Yogavasishtam @Maharamayanam 630
தினமொரு சுலோகம்
நாள்630
உலகத்தின் தோற்றம்
யதா³ தாதா³த்மகாத்மைகபரோ ஹ்ருʼதி³ ஸஹஸ்தி²தம்ʼ
அப்ரதா⁴னீகரோத்யேதச்சித்தம்ʼ ஸ்வார்த்த²ஸ்வபா⁴வத: (6.2/138/21)
यदा तादात्मकात्मैकपरो हृदि सहस्थितं
अप्रधानीकरोत्येतच्चित्तं स्वार्त्थस्वभावत: (6.2/138/21)
yadaa taadaatmakaatmaikaparo hri’di sahasthitam
apradhaaneekarotyetachchittam svaartthasvabhaavata: (6.2/138/21)
.
முனிவர் தொடர்ந்து சொன்னார்:” அதற்கு பின் எனக்கு அனந்தாவபோதத்தில் லயித்து ஒன்றாகி விட வேண்டும் என்று தோன்றியது.அந்த பிராணியின் உயிர்த்துடிப்பிலிருந்து விடுபட்டு, போதவடிவத்தில் மூழ்க ஆரம்பித்த பொழுது மீண்டும் எனது புலன்கள் செயல்பட ஆரம்பித்தன.ஆனால் நான் அவைகளை கட்டுப்படுத்தி, போதத்தில் நுழைந்தேன்.போதத்தில் நுழைந்த உடனேயே நான் இரு உலகங்களையும் ஒரே நேரத்தில்அனுபவிக்க ஆரம்பித்தேன். எல்லாமே இரண்டு இரண்டாக தென்பட்டது.ஆனால் நான் காண்பதற்காக பயன்படுத்தின மேதா சக்தி ஒன்றாக இருந்ததால் நான் கண்ட இரண்டு காட்சிகளும் ஒரே போல் தோன்றின.பாலும் நீரும் ஒன்றாக இரண்டறக் கலப்பது போல் அவையும் ஒன்றாகவே தோன்றின.
கண நேரத்தில் இன்னொரு பிராணியின் போதத்தில் என்போதத்தை ஐக்கியப்படுத்தினேன்.இரண்டு உலகமும் ஒன்றாகிவிட்டன.எல்லாவற்றையும் இரண்டாக காணும் வியாதியால் பாதிக்கப்பட்டவன் நிலவையும் இரண்டாக காண்கிறான்.ஆனால் அந்த வியாதி குணமானவுடன் அவன் ஒரு நிலவை மட்டுமே காண்பான். நான் ஞானத்தை கைவிடவில்லை.இருந்தாலும் என் மனோ விருத்திகள் பலவீனமாகிவிடஃடதால், இன்னொரு பிராணியின் எண்ணங்களை தனதாக்கிக் கொண்டேன் .அத்துடன் அந்த பிராணியின் உலகம் எனக்கு அனுபவப்பட ஆரம்பித்தது.சிறிது நேரத்திற்குப் பிறகு அந்த இன்னொரு பிராணி உறக்கத்திலாழ்ந்து விட்டது.ஆமை எப்படி தன் உறுப்புக்களை உள்ளே இழுத்துக் கொள்கிறதோ, அது போல் அந்த பிராணியும் தனது மனோ விருத்திகளை உள்ளே இழுத்துக் கொண்டது.
அந்த பிராணியின் புலன்கள் இறந்ததற்கு சமானயிற்று.அவை ஒரு ஓவியன் திறமையாக வரைந்துள்ள சித்திரம் போல் காணப்பட்டது.ஒரு கண நேரம் நான் வெளியுலக விவகாரங்களையெல்லாம் தவிர்த்து விட்டு அந்த பிராணியின் உறக்கத்தையும் அனுபவித்தேன்.
அயர்வின் காரணமாக அவனது நாடி நரம்புகள் நெருக்கமானதாக இறுகிவிட்டிருந்தன.உள்கொண்ட உணவின் காரணமாக அவனது மூச்சு மெல்ல உள் வந்து வெளி போய்க்கொண்டிருந்தது.
” உயிர் சக்தி இதயத்தில் தானாகவே விழித்தெழும்பொழுது, மனமெனும் பொருள் முக்கியமல்லாததாக்கிவிடுகிறது.அதாவது மனத்திற்கு எந்த ஒரு முக்கியத்துவுமும் இல்லாமலாகி விட்டிருந்தது.ஏனென்றால் பிராணன் தானாகவே உணரப்படுகின்ற ஒன்றாயிற்றே! அதற்கு மனதின் உந்துதல் தேவையில்லை”
இந்த நிலையில் ஆத்மாவின் விஷயம் ஆத்மாவே தான்.விஷயமும் விஷயியும் ஒன்றாகிவிட்டிருந்தது.வெளி விவகாரங்களோ எதுவும் இல்லாமலாகிவிட்டது.அது தானே ஆத்மாவாக ஒளிர்கிறது.”
இராமன் வினவினான்:” மனதிற்கு சிந்திப்பதற்கான திறமை உயிர் சக்தி உள்ள பொழுது தான் கிடைக்கிறது.அதற்கென்று தனியான இருப்பு கிடையாது. அப்படியென்றால், அதில் என்ன தான் உள்ளது?”
வஸிஷ்டர் சொன்னார்:” உடல் அனுபவிக்கிறதென்றாலும் அது உண்மையில் இருக்கின்ற ஒன்றல்ல! மனம் என்ற பொருளுக்கு , கனவில் காணுகின்ற ஒரு மலையின் உண்மைத்தன்மை தான் உள்ளது.ஆக எந்த ஒரு பொருளும் ஒரு காலத்திலும் சிருஷ்டிக்கபட்டவையில்லை.ஏனென்றால் அப்படிப்பட்ட சிருஷ்டிகளுக்கு அடிப்படை எதுவும் கிடையாது.ஆகவே மனம் ‘ உள்ளது’ இல்லை,
எல்லாமெல்லாம் பிரம்மமே! ஆகவே உலகம் அப்படியே இருக்கின்றது.தேகமும் மனதும் பிரம்மமே! ஆனால் சத்தியத்தை உணர்ந்தவர்கள் இதை எப்படி காண்கிறார்கள் என்று விவரிக்க இயலாது.
பிரித்து பார்க்க முடியாத அனந்தாவபோதம் தானாகவே காணும் பொருளாகிறது.அதுவே மனதுமாகிறது.அசைவு என்றொரு கற்பனை அதில் தோன்றிய பொழுது,பிராணன் உயிர்சக்தியாகிற்று; அது ஒரு விஷயமாயிற்று.பிராணன் புலன்களின் வழியாக அனுபவங்களை உளவாக்குகின்றது.அவ்வாறு உலகம் தோன்றுகிறது..
.