Category Archives: Uncategorized

மனீஷபஞ்சகம் 5

சண்டாளனின்’ இரண்டாவது கேள்விக்கணை

प्रत्यग्वस्तुनि निस्तरन्ग सहजानन्दावबोधाम्बुधौ विप्रोअयम् श्वपचोयमित्यपि महान् को अयम् विभेद भ्रमः?

ப்ரத்யக்³வஸ்துனி நிஸ்தரன்க³ ஸஹஜானந்தா³வபோ³தா⁴ம்பு³தௌ⁴ விப்ரோ

அயம் ஸ்²வபசோயமித்யபி மஹான் கோ அயம் விபே⁴த³ ப்⁴ரம​:?

pratyagvastuni nistaranga sahajaananda avabodha ambudhou vipro

ayam swapacho ayamity api mahaan ko ayam vibhaeda bhramah ?
வார்த்தைகளின் பொருள்

pratyag vastuni ப்ரத்யக் வஸ்துனி = The indwelling essence in all of us is நம் ஒவ்வொருவரின் உள்ளிலுருக்கும் ‘ஸத்’ வஸ்து

nis-taranga நிஸ்தரங்க = the wave less and steady அலைகள் ஏதுமில்லாத்தும் அமைதி நிறைந்ததும்

ambudhouஅம்புதௌ = ocean called the  ( என்ற பெயருடைய)மஹா சமுத்திரமே

sahaja anandaஸஹஜானந்தா = innate, natural Bliss Absolute; இயற்கையிலேயே ஆனந்தமான

avabodhaஅவபோத = This is the perfect understanding.முற்றும் அறிந்த- எல்லாமறிந்த

mahaan மஹான் = O! Great soul, (for you too) மகாத்மாவே!

ko  கோ= why is ஏன்

ayam அயம்= this (very hatred inducing) இந்த ( வெறுப்பை உளவாக்கின்ற)

vibhedha bramahவிபேதப்ரம்: = illusion of discrimination (that) இந்த பொய்யான வேற்றுமை- பாகுபாடு

ayam viproஅயம் விப்ரோ = one is learned and a Brahmin பிரம்மத்தை அறிந்த ஞானியே!

ity apiஇதி அபி = and that the other மற்றது

ayam shwapacho அயம் ஸ்வயசோ = one is an outcaste (Chandaala) ஒதுக்கப்படவேண்டிய வேண்டிய இனம்
விளக்கவுரை

சண்டாளன் தொடர்ந்தான்:’ எல்லாம் அறிந்த மகாத்மாவே! நம் எல்லோர் உள்ளிலும் இருக்கின்ற சத் வஸ்து எங்கும் எப்பொழுதும் அஅலைகளின் அமைதியான இயற்கையிலேயே ஆனந்தமான ஒன்றேயல்லவா? பிறகு ஏன் இந்த வெறுப்பைகக்குகின்ற பாகுபாடுகள்- ஒன்று தீண்டத்தகாத்தும் மற்றது பரிசுத்தமானதும் எல்லாம் அறிந்ததும்  என்ற பாகு பாடு? எல்லோர் உள்ளேயும் இருப்பது ஒன்றொன்றல்ல பாகு பாடு எங்கிருந்து வருகிறது, ஞானியே? சண்டாளன் எல்லாம்தெரிந்த மகான் என்றழைத்து சங்கராச்சாரியரை எள்ளில் நகையாடுகிறான். ஆச்சாரியரையா அவன் எள்ளில் நகையாடுகிறான்? இல்லை! அந்தக் காலத்தில் வழக்கத்திலிருந்தி ( இன்றும்அங்கும் இங்குமிருக்கின்ற) தீண்டாமையை எள்ளில் நகையாடுகிறான் உண்மையில் ஆச்சாரியர் அந்தக்கணத்தில் வாழ்ந்து வந்த எல்லா பிராமணர்களையும் பார்த்து நகைக்கிறார். ‘பிரம்மத்தை அறிந்தவர்கள் என்று பெருமைப் படுகிறீர்களே இது தானா உங்கள் இலட்சணம்’ என்று கேட்காமல் கேட்கிறார் ஆதி சங்கரர்.

 

Advertisements

விவேக சூடாமணி 10 

சுலோகம் 4 

.ஆத்மதரிசனத்திற்கு முயலாதவன் தற்கொலைக்கு முயலுபவன் 

லப்³த்⁴வா கதாசித்னரஜன்ம து³ர்லப⁴ம்
தத்ரபி பும்ஸ்தவம் ஸ்²ர்திவராத³ர்பணம்
யஸ்த்வாத்மமுக்தவ ந யதேத மஹாத்யாதி 
ஸஹ்யாத்மா: ஸ்வாஹோவினிஹந்தய்ஸதா³க்³ர:

labthvA katAcitnarajanma durlabham
tatrapi pumstavam zrtivarAdarpaNam
yastvAtmamuktava na yateta mahAtyAti 
sahyAtmA: svAhovinihantaysadAgra: 

लब्घ्वा कताचित्नरजन्म दुर्लभम्

तत्रपि पुम्स्तवम् श्र्तिवरादर्पणम्

यस्त्वात्ममुक्तव न यतेत महात्याति 

सह्यात्मा: स्वाहोविनिहन्तय्सदाग्र:

ஆதி சங்கரர் மனித ஜன்மத்தின் அருமை பெருமைகளை கூறி, அதிலும் ஆளுமையுடைய பும்ஸ்துவத்துடன் பிறந்து பிரம்மஞானமடைந்த தாய்தந்தையருக்கு மகவாக பிறந்து வேத சாஸ்திரங்களையெல்லாம் கற்று அதன்படி வாழ்நதும் ஆத்ம விசாரத்தில் ஈடுபட்டு ஆத்மசாக்‌ஷாத்காரம் அடையாவிட்டால். அதை விட துரதிர்ஷ்டம் வேறு எதுவும் கிடையாது என்று முன்சுலோகங்களில் விளக்கி கூறினார்.ஏறக்குறைய இமயத்தின் உச்சிக்கு சென்று விட்டு இன்னும் சில அடிகளே எஞ்சியிருக்கையில் உச்சியை அடையாமலே சறுக்கி விழுபவன் போல் தான் முக்தியை தவற விடுகின்ற மனிதன் என்று கூறுகிறார்.

கதம்சித் ந்ரஜன்ம லப்தவா – என்ற வார்த்தைகள் மூலம் எப்படியோ ஒருவனுக்கு மனித ஜன்மம் கிடைத்து விட்டது – அது பூர்வ ஜன்ம கர்ம பலன்களாலிருக்கலாம், இல்லை தெய்வானுக்கிரகத்தால் இருக்கலாம்- எப்படி கிடைத்தது என்பது முக்கிய மில்லை; கிடைத்து விட்டது; அப்படியிருக்கையில் இந்த சந்தர்ப்பத்தை கை நழுவ விடுபவன் முட்டாள் என்கிறார் ஆதி சங்கரர்.

‘ நான் என்ன புண்ணியம் செய்தேனோ அறியேன். கிடைப்பதற்கரிய மனித ஜன்மம் பெற்று விட்டேன். அதிலும் ஆளுமையுடைவனாக பிறந்துள்ளேன்’. எனக்கு முக்தி வேண்டும் என்ற வேட்கையில்லாதவன் மூடன் என்கிறார் ஆசாரியர்.

சில வேத மந்திரங்களில் இந்த கருத்து அழுத்தமாக சொல்லப்பட்டிருக்கின்றன.’அனாதி அவித்யா வாஸனயா’ ஆரம்பம் எது என்று தெரியாத அவித்யை – அஞ்ஞானம் எனும் வாசனைகளின் காரணமாக ஜீவன்கள் அனேக கோடி பிறவிகள் எடுக்கின்றன.’ பஹுதா பசு  பக்‌ஷி மிருகாதி யோனிகளில் பிறக்க வேண்டி வருகிறது.இவைகளிலெல்லாம் மேலான மனித பிறவி ஏதோ புண்ணிய கர்ம பலனாகக் கிடைக்கிறது.அது மட்டுமல்ல, அவனுக்கு ஶ்ருதி பராதரிசனமும் கிடைக்கின்றது.ஶ்ருதி பரா என்றால் வேதாந்ததரிசனமும் கிடைக்கின்றது.வேத- வேதாந்தங்களின் மூலம் முக்தி பெறுவது குறித்துள்ள அறிவு அவனுக்கு கிடைக்கின்றது. அதுவும் பூர்வ ஜன்ம கர்ம பலன்தான். எல்லோருக்கும் வேத – வேதாந்தங்களை படிக்க வேண்டும் என்று எண்ணம் வராது. எண்ணம் வந்தாலும் அதற்கான சந்தர்ப்பம் கிடைக்காது. படித்தாலும் புரியும் என்று சொல்வதற்கில்லை.

ஶ்ருதி பரதரிசனம் என்றால் சத்திய தரிசனம் அல்ல; ஆத்ம தரிசனமும் அல்ல. ‘ஆத்ம தரிசனமம்  என்று ஒன்று உண்டு ‘ என்ற ஞானமே. அஹம் பிரம்மாஸ்மி என்ற வெளிபாடு வேத வேதாந்தங்களை படிப்பதால் மட்டுமே உண்டாகாது. அதற்கு ஆத்ம விசாரம் செய்ய வேண்டும்.ஶ்ருதி பராதரிசனம் என்பது பரோக்ஷஞானம். நான் அஞ்ஞானத்தால் தாக்கப்பட்டுள்ளேன்; அதை ஒழிக்க வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும் என்ற ஞானம்.இந்த ஞானமே பலருக்கும் கிடைப்பதில்லை்ஆகவே  அது கிடைத்த பிறகு அதை பிடித்துக்கொண்டு மேலே செல்ல வேண்டும்.

இப்படி எல்லா வசதிகளும் பெற்றிருந்தும் ஒருவன் முக்தியை நாடி ஆத்ம விசாரம் செய்யவில்லை என்றால் அவன் தற்கொலை செய்து கொண்டதற்கு ஒப்பாவான்.
ஆதி சங்கரர் சற்றே கடுமையான வார்த்தைகளைத்தான் பயன்படுத்தியுள்ளார். ஏனென்றால் நாம் விழித்து எழ வேண்டும் என்பதற்காக.

மனீஷ பஞ்சகம் 4

சண்டாளனின் கேள்வி

अन्नमयाद् अन्नमयम् अथवा चैतन्यमेव चैतन्यात्

यतिवर दूरीकर्तुम् वांछसि किम् ब्रूहि गच्छ गच्छेति?

அன்னமயாத்³ அன்னமயம் அத²வா சைதன்யமேவ சைதன்யாத்
யதிவர தூ³ரீகர்தும் வாஞ்ச²ஸி கிம் ப்³ரூஹி க³ச்ச² க³ச்சே²தி
Annamaayaad annamayam athavaa chaitanyam yaeva chaitanyaat
yativara dooree kartum vaanchasi kim broohi gachcha gachchaeti ?

சொற்களின் பொருள்

Yati vara யதிவரா = O! Best among the learned! கற்றறிந்தவரில சிறந்தவரே

Broohi ப்ரூஹி= You shout (scornfully) to ( யாரைப் பார்த்து)கூச்சலிடுகிறீர்கள்

Gachcha  கச்சா = Get away விலகிச்செல்

Gachchaeti = Get away etc….விலகிச்செல் என்றெல்லாம்

Kim  கிம்= Whom (out of hatred) யாரை ( அருவருப்படைந்து)

Vaanchasi வாஞ்சஸி = You strongly desire to திவீரமாக ( ஒதுங்கிப்போக)விரும்புகிறீர்கள்

Dooree kartum தூரீ கர்தும் = keep at a distance, keep aloof ? தூர விலகியிருக்க

Annamayaadஅன்னமயாத் = Is it my body made from food, it is உண்வினால் உருவான உடலையா

Annamayamஅன்னைமயம் = same as yours nourished by food தங்களுடையதைப்போல் உணவினால்

Atha vaa அத வா= if not, perhaps if it is இல்லை,

Chaitanyam சைதன்யம் = the inner sentient energy in me என்னுள் இருக்கும் ஆன்மாவையா

Yaeva யாவ= it is also the அதுவும்

Chaitanyaatசைதன்யாத் = same as your inner sentient energy ( அதுவும்)தங்கள் உள்ளிருக்கும் ஆத்மாவைக் போல் தான்

விளக்கவுரை
சண்டாளனை கேட்டான்: ” எல்லாம் கற்றறிந்த கல்விமானே! எனக்கு புரியவில்லை,’ யாரைப்  பார்த்து விலகிச் செல் ‘ என்று கூறுகிறீர்கள் என்று. நீங்கள் இத்தனை அருவருப்புடன் விலகிச் செல்ல யாரை சொல்கிறீர்கள்? என் உடலையா? பஞ்ச பூதங்களாலான இந்த சரீரம் தங்களுடைதைப் போல் உணவினால் உருவானது தானே? .இல்லை என்னுள் இருக்கும ஆத்மாவைக் கண்டு அருவருப்படைகிறீர்களா? அதே ஆத்மா தானே தங்கள் உள்ளிலும் இருக்கிறது.”

இந்த கேள்விகள் மிகவும் ஆழமான கருத்துடையது.பகவத் கீதையில் வரும் கீழ்க்கண்ட சுலோகத்தை கவனத்தில்க் கொள்வது மிகவும் பொருத்தமானதாக இருக்கும்….

अन्नाद्भवन्ति भूतानि पर्जन्यादन्नसम्भव:।

यझाद्भवति पर्जन्यादन्नसम्भव यझ:कर्मसमुद्भव:।

அன்னாத்³ப⁴வந்தி பூ⁴தானி பர்ஜன்யாத³ன்னஸம்ப⁴வ:|

யஜா²த்³ப⁴வதி பர்ஜன்யாத³ன்னஸம்ப⁴வ யஜ²:கர்மஸமுத்³ப⁴வ:

பகவத்கீதை அத்தியாயம் 3 சுலோகம் 14

அன்னத்தினால் – உணவிலிருந்து சர்வ சராசரங்களின் பூதவுடலும் உண்டாகின்றன.பஞ்சபூதங்களால் உருவான பூதவுடலிற்கு- அது எந்த உயிரினமாக இருந்தாலும் – மூலகாரணம் அது உண்ணும் உணவுதான்.அந்த உணவு மழையினால் உண்டாகிறது. அந்த மழை எவ்வாறு உளவாகிறது என்றால் இந்த பிரபஞ்சத்தில் உருவாகும் உஷ்ணத்தினால் நீர் ஆவியாகி மேகமாகிம ழையாகிறது. ஆக எல்லாமே ஒரே மூலப்பொருளிலிருந்து உண்டானவைதான். தோற்றத்தில் மாறு பட்டிருந்தாலும எல்லா உடலும் பஞ்ச பூதங்களினால்- காற்று, நீர், நெருப்பு, மண்,ஆகாயம் அல்லது வெற்றிடம் – அவைகளினால் உருவானது தான்.நம் உடலில் இருப்பதும் இவை தான்.

இதையே தான் சண்டாளன் ஆதி சங்கரரைப் பார்த்து கேட்கிறான். உடல்களின் தோற்றத்திலும் நிறத்திலும் மாறுபாடுகள் இருந்தாலும் அடிப்படையில் அவை எல்லாம் ஒன்று தானே? பிறகு ஏன் இந்த உடலை ‘ஒதுங்கிப் போ ‘ என்று சொல்ல வேண்டும்?

இல்லை ஆத்மாவை க் கூறுகிறாயா?

அப்படியென்றால் எல்லா உயிர்களிலும் இருக்கின்ற ஆத்மா ஒன்று தானே? அந்த பரமன் தானே எல்லார் உள்ளிலும் வசிக்கிறான்? அப்படியிருக்கையில் அந்த ஆத்மாவை எப்படி விலகிப் போகச்சொல்ல முடியும்?”

பகவத்கீதையில் பகவான் கிருஷ்ணனும் இதே கருத்தை கூறியுள்ளார்:

தே³ஹீ நித்யமவத்⁴யோஅயம தே³ஹேம்ʼ ஸர்வஸ்ய பா⁴ரத|

தஸ்மாத் ஸர்வபூ⁴தானி ந த்வம் ஸோ²சிதுமர்ஹஸி||

देही नित्यमवध्योअयम देहें सर्वस्य भारत।

तस्मात् सर्वभूतानि न त्वम् शोचितुमर्हसि।।

பகவத் கீதை அத்தியாயம் 2 சுலோகம் 30

சகல சராசரங்களிலும் ஆத்மா தான் நித்தியமான வஸ்து வாக குடியிருக்கின்றது. அதற்கு நாசம் கிடையாது. அப்புறம் நீ எப்படி அதை இல்லாமலாக்குவாய்?

நமக்கு வேண்டியது ‘சர்பூதானி’ சகல பௌதிக வஸ்துக்களிலும்  சகல தேகங்களிலும் தேகி’யாய் இருக்கப்பட்டவன் ஒருவன் என்ற கருத்து தான்.

சண்டாளனின் இந்த கேள்விகளுக்கு சங்கரர் அளித்த பதிலை  அடுத்த பதிவில் பார்க்கலாம்.

விவேக சூடாமணி 9

முக்திக்கு வேண்டிய முக்கனிகள்

து³ரலப்⁴யம் த்ரய மேவைத தை³வானு க்³ரஹஹேதுகம் |

மனு ஷ்யத்வம் முமுக்ஸ்தவம் மஹாபுருஷஸ் ஸம்ஸ்²ராய: || 3||
दुरलभ्यम् त्रय मेवैत दैवानु ग्रहहेतुकम् |

 मनु ष्यत्वम् मुमुक्स्तवम् महापुरुषस् सम्श्राय: ||३||

duralabhyam traya mēvaita daivānu grahahētukam |

manu ṣyatvam mumukstavam mahāpuruṣas samśrāya: ||3|| 
முதல் சுலோகத்தில், ‘மனிதப் பிறவி கிடைப்பது அரிது, அதிலும் ஆளுமையுடன் அரிது,அதுவும் பிரம்மத்தை உணர்ந்த தாய்தந்தையருக்கு மகனாக பிறப்பது அரிதிலும் அரிது.ஆகவே கிடைத்த வாய்ப்பை நழுவிய விடாமல் சாஸ்திரங்களை கற்று அஅன்படி நடந்து வாழ்ந்து ஆத்ம விசாரணை செய்து முக்திக்கு வழி தேடுங்கள்’. என்றார் ஆதி சங்கரர்.
அதே கருத்தை வலியுறுத்தும் முகத்தான் ஆச்சாரியார் இந்த சுலோகத்த்தில் மீண்டும் கூறுகிறார், :” மனிதராக பிறப்பது தெய்வானுக்கிரகத்தால் மட்டுமே சாத்தியம்; அதிலும் பிரம்மஞானம் பெற வேண்டும் என்ற வேட்கை உண்டாவது , அதாவது முமுக்ஸ்தவம் உண்டாவது துர்லபம்., மகான்களின் தொடர்பு ஏற்படுவது என்பதும் அவ்வளவு சுலபமில்லை. அவைகள் எல்லாமே மிகவும் அரிது. அதற்கு தெய்வானுக்கிரகம் கண்டிப்பாக வேண்டும்’ என்கிறார்.

தெய்வானுக்கிரகம் என்றால் என்ன? தெய்வம் என்பது நம்மிலிருந்து  வேறல்ல; ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்றே என்பதால் தெய்வானுக்கிரகம் நம்மிலிருந்து தான் உதயமாக வேண்டும்; வெளியிலிருந்து வருவதல்ல.அதன் பொருள் தெய்வானுக்கிரகம் நம் வினைப் பயனே! பூர்வ ஜன்ம பலன்களால்த்தான் அந்த அனுக்கிரகம் கிடைக்க இயலும்.

ஆக, நமக்கு கிடைக்கின்ற இந்த கிடைப்பதற்கரிய மனிதப்பிறவியும, ஆளுமையும், ஆத்ம தரிசனம் பெற்ற தாய் தந்தையரும் எல்லாமே நம் கர்மங்கள் பலன்கள்தான்.

முன் சுலோகத்தில் கடைசியில் கூறுகிறார்,” இந்த சௌபாக்கியங்களெல்லாம் பல கோடி ஜன்மங்களில் செய்த புண்ணியங்களின் பலன் தான்’ ( புண்யர்வினா லப்யதே’ ) என்று.

‘ பல கோடி ஜன்ம புண்ணியங்கள் ‘ என்பதை இந்த சுலோகத்தில் தெய்வானுக்கிரகம் என்று கூறுகிறார்.

இரண்டுமே ஒன்றே தான் என்றால்- கர்ம பலன்களும் தெயவானுக்கிரகமும்- ஏன் இரண்டு விதமாக சொல்ல வேண்டும்? 

மனிதப்பிறவியும் ஆளுமையும் வேத சாஸ்திர ஞானமும் எல்லாம் பூர்வ வினைப்பயன் தான் என்றால் எல்லாமே ‘ என்னால்’ தான் என்ற ஒரு தோற்றம் உருவாகிறது. அந்த தவறை நீக்குவதற்காக ஆதி சங்கரர் இவ்வாறு கூறுகிறார். 

 எதுவும் தனியொருவனின் முயற்சியினால் மட்டும் உண்டாகிவிடாது.. நல்ல காரியங்கள் நாம் செய்தாலும் அதன் பலன் பல விதமான நம்மை மீறிய சக்திகளால் உளவாகிறது. ஒருவன் மரம். நடலாம்; அதற்கு நீர் பாய்ச்சலாம்; உரமிடலாம்; ஆனால் சூரிய ஒளியை உண்டு பண்ண முடியாது; மழையை உண்டு பண்ண முடியாது; மண்ணின் தன்மையை மாற்ற முடியாது. எல்லாம் ஒத்துப் போனால்த்  தான் செடி மரமாகும்; பூ பூக்கும்; காய் காய்க்கும்; காய் கனியாகும். ஆகவே ஒருவனது புண்ணிய கர்மங்களின் பலன் என்கின்ற பொழுது அவனை மீறிய சக்திகளும் உதவ வேண்டும். அது தான் தெய்வானுக்கிரகம்.

‘ ‘ நான்’ தான் எல்லாவற்றிற்கும் காரணம் ‘ என்ற அகம்பாவம் உளவாகிவிடக்கூடாது  என்பதற்காக ஆச்சாரியார் தெய்வானுக்கிரகம் என்ற சொல்லை இந்த சுலோகத்தில் பயன் படுத்துகிறார்.இதை உணர்நதுவிட்டால் தானாகவே தன்னடக்கம் உண்டாகிவிடும்.

ஆச்சாரியர் சொல்கிறார் ‘ இந்த மூன்றும்'( த்ரயம்). தெய்வானுக்கிரகத்தால் உண்டாகிறது என்று. எந்த மூன்று?

மனுஷ்யத்துவம்- மனிதனாக பிறப்பது. மனிதப் பிறவி அரிதிலும் அரிது. முன் சுலோகத்தில் சொன்னதை மீண்டும் வலியுறுத்துகிறார்

முமுக்ஸ்த்துவம்- புருஷார்த்தங்களில் நான்காவது சொல்லப்படுகின்ற மோக்‌ஷத்தை அடைய வேண்டும் என்ற வேட்கை.இந்த வேட்கை சாதாரணமாக ஒருவனுக்கு உண்டாகிவிடாது. மற்ற மூன்று புருஷார்த்தங்களான அர்த்தம், (பொருள்), காமம்( ஆசை), தான தர்மம் எல்லோரும் தேடிப்போவது சகஜம். முக்தி வேண்டும், இந்த இகலோக வாழ்விலிருந்து, பிறப்பு- இறப்பு எனும் சக்கர சுழற்சியிலிருந்து விடுதலை வேண்டும் என்று முழு மனதுடன் விடா முயற்சி செய்பவர் அரிதிலும் அரிது. அம்மாதிரியான முக்தியை, விடுதலையை தனது தலையாய இலட்சியமாக கொள்பவர் மிகவும் சிலரே.அந்த வேட்கையே முமுக்ஸ்த்வம்.அப்படிப்பட்ட இலட்சிய வேட்கை தெய்வானுக்கிரகம் இருந்தால் மட்டுமே கிடைக்கும்.

மஹாபுருஷஸமாஶ்ரய-மானுடப்பிறவியும் முக்தி வேட்கையும் இருந்து விட்டால் போதாது. தனது இலட்சியத்தை அடைவதற்கு ஒரு வழிகாட்டி தேவை.குரு என்பவர் ஒருவரது அஞ்ஞான இருளை அழித்து ஞான ஒளியை கொடுப்பவர். எவ்வளவு தான் வேத வேதாந்தங்களை படித்து ஆத்ம விசாரம் செய்தாலும் வழி பிறழாமல் இருக்க வேண்டும். அந்த குரு எப்படிப்ப பட்டவராக இருக்க வேண்டும்? பாகவதத்தில் ஏகாதச ஸ்கந்தத்தில் இருபத்தி நாலு விதமான குருமார்களைப் பற்றி கூறியுள்ளார் வியாச முனிவர். ஆத்மதரிசனத்திற்கு வேண்டியது அப்படிப்பட்ட குரு அல்ல. அவர் மஹா புருஷராக இருக்க வேண்டும்.

குரு என்றாலே ஆளுமை.கர்மேந்திரியங்களையும், பாஹ்யேந்திஇயங்களையும் கட்டுக்குள் கொண்டு வந்து, பரமனோடு ஐக்கியம் அடைந்த மஹாபுருஷராயிருக்க வேண்டும்.எல்லோருக்கும் குரு அவசியமானதா? ஒரு சிலர் அவர்களே மஹாபுருஷர்களாயிருப்பார்கள். அவர்களுக்கு தனியாக குரு தேவைப்படாது. பகவான் ரமணர் அப்படிப்பட்டவ்களில்  ஒருவர்.சிறுவயதிலையே ஆத்மசாக்‌ஷாத்காரம் அனுபவித்தவர் அவர் கூட அக்ஷரமணமாலையில் கூறுவார்:

            குற்றமற்றறுத்தெனை குணமாய் பணித்தாள்

           குருவுருவாய் ஒளிரருணாசலா!

அவர் அருணாசலனையே குருவாக வரித்துக்கொள்கிறார்.ஆகவே மஹாபுருஷ் ஸம்ஶ்ராயம் எல்லோருக்கும் அவசியம்.

மனிதப்பிறவியும் கிடைத்து ஞான வேட்கையும் இருந்து முக்தி கைவரவில்லை என்றால் சரியான மஹாபுருஷனை நீ இன்னும் சந்திக்கச் வில்லை என்று அர்த்தம்.மஹாபுருஷனான ஒரு குருவும் ஒரு உத்தமம் சிஷ்யனும் ஒன்று சேர்ந்து விட்டால் முக்தி கிடைக்காமல் போகாது. கடோபநிஷத் கூறுகிறது:

    ‘ அனன்ய ப்ரோக்தே  கதிர்ரத்ர நாஸ்தி’

 உத்தம சிஷ்யனும் மஹாபுருஷனான குருவும் ஒன்று சேர்ந்து விட்டால் முக்தி கிடைக்காமல் போக வழியேயில்லை.

..

விவேக சூடாமணி 8

ஆத்ம விசாரம் செய்ய கிடைத்த வாய்ப்பை நழுவிய விடாதே!

ज तूना नरज म य्मतः प ु ्व ततो वव ता
त मा ैददकधमयमागयपरता वव वम मा्परम् |
आ्माना्मवववचे न वनु्वो ा्मनास िवतः मुशिनोितज मकोदिसकु ृतैःपु ै व ना ते||२||
jantūnāṁ narāja nma durlabhyamataḥ puṁstvaṁ tatō vipratā tasmādvaidikadharmaṁārgaparatā vidvattvamasmātparam | ātmānātmavivēcanaṁ svanubhavō brahmātmanā saṁsthitiḥ

மனிதனாலும்,ஆளுமையுடன் பிறப்பது கிடைக்கதற்கரிய பாக்கியம்.

அதிலும் பிராமண குலத்தில் பிறப்பது அரிதிலும் அரிது.

ஆதி சங்கரர் இப்படி சொன்னார். எல்லோர் உள்ளேயும் இருப்பது ஒரே பரமாத்மா தான் என்று வாதிட்டார் ஆதி சங்கரர் இப்படி சொல்லியிருக்கிறது முடியாது.

அதென்ன பிராம்மணராக பிறப்பது அரிது?யாரும் பிராம்மணராக பிறப்பதில்லை. பிராம்மண தாய்-தந்தையருக்கு பிறக்கிறார்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம்.. பிரம்மத்தை அறிந்த தாய்-தந்தையருக்கு பிறக்கிறார்கள். பிரம்மமே எங்கும் நிறைந்திருக்கின்றது.யானே அந்த பிரம்மம் என்றறிந்தவர்களுக்கு பிறக்கிறார்கள்.எல்லா ஜீவராசியினுள்ளும் அந்த பிரம்மமே நிறைந்து நிற்கின்றது என்ற ஞானம் உதித்தவர்களுக்கு பிறக்கிறார்கள்.மற்றவையெல்லாம் கற்பிதம்- வெறும் மாயை என்றறிந்தவர்களுக்கு பிறக்கிறார்கள்.ஆத்ம விசாரணையின் வாயிலாக ஆத்ம சாக்‌ஷாத்காரம் அடைந்தவர்களுக்கு பிறக்கிறார்கள்.அப்படி பிறப்பது அரிதிலும் அரிது என்னு கூறுகிறார் ஆதி சங்கரர்.

அப்படியொரு தாய்தந்தையருக்கு புத்திரனாக பிற ந்தால் மட்டும் போதுமா?எல்லோரும் பிறப்பில் மனிதனாகத்தான் பிறக்கிறார்கள்.சிலருக்கு ஆளுமையிருக்கிறது. சிலருக்கு இருப்பதில்லை. பிறப்பால் கிடைத்த ஆளுமையை வளர்த்தி யெடுப்பது நம் கையில் தான் இருக்கிறது.

ஆகவே தான் கூறுகிறார்கள்:

ஜன்மனா ஜாயதே ஶுத்த:!

கர்மணா த்விஜுச்யதே!

ஒருவன் பிராமணன் ஆவதும் ஆகாமலிருப்பதும் அவன் செய்கின்றது கர்மங்களால்த் தான்.அவனுக்கு தர்மாதர்ம விவேகம் ஏற்பட வேண்டும். அந்த ஞானம் ஏற்படவில்லையென்றால் அவன் பிராமணனாக முடியாது.தர்மாதர்ம விவேகம் என்றால் நாம் பிற ஜீவாத்மாக்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், எவ்வாறு நடந்து கொள்ளக்கூடாது; குடும்பத்திலுள்ளவரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்; அயல்வீட்டுக்காரர்களிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும் போன்ற அறிவு பெற வேணஃடும் அவை வேத சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது.

வேத சாஸ்திரங்களை படித்தவனாக இருக்க வேண்டும். படித்திருந்தால் மட்டும் போதாது அதன்படி வாழ வேண்டும் .இவ்வளவு இருந்தாலும் ஆத்மா அனாத்மாவிவேசனம்- பகுத்தறியும் திறன் இருக்கவேண்டும்.ஆத்ம விசாரணை மூலம் ஆத்மசாக்‌ஷாத்கார அனுபவம் பெற வேண்டும்.இந்த வாய்ப்பு கோடானுகோடி ஜன்மங்களுக்கு பிறகு கிடைத்துள்ளது. அதை வீண்டிக்காமல் பிரம்மத்தை கண்டறியவில்லை என்றால் இனி ஒரு முறை இந்த வாய்ப்பு கிடைக்காது என்கிறார்.ஆதி சங்கரர்.
இந்த சுலோகத்தில் சாரம் ஆத்ம விசாரணைத் தவிர வேறு எதுவும் முக்கியமில்லை. ஆத்ம விசாரணை மூலம் ‘ அஹம் பிரம்மாஸ்மி’ என்பதை உணருங்கள்;’ தத்வமஸி’ அனுபவித்தறியுங்கள். அதன் மூலம் பிரபஞ்சத்தில் சாந்தியும் சமாதானமும் நிலவட்டும் என்கிறார்் சங்கரர்.

விவேகசூடாமணி 1

முன்னுரை

ஆதிசங்கரர் இயற்றிய விவேக சூடாமணி ஒரு பிரகரண கிரந்தம்.வேத-வேதாந்தங்களின் சாரமான அத்வைத சித்தாந்தத்தை சார்ந்துள்ள நூல் இது.

பிரகரண கிரந்தம் என்றாலே சார்பு நூல் என்று பொருள்.

இந்த நூல் புருஷார்த்தங்களில் கடைசியாக சொல்லப்பட்டுள்ள, ஆனால் முதன்மையானதான, மோக்‌ஷ த்தை அடைய வழி காட்டுகின்ற நூல்.ஆகவே இது ஒரு ‘ மோக்ஷசாஸ்திரம்’.

மோக்ஷம் என்றால் ‘ இடையிலா நிறையுணர்வு’ என்று  பொருள்.குறைவேயில்லாத ஆனந்தம். மற்ற புருஷார்த்தங்களில் அர்த்தம்( பொருள்), காமம் , தர்மம் எதுவுமே குறையில்லா ஆனந்தத்தை தர மாட்டா.

அவை தரும் ஆனந்தம் தாற்காலிகமானவை. தோன்றி மறையக்கூடியவை.

ஆத்மஞானத்தால் விளையும் முக்தி ஒன்று மட்டும் தான் நிரந்தரமானது. அழிவில்லாதது.பரமானந்தத்தைத் தரக்கூடியது.

முக்தியென்றால் காமார்த்த தர்மங்களின்  மீதுள்ள பிடிப்பு விட்டுப் போய், சுதந்திரமாவது.அப்படிப்பட்ட விடுதலையை தரக்கூடிய நூல் என்பதால் இதை மோக்ஷசாஸ்திரம் என்றும் சொல்வார்கள்.

இது சார்பு நூல், பிரகரண கிரந்தம் என்று சொன்னோமல்லவா. எதையோ சார்ந்திருப்பதால் இது மூல நூல் அல்ல.இது ஏதோ ஒரு மூல நூலின் விளக்கவுரை. முழு மூலத்தின் விளக்கம் என்று இருக்க வேண்டியதில்லை.

விவேக சூடாமணி அத்வைதத்தை எடுத்துக்கொண்டுள்ளது  போல் ஒரு கருத்தை எடுத்துக் கொண்டு கூட துணை நூல் இருக்கலாம். து சார்பு நூல் என்றால் மூல நூல்கள் எவை?

வேதங்களும் உபநிஷத்துக்களும் ரிஷிகளால் அவர்களது அனுபவங்களிலிருந்து சொல்லப்பட்டவை. இவை ஶ்ருஅதி எனப்படும்.இவை அபௌருஷேயம் எனவும் சொல்லப்படுகிறது.தனி ஒரு மனிதனாலும் இயம்

ப்ப் பெற்றதல்ல.

பகவத்கீதை, பாகவதம் போன்றவை ஶ்ருதியில் கூறப்பட்டவையை  இன்னும் தெளிவாக கூறுபவர். இவை ஸ்ம்ரிதி எனப்படும்.இவை பௌருஷேயம் எனப்படுகிறது. வேத வியாசர் போன்ற ரிஷிகளால் இயற்றப்பட்டவை

இவை.

பிரம்ம சூத்திரம் போன்ற தர்க்க சாஸ்திர ங்கள் ஶ்ருதியில் மற்றும் ஸ்ம்ரிதிகளின் அடிப்படை நியாயங்களை விளக்கிக்கூறும் நூல்கள் என்பதால்  அவை தர்க்க சாஸ்திரங்கள், நியாய சாஸ்திரங்கள் என்று

கூறப்படுகின்றன.

இந்த மூன்று வகையான மூலக் கிரந்தங்கள் ப்ரஸ்தானத் த்ரயம் என்றறியப்படுகிறது.

ப்ரஸ்தானத் என்றால் ‘புறப்பாடு’ ‘ பயணம்’.எங்கு ஜீவராசிகளெல்லாம செல்கின்றன? எல்லா பிரபஞ்ச சிருஷ்டிகளின் இலட்சியங்களும் வீடு போய்சேருவது தான் ‘ வீடு’ என்றால் நமது மூலஸ்தானம்.

எல்லாவற்றின் மூலஸ்தானமும் பரமன் தான்.அவனை என்ன பெயரிட்டு வேண்டுமென்றாலும்அழையுங்கள்;

அவன் அல்லது அது தான் மூலம்.

இந்த மூன்றில் எதையாவது ஒன்றை சார்ந்திருக்கும் நூல்களை பிரகரண கிரந்தங்கள் அல்லது சார்பு நூல்கள் அல்லது துணை நூல்கள் என்று கூறுகிறோம்.

விவேக சூடாமணி இப்படிப்பட்ட ஒரு பிரகரண கிரந்தம் .

அதற்கு ஏன் அந்த பெயர்?

சூடாமணி என்பது பெண்கள் தலையில் அணியும் ஒரு ஆபரணம். அது ஆபரணங்களில்

தலையானது;முதன்மையானது.பெண்கள் கால்கள்,கைகள், இடுப்பு, கழுத்து என்று உடலின் பல பாகங்களிலும் ஆபரணங்களை அணிகிறார்கள். ஆனால் சிரஸில் அணிகின்ற அணிகலன் சூடாமணி. அது சிரம் போல் முதன்மையானது விவேகங்களில் முதன்மையானது இந்த நூல்.

அது என்ன ‘ விவேகங்கள’?  விவேகம் என்றால் பகுத்தறிவு. எதை பகுத்து அறிவது? எது சரி, எது தவறு என்று பகுத்தறிவது. சிறு சிறு விஷயங்களிலும் சரி தவறை ஆராய வேண்டியுள்ளது.இந்த உடை உடுக்கலாமா, இந்த வேலையில் சேரலாமா, அவருக்கு உதவலாமா உதவக்கூடாதா,இப்படி தினப்படி சரியையும் தவறையும் பகுத்தறிவது லௌகீக பகுத்தறிவு அல்லது வியாவஹாரிக பகுத்தறிவு.

எது சத்தியம்? எது மித்யை? எது அழிவிற்கு ஆட்பட்டது? எது அழிவில்லாதது? எது பிறப்பு-இறப்புஇல்லாதது?

இந்த பாரமார்த்திக விவேகம்.

ஆத்மா யாது? அதன் குணங்கள் நாவை? ஆத்மாவைத்தவிர வேறு ஏதாவது உளதா? அனாத்மா என்றால் என்ன ?

இது ஆத்ம- அனாத்ம விவேகம்.

விவேக சூடாமணியெனும் இந்த நூல் ஆத்ம- அனாத்ம விவேகத்தை விளக்குகின்னற நூல். இந்த விவேகம் தான் எல்லா விவேகங்களையும் விட மேலானது; சிறந்தது. ஆபரணங்களில் சூடாமணி எப்படி தலை

சிறந்ததோ, அது போல் ஆத்ம-அனாத்மா விவேகம் விவேகங்களில் தலை சிறந்தது.

சூடாமணியைப்போன்ற  விவேகத்தை விளக்குகின்ற இந்த நூல் விவேக சூடாமணி.

( வளரும்)