ப்ரக்ருதே: பர:

          ஏதாவந்தமஹம் காலம்

          மோஹேனைவ விடம்பித: !

                   சுலோ 2 அத்.2 அஷ்.கீ
எனக்கும் இந்த உடலுக்கும் என்ன தொடர்பு? இந்த தேஹத்தை பிராகாசிப்பிப்பது

 ‘ நான் ‘ தான் என்பது தான் ஒரே உறவு. அதே போல் இந்த உலகில் நாம் காணுகின்ற சகல பொருள்களையும் –இந்த ஜகத்தை முழுவதும்- காண்பிப்பதும் ‘ நான் ‘தான் என்பது உண்மை.

ஆனால் அப்படி நாம் காணும் இந்த ஜகத்தை நம் இந்திரியங்கள் மூலம் நமக்கு காட்டும் பொழுது ‘நான் ‘ என்ன செய்து கொண்டிருக்கிறேன் ? ‘நான் ‘ எப்படி பாதிக்கப் படுகிறேன் என்று கேட்டால் ஒன்றும் செய்வதும் இல்லை;ஒருவிதத்திலும் பாதிக்கப்படுவதுமில்லை.’என்பது தான் பதிலாக இருக்க முடியும்.

 நான் ‘ வெறும் சாக்ஷி மாத்திரமாய் நின்று கொண்டிருக்கிறேன். ‘நான்’ காணும் இந்த ஜகத்—உலகம்—தேஹம் உட்பட எல்லாமே என்னுடையது தான். ஏனென்றால் அவையெல்லாம் என்னால் தோற்றுவிக்கப் படுகின்றவை.

இன்னொரு விதத்தில் பார்த்தால் இந்த உலகமும் என்னுடையதில்லை; தேஹமும் என்னுடையதில்லை. ஏனென்றால் நானே இல்லை.எல்லாயிடத்திலும் பிரமனே இருக்கிறான்.

அப்படியானால் இந்த உலகம் எக்கேடு கெட்டுப் போனால் எனக்கு என்ன? என்னுடைய தேஹம் மட்டும் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்க முடியுமா? முடியாது. ஏனென்றால் எல்லாமே பிரம்மம்..

ஒரு சிறு உதாரணம் பார்ப்போம்

நாம் மனித வர்க்கத்தில் பிறந்துள்ளோம். ஆகவே இந்த உலகிலுள்ள மனிதர்களெல்லாம் என்னுடையவர்கள் என்பது எல்லோரும் ஒத்துக் கொள்ளக் கூடிய ஒரு உண்மை.

ஆனால் எப்பொழுது மற்ற நாடுகளில் வசிக்கின்ற மனிதர்கள் என்னுடைய நாட்டில் வசிப்பவர்களுக்கு எதிராக திரும்புகிறார்களோ அப்பொழுது மற்ற நாட்டினர் என்னுடையவர்கள் அல்லாமலாகிவிடுகிறார்கள். அப்பொழுது அவர்களது நாசம் எனக்கு வருத்தத்தை அளிப்பதில்லை; மாறாக சந்தோஷத்தை அளிக்கிறது.

என்று எனது நாட்டினர் எனது பிராந்தியத்திற்கு இடைஞ்சலாகிறார்களோ அப்பொழுது நேற்று வரை எனது நாட்டினர் என்று உரிமை பாராட்டி வந்தவர்கள் விரோதிகள் ஆகிறார்கள். பல வருடங்களுக்கு முன் மும்பையில் வாழ்ந்து கொண்டிருந்த தென்னிந்தியர்கள் மும்பைவாசிகள் சிலரால் அன்னியர்களாக கருதப்பட்டார்கள்; இன்று பீஹார் மானிலத்தவர் மும்பையில் அன்னியர்களாக கருதப்படுகிறார்கள். .ஏன் ,தமிழகத்திலேயே,இங்கேயே பிறந்து ,தமிழ் பேசி, தமிழை வளர்த்து வந்த பிராமாணர்கள் அன்னியர்களக கருத்ப்பட்டார்கள்.

குடும்பத்திலுள்ள மற்ற அங்கத்தினர் எனது மனைவி-மக்களுக்கு விரோதமாக செயல்படும் பொழுது எனது வட்டத்தை பின்னும் குறுக்கி நான்-என் மக்கள் என்று சுருங்கிப்போகிறோம். மனைவி மக்கள் நாம் சொன்னதை கேட்காத போது நம் விருப்பத்திற்கு மாறாக நடந்து கொள்ளும் பொழுது நான் என்னிலேயே சுருங்கி விடுகிறேன்.

எனது காலோ கையோ ஒத்துழைக்காத போது அந்த அங்கங்களை வெட்டி எறியவும் தயங்க மாட்டேன்.

இந்த தேஹத்தை இனிமேல் சரி பண்ண முடியாது என்ற ஒரு நிலை வரும் பொழுது இந்த தேகத்தை உதறித் தள்ளிவிட்டு வேறு தேகம் தேடி தயங்காமல் சென்று விடுகிறேன். இதிலிருந்து எல்லாம் நாம் புரிந்து கொள்ள வேண்டியது நான் என்பது இந்த தேஹமல்ல்; ‘அது’ தனி. தேஹத்தோடு ஒருமைப் படும்போது பலவித இன்னல்களுக்கு ஆளாகிறோம்

இது தான் எனக்கும் தேகத்திற்கும்,இந்த உலகிற்கும் உள்ள பந்தம்

இப்படிப்பட்ட பந்தத்தை ‘நான்; அறுத்து எறிந்து விட்டு விமுக்தனாக முடிந்தால் .மற்றவர்களிடம் இந்த தேகம் உட்பட உலகிலுள்ள எல்லா வஸ்துக்களிடமுள்ள விருப்பு வெறுப்புக்கள் அற்றுப் போய்விடும்.

ஆனால் இந்த அறிவைப் பெறுவதற்கு அருணாசலனின் அருள் வேண்டும்.

இந்த அறிவே உண்மையான அறிவு.

இதையே தான் உபனிஷத்துக்கள் ப்ரம்ம ஞானம் என்கிறது.

          சத்யம் ஞானம் அனந்தம் பிரம்ம:

என்று கூறப்பட்டு நாம் கேட்டுள்ளோம்.

இந்த பிரம்ம ஞானம் பெறுவதற்கு பரமனின் அருள் வேண்டும் என்பதை கிருஷ்ண பரமாத்மாவும் பகவத் கீதையில் விளக்கமாக கூறியுள்ளார்.

பத்தாம் அத்தியாயம் எட்டாம் சுலோகத்தில் பகவான் கிருஷ்ணர் கூறுகிறார்:

          அஹம் ஸர்வஸ்ய ப்ரபவோ மத்த: சர்வம் ப்ரவர்ததே !

          இதி மத்வா பஜந்தே மாம் புதா பாவஸமன்விதா: !!

‘நானே அனைத்திற்கும் பிறப்பிடம்;இந்த ஜகத்திலுள்ள சர்வமும் என்னிடமிருந்தே விரிவடைகின்றன. இதை உணர்ந்தவர்கள் என்னை விட்டு வழுவாமல் கர்மங்களை அனுஷ்டிக்கிறார்கள்.’

இப்படி பகவானை சரணடைந்து அவனுக்கு பிரியமான கர்மங்களை அனுஷ்டிப்பவர்களை,அப்படியொரு யோக நிலைக்கு மாறுவதற்கு மற்றவர்களுக்கு தூண்டுகோலாக இருக்கும் ஞானிகளை, பரமன் மேலும் மேலும் வலுவளித்து புத்தியோகத்தை அளித்து இந்த உலகம் முழுவதும் அந்த பிரம்மனே என்கின்ற அறிவை பெற உதவுகிறான். அதன் மூலம் ஆத்ம சாக்ஷாத்காரம் அடைய செய்கிறான்.
தேஷாம் ஸததயுக்தானாம் பஜதாம் ப்ரீதிபூர்வகம் !

ததாமி புத்தியோகம் தம் யேன மாமுபாந்தி தே !!

ப.கீ அத் 10 சுலோ 10.
ஆன்மபோதம் தெளிந்தவர்கள் விழிப்புடையவர்களாகிறார்கள். அவர்களுக்குப் புரியும்,

” நானே எல்லா உயிர்களிலும் உறையும் ஆத்மா;நானே அவைகளின் ஆதியும் நடுவும் அந்தமுமாயிருக்கிறேன்.” 
ஆகவே எல்லோரும் யக்ஞ சங்கல்ப்பத்திலிருந்து வழுவாத முறையில் எந்தவொரு சிருஷ்டிக்கும் தீங்கு விளையாத வகையில்,நன்மை பயக்கும் வகையில் கர்மங்கள் அனுஷ்டிக்க வேண்டும். அப்படி செய்ய்யும் பொழுது நாம் தூக்கத்திலிருந்து விழித்தெழுந்தவர்களாகிறோம். ஆத்ம சாக்ஷாத்காரம் பெற்றவர்களாகிறோம்.
          அஹமாத்மா குடாகேச ஸர்வபூதாசயஸ்தித: !

          அஹமாதிஸ்ச மத்யம் ச பூதானாமந்த ஏவ ச !!

                   ப.கீ அத்10 சுலோ 20
சுருக்கமாக சொல்லப்போனால் பரமனின் அரூள் இருந்தால் நாம் விழிப்புறுகிறோம்; சத்தியமான ஞானம் பெறுகிறோம்.

அஷ்டாவக்கிரமணிகள் 6

Ashtavakramanikal
Tuesday, 13 October 2015
அஷ்டாவக்கிரமணிகள்

மணி ஒன்று. ஓசை ஆறு
நூலின் கட்டமைப்பு
எல்லா வேதாந்த நூல்களும் குரு சிஷ்ய ஸம்வாத ரூபத்தில்த்தான் உளது.அதே பாரம்பரியத்தை தொடர்ந்து இந்த நூலும் அதே பாணியில் தான் அமைந்துள்ளது. இருந்தாலும் நிறைய வேற்றுமைகளும் உள்ளன.
இவைகளில் முக்கியமானது சிஷ்யனின் மன நிலையிலுள்ள வித்தியாசம்.
பகவத் கீதையை எடுத்துக்கொண்டால் அர்ஜுனன் சீடன். அவனது மனோ நிலை ஒரு விதமான விரக்திமுகமாகக் காணப்படுகிறது. நூலின் பின்புலமோ ஒரு பரம்பரையே உற்றார் உறவினர் எல்லோரும் இரு கட்சியாக பிரிந்து சண்டைக்குத் தயாராக நிற்கும் யுத்தக் களம். அர்ஜுனன் மனம் தளருகிறான்; வில்லையும் அம்பையும் கீழே போட்டு விட்டு நான் ஏன் யுத்தம் செய்யணும் எனறு வினா எழுப்புகிறான். அர்ஜுனன் சிறந்த வீரன்; ஆனால் பெரிய அறிவாளி யல்ல. சாதாரண மனிதன்.ஆசா பாசஙளும் விருப்பு வெறுப்புக்களும் உள்ள மனிதன்.
ந ச சக்னோம்யவஸ்தாதும் ப்ரமதீவ ச மே மன: !

நிமித்தானி ச பச்யாமி விபரீதானி கேசவா !
கேசவா, என்னால் நிற்க இயலவில்லை.மனம் சுழல்கிறது. கேடுடய சகுனஙளையும் காண்கிறேன்,என்கிறான் அர்ஜுனன்
அவன் யாரிடம் கேள்வி எழுப்புகிறான்,தன் தோழனிடம்.

பதிலளிக்கின்ற கிருஷ்ணரோ தெய்வீகம் பொருந்திய பரமாத்மா.

அவர் அளிக்கின்ற பதில்கள் அர்ஜுனனுக்கு மட்டுமின்றி எல்லா சாமானியர்களுக்கும் பொருந்தக் கூடிய விதத்திலுள்ளன. அந்த கேள்வி பதில்களில் ஒரு தெய்வீகம் (mysticism) ஒளி(பகர்)ந்து கொண்டிருந்தது.
ஆகவே பகவத் கீதை கர்ம யோகம், பக்தி யோகம், ஸன்யாஸயோகம்,ஞானயோகம் எனறு பல மார்க்கஙகளை விளக்குவதாக அமைந்த்து ள்ளது. அதனால் சிலர் மனஙளில் குழப்பத்தையும் உண்டாக்குவதாக உளது. அர்ஜுனனே இம்மாதிரி குழப்பத்திற்கு ஆளாகி கேள்விகள் கேட்கின்றான்.
அஷ்டாவக்கிர கீதையிலோ மஹாராஜா ஜனகர் யுத்தக்களத்தில் நிற்கவில்லை. சாந்தியும் சமாதானமும் நிறைந்த நாட்டை ஆண்டு கொண்டிருந்தார்.அவர் மனதில் எந்த சஞ்சலமும் இல்லை.

சிறந்த அறிவாளியாகவும் இருந்தார்.ஆகவே அஷ்டாவக்கிர கீதை ஒரு அறிவு பூர்வமான சம்வாதமாக அமைந்துளது. அஷ்டாவக்கிர கீதை என்பதற்கு பதிலாக ஜனக அஷ்தாவக்கிர சம்வாதம் என்ற பெயரே இந்த நூலிற்கு பொருத்தமானதாக இருக்கும்.
பல இடங்களில் அஷடாவக்கிர முனிகளுக்கு ஈடாக ஜனகரும் கருத்துக்களை தெரிவித்து ள்ளார்.
நமது வேதாந்த நூல்களில் குருவாகப்பட்டவர் சீடர்களின் நிலைக்கேற்ப வித்தியாசமான அணுகுமுறைகளை கையாண்டுள்ளார்கள். எல்லாவற்றின் நோக்கமும் ஆத்ம ஸாக்‌ஷாத்காரத்தை விளக்குவது தான். இருந்தாலும் சிலருக்கு முக்தி அடையமுடிகிறது. வேறு சிலருக்கு முக்தி கிட்டாமலேயே போய்விடுகிறது..ஏன் இப்படி என்ற கேள்விக்கு பதிலாக இந்த நூல்கள் ‘ஜீவ நானா வாதத்தை’ ஆதாரமாக கொண்டு விளக்கங்கள் அளிக்கின்றன. வேறு சிலர் விவகார சத்தை அல்லது அக்ஞ்ஞான சத்தை என்கின்ற வாதத்தை எடுத்துரைத்தார்கள்.

 சஙகரர் மற்றும் பிற ஆசாரியர்களும் ஏன் பகவத்கீதையும் கூட இந்த விதிமுறைகளை அனுசரித்து போயுள்ளது.

நானா ஜீவ தத்துவத்தின் துணையில்லாமலோ விவகார வேற்றுமைகளின் அடிப்படையிலு மல்லாமலோ ஆத்ம ஸாக்‌ஷாத்கார தத்துவத்தை விளக்கிய மஹான்களும் இந்த பாரத தேசத்தில் தோன்றியுள்ளார்கள்.

இந்த தத்துவ முறையை திருஷ்டி சிருஷ்டி வாதம் அல்லது ஏக ஜீவ வாதம் என்று கூறுவார்கள்.

மாணடூக்கிய உபனிஷத்திலும் கௌட பாத காரிகயிலும் இந்த திருஷ்டி சிருஷ்டி வாதம் தெளிவாக தெரிகிறது. யோக வாசிஷ்டத்தில் பல இடங்களில் இந்த வாதம் முந்தி நிற்கிறது.
ஆதி சங்கர பகவத் பாதாள் இயற்றிய ஆத்மபோதத்தில் காணும் கீழ்க்கண்ட சுலோகம் இதற்கு ஒரு எடுத்துக்காட்டு
பரிச்சின்ன இவாக்னாத்

           தன்னாசே ஸதி கேவல்:

          ஸ்வயம் ப்ரகாசதே ஹ்யாத்மா

          மேகாபாயேம்சுமானிவ

                     ஆபோ சுலோ 4
அக்ஞானகலுஷம் ஜீவம்

ஞானாப்யஆஸாத்வினிர்மலம்

க்ருத்வா ஞானம் ஸ்வயம் நஸ்யதே

ஜலம் கதகரேணுவத்
ஆபோ சுலோ 5
நமது அஞ்ஞான த்தினால்-அறிவின்மையால் நமது சக்திக்கு எல்லையுண்டு என்று நினைக்கிறோம்.. அஞ்ஞானம் அழிக்கப்படும் பொழுது நமது உண்மையான ஸ்வபாவ சொரூபம் வெளிச்சத்திற்கு வருகிறது. சூரியன் எப்பொழும் ஒளிர்ந்துகொண்டுதானிருக்கிறான்; மேகங்கள் சில நேரங்களில் அவனை மறைத்து விடுகின்றன.மேகங்கள் விலகும்பொழுது சூரியன் சுயம் பிரகாசனாக மீண்டும் தென்படுவான்.

நிரந்தரமான அப்யாசத்தினால் அஞ்ஞானம் நீங்கி நமது ஆத்மா நிர்மலமாகும்பொழுது நமது உண்மையான சொரூபம் வெளிவருகிறது.

இந்த சுலோகங்களில் ஆதிசங்கரர் அஞ்ஞானவாதத்தின் துணையோடு அத்வைத சித்தாந்த்தை விளக்க முற்படுகிறார்.
இதே ஆதி சங்கரர் ‘ஸ்வாத்மன சம்வாதம்’ என்ற நூலில் ஏக ஜீவ வாதத்தை கையிலெடுத்துக் கொண்டிருக்கிறார். 
யோக வாசிஷ்ட்த்திலும் பல இடங்களில் ஏகஜீவவாதம் விளக்கப்பட்டுள்ளது.
ஆதி சேஷரால் இயற்றப்பட்ட ‘பரமார்த்த சாரம்’ என்ற நுலிலும் இந்த தத்துவ விசாரம் வெளிப்படையாக தெரிகிறது. 
மதுசூதனசரஸ்வதியின் ‘அத்வைத சித்தி’யும் அதனுடைய வியாக்கியானமான பிரம்மானந்த சரஸ்வதியின் ‘ப்ரம்மான்ந்தீயம்’ எனும் நூலும் ஏக ஜீவ வாதம் அல்லது ‘திருஷ்டி-சிருஷ்டி’ வாதம் என்ற தத்த்துவத்தை விளக்கியுள்ளது.
இவ்வாறு புராதனமும் சமீபகாலத்து நூல்களும் திருஷ்டி-சிருஷ்டி வாத்த்தை தங்களது தத்த்துவ விளக்கத்திற்கு ஊன்றுகோலாக எடுத்துக்கொண்டிருந்தாலும் இது மற்ற தத்துவ விளக்கங்களோடு கூட்டிகுழைத்து தரப்பட்டிருப்பதால் புரிந்து கொள்வதற்கு மிகவும் சிரமப்பட வேண்டியுள்ளது.அதன் காரணமாகவே ஆத்ம த்த்துவத்தை புரிந்து கொள்வதில் காலதாமதமும் உளவாகிறது.
அஷ்டாவக்கிர கீதையிலாகட்டும் இந்தமாதிரியான எந்த கலவையும் இல்லாமல் ஏக ஜீவ வாத்த்தையும் திருஷ்டி-சிருஷ்டி தத்துவத்தையும் அவைகளின் சுத்த சொரூபத்திலையே தரப்பட்டுள்ளது.

சில சுலோகங்களை உதாரணத்திற்காக இங்கே குறிப்பிடுவது சாலப் பொருந்தும் என்று எண்ணுகிறேன்.
            ஏகோத்ரிஷ்டாஸி ஸர்வஸ்ய

            முக்தப்ராயோஸி சர்வதா!
எல்லவற்றையும் அறிகின்றவன் நீ ஒருவனே.
த்வத்தோன்யோனாஸ்திஸம்ஸாரீ

நாஸம்ஸாரீச காஞ்சன!
நீயன்றி வேறொரு ஜீவன் கிடையாது.பௌதிகமல்லாத ஆத்மவஸ்துவும் நீ மட்டும் தான்.
தாதசின்மாத்ர ரூபோஸி

நதே பின்னமிதம் ஜகல்
குழந்தாய், நீ என்பது போதம் மட்டுமே; உனது தோன்றல் மட்டுமே; இந்த பிரபஞ்சம் உன்னிலிருந்து வேறல்ல.
இவ்வாறு ஜீவன்கள் பலதல்லவென்றும் ஒரே சைதன்யம்தான் எல்லாரிலும் எல்லாயிடத்தும் பிரகாசிக்கின்றது என்றும் உன்னைத் தவிர வேறொரு ஜடப் பொருளும் கிடையாது என்றும் அஷ்டாவக்கிர கீதை தெள்ளத்தெளிவாக பல இடங்களில் .ருசுப்படுத்துகின்றது.
அஷ்டாவக்கிரகீதையில் பௌதிக உலகில் வெளிப்படையாகத் தெரிகின்ற ஜீவன்களுக்குள் நிலவும் வித்தியாசங்களையும் ஞானம்-அக்ஞானம் அடிப்படயிலான வாதங்களுக்கு நேரடியாக எந்த பிரதி வாதமும் காணப்படவில்லை என்றாலும், இந்த சம்வாத்த்தின் அடிப்படையாக உள்ள திருஷ்டி-சிருஷ்டி த்த்துவம் இம்மாதிரி சந்தேகங்களை முற்றிலும் இல்லாதாக்கி விடுகின்றன.
ஆகவே இந்த நூலுக்குள் போகுமுன் திருஷ்டி-சிருஷ்டி தத்துவத்தைக்குறித்து நல்லதோர் ஞானம் நமக்கு வேண்டும்.ஆகவே ஒரு சிறு தத்துவ விளக்கத்தை இந்த பகுதியில் தருகிறேன்.
1.அஜாத வாதம்
பிரபஞ்சம் என்று ஒன்று படைக்கப் படவேயில்லை .
 பிரபஞ்சம் என்பது மனித மனதின் சிருஷ்டியே .
  தேச கால வேற்றுமைகள் .. நமது சங்கல்பங்களே. 
தேசம்,காரண காரியங்கள், எல்லாம் நம் மனதில் தோன்றுபவை தான். 
ஆத்மா ஒன்று தான் உண்மையான ஒன்று .
அதை நாம் புரிந்து கொள்ளும் பொழுது,என்று புரிந்து நமது அஞ்ஞானம் விலகி வெளிச்சம் ஏற்படுகிறதோ அன்று அந்த ஒளியில் இந்த பிரபஞ்சம் மறைந்துவிடும்.
ஆன்மாவின் உண்மை சொரூபத்தை அறியாத நிலையில் நமது மனம் அவித்யையில் மூழ்கி நீ,நான்,இது,அது என்ற வேறுபாடுகளுக்குள் சிக்கி ஒரு மாயா உலகத்தை சிருஷ்டிக்கின்றது..இது நாம் கனவுகளில் காணுகின்ற உலகத்திலிருந்து மாறுபட்டதல்ல; விழித்தெழுந்திருக்கும்பொழுது அந்த உலகம் காணாமல் போய் விடும்.நமது வாழ்விற்கும் நாம் காணுகின்ற கனவுகளுக்கு முள்ள வித்தியாசம் முன்னது சிறிது நீண்ட கால அளவுடையது என்பது தான்.
2. த்ரிஷ்டி-சிருஷ்டி வாதம்
முன்னால் சொன்னதை ஜீரணிப்பது பலருக்கும் கடினமாக இருக்கும். இதை மற்றொரு விதத்தில் கூறுவது தான் இரண்டாவது தத்துவம். எளிமையாக கூறப்படுகிறது இங்கே.
எப்பொழுது நான் என்ற எண்ணம் உதிக்கின்றதோ அப்பொழுது இந்த உலகம் உருவாகிறது. .. நான் காண்கிறேன்; நான் செய்கிறேன்; நான் இங்கிருக்கிறேன்; நான் சுகமாக இருக்கிறேன்; நான் துக்கமாக இருக்கிறேன்; எல்லாம் நான் எனும் சிந்தையுடன் தொடர்பு உடையது.

‘ தேஹமே நான்’ என்ற நினைப்புடைய நான், ‘நான் இங்கிருக்கிறேன்’ என்றால் இந்த தேகம் இங்கிருக்கிறது என்று பொருள். ‘எனக்கு வலிக்கிறது’ என்றால் இந்த தேகத்திற்கு வலிக்கிறது என்றர்த்தம்.. தேகாஸ்பத்மான நான் மறைந்து உண்மையான நான் உதயமாகும்பொழுது இந்த தேச கால வித்தியாசங்கள் மறைகின்றன. வலியும் தெரிவதில்லை; ருசியும் தெரிவதில்லை உண்மையான ‘நானுக்கு’.
இதை திருஷ்டி-சிருஷ்டி வாதம் என்று கூறுகிறார்கள். இந்த உலகம் நம் திருஷ்டியில் தான் நிலை கொள்கிறது. நான் முதலில் தோன்றுகிறது; பிறகு உலகம் தோன்றுகிறது. உலகத்தை நம் மனது சிருஷ்டிக்கின்றது. நான் மறைந்தால் உலகமும் மறைகின்றது.

அஜாதவாதமே தான் இதுவும். வேறு விதமாக விளக்கப் பட்டிருக்கிறது ;அவ்வளவு தான்
முக்தி மார்க்கத்தை விளக்கும் வேதாந்த நூல்கள் சாதாரணமாக கீழ்க்கண்ட கட்டமைப்புடன் காணப்படுகின்றன:
· நூலின் உத்தேசம்
· தாத்பர்யம்
· குரு-சிஷ்ய இலக்கணங்கள்
· சாதனா சதுஷ்டயம்
· அவஸ்தா த்ரயம்
· பஞ்சகோச விவேகம்
· தத்துவமஸி தாத்பர்யம்
· சமாதி நிலைகள்-  
          நிர்விகல்ப-சஹஜ சமாதி
· ஜீவன் முக்தி
ஆனால் அஷ்டாவக்கிர ஜனக சம்வாதமோ ஆதியோடந்தம் அதீத நிலையொன்றையே விவரிக்கின்றது. ‘ஒன்றின்றி வேறில்லை என்ற தத்துவம் மேலோங்கி நிற்கிறது.

முக்கியமாக கீழ்க்கண்ட கருத்துக்கள் தெள்ளத் தெளிவாக எடுத்துரைப் பட்டுள்ளன:
· உண்மை நிலை—-என்றுமெவர்கும் இயல்பாக உள்ள நிலை.
அதை வெளியேயிருந்து கொண்டு வர வேண்டியதில்லை.தனியாக எந்த முயற்சியும் தேவையில்லை.எதையும் தியானம் செய்ய வேண்டியதில்லை. ஒன்றையும் தியானம் செய்யாமல்- நினையாமல் சும்மா இருத்தலே அதற்கான மார்க்கம்.
· நீ பற்றற்ற மாசற்ற, சுயம் பிரகாசன்.நீ சமாதி மற்றும் ஏனையே மார்க்கங்களை தேடி ஓடுகிறாயே அதுவே உன் பந்தம்.
· சித்த விருத்தியை அடியோடு ஒழி. சித்த விருத்தியால் எந்த பயனும் இல்லை.நீ பந்தமற்று, முக்தனாகவே உண்மையான ஆத்மாவாகவே இருக்கிறாய்.
· பிரபஞ்சமனைத்தும் உன் மனதின் கற்பனையே. உன் மனமும் கற்பனையே. ஆத்மா ஒன்று தான் நிஜம்.
· கரும நினைவு எவ்வாறு அறியாமையினால் எழுகிறதோ அவ்வாறே கருமத்தை துறத்தலும்.
· ஆகவே நிவிருத்தியை விழைதலும் பிரவிருத்தியை வெறுத்தலும் பாழ்.
இந்த நூலை மொத்தமாக பார்க்கும் பொழுது குரு-சிஷ்ய சம்வாதமாக தோன்றினாலும் நான்கு தெளிவான பகுதிகள் உள்ளன:

· ஆஷ்டாவக்கிர்ர் ஜனகரின் சந்தேகத்திற்கு அளிக்கும் விளக்கம்

· ஜனகரின் சுவானுபவ விவரணம்

· ஆஷ்டாவக்கிரரின் மேல் விளக்கம்

· ஜனகரின் பிராணமம்

,

அத்தியாயம் 13,5,8,-11,15-18 அஷ்டாவக்கிரரின் விளக்கங்களை தருகிறது.
அத்தியாயம்2,4,6,7,12,13,14,19,20 ஜனகரின் சுவானுபவ விவரணமாக அமைந்துள்ளது
அத்தியாயம் ஒன்றில் அஷ்டாவக்கிர் ஆத்ம சொரூப லக்ஷணத்தை விளக்கி,சஹஜ ஞானத்தைஉபதேசிக்கிறார்.
அடுத்த பகுதியிலிருந்து இந்த அதி விசேஷமான சம்வாதத்தின் மணி நாதத்தை கேட்போம்.

Posted by RHS at 06:28 

ரமணஜோதி 72

Spiritual
Monday, 23 February 2015
ரமணஜோதி 72

அணுவும் நானே அண்டமும் நானே
நுண்ணுரு வுனையான் விண்ணுரு நண்ணிட

                    வெண்ணலை யிறுமென் றருணாசலா

“ என்னுள் ‘நான், நான்’ என்று ஒளிர்ந்துகொண்டிருக்கும் இந்த ஜீவ சைதன்யம் விண்ணளவு பரந்து விரிந்துகிடக்கும் பரமாத்மாவுடன் எப்பொழுது இணைய முடியும்,அருணாசலா ? எண்ண அலைகள் மனதில் என்று ஓயும்? எண்ணங்கள் அலையடிப்பது நின்றால்த் தானே ‘நான்; அழிய முடியும்? நான் அழிந்தால் தானே நான் உன்னிடம் லயிக்க முடியும் அருணாசலா? அதற்கு அருளருணாசலா” என்று பகவான் இந்த சுலோகத்தில் வேண்டுகிறார்.

‘நான்’ என்பது மிகவும் சூக்ஷ்மமான =நுண்ணுருவானது. நீயோ விண்ணைப் போல் பரந்து விரிந்து சர்வ வியாபியாக இருக்கிறாய். எப்படி நாம் ஒன்றாவது? என்று கேட்கிறார் பகவான்/

இந்த சுலோகத்தில் பகவான் இரண்டு வலிமையான கருத்துக்களை மறை பொருளாக வைத்துள்ளார்.

‘நுண்ணுரு’ ‘விண்ணுரு’ என்ற இரு பதங்களின் மூலம் கால தேச வித்தியாசங்கள் நம் மனதில் எழும் சிந்தனைகள் மூலமுளவாவது தான்; எண்ண அலைகள் தான் ‘நான்’ (அஹம்)..அந்த எண்ணங்கள் அழிந்தால் ‘நான்; ‘நீ’ என்ற வேறுபாடு மறைந்துவிடும்,

இந்தக் கருத்துக்களை உள்ளது நாற்பதில் மேலும் விளக்குகிறார் பகவான்

நானுதியா துள்ளநிலை நாமதுவா யுள்ளநிலை

நானுதிக்குந் தானமதை நாடாம—- நானுறுதியாத்

தன்னிழப்பைச் சார்வதெவன் சாராமற் றானதுவாந்

தன்னிலையி நிற்பதெவன் சாற்றுதி—-முன்னர்

எழும்புமஹந்தை யெழுமிடத்தை நீரில்

விழுந்த பொருள் காண வேண்டி —முழுகுதல் போற்

உள். நா 27-28

‘நான்’ எனும் அஹந்தை உதியாத நிலை தான் நாம் ‘அது’வாகவுள்ள நிலை.ஆதாவது நான் எனும் சிந்தை இல்லாதபோது நாம் அது வாக –பிரம்மமாக—சுத்த சைதன்யமாக இருக்கிறோம். ஆகவே உண்மையன ‘நான்; யார் என்று தெரிய வேண்டுமென்றால்-பிரம்மம் யாது என்று தெரிய வேண்டுமென்றால் எப்பொழுது எங்கிருந்து ‘நான்’ உதிக்கிறது என்று தெரிந்து கொள்ளவேண்டும்..அப்படி விசாரித்துத் தெரிந்து கொண்டால் தான் ‘நான்; அழிய முடியும். அந்த ‘நான்’ அழிந்தால் தான் பிரம்மனைக் காணமுடியும்

இந்த பூதவுடல் தான் நான் என்ற எண்ணம் உள்ள வரை மனம் வெளி நோக்கிச் செல்லத்தான் செய்யும்.விஷய வாசனைகள் வளரத்தான் செய்யும். ஒன்றன் பின் ஒன்றாக எண்ண அலைகள் நம்மை அலட்டத்தான் செய்யும்.

அஹந்தை எழும் இடம் என்று பகவான் குறிப்பிடுவது கால—தேசங்களின் வரையறைக்கு உட்பட்ட ஒரு ‘இடத்தை’ யல்ல.

‘நான்; உதித்த பின் தான் காலம் தேசம் என்ற எண்ணங்கள் உண்டாகின்றன .நான் இல்லையென்றால் ‘நான் இங்கே யிருக்கிறேன் என்பதற்கோ நான் நாளை வருகிறேன் என்பதற்கோ பொருளில்லை. நானே இல்லை.அல்லது நான் ( நானும் பிரம்மமும் ஒன்று என்பதால்-அஹம் நாஸ்தி—அஹம் ப்ரம்மாஸ்மி ) எல்லாயிடத்திலும் இருக்கிறேன்,எப்பொழுதும் எங்கும் இருக்கிறேன்; பிறகு எப்படி ‘இங்கு’ நாளை’ என்பதெல்லாம் வரும்?

     தேஹாபிமான பாசேன

     சிரம் பத்தோ அசி புத்ரக

     போதே அஹம் ஞான கட்கேன

     தன்னி க்ரித்ய சுகீ பவ:

                அஷ்டாவக்கிர கீதை 1.14

அஷ்டவக்கிரர் ஜனக மஹாரஜாவின் ஒரு கேள்விக்கு பதிலளிக்கையில் கூறுகிறார்:

“குழந்தாய், நீ நீண்ட நெடுங்காலமாக,உன் சூக்ஷ்ம ஸ்தூல சரீரங்கள் தான் ’நான்’ என்ற அஹந்தை எனும் பாசக்கயிற்றால் கட்டப் பட்டிருக்கிறாய். ‘நானே’ பிரம்மம்’ என்ற அறிவாகப்பட்ட வாளால் அந்தக் கயிற்றை அறுத்தெறி. நீ நித்திய சாந்தி பெறுவாய்.’

மேலும் பதினேழாம் சுலோகத்தில் அஷ்டவக்கிரர் குறுவார்:

‘ நிரபேக்ஷோ நிர்விகாரோ

     நிர்பர சீதளாசய:

     அகாத புத்தி ரக்ஷுப்தோ

     பவ சின்மாத்ர வாசன:

           அ.வ்.கீ 1.17

எந்தபந்தமும் இல்லாத நீ -ஜீவாத்மா தேஹ பந்தத்தால் எல்லையில்லாத ஆசாபாசங்களுக்கு அடிமையாகிறாய் .நீ புலன்களின் வாசனைகளுக்கு இரையாகிறாய். நீ கேவல மானிடனாய்த் தீருகிறாய். உன் மனம் சதா சர்வகாலமும் எதையோ வேண்டி தவித்துகொண்டிருக்கிறது. நிம்மதியிழந்து அசாந்தனாய் இருக்கிறாய். கோபத்திற்கும் குரோதத்திற்கும் இரையாகிறாய். இந்த இஹலோக அறிவுதான் ஞானம் என்ற ‘நுனிப்புல்’அறிவிற்கு ஆளாகிறாய். இதிலிருந்து விடுபடுவதற்கு ஒரே மார்க்கம் ‘நானே பிரம்மம்” என்ற உண்மையான ஞானம் பெறுவது தான்.அதன் மூலம் நீ நிர்விகாரனும் பற்றற்றவனும் பூரணனும் மனசாந்தியுடையுவனுமாய்த் தீருவாய்.”

இதே கருத்தை ஆதி சங்கரரும் ஆன்மபோதம் என்ற நூலிலும் கூறியுள்ளார்:

     தத்யுக்தமகிலம் வஸ்து வ்யவஹாரஸ்ததன்வித:

     தஸ்மாத்சர்வகதம் ப்ரம்ம க்ஷீரே ஸர்பிரிவாகிலே

                ஆன்ம போதம் 59

உலகிலுள்ள எல்லாபொருள்களிலும் அது ( ப்ரம்மம் ) நிறைந்து நிற்கிறது.

ஆதனால் எல்லா உலக விவகாரங்களும் அதை சார்ந்தே நடக்கின்றன. பாலில் எவ்வாறு வெண்ணை மறை பொருளாக உள்ளதோ அது போல் எல்லாவற்றிலும் பிரம்மம் மறை பொருளாக இருக்கிறது.

     அனண்வஸ்தூலமஹ்ரஸ்வமதீர்கமஜவ்யம்

     அரூபகுணவர்ணாக்யம் தத்ப்ரம்மேத்யவதாரயேத்

                ஆ.போ 60

அந்த பிரம்மம் அணு உருவிலோ ஸ்தூலவடிவிலோ அல்லாமலும் பிறப்போ இறப்போ இல்லாததும் மாற்றமில்லாததும் உருவம்,மணம்,ருசி,குணம் எதுவும் இல்லாததும் ஆக இருக்கிறது.

ஒரு முறை பகவான் தனது பக்தர்களிடையே விஞ்ஞானத்தைக் குறித்து நடந்து கொண்டிருந்த விவாதத்தை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தார்.

விவாதம் முடிந்தவுடன் பகவான் கூறினார், “ எது எப்படி இருப்பினும் ‘தான்’ என்பதற்குப் பிறகு தான் எல்லாமே இருக்கின்றன. ‘தான்’ இல்லையென்று யாரும் சொல்லமாட்டார்கள். கடவுள் இல்லையென்று சொல்லும் நாஸ்திகன் கூட நானிருக்கிறேன் என்று ஒப்புக்கொள்கிறான். அதனால், வருகிற விஷயமெல்லாம் தன்னிலிருந்து தான் வர வேண்டும்.தனக்கு வேறாக ஒன்றுமில்லை. “ அணோரணியான் மஹதோ மஹீயான்’என்று சுருதி சொல்லுகிறது.’மஹத்துக்கு மஹத்தாக இருப்பது அது (பிரம்மம் ) தான்’.’மஹத்துக்கு மஹத்தாக இருப்பது அதுவேல;அணுவுக்கு அணுவாக இருப்பதும் அதுவே.”

அப்பொழுது ராமமூர்த்தி எனும் அன்பர் கேட்டார்,” இந்த அணுவுக்கும் மஹத்துக்கும் வேறுபாடு எதைச் சார்ந்து வருகிறது?

“தேகத்தைச் சார்ந்து தான் வருகிறது.—ஆனால் எல்லாவற்றிர்கும் அடிப்படை மனித மனம் தான்.இத்தனை விதமான தோற்றங்கள் (அணுவாகவும் மஹத்தாகவும்) தோன்றுவதற்கு காரணம் மனம் தான். மனம் பிறந்தால் எல்லாம் பிறக்கிறது. பஞ்சபூதங்களானாலும் அதற்க்ப்பாலுள்ள சக்திகளானாலும் ஏதானுலும் மனம் பிறந்தால் அவை பிறக்கும் .மனம் அடங்கினால் எல்லாம் அடங்கி விடுகிறது. எல்லாவற்றிற்கும் அதுவே காரணம்” என்றார் பகவான்.

உபதேசவுந்தியாரில் பகவான் கூறுவார்

:”எண்ணங்க ளேமனம் யாவினு நானெனு

மெண்ணமே மூலமா முந்தீபற

யானா மனமென லுந்தீபற.”

மனம் என்பது எண்ணங்களின் குவியலே. இந்த எண்ணக்ளுக்கெல்லாம் மூல காரணம் இந்த பூதவுடலே நான் எனும் எண்ணமே. நான் எனும் எண்ணம் இல்லாவிட்டால் மற்ற எண்ணங்களே உதிக்காது. (இங்கு குறிப்பிடுகின்ற நான் சத் சித்தான ‘நானல்ல” )

Posted by RHS at 22:37 

ரமணஜோதி 71

ரமணஜோதி 71.
சிருங்கார பக்தி
          நீநா னறப்புலி நிதங்களி மயமா

          நின்றிடு நிலையரு ளருணாசலா
 இந்த சுலோகத்தில்,.சிருங்கார பக்தி மூலம் அத்வைத சித்தாந்தத்தை மற்றுமொரு முறை விளங்க வைக்கிறார் பகவான்.
“என்னை நெருக்கமாக அணைத்துக் கொண்டு— ‘நீ’ ‘நான்: என்ற பேதமில்லாத வாறு அணைத்துக்கொண்டு– எனக்கு நிரந்தரமான ஆனந்தத்தை அளிப்பாய் அருணாசலா” என்கிறார் பகவான் .
சிருங்கார ரசத்தில் நாயகன் நாயகியை ஆலிங்கனம் செய்யும் போது அங்கு ‘நீ’ ‘நான்’ என்ற பேதம் மறைந்து விடும். .அவர்கள் ஈருடல் ஒன்றாய் இணையும் போது ஏற்படும் ஆனந்தக் களிப்பை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. ஆனால் அந்தக் களிப்பு தாற்காலிகமானதே. இணைந்த உடல்கள் பிரிந்தே ஆக வேண்டும். அந்த இன்பம் முடிவிற்கு வந்தே ஆக வேண்டும்.
அப்படியில்லாமல் நான் யார் என்ற விசார மார்க்கத்தின் வழியாக நாம் எப்பொழுது பரமாத்மாவை அடையாளம் கண்டு கொள்கிறோமோ, அந்த பரமாத்மாவே நாம் என்று புரிந்து கொள்கிறோமோ , அப்பொழுது நமக்கு ஏற்படும் பேரின்பத்திற்கு எல்லையும் கிடையாது; முடிவும் கிடையாது.
அப்படிப்பட்ட ஆனந்தத்தை எனக்கு அருளவேண்டும் என்று அருணாசலனிடம் வேண்டுகிறார் பகவான் ரமணர் இந்த சுலோகத்தில்.
இத்தருணத்தில் நாலாயிரம் திவ்யப்ரபந்தத்தில் முதலாமாயிரத்தில் ஐந்தாம் பத்தில் 464-465 ஆம் பாசுரங்களில் பெரியாழ்வார் கூறியுள்ளதை நினைவில் கொள்வது சாலப் பொருந்தும்.
பறவை யேறு பரம் புருடா , நீ என்னை கைக்கொண்டபின்

பிறவியென்னும் கடலும் வற்றிப் பெரும்பதம் ஆகின்றதால்

இறவு செய்யும் பாவக்காடு,தீக் கொளீ வேகின்றதால்

அறிவென்னும் அமுதவாறு தலைப்பற்றி வாய்க்கொண்டதே
“கருட வாகனத்தில் சஞ்சரிக்கும் பரம புருஷனாகிய நீ என்னை ஆட்க்கொண்ட பின் மறு பிறவியெனும் கடல் வற்றிப் போய் நான் உன்னோடு ஐக்கியமாகிவிடுவதால் இகலோகத்தில் நான் செய்துள்ள பாபங்களெல்லாம் வெந்து வெண்ணீறாகி விடுகிறது. ஞானம் எனும் அறிவு என்னுள் அமுத ஊற்றாக பெருகுகிறது”..
எம்மனா ! என்குலத்தெய்வமே ! என்னுடைய நாயகனே !

நின்னுளேனாய்ப் பெற்ற நன்மை இவ்வுலகினில் ஆர் பெறுவர் ?

நம்மன்போலே வீழ்தமுக்கும் நாட்டிலுள்ள பாவமெல்லாம்

கம்மெனாதே கைவிட்டோடித் தூறுகள் பாய்ந்தனவே !
 “நான் உன்னோடு ஐக்கியமானதால் நானடைந்த நன்மைகள் இந்த உலகினில் யார் பெறுவார் ? ஆத்ம சாக்ஷாத்காரம் அடைவதால் பாபங்களெல்லாம் அழிந்து விடுகின்றன” என்று பெரியாழ்வார் பாடுகிறார்
 பகவான் ரமணர் இயற்றிய ஸ்ரீ அருணாசல பதிகம் நூலிலும் சிருங்கார ப்க்தியை நாம் காணலாம்.
அன்புரு வருணா சலவழன் மெழுகா

யகத்துனை நினைமூதுநைமூ துருகு

மன்பிலி யெனக்குன் நன்பினை யருளா

தாண்டெனை யழித்திட லழகோ

வன்பினில் விளைய் மின்பமே யன்ப

ரகத்தினி லூறுமா ரமுதே

யென்புக லிடனின் நிட்டமென் னிட்ட

மின்பதற் கென்னுயி ரிறையே.
“அன்புருவாகிய அருணாசலா, என்னை ஆட்க்கொண்ட பின் கைவிடுவாயே ஆனால் அனலிலிட்ட மெழுகு போல் உருகி இல்லாதாகி விட மாட்டேனோ ? என்னை உன் அன்பினால் ஆட்கொண்டு விட்டால் பிறகு,என்னிஷ்டமே உன்னிஷ்டமல்லவா? ஆகவே நான் விரும்பும் உன் பூரண அருளெனும் அமுதை தந்து என்னை தன்யனாக்க மாட்டாயா? உன் அருளினால் விளையும் அன்பே இன்பமல்லவா? அப்படிச் செய்யவில்லையென்றால் அது உனக்கு அழகோ?” என்று காதலி காதலனிடம் செல்லமாக கோபித்துக் கொள்வது போல் இந்த சுலோகத்தை இயற்றியுள்ளார் பகவான் ரமணர்.
.ஸ்ரீ அருணாசல பதிகத்தில் பகவான் மேலும் கூறுவார்:
          தலைவநீ யென்னைக் களவினிற் கொணர்மூதுன்

               றாளிலிமூ நாள்வரை வைத்தாய்

          தலைவநின் றன்மை யென்னவென் பார்க்க்த்

                   தலைகுனி சிலையென வைத்தாய்

          தலைவநான் வலைமான் றனைநிக ராதென்

                   றளர்வினுக் கழிவுநாடி டுவாய்

          தலைவனா மருணாசலவுள மேதோ

                   தமியனார் தனையுணர் தர்கே
“ அருணாசலா, நீ என்னை என்னையறிமலையே ஆட்க்கொண்டு உன் காலடியில் இருத்திக் கொண்டாய். உன் பாதாரவிந்தங்களில் சரணடைந்திருந்தும் உன் குணங்கள் யாவை,நீ எப்படிப் பட்டவன் என்று கேட்போருக்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லையே? என்ன பதில் சொல்ல? உன்னை விளக்க, சொல் கிடைக்காமல் நான் சிலை போல் தலை குனிந்து நிற்பது உனக்கு அழகோ,அருணாசலா? வேடனின் வலையிலகப்பட்ட மான்பேடை போல் நான் திரு திரு என்று விழித்துக் கொண்டிருக்கிறேனே? எனது இந்த பலவீனத்தை, அறியாமையை அழித்து எனக்கு முக்தியளிக்க மாட்டாயா?” என்று பகவான் அருணசலனனிடம் கெஞ்சி—கொஞ்சி—கேட்கிறார்.
இந்த சுலோகத்தின் மூலம் பகவான் இரண்டு உண்மைகளை வெளிக்கொணருகிறார்.
முதலாவதாக என்னதான் ஞானியானாலும் பரமனின் முன்னால் அவன் ஒரு பேதையே. பரமனின் குணாதிசயங்களை புரிந்து கொள்ளவோ விவரிக்கவோ இயலாது.
இரண்டாவது உண்மை என்னவென்றால் இந்த ஞானம் எனப்படுவது ஒரு அறிவல்ல, ஒரு அனுபூதி;அனுபவம்.அதை அனுபவித்துத் தான் அறிந்து கொள்ள முடியும். பிறர் சொல்லித் தெரிந்துகொள்ள முடியாது எனப்படுவதாகும்.
அதனால்த்தானோ என்னவோ பகவான் பல நேரங்களில் மௌனமாக இருந்து மானசீக தீக்ஷையின் மூலம் பக்தர்களுக்கு உபதேசம் அளித்தார்

அதே கருத்தை அக்ஷரமண மாலையிலும் வெளிப்படுத்துகிறார் பகவான்..

Posted by RHS at 22:33 

அஷ்டாவக்கிரமணிகள்2

அஷ்டாவக்கிரமணிகள் 2

மணி ஒன்று ஓசை 2 
ஏட்டுச் சுரக்காய் கறிக்குதவுமா?

இந்த நூலின் தோற்றத்தைக் குறித்து வேறுபட்ட கருத்துக்கள் சொல்லப்பட்டு வருகின்றன.
ராதா கமல் முகர்ஜீ என்ற சமூக விஞ்ஞானி பகவத்கீதையின் காலத்தையொட்டியே தான் இந்த நூல் எழுதபட்டிருக்க வேண்டும் என்று அபிப்பிராயப்படுகிறார்.அதாவது யேசு நாதர் பிறப்பதற்கு 500 வருடங்களுக்கு முன்னால் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று அபிப்பிராயப்படுகிறார்..அதற்கு ஆதாரமாக இரண்டு கீதையிலும் கூறப்பட்டுள்ள கருத்துக்களை உதாரணமாக எடுத்துக்காட்டுகிறார்.

ஆனால் எடின்பரோ பல்கலை கழகத்தில் சம்ஸ்கிருத பேராசிரியராக இருந்த J.L. ப்ரோகிங்க்டொன் என்பவரோ இந்த நூல் ஆதி சங்கரர் காலத்திற்கு பின் A.D.800களில் எழுதப்பட்டிருக்கலாம் என்கிறார். ஏனென்றால் இதில் கூறிப்பட்டுள்ள கருத்துக்கள் ஆதிசங்கரரின் கருத்துக்களை ஒட்டியே உள்ளது என்பதால்.

சுவாமி சாந்தானன்தபுரி அத்வைதத்தின் மூலக்கருவான அஜாத வாதத்தின் விளக்கவுரையான மாண்டூக்ய காரிகையின் தத்துவங்களே இதிலும் காணப்படுவதால் மாண்டூக்கிய காரிகையெழுதிய கௌடபாதருடைய காலத்தைச் சேர்ந்ததாகத்தான் இருக்க வேண்டும் அஷ்டாவக்கிர கீதை என்கிறார்.

      அஷ்டவக்கிர கீதை என்ற பெயரிலிருந்து இந்த நூல் அஷ்டாவக்கிரர் என்பவர் எழுதியது என்று தெரிகிறது .

யார் இந்த அஷ்டாவக்கிரர் யார்?

“ஏட்டுச் சுரைக்காய் கறிக்குதவாது” என்ற வழக்கு மொழியை நாமெல்லாம் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் கேட்டிருப்போம். இந்த வழக்கு மொழியை தன் தாயின் கர்ப்பத்திலிருக்கும் பொழுதே கர்ஜித்தவர் அஷ்டவக்கிரர் என்று சொல்லப்படுகிறது. அதுவும் யாரைப் பார்த்து அவ்வாறு கூறினாரென்றால் தன் தந்தையைப்பார்த்து—,தந்தை அவரது மாணாக்கர்களுக்கு நல்கிய உப்தேசங்களை கேட்டு.

அவர் தந்தையோ, மிகுந்த அறிவாளி; முனிசிரேஷ்டர் உத்தாலகரின் பிரியத்துக்குரிய சீடர்;அவரது அறிவைக்கண்டு மெச்சி குருவே தன் புத்திரியை மணம் முடிக்கப்பெற்றவர். அப்படிப்பட்ட வேத விற்பன்னரின் விளக்கங்களில் குறை கண்டது தாயின் கர்ப்பத்திலிருந்த இன்னும் இந்த மண்ணில் பிறவாத சிசு.
உத்தாலக முனிகள் தனது ஆசிரமத்தில் பிரம்மசாரிகளுக்கு வேதம் சொல்லிக்கொடுத்துக் கொண்டிருந்தார் என்று சாந்தோக்ய உபனிஷத்தில் வருகிறது.

ககோடகன் என்ற ஒரு மாணவன் அவரிடம் வேதம் பயின்று வந்தான். அவன் எல்லா மாணாக்கர்களையும் விட திறைமைசாலியாகவும் ,புத்திகூர்மையுள்ளவனாகவும் இருந்தான். ஆகவே குருவுக்கு அவனை மிகவும் பிடித்திருந்தது.

அது உத்தாலகர் தன் மகள் சுஜாதாவை ககோடகனுக்கு கன்னிகாதானம் செய்து கொடுப்பதில் முடிந்தது.

சுஜாதா கருவுற்றாள்.

சுஜாதாவிற்கு தனது மகனை வேதங்களிலும் வேதாந்த்திலும் சிறந்த பண்டிதனாக்க வேண்டும் என்ற விருப்பம் எழுந்தது.

கருவுற்றிருந்த சுஜாதா தனது கணவர் நடத்தும் வகுப்புகளில் தவறாமல் ஆஜராக ஆரம்பித்தாள்.

வேத காலங்களிலேயே கருவிலிருக்கும் சிசு மாதா கேட்கும் பாடங்கள், அனுபவிக்கும் அனுபவங்கள் எல்லாவற்றையும் புரிந்துகொள்ளக் கூடும் என்று நமது முன்னோர்கள் அறிந்து வைத்திருந்திருந்தார்கள்.

கருவிலிருந்த சிசு தன் தந்தையான ககோடகன் சிஷ்யர்களுக்கு சொல்லிக்கொடுக்கும் வேத வேதாந்தங்களையும் மந்திரங்களையும் கேட்டு கோபம் கொண்டது.

”இது என்ன? வேத விற்பன்னரான தன் தந்தை புராணங்களிலும் கிரந்தங்களிலும் சொல்லப்பட்டவையை அறிவு என்று போதிக்கிறார்? ஞானம் என்பது தான் யார் என்று உணருவதல்லவா?”

இப்படி எண்ணிய குழ்ந்தையின் கூக்குரல் ககோடகனுக்கும் கேட்டது; புரிந்தது.

மேலும் ககோடகன் ஏதாவது தவறாகச் சொல்லிவிட்டால் மாதாவின் கருப்பையிலிருக்கும் சிசு திருத்த முற்பட்டதாம்..ஓரு நாள் ககோடகனால் ஒரு சிசு பிறப்பதற்கு முன்பே தன்னை திருத்த முற்படுவது பொறுக்க முடியாமல் குழந்தையை சபித்து விடுகிறார்.

“ நீ எப்படி அஷ்டகோணலாக நெளிந்து கொண்டிருக்கிறாயோ அப்படியே பிறக்கக் கடவது”

இங்கே தான் அஷ்டாவக்கிர கீதை பிறந்தது.

ஞானம் என்பது ஏட்டறிவல்ல என்ற அஷ்டவக்கிரரின் கூக்குரலும், அறிவாளியான தந்தைக்கு தன் அறிவின் மீதும் தன் மீதும் உண்டான மமதையும் சேர்ந்து அஷ்டாவக்கிர கீதை பிறக்க காரணமாயிற்று.

ஞானம் என்பது யாது? நான் யார்? மமதை எனும் அஹங்காரம் விளைவிக்கும் கேடுகள்! இவை தான் அஷ்டாவக்கிர கீதையின் மையக் கருத்துக்கள்.

அறிவாளியான தந்தையின் அஹங்காரத்தினால் குழந்தை அப்படியே அஷ்டகோணலாகப் பிறந்தது என்பது கதை.

இதே போல் பிற பெரிய மஹான்களின் பிறப்புகளைக் குறித்தும் கதைகள் உண்டு.

புத்தர் பிறந்தது அவரது தாய் மரத்தடியில் நின்று கொண்டிருக்கும் பொழுது என்றும் தாய் நின்று கொண்டே பிரசவித்ததால் குழந்தை தரையில் கால் பதிய பிறந்ததும்; பிறந்ததும் எட்டு அடிகள் எடுத்து வைத்து நடந்தது என்றும் கூறுகிறார்கள். இந்த எட்டு அடிகள் புத்தரின் எட்டு சீரிய கருத்துக்களை குறிப்பிடுவதாக நம்பப் படுகிறது.

‘சீன நாட்டிலுதித்த ‘தாவொயிச’ த்தின் தந்தையான ‘லாவோட்சே’ பிறக்கும்பொழுதே 80 வயதுடையவராக பிறந்தார் என்பது கதை.அவர் 80 வயதுக்கான ஞானத்துடன் பிறந்ததாக கூறப்படுகிறது. இந்தக் கதை குறிப்பால் உணர்த்துவது ஞானம் பெற நீண்ட காலம் தேவை என்பதாகும்.

ஆகவே இப்படிப்பட்ட கதைகளிலுள்ள ‘myth’ ஐ மறந்து விட்டு இந்த மஹான்கள் நமக்கு அருளியுள்ள கருத்துக்களில் கவனம் செலுத்துவோம்.

மற்ற குறிப்புகள்

 இதிஹாசங்களில் இரண்டு இடங்களில் அஷ்டவக்கிரரைப் பற்றிய குறிப்பு காணப்படுகிறது.

வால்மீகி ராமாயணத்தில் யுத்த காண்டத்தில் ராம ராவண யுத்தம் முடிந்த பின் தசரதர் வானுலகத்திலிருந்து ராமனை காண பூலோகம் வருகிறார்..

அந்த சந்தர்ப்பத்தில் தசரதர் கூறுவார்,”

“மகனே, நான் உன்னால் தன்யனானேன். பெற்றவற்கு பெருமை சேர்த்த மகன் நீ. எப்படி அஷ்டவக்கிரர் தனது தந்தை ககோடரை வந்தியின் பிடியிலிருந்து விடுவித்தாரோ அதே போல் நீ என்னை பாப சுமையிலிருந்து விடுவித்து விட்டாய்.”
அத்யாத்ம ராமாயணத்தில் ஆரண்ய காண்டத்தில் ராமரும் இலக்குவனும் கபந்தன் என்ற அரக்கனை வதம் செய்த பொழுது, கபந்தன் கந்தர்வனாக உருமாறி தன் கதையை கூறுகிறான்.

தான் முன்பொருமுறை அஷ்டவக்கிர முனிவரைப் பார்த்துச் சிரித்ததாகவும் அவரின் சாபம் நிமித்தமாகத்தான் இந்த உரு எடுக்க வேண்டி வந்தது என்றும் த்ரேதா யுகத்தில் ராமனால் நீ கொல்லப்படுவாயென்றும் அப்பொழுது உனக்குக்கு சாப விமோசனம் கிடைக்கும் என்று அஷ்டாவக்கிரர் கூறினாராம்.
அஷ்டம் என்றால் எட்டு. ஆஷ்டாவக்கிர முனிவரின் உடல் அஷ்ட கோணலாக இருக்குமாம். அந்த விசித்திரமான உடலைப் பார்த்து தான் கபந்தன் சிரித்தான்.
மஹாபாரதத்தில் வனபர்வத்தில் அஷ்டவக்கிரரை பற்றிய குறிப்பு வருகிறது.

சூதாட்டத்தில் தோற்றுப் போன பாண்டவர்கள் திரௌபதியுடன் வன வாசம் செல்கிறார்கள். வனத்தில் அவர்கள் லோமச முனிவரை சந்திக்கிறார்கள். முனிவர் யுதிஷ்டிராதிகளை மதுபிலா நதியில் நீராடினால் உங்கள் கஷ்டங்கள் எல்லாம் நீங்கும் என்று கூறுகிறார்.

மதுபிலாவிற்கு இன்னொரு பெயர் ‘ஸமங்கா’.

முனிவர் மேற்க்கொண்டு சொன்னார், “ இந்த சமங்காவில் நீராடியதால்த் தான் அஷ்டவக்கிர முனிவரின் அஷ்ட கோணலாயிருந்த உடல் நேரானது”.

யுதிஷ்டிரர் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி,லோமச முனிவர் அஷ்டாவக்கிரரின் கதையை பாண்டவர்களுக்கு கூறினார்.

மஹாபாரதத்தில் மூன்று அத்தியாங்களில் அஷ்டவக்கிரரின் பெருமைகள் கூறப்பட்டுள்ளது( மேலும் தொடரும்)

அஷ்டாவக்கிரமணிகள் 4

அஷ்டாவக்கிரமணிகள்
2015
ஹரிஹர சர்மா

அஷ்டாவக்கிரமணிகள்

மணி 1 ஓசை 4

மஹாராஜா ஜனகர்
போட்டியைக் காணும் முன் மஹராஜா ஜனகரைக் குறித்து ஒரு சில குறிப்புக்களை பதிவு செய்வது பொருத்தமாக இருக்கும் .

விதேஹ நாட்டின் அரசர்கள் ஜனகர் என்ற பொதுப் பெயரில் அறியப்பட்டு வந்தார்கள்..அவர்கள் மிதிலையை தலைநகராககொண்டு. ஆட்சி செய்து வந்தார்கள்

அவர்களது காலம் BC 7 நூற்றாண்டுக்கு முந்தையது என்று வரலாறு கூறுகிறது.

ஷதபாத ப்ராம்மணத்திலும்,ப்ரஹதாரண்ய உபனிஷத்திலும் ஜனகர் வேதங்களிலும் வேதாந்தத்திலும் சிறந்த அறிவாளியாக திகழ்ந்தார் என்று கூறப்பட்டுள்ளது.

அவர் பண்டிதர்களையும் வேத விற்பன்னர்களையும் வெகுவாக ஆதரித்து வந்தார்.

யாஞ்யவல்கியர் முதலிய வேத பண்டிதர்கள் அவரது அரசவையை அலங்கரிது வந்தார்கள்.

ராமாயணத்தில் ஸீரத்வஜ ஜனகர் என்ற அரசர் மிதிலையில் ஆட்சியில் இருந்து வந்தார் என்று கூறப்பட்டுள்ளது.

அவர் யாஞ்யவல்கரின் சீடர் என்றும் கூறப் பட்டுள்ளது..அவரை ராஜ ரிஷி என்றே அழைத்து வந்தார்கள்.

பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணர் ஜனகரை ராஜரிஷி என்று குறிப்பிடுகிறார்:

     கர்மணைவ ஹி ஸம்ஸ்த்திமாஸ்திதா ஜனகாதய: !

     லோகஸங்கர ஹமேவாபி ஸம்பஸ்யங்கர்துமரஸி !!

                           ப.கீ அத்.3 சுலோ 20

ஜனகர் முதலியவர்கள் கர்மத்தாலேயே முக்தியடைந்தவர்கள். .உலகத்தை நல்வழியில் நடாத்தலை நன்குணர்ந்து கர்மம் செய்தவர்கள்.

நித்ய கர்மங்கள் செய்வதும் முக்தியடைவதும் எதிர்மறையான செயல்களல்ல. பற்றில்லாமல் கர்மம் செய்வது கர்ம மார்க்கத்தின் வழி.

ஜனகரின் அறிவாற்றலையும் கர்ம ஞானத்தையும் பறை சாற்றுகின்ற நிறைய கதைகள் உண்டு.. இங்கு அவைகளில் ஒன்றிரண்டை கூறுகிறேன்.

வியாச மஹரிஷியின் புத்திரரான சுக முனி சிறுவயதிலேயே லௌகீகத்தை துறந்து சன்னியாச வாழ்க்கை வாழ்ந்து வந்தவர்.. அவருக்கு ஆரம்பத்திலிருந்தே ஒரு சந்தேகம் இருந்தது. உலக சம்சாரத்தில் ஈடுபடுபவர்களால் முக்தியடைய முடியுமா? அவரது பிதாவான வியாசர் கூறினார் ,” நீ இதற்கான பதிலை ராஜா ஜனகரிடம் தான் கேட்க வேண்டும் “ என்றார்.

ஒருமுறை சுக முனிவரும் ஜனகரும் நந்தவனத்தில் உட்கார்ந்து கொண்டு வேதாந்த சர்ச்சையில் ஈடுபட்டிருந்தார்கள். அப்பொழுது ஒரு சேவகன் ஓடிவந்து ,” மன்னருக்கு எனது பணிவான வணக்கங்கள். இடையூறுக்கு மன்னிக்க வேண்டும். அரண்மனை அந்தப்புரத்தில் தீ பிடித்துகொண்டுள்ளது. மந்திரி தெரிவிக்கச் சொன்னார்.”.என்று சொல்லி வணங்கி நின்றான்.

ஜனகர் சைகை மூலமே அவனை போகச் சொல்லிவிட்டு விவாதத்தை தொடர்ந்தார். 
சுக முனிவர் மனதிற்குள் நினைத்துக்கொண்டார், “இவர் என்ன அரசர்; அரசாளத் தகுதியே இல்லாதவர். உடனே சம்பவ ஸ்தலத்திற்கு விரைந்து சென்று தீயில் சிக்கியுள்ளவர்களைக் காப்பாற்ற முயற்சிக்க வேண்டாமா?”

ஆனால் மன்னருக்கு உபதேசிக்க சுகர் தயாராகவில்லை. அவர்கள் விவாதம் தொடர்ந்தது. சற்று நேரத்தில் இன்னொரு சேவகன் வந்து தீ அரசரின் கஜானா வரை பரவி விட்டது என்று தெரிவித்தான்.

ஜனகரில் எந்த மாற்றமுமில்லை. விவாதத்தை தொடர்ந்தார். இன்னும் சற்று நேரத்தில் இன்னொரு சேவகன் நெருப்பு நந்தவனத்தை நெருங்கிக் கொண்டிருப்பதாக தெரிவித்தான்.

ஜனகர் அசையவில்லை.

சுகர் பதற்றமடைந்து தனது காவிப்பையையும் மற்ற உடமைகளையும் எடுத்துக்கொண்டு ஓடுவதற்கு தயாரானார்.

அப்பொழுது அங்கு வந்த வியாச முனிவர் சுகரைத் தடுத்து நிறுத்திக் கூறினார்:

“ பார்த்தாயா மைந்தா, உனக்கும் இந்த கர்ம சன்னியாசிக்கும் உள்ள வேற்றுமையை. மன்னர் அரண்மனையையோ அந்தப்புரத்தையோ கஜானாவையோ தனது என்று நினைக்கவில்லை. அவைகளை பாதுகாக்க நியமிக்கப்பட்டவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் பார்த்துக்கொள்வார்கள்; அப்படி அவர்களால் பாதுகாக்க முடியவில்லை என்றால் அது தெய்வ நிச்சயம் என்று புரிந்திருக்கிறார்.அரசராக இருந்தும் அவர் பற்றற்ற நிலையில் இருக்கிறார். நீயோ சன்னியாசியாக இருந்தும் நந்தவனத்தை நெருப்பு நெருங்கி விட்டது என்று சொன்ன மாத்திரையிலேயே ஓடத் தயாராகிவிட்டாய்.

நீ கற்க வேண்டியது இன்னும் உள்ளது” என்றார்.

ஜனகரின் கர்மவாழ்க்கைக்கு மற்றொரு ருசு இன்னொரு கதையிலுள்ளது.

மன்னர் ஜனகரின் அரசவையில் ஒரு வித்வான் இருந்து வந்தார் அவருக்கு மன்னரைப் பார்த்து மிகவும் வியப்பாக இருந்தது. மன்னர் எப்படி அரச பாரத்தை சுமந்து கொண்டு அரசருக்கு உரித்தான சுகபோகங்களிடையிலிருந்து கொண்டு எப்படி பரமனிடம் மனதை எப்படி ஒருமுகப்படுத்தி வாழ்கிறார் என்று வியந்தார்.ஒரு தகுந்த தருணத்தில் மன்னரிடமே தன் சந்தேகத்தை நேரடியாக கேட்டே விட்டார்.

அந்த பண்டிதரின் சந்தேகத்தை தீர்ப்பதற்கு பதிலாக மன்னர் சேவகர்களை அழைத்து பண்டிதரை சிறையில் அடைக்கச் சொன்னார்.

அந்த வித்வான் அதிர்ச்சிக்குள்ளானார். இருந்தாலும் அரச கட்டளையல்லவா; பேசாமல் சேவகர்களுடன் போனார்

சிறையில் ஒரு வைக்கோலினாலான ஓரு படுக்கை விரிக்கப் பட்டிருந்தது. அப்பொழுது அங்கு வந்த இன்னொரு சேவகன் ,” தாங்கள் இயற்கை உபாதிகளைத் தீர்த்துக் கொள்வதற்கும் உணவருந்தவும் மட்டும் தான் படுக்கையிலிருந்து எழுந்திருக்க வேண்டும்; மற்ற நேரங்களில் படுக்கையிலேயே படுத்திருக்க வேண்டும் என்பது அரச கட்டளை.” என்று சொன்னான்..

வித்வானும் பேசாமல் படுக்கையில் படுத்துக் கொண்டார். வேறு ஒன்றும் செய்வதற்கில்லாமல் அவர் மோட்டு வளையை பார்த்தார். அங்கு அவருக்கு இன்னொரு அதிர்ச்சி காத்திருந்தது. அவரது மார்பிற்கு நேராக ஒரு கூரிய கத்தி மெல்லிய நூலில் கட்டி தொங்க விடப்பட்டிருந்தது.மேல் சாளரம் வழியாக வீசிய இளங்காற்றில் அந்தக் கத்தி அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும் ஊசலாடிக்கொண்டிருந்தது. அது எப்பொழுது வேண்டுமென்றாலும் அறுந்து விழுந்து விடும் போல் இருந்தது.

ஒரு நாள் எப்படி போயிற்று என்றே வித்துவானுக்கு தெரியவில்லை.

அறு சுவை உண்டி வந்தது. அருந்துவதற்கு வித விதமான பழ வகைகள் வந்தன. சாளரம் வழியாக வீசிய காற்றை சுகந்த்மாக்க பன்னீர் தெளித்துக் கொண்டிருந்தார்கள்,சேவகர்கள். அவரை மகிழ்விக்க பெண்மணிகள் நடனமாடிக்கொண்டும் பாடிக்கொண்டும் இருந்தார்கள்.

அவர் உறங்கினாரா இல்லையா என்றே தெரியவில்லை.

மறு நாள் அவர் அரசவைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

மன்னர் கேட்டார்: “ பண்டிதரே, நன்றாக உண்டு உறங்கினீரா? சிறையில் வசதிகள் எப்படியிருந்தன?”

வித்வான் சொன்னார்:” என்ன சொல்ல? என்ன நடந்தது என்றே தெரியவில்லை. என்ன உணவுண்டேன் என்பதும் தெரியவில்லை; என்னைச் சுற்றி என்ன நிகழ்ந்தது என்றும் தெரியவில்லை. என் கவனம் பூராவும் மேலே தொங்கிக் கொண்டிருந்த கத்தியின் மேல்த் தான் இருந்தது. மன்னா,எனக்கு ஏன் இந்த தண்டனை?”

“ பண்டிதரே, நீர் என்னிடம் ஒரு கேள்வி கேட்டீர்கள் அல்லவா? அதற்கான பதில் தான் உமது நேற்றைய அனுபவம்.நாம் ப்ரமனின் மீது ஒரு முகமாக கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டால்,மற்ற இன்ப துன்பங்களெல்லாம் உணரமாட்டோம்.ஆனால் நாம் செய்யவேண்டிய கர்மங்கள் எதுவும் நிற்கவும் நிற்காது. நீர் உணவு உண்டீர்; இயற்கை உபாதிகளை தீர்த்துக்கொண்டீர்; சிறிதாவது கண்ணயர்ந்துமிருப்பீர்.ஆனால் உமக்கு எதுவும் தெரியவில்லை; நாம் இறைவன் மீது ஒருமுகமாக தியானம் செய்துகொண்டே நமது கர்மாக்களையும் செய்ய இயலும்.வேண்டியது மன அடக்கம் தான்.”

எவ்வளவு பெரிய தத்துவம்.

 நாம் போட்டியைக் காணலாம். போட்டி ஆரம்பித்தது.

ஒன்றிலிருந்து வரிசையாக ஒவ்வொரு எண்ணைக்கொண்டு ஆரம்பித்து சுலோகங்கள் உடனுக்குடன் இயற்றும் போட்டி.

. வந்தி தான் ஆரம்பித்தார். சளைக்காமல் அஷ்டவக்கிரனும் வந்திக்கு ஈடு கொடுத்தான். கடைசியில் பன்னீரெண்ட்டாமெண் வந்ததும் வந்தியால் சுலோகத்தை முடிக்க முடியவில்லை.

அஷ்டவக்கிரன் தன் திறைமையால் அந்த சுலோகத்தை முடித்துக் காண்பித்தான்.

வந்தி தோல்வியை ஒப்புக்கொண்டார்.

போட்டி விதி முறைகளின் படி வெற்றி பெற்றவர் சொல்லும் தண்டனைக்கு தோற்றவர் ஆளாகவேண்டும்.

அஷ்டாவக்கிரன் தன் தந்தையை வந்தி எப்படி தண்ணீரில் மூழ்கடித்து கொன்றாரோ அதே தண்டனையை அவரும் அனுபவிக்க வேண்டும் என்றான்.
அப்பொழுது வந்தி கூறினார், “உன் தந்தையும் மற்ற பண்டிதர்களும் இறக்கவில்லை.. நான் வருணதேவனின் மகன். என் தந்தை ஒரு மாபெரும் வேள்வி விண்ணுலகத்தில் நிறைவேற்றிக்கொண்டிருக்கிறார். அதற்காக சிறந்த பண்டிதர்களை அடையாளம் கண்டு அனுப்பி வைத்துக்கொண்டிருந்தேன்.அந்த வேள்வி முடிந்ததும் எல்லோரும் வந்துவிடுவார்கள்.”

அதே நேரத்தில் வருணதேவனின் வேள்வியும் முடிந்தது.ககோடகனும் மற்ற பண்டிதர்களும் ஜனகரின் அரசவையில் பிரத்தியட்சமானார்கள்.

ககோடகன் தன் மகனின் அறிவு கூர்மையும் விவேகத்தையும் கண்டு மிகவும் மனமகிழ்ந்தான்.

மகனை மதுபிலா ( சமங்கா) என்ற நதியில் நீராட்டி சாப விமோசனமும் அளித்தான்.

சமங்காவில் நீரடுவதால் உடலிலுள்ள வக்கிரங்கள் மறையும் என்பது முன்னொரு பகுதியில் சொன்னது போல் ஒரு myth. ஜீவத்மாவை பரமாத்மாவில் இலயிக்கவைத்து நீராட்டி எல்லாம் ஒன்றே என்ற ஆத்ம ஞானம் பெறுவதுன் மூலம் நம் மனதிலுள்ள கோணல்கள் மறைந்து ஆத்ம சாக்ஷாத்காரம் பெறுவோம் என்பது உள்பொருள். புண்ய தீர்த்தங்களுக்கு நாம் செல்வதும் நீரடுவதும் நம் பாப விமோசனத்திற்குத் தான். ஆனால் நீராடிய பிறகும் மனதின் கோணல்கள் நீங்கி நாம் இறையருள் பெறவில்லயென்றால் அது நமது பிராரப்த கர்மம் என்று கொள்ளவேண்டும்.

பிற்காலத்தில் ஜனக மஹாராஜாவின் ஒரு சந்தேகத்தை நிவர்த்தி செய்து அஷ்டாவக்கிரர் அளித்த உபதேசம் தான் அஷ்டவக்கிர கீதை. ஜனக –அஷ்டாவக்கிர சம்வாதம், அஷ்டவக்கிர சம்ஹிதை என்ற பெயர்களால் அறியப்படலாயிற்று.

மணி 1

ஓசை 3

 

 “நரைத்த தலை முடி முதிர்ச்சியின் அடையாளமன்று. வாழ்ந்த வருடங்களோ நரைத்த முடியோ ,ஒருவரிடமுள்ள தனமோ, உயர் பதவியிலுள்ள சொந்த பந்தங்களோ,ஒருவரை பெரிய மனிதனாக்குவதில்லை. யார் அறிவில்/ ஞானத்தில் சிறந்து விளங்குகிறானோ அவனே பெரியவன்”

.    அஷ்டாவக்கிரர் 

ககோடகனுக்கும் ஸுஜாதாவிற்கும் பிறந்த குழ்ந்தை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வந்தது.

குழந்தை பிறந்ததால் குடும்பத்தை பரமரிப்பதற்கு கூடுதலாக தனம் தேவைப் பட்டது.

அரசர் ஜனகர் வேதங்களிலும் வேதாந்தங்களிலும் மிகவும் ஈடுபாடுள்ளவர். அவரது வித்வத் சபையில் நிறைய வேத விற்பன்னர்களும் பண்டிதர்களும் ஆதரிக்கப்பட்டு வந்தார்கள்.

ககோடகன் அரசரிடம் சென்று தன் அறிவுத் திறைமையால் தனம் சம்பாதித்து வரலாம் என்று தீருமானித்தாண்.சுஜாதாவும் சரியென்றாள்..

நடந்ததோ வேறுமாதிரி. ஜனகருடைய வித்வத் சபையில் வந்தி என்ற ஒரு பேரறிஞர் இருந்தார்.அவரை வாதத்தில் தோற்கடித்தால்த் தான் மன்னரிடம் பரிசு பெறமுடியும். தோற்றுப் போனாலோ வந்தி தோற்றவரை தண்ணீரில் மூழ்கடித்து கொன்று விடுவார்.

ககோடகன் போனவன் போனது தான். திரும்பி வரவேயில்லை.
அஷ்டாவக்கிரன் உத்தாலக முனிவரின் மகன் ஸ்வேதகேதுவுடன் வளர்ந்து வந்தான். உத்தாலகரும் அஷ்டாவக்கிடரனை தன் சொந்த மகனைப் போலவே வளர்த்து வந்தார். அஷ்டாவக்கிரன் உத்தாலகர் தான் தன் தந்தை என்றே நம்பி விட்டான். அவனிடம் யாரும் உண்மையை விளக்கி கூறவுமில்லை.

அவனுக்கு பன்னீரண்டு வயதுள்ள பொழுது ஒரு நாள் அஷ்டாவக்கிரன் உத்தாலகரின் மடியில் அமர்ந்திருந்தான். அப்பொழுது அங்கு வந்த ஸ்வேதகேது அஷ்டாவக்கிரனை தன் தந்தையின் மடியிலிருந்து தள்ளிவிட்டு விட்டு,’ இது உன் தந்தையல்ல’ என்று கூறிவிட்டான்.

அதன் பின் தன் தாயிடமிருந்து உண்மையைத் தெரிந்துகொண்ட அஷ்டாவக்கிரன் ஜனகரின் அரசவைக்குச் சென்று வந்தியை தோற்கடித்து பழிக்கு பழி வாங்குவேன் என்று கிளம்பி சென்று விட்டான்.

அரசனை காண்பதற்காக மிதிலாபுரி வந்து சேர்ந்த அஷ்டாவக்கிரன் நகர வீதிகள் அலங்கரிக்கப் பட்டு ஜனங்கள் ஆங்காங்கே கூட்டம் கூட்டமாக நின்று கொண்டிருப்பதை கண்டான். யாரும் வீதியில் நடமாடவில்லை.அஷ்டாவக்கிரன் வீதியிலிறங்கி நடக்க ஆரம்பித்தான். அரச சேவகர்கள் தடுத்தார்கள்; மன்னர் போன் பிறகு தான் போக முடியும் என்று சொன்னார்கள். அரசனும் பரிவாரங்களும் நெருங்கி விட்டார்கள்; ஒதுங்கி நிற்குமாறு சேவகர்கள் அஷ்டாவக்கிரனை வற்புறுத்தினார்கள்.

அஷ்டாவக்கிரன் உரத்த குரலில் பதிலிறுத்தான்,” வேதம் படித்தவர்களும் அந்தணர்களும் அரசனின் முன்னால் போக அனுமதியுண்டு.அதுதான் நமது கலாச்சாரம்;பண்பாடு “ என்று கூறினான்.

சேவகர்கள் குழம்பிப் போனார்கள்.இதைக் கேட்டுவிட்ட ஜனகனோ,” அந்த சிறுவன் சொல்வது சரிதான் ;அவனைப் போகவிடுங்கள்.” என்று உத்தரவிட்டான்.

இது அஷ்டாவக்கிரனுக்கு கிடைத்த முதல் வெற்றி.
அவன் அரசவையை வந்தடைந்தான்.

அரசவையில் அவனுக்கு மீண்டும் அதிர்ச்சி காத்திருந்தது. அரண்மனையின் வாயிற்காப்போன் அவனை உள்ளே விட மறுத்து விட்டான். அது மட்டுமல்ல உள்ளே சென்றவர்களின் கதி என்னவாயிற்று என்று விளக்கிக் கூறினான். மேலும்,”அரசவை சிறுவர்களுக்கானதல்ல; அறிவாளிகளுக்கும் முதிர்ந்தவர்களுக்கும் தான்,” என்றான்.

அப்பொழுது அஷ்டாவக்கிரன் சொன்னான், “யார் முதிர்ந்தவர்கள்? தலை முடி நரைத்தவர்களெல்லாம் முதிர்ந்தவர்களில்லை. நரைத்த தலை முடி முதிர்ச்சியின் அடையாளமன்று. வாழ்ந்த வருடங்களோ நரைத்த முடியோ ,ஒருவரிடமுள்ள தனமோ, உயர் பதவியிலுள்ள சொந்த பந்தங்களோ,ஒருவரை பெரிய மனிதனாக்குவதில்லை. யார் அறிவில்/ ஞானத்தில் சிறந்து விளங்குகிறானோ அவனே பெரியவன்.ஆகவே என்னை உள்ளே விடு. இல்லையென்றால் நான் இவ்வாறு கூறினேன் என்று உங்கள் மன்னரிடம் போய் சொல்லுங்கள்.”

அரண்மனைக் காவலர்கள் வேறு வழியில்லாமல் அரசனிடம் சென்று அஷ்டாவக்கிரன் கூறியதை தெரிவித்தார்கள்.

மன்னர் ஜனகன் “ வரச் சொல்.” என்று அனுமதி வழங்கினான்.

இவ்வாறு அஷ்டவக்கிரன் தனது அறிவுத் திறைமையினாலும் பிடிவாதத்தினாலும் அரசவைக்கு வந்து சேர்ந்தான்.

இது அவனது இரண்டாவது வெற்றி.
அஷ்டாவக்கிரன் அரசவையில் பிரவேசித்த பொழுது அங்கு அமர்ந்திருந்த பண்டிதர்கள் உச்சஸ்தாயியில் சிரித்தார்கள்.மன்னன் கூட சிறு புன்னகை புரிந்தான். அஷ்டாவக்கிரன் அவர்களை விட உரக்கச் சிரித்தான்.

மன்னனுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை.அஷ்டாவக்கிரனைப் பார்த்து கேட்டான்:” பாலகா, என்னால் சபையோர் சிரித்ததை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் நீ என் சிரித்தாய்?”

அஷ்டாவக்கிரன் நேராக மன்னரைப் பார்த்துக் கேட்டான்:” மன்னா, உன்னை நான் வணங்குகின்றேன்.உன் மீது மிகவும் மதிப்பும் மரியாதையும் வைத்துள்ளேன்.ஆனால் இங்கு வந்த் பிறகு அது தவறோ என்று தோன்றுகிறது.”

மன்னனுக்கு சற்றே கோபம் வரத் துவங்கியது.

சற்றே உரத்த குரலில் கேட்டான்:” இப்பொழுது அந்த மதிப்பிற்கும் மரியாதைக்கும் ஏனோ பங்கம் விளைந்தது.? சொல் பாலகா.”

“ மன்னர் மன்னா, சொல்கிறேன். ஆனால் அதற்கு முன் சபையோர் நான் இங்கு வந்ததும் ஏன் சிரித்தார்கள் என்று கூற முடியுமா?”

மன்னர் சொன்னார்,” உன் உருவத்தைப் பார்த்து சிரித்ததாக எண்ணுகிறேன்.அவர்கள் செய்தது தவறு தான்.”

“ மன்னர்மன்னா, அவர்களை விட நீ பெரிய தவறு செய்துள்ளாய்; இவர்களை போன்ற தோல் வியாபாரிகளை வைத்துக் கொண்டு வித்துவத் சதஸ் நடத்துகிறாயே, உன்னை நினைத்து தான் நான் சிரித்தேன்.”

மன்னர் ஜனகர் கோபத்தின் உச்சிக்கே போய்விட்டார்.

“ தோல் வியாபாரிகளா? எனது சபையிலுள்ள வித்துவான்களும் பண்டிதர்களும் மிகவும் மரியாதைக்குரியவர்கள். அவர்களை கேவலமாக பேசினால் மன்னிக்க மாட்டேன்.சிறுவா, நீ கூறியதற்கு சரியான வீளக்கம் அளிக்காவிட்டால்,கடும் தண்டனைக்குரியவனாவாய்.”

“ மன்னர் என்னை மன்னிக்க வேண்டும். ஒருவனது வெளித்தோற்றத்தை வைத்து அவனை மதிப்பிடுவர்களை தோல் வியாபாரி என்று கூறாமல் எப்படி கூற முடியும்? தோல் வியாபாரிகள் தான் ஒரு மிருகத்தைப் பார்த்தால் இதன் தோல் எதற்கு பயன் படும் என்று எடை போடுவார்கள்.

நிஜமான மதிப்பு வெளித்தோற்றத்தில் இல்லை; உள்ளே இருக்கின்ற சைதன்யத்திலுள்ளது என்று தெரியாத இவர்களை பண்டிதர்கள் என்று எப்படி ஒப்புக்கொள்ள முடியும்?

நூறு குடத்தில் நீர் நிரப்பிவிட்டு அவைகளில் தெரியும் ஆகாயம் எல்லாம் ஒன்றே என்பதை அறியாத இவர்களை வித்துவான்கள் என்று எப்படி ஒப்புக்கொள்ள முடியும்? உன் சிம்மாதனத்தின் மேல் பகுதி ஆறு வளைவுகளை கொண்டதாக இருக்கிறது.அதன் மேலேயுள்ள ஆகாயமும் வளைவுள்ளதாக ஆகிவிடுமா?இப்படிப்பட்ட அறிவாளிகளை சபையில் வைத்துக் கொண்டிருக்கிறாயே என்ற கண்டபோது எனக்கு சிரிப்பு வந்தது; சிரித்தேன்”.
ஜனகன் மிகவும் ஆச்சரியத்துக்குள்ளானான்.இந்த சிறுவயதிலேயே இவ்வளவு அறிவா? என்று வியந்தான்.இவன் சாதாரண சிறுவனல்ல என்று புரிந்து கொண்டு போட்டியில் பங்கு கொள்ள அஷ்டாவக்கிரனை அனுமதித்தான்.

Ramanajothi 24

Ramanajothi23

Both Pandavas and Kauravas are within us

குற்றமுற் றறுத்தெனைக் குணமாய்ப் பணித்தாள்

குருவுரு வாயொளி ரருணாசலா     

kur’r’amur’ r’ar’utte’naik kunamaayp panittaal’

kuruvuru vaayo’l’i rarunaachalaa
कुऱ्‌ऱमुऱ्‌ ऱऱुत्तॆऩैक् कुणमाय्प् पणित्ताळ्

कुरुवुरु वायॊळि ररुणाचला
Bhagavan reiterates the prayer he made in the last verse here also but in a different way.;
 The Lord says, “Have mercy on me and forgive me like a Guru for all my sins.”

 We have seen before that Kurukshetra – the war field and Dharmakshetra – arena of good deeds are in our minds.
 We will get salvation only if we destroy the Kouravas within us- inner Kurukshetra.
 Both the Kouravas and Pandavas are mirror images of our desires. The Kouravas symbolises hundreds of desires in our minds.
 Krishna Paramatma explains these sins in detail to Arjuna in the thirteenth chapter of the Gita.
महा भूताऩ्यहङ्कारो पुत्रव्यक्तमेव च

इन्द्रियाणि तचैकम् च पञ्चन्द्रिय कोचरा
इच्चा: द्वेष सुखम् दुख्कम् सङ्कातष्चेतऩा त्रुति:

एकत्क्षेत्रम् समाचेऩ सविकारमुताह्रुदम्
mahaapootaanyahankaaro puttiravyaktameva cha

intiriyaani tachaikam cha pancha chentiriya kocharaa
ichchaa: tvesha chukam tukkam sankaatashchetanaa truti:

ekatkshetram samaachena savikaaramutaahrutam
மஹாபூதான்யஹங்காரோ புத்திரவ்யக்தமேவ ச

இந்திரியாணி தசைகம் ச பஞ்ச சேந்திரிய கோசரா
இச்சா: த்வேஷ சுகம் துக்கம் ஸங்காதஷ்சேதனா த்ருதி:

ஏகத்க்ஷேத்ரம் ஸமாசேன ஸவிகாரமுதாஹ்ருதம்

 
Five base elements – panch bhutas (earth, water, fire, air, space) arrogance, intellect, implicit para prakriti, (will)
 Ten sense organs (eye, ear, nose, skin, tongue, mouth, hand, foot, genitals, anus are the ten sense organs).

 The mind and the five senses are the root cause for all our sins.

 The image( form), taste, smell, sound, and touch (form, taste, smell, sound, touch) subject to these sense organs and bind us to this world.
 Together with these likes, dislikes, pleasures, sorrows, all of this material mass, and vicarious feelings together sow the seeds of good-evil in us. They bind us to this world. As long as those bonds exist, we cannot realize God.

 Sadhana chatushtayam is the way

 advocated by Adi Shankara in his treatise on philosophical teachings ( Tatva Bhodha )to get rid of these bonds.
What is Sadhana Satushtayam?

साधना चतुष्टय सम्पऩ्ऩाधिकारम्

मोक्षतदाऩभूतम् तत्वविवेक प्रकारम् वक्ष्यम:
saatanaa chatusht’aya sampannaatikaaram

mokshataanapootam tatvaviveka prakaaram vakshyam

:

ஸாதனா சதுஷ்டய ஸம்பன்னாதிகாரம்

மோக்ஷதானபூதம் தத்வவிவேக ப்ரகாரம் வக்ஷ்யம:
 Sadhana Satushtayam is divided into four.
1.நித்ய அனித்ய வஸ்து விவேகம்

Differentiating between eternal and destroyable things
 Absolute wisdom is the knowledge of distinguishing between what is permanent and what is perishable. This wisdom is available to everyone at birth. But it is difficult to sustain it . It requires constant effort  

 What is an indestructible object / eternal object?
नित्य वस्तुविवेकम् ब्रह्म तत् व्यतिरिक्तम्

सर्वम् अऩित्यम् अयमेव नित्याऩि
Brahmam is the only nonperishable eternal object Everything else is perishable.

 So if anyone wants to discover the eternal nonperishable object they must first know themselves. Only those who understand that ‘ I’ am indestructible could know that ‘ I ‘ am the Brahmam.

 2.இஹமுத்ரா பல போக விராக

इहमुद्रा फल भोगा विराग

 Second requirement is- not aspiring for worldly benefits .
This kind of aversion towards material benefits does not mean leaving everything and going away into seclusion in a the forest. Abandoning responsibilities or abdicating is shear, cowardice.

Once ‘ Nithya- Anithya ‘ discrimination is acquired automatically desirelessness would follow।
This is the state of not wanting anything. The state of not having any kind of attachment to anything.

 

‘Ragam’ is love or attachment.

 Not wanting to beget is Viragam. Viramgam means not even wanting to go to heaven. This is the second requirement.

In such a state of mind one would not even desire liberation। Liberation comes as a natural result।

 3. Samadhi Shatka Sampathi

ஸமாதி ஷட்க சம்பத்தி

समाधि षट्क चम्पत्ति
 Third is the training required to achieve the attitude of success and achievement while undergoing emotional states

 Samo Tama Uparamastidiksha Shraddhasa Iti:
 Samam, Tamam, Uparamam. / Uparati, Didiksha, Sratha, Samathanam are the six qualities.
 Samam
 Samam is mental restraint. Getting rid of cravings related to the senses. The mind becomes calm when these kinds of ‘vasanas’ are destroyed.
Dhamam தாமம்
.
 Even when the mind is under control, our senses (eyes, ears, nose, tongue and body) may wander without listening to our mind. That is why it is necessary to bring the senses under control, which is a priori condition to restraint of mind.
Uparanam உபரமம் / உபரதி
 If the mind is freed from the control of the senses, it cannot be left idle. The mind cannot be idle. If it does not ha e anything to do , it will start working again according to the old ‘ vasanas’. Therefore,Uparanam is required. This would divert the mind to righteousness 
 Didiksha
 In Sanskrit, Didiksha refers to the mental maturity of testing everything equally.
 They say in English that every action has an equal and opposite reaction. Cold-hot, happy-sad, likes-dislikes, profit-loss, success-failure, praise-disgrace, we can go on and on .Real mental control is to accept all these opposites with equanimity.
 Shraddha (Guru Vedanta Vakyatishu Vishwasa Shraddha)
 We must have unwavering faith in the Vedanta verses, in the Guru’s words.. Without unwaverinfaith in the Veda sasthras or Guru one cannot succeed .
 Peace Samathanam

 Adjusting the mind – turning the mind away from worldly things and merging it into Brahman. This is what Adi Shankara called “Samyak Astapanam”.

If the above six qualities are acquired one can attain varagya.
 4. Mumukstuvam (Mokshame Puyat Ithi Icha)
 In any case one should concentrate the mind on Paramatman and keep away from these worldly attachments and perishable objects. Unless one has the desire to learn he cannot gain gnana.
 These are the Sadhana Chatushtayam.
 In order to succeed in any attempt , the grace of the Guru is necessary.  
Bhagavan Ramanar begs to Paramatman to show the light so that he can see the true knowledge. Bhagavan prays on our behalf to Guru Arunachala.

Bhagavan was an enlightened soul in hiscearly childhood itself. .

 This is what Pattinathar, thd Tamil saint has also sung:
மூலமறியேன்,முடிவுமறியேன்

ஞாலத்துள் பட்ட துயர் நாட் நடக்குதடா

தனுவாதி நான்கும் தானாய் மயங்கினடா

மனுவாதி சத்தி வலையி லகபட்டனடா

மாமாயை யெனும் வனத்தில் அலைகிறண்டா

தாமாய் உலகனைத்தும் தாது கலங்கிறண்டா

ஐந்து புலனு மடங்கேனே யென்குதே

சிந்தை தவிக்கிறதுன் தேறேனே யென்குதே

கன்னிவன நாதா! கன்னிவன நாதா!

அச்ச மாங்கார மடங்கேனே யென்குதே

கைச் மின்னுமான் கழலேனே
 I know not the roots, I know not the end;

Whatever grief has befallen pushes the days;

‘ I’ have considered body as ‘I’ and fallen in to the illusion;

Fallen into the web woven by mind;

Wandering aimlessly in world of illusions; 

Imagine the whole world to be true;

Oh my five senses not coming under control;

Mind is disillusioned and not focusing on ‘ YOU’

Oh! Kannivana Natha! Kannivananatha!

Fear and ego not submitting to control;

Oh! Paramathman you only can save me!
Pattinaththar too prays to the Paramathma narrating his helplessness.

 யோகவாசிஷ்டம் என்ற மஹாராமாயணம் 579

தினமொரு சுலோகம்

நாள் 579

எல்லாம் சத்தியமே!

யத்³யதா²பூ⁴த ஸர்வ்வார்த்த² க்ரியாகாரி ப்ரத்³ருʼஶ்யதெ
தத்ஸத்யமாத்மானோ(அ) ந்யஸ்ய நைவாதத்தாமுபேயுஷ: (6.2/84/40)
यद्यथाभूत सर्व्वार्त्थ क्रियाकारि प्रदृश्यतॆ
तत्सत्यमात्मानोऽ न्यस्य नैवातत्तामुपेयुष: (6.2/84/40)
yadyathaabhoota sarvvaarttha kriyaakaari pradri’shyate’
tatsatyamaatmaano’ nyasya naivaatattaamupeyusha: (6.2/84/40)

வஸிஷ்டர் தொடர்ந்தார்:” இந்த சைதன்னியம் ஒவ்வொரு இடங்களிலும் எந்த மாற்றத்திற்கும் ஆட்படாமல் இருக்கும் பொழுது,அது சிவன்! அதாவது அந்த சைதன்னியம் தான் சிவன்!இந்த சைதன்னியத்தின் அவயவங்கள் தான் தேவியுடைய அழகுமிக்க அசைவுகள்.சிருஷ்டிக்கப்பட்டிருக்கின்ற உலகங்களும் பூமியின் பகுதிகளுமே, சமுத்திரங்களும் காடுகளும், மலைகளும்,சாஸ்திரங்களும்,புனித யக்ஞங்களும், பலவிதமான ஆயுதங்களின் உதவியோடு அரங்கேறும் போர்கூக்குரல்களும் பதிநான்கு உலகங்களும் எல்லாமே அவளின் அங்கங்கள் தான்”.

இராமன் கேட்டான்:

” மாமுனியவர்களே, நீங்கள் இப்பொழுது சொன்ன அங்கங்களெல்லாம் சத் வஸ்துக்களா இல்லை அசத் வஸ்துக்களா? ”

வஸிஷ்டர் சொன்னார்:” இராமா, போதத்தின் சைதன்னிய அங்கங்கள் என்று நான் குறிப்பிட்டவை எல்லாம் சத்தியமே! ஏனென்றால் இவைகளை அனுபவித்ததும் போதம் தானே!ஒரு கண்ணாடி எப்படி ஒரே நேரத்தில் பல பொருட்களை பிரதிபலிக்கின்றதோ அது போல்,போதம் தானாகவே தன்னுள்ளிருப்பதை பிரதிபலிக்கின்றது.ஆகவே அது சத்தியமே!

கற்பனை நகரம் அல்லது ஒரு நகரத்தின் கற்பனைக் காட்சிகள் தோன்றுவதும் போதத்தில் தானல்லவா! இது , ஒருவேளை தொடர்ந்துள்ள தியானத்தினாலாகலாம் இல்லை போதத்தின் மாசற்ற தன்மையினாலாகலாம்!

ஆனால் இந்த வாதத்தை ,

‘ இந்த கற்பனை சிருஷ்டிகளினால் எனக்கு ஒரு பயனுமில்லை’ என்று நீ மறுக்கலாம்.

ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு குடி மாறினவன், பழைய குடியிருப்பினால் எனக்கு என்ன பயன் என்று கேட்டால்,அந்த பழைய இடத்திற்கு குடி வந்துள்ளவனுக்கு பயனுண்டு என்பது தான் எனது பதில்.அப்படித்தான் எல்லா காரியங்களும் இங்கு இருந்து கொண்டு செயலாற்றும் பொழுது, அவையெல்லாம் ஆத்மா சம்பந்தப்பட்டது தான்.ஆகவே அவை சத்தியம் தான்.ஆனால் அவைகளை குறித்து அறியாதவனுக்கு, அதைக் குறித்து போதம் விழித்தெழாதவனுக்கு, அவைகளெல்லாம் அசத்தியம் தான்”

ஆகவே சிருஷ்டிகளும் எல்லா உயிரினங்களும் அவைகளைக் குறித்து போதம் விழித்தெழுந்தவர்களில் போத சைதன்னியத்தின் ஒரு பகுதியாக நிலை கொள்கின்றது.ஆனால் அதைக் குறித்து அறியாதவர்களுக்கு அது அசத்தியம் தான்.

கடந்த- நிகழ்- வருங்காலங்களில் அவர்களில் முளைவிடும் எண்ணங்களும் கற்பனைகளும் சத்தியமே!

ஏனென்றால் ஆத்மா சத்திமாயிற்றே! தொலைவிலுள்ள தேசங்களுக்கு செல்பவர்கள் அங்குள்ள காட்சிகளை காண்பது போல் இங்கு நான் சொன்ன சிருஷ்டி லீலைகளை புரிந்து கொள்வதற்கு அந்த போத நிலைமைக்கு செல்ல வேண்டும். சத்தியத்தை மாற்றியமைப்பதற்கு போதசைதன்னியத்தின் அசைவுகளால் இயலாது.கனவில் கூட இது தான் நிலைமை.கனவில் ஒருவன் தனது உறக்கத்திற்கோ தான் காணும் கனவிற்கோ எந்த பாதிப்பும் வராமல் ஓரிடத்திலிருந்து வேறு இடத்திற்கு செல்கிறான்.

மூவுலங்ள் -. மூன்று காலங்கள் இவைகள் உண்மையில்லை என்று ஒருவன் உணர்ந்து விட்டால் அந்த கற்பனைக்கு பாதகம் ஏற்படுவதோ ஏற்படாமல் இருப்பதோ ஒரு பொருட்டேயல்ல!