லலிதா ஸஹஸ்ரநாமம் 39-47

திரு நாமம் 39

காமேஶ ஞாதா ஸௌபாக்ய மார்த்வோரு த்வயான்விதா

Kāmeśa-jñāta-saubhāgya-mārdavoru-dvayānvitā 

कामेश-ज्ञात-सौभाग्य-मार्दवोरु- द्वयान्विता (39)

தேவி லலிதாம்பிகையின் துடைகளின் அழகு அந்த காமேசுவரனுக்கு மட்டும் தான் வெளிச்சம். அது பரம 

ரகசியம்.அவ்வாறு காமேசுவரனுக்கு மட்டும் அறிவான அமைந்த துடைகளுள்ள தேவீ, உன்னை 

வணங்குகிறோம்.

தேவியின் துடைகளின் அழகைக்குறித்து ஆதி சங்கரர் கூறியுள்ளதை பார்ப்போம்.

கரீந்த்ராணாம் ஶுண்டான் கனககதலீகாண்டபடலீம்

உபாப்யாமேதாப்யமுதயமபி ந்ர்ஜித்தி பவதி

ஸுவ்ருத்த்தாயாபயாம் பத்யு:: ப்ரமது கடினப்யாம் கிரிஸுதே 

விதிஞ்ஞே ஜானுப்யாம் விபுதகரிகும்பத்வயமஸி

( ஸௌந்தர்ய லஹரி 82)  

அன்னையே, , கடைமையை எப்பொழுதும் மறக்காததேவீ, தங்கள் துடைகள் , யானைகளின் 

தும்பிக்கைகளையும்,தங்கத்தாலான வாழத்தண்டுகளையும் தோற்கடித்து விட்டு, என்றும் தங்கள் பதியின் முன் 

நமஸ்கரித்ததால் உறுதிப்பட்டுவிட்ட உருண்டு திரண்டு,  தேவேந்திரனின் ஐராவதத்தின் மஸ்தகத்தையும் 

தோற்கடிக்க வல்லவையாக இருக்கின்றன.

இது ‘சக்தி கூட’ திருநாமங்களில் முதலாவது திருநாமம். தேவீ, ஜகன்மாதாவின் சிருஷ்டி சக்தி பரம 

ரகசியமானது; யாரும் அறிந்துகொள்ள முடியாதது என்பதை குறிக்கிறது.அதற்கு ஈடு இணை வேறு கிடையாது.

திரு நாமம் 40

மாணிக்ய முகுடாகார ஜானுத்வய விராஜிதா

Māṇikya-mukuṭākāra-jānudvaya-virājitā

माणिक्य-मुकुटाकार-जानुद्वय-विराजिता 

 அன்னை லலிதாம்பிகையின் இரு முழங்கால்கள் இரண்டு பெரிய இரத்தின கற்கள் பதித்த கிரீடங்கள் போல் 

காட்சியளிக்கின்றன. மீண்டும் சிவப்புக் கல் நினைவூட்டுப் படுவதன் மூலம் தேவியின் கருணையையும் நமக்கு 

உணர்த்தப்படும் படுகிறது.

திரு மந்திரம் 41    

இந்த்ரகோப பரிக்‌ஷிப்த ஸ்மாரதூணாபா ஜங்கிகா

Indragopa-parikṣipta-smaratūṇābha-jaṅghikā

 इन्द्रगोप-परिक्षिप्त-स्मरतूणाभ-जङ्घिका 

அன்னையின் கால்கள் மன்மதனின் அம்பறாத் துணி போல் அவனது அம்புகளை தாங்கி நிற்கின்றது.அவ்வளவு 

அழகு வாய்ந்ததாகவும் இருக்கிறது .அப்படி கவர்சசியான கால்களையுடைய தேவியை வணங்குவோம்.

திருநாமம் 42

கூட குல்பா

Gūḍha-gulphā

 गूढ-गुल्फा

அன்னையின் குதியங்கால்கள் உருண்டு திரண்டு ஆனால் அவள் பட்டாடையில் மறைந்திருக்கிறது.

திருநாமம் 43.

கூர்ம ப்ருஷ்ட ஜயிஷ்ணு ப்ரபதான்விதா

Kūrma-pṛṣṭha-jayiṣṇu-prapadānvitā 

कूर्म-पृष्ठ-जयिष्णु-प्रपदान्विता

அன்னையின் பாதங்களின் மேல்பாகம் ஆமையின் புறந்தோடு போல் வளைந்து பளபளப்புடன் அழகாக 

இருக்கிறது.ஆனால் ஆமையின் கடினமான புறந்தோடோடு அன்னையின் பாதங்களை உவமித்ததில் ஆதி 

சங்கரர் கோபம் கொண்டு சொல்கிறார்:

(ஸௌந்தர்யலஹரியில் 83 ஆம் சுலோகத்தில் ஆதி சங்கரன் சொல்வார்):

பராஜேதும் ருத்ரம் த்விகுணஶரகர்பௌ கிரிஸுதே

நிஷஅங்கௌ ஜங்கே தே விஷமவிஶிகே பாடமக்ருதே

யதக்ரே த்ருஶ்யன்தே தஶஶரபலா: பாதயுகலீ-

நகாக்ரசெத்தான: ஸுரமகுடஶாகணைகநிஶிதா: 

” உலக நாயகனான பரமேசுவரனின் இதயத்தை வெல்வதற்காக, அவனை தோற்கடிப்பதற்காக, , பஞ்ச 

பாணங்களையுடைய மன்மதன் ,அவைகளை இரட்டிப்பாக்கி அன்னையே தங்கள் கால்களின் நுனியில் உள்ள 

நகங்கள் என பொய்மைத்தோற்றத்துடன், தேவேந்திரனின் கிரீடத்திலுள்ள வைரங்களை பதித்து, பத்து 

அம்புகளுள்ள அம்பறாத்துணியாக அழகு படுத்தியுள்ளான்”. பத்து அம்புகள் பத்து கால் விரல்களைக் 

குறிக்கிறது.அன்னையின் கால் விரல்களுக்கு கூட பக்தர்களை வசீகரிக்கும் சக்தியுள்ளதாக குறிப்பிடுகிறார் 

ஆதி சங்கரர்

இந் வருணனைகள் சாமுத்ரிகா லக்ஷணத்தையும் ஒத்து போகிறது.

திரு நாமம் 44

நகத்திதி ஸஞ்சன்ன நமஜ்ஐன  தமோ குணா

Nakhadīdhiti-saṃchanna-namajjana-tamoguṇā

 नखदीधिति-संछन्न-नमज्जन-तमोगुणा

‘அன்னையே, உன்னை வணங்குபவர்களின் அவித்யை போக்கி அவர்களுக்கு சத்தியசாக்‌ஷாத்காரம் 

உண்டாவதற்கு அருளுகிறாய்

தேவர்களாயிருந்தாலும் அசுரர்களாயிருந்தாலும் உன் முன்னால் தலை வணங்கும்பொழுது அவர்கள் 

கிரீடங்களிலிருந்து ஒளிரும் பிரகாசமானது ,உன் நகங்களிலிருந்து வீசும் ஒளியின் முன் நிஷ்பிரபமாகிறது..

( ஒளியிழக்கிறது.) அது மட்டுமல்ல, உன் நகங்களிலிருந்து வீசும் ஒளி ஜீவாத்மாக்களிலுள்ள தமோ குணத்தை 

அழிகின்றது.’

தேவி லலிதாம்பிகை தன் கைகளால் ஆசீர்வதிப்பதில்லை. அவள் பாதஸ்பரிசம் ஜீவாத்மாக்களோ 

ஆசீர்வதிக்கிறது.

மற்ற கடவுள்களுக்குள்ளது போல் தேவி பய ஹஸ்தமோ, வரதஹஸ்தமோ காண்பிப்பதில்லை.அன்னை 

லலிதாம்பிகைக்கும் நான்கு கைகளுள்ளன. ஆனால் ஒவ்வொரு கைகளிலும் ஒவ்வொரு  தேவி 

அமர்ந்திருக்கிறார்கள்என்று ஏற்கனவே கூறப்பட்டுள்ளதை ஞாபகப்படுத்திப் கொள்வது நல்லது.

ராகஸ்வரூபா பஶாத்யா- அசுவாரூடா தேவி ( திருநாமம் 8)

க்ரோதாகாரங்குசோஜ்வலா-சம்பத்கரீ தேவி(திருநாமம் 9)

மனோருபேக்‌ஷு- கோதண்டா- ரூப மந்திரிணி அல்லது சியாமளா தேவி(திருநாமம் 10)

பஞ்சதன்மாத்ர ஸாயளகா-வராஹி தேவி( திரு நாமம் 11)

தேவி ஆசீர்வதிப்பதில்லை அருளுவதும் பாதஸ்பஇசத்தினால் தான்.

திரு நாமம் 45

பத த்வய ப்ரபா ஜால பராக்ருத ஸரோருஹா

Pada-dvaya-prabhā-jāla-parākṛta-saroruhā

 पद-द्वय-प्रभा-जाल-पराकृत-सरोरुहा 

அன்னை லலிதாம்பிகைக்கு நான்கு பாதங்கள் உள்ளதாக சொல்லப்படுகிறது. அவைகள் முறையே ஶுக்ளா, 

ரக்தா,மிஶ்ரா, மற்றும் நிர்வாணா ஆகும். முதல் இரண்டு பாதங்கள் ஆக்ஞா சக்க்ரத்திலும்,மூன்றாவது இதய 

சக்கரத்திலும், நான்காவது ஸஹஸ்ரார சக்கரத்திலும் நிலை கொள்கின்றன.இந்த நான்கு பாதங்களும் 

முறையே பிரம்மா, விஷ்ணு, ருத்ரன்,மற்றும் சதாசிவன் என்ற நான்கு தேவர்களையும் ஆளுகிறாள்.இந்த நான்கு 

பாதங்கள் முதல் மூன்று  முறையே படைத்தல், காத்தல், அழித்தல் என்ற முப்பெரும் கர்மங்களையும் 

நான்காவது முக்தி தாயகத்தையும் குறிக்கிறது.

ஸௌந்தரிய லஹரி  இரண்டாம் சுலோகம் கூறுகிறது:

தனியாம்ஸம் பாஸுரன் தவ சரண பங்கேரூஹபவம்

விரிஞசி: ஸஞ்சின்வன் விரசயதி  லோகானுவிகலம்

வஹத்யேனம் ஶௌரி: கதம்பமாக ஸஹஸ்ரேண ஶிரஸாம்

ஹராதி: ஸம்ஷுகதைனம் பஜிதி பஸித்தேதுலன விதிம்

அன்னையே, தங்களின் பாத தூளிகளில் ஒரு சிறு துளியும் கொண்டு பிரம்மா இந்த பிரபஞ்சங்களை எந்த 

குறையுமில்லாமல் சிருஷ்டிக்கிறார்.விஷ்ணுவோ அந்த பாத தூளியின் பலத்தாலும் இந்த பிரபஞ்சங்களை 

தனது ஆயிரம் மலைகளிலும் தாங்கி நடத்துகிறார்.ஹரனாகட்டும் அந்த தூசு இன்னும் பொடியாக்கி பஸ்மமாக 

தன் உடல் முழுவதும் பூசிக்கொண்டு மகிழ்கிறான்.

மூன்றாம் சுலோகத்தில் ஆதி சங்கரர் கூறுகிறார்:

அவித்யாநாமந்திமிர மிஹிர த்வீபநகரீ

ஜடானாம் சைதன்ய ஸ்தபக மகரந்த ஸ்ருதீத்தரீ

தரித்ராணாம் சிந்தாமணி குணனிகா ஜன்மஜலதௌ

நிமக்னானாம் தம்ஷ்ட்ரா முரரிபு வராஹஸ்ய பவதி

தாயே, உனது பாததூளிகள் அஞ்ஞானிகளின் அவித்யை அழித்து, அவர்களது உள்ளங்களிலுள்ள இருளை 

போக்கி, ஞான சூரியன் பிரகாசிக்கும் ஒளி மிகு நகரமாக மாற்றி விடும். அஞ்ஞானம் விலகி முக்தி பெறுவர்கள் 

உன்னை வணங்குபவர்கள்.மூடர்களுக்கு, தூய புத்தியுடைய, பூங்கொத்திலிருந்து அருவி போல் கொட்டுகிற 

தேனருவி போலவும், ஏழைகளுக்கு தேவையான எல்லாவற்றையும் வழங்குகின்ற சிந்தாமணி போலவும்,சம்சார 

சாகரத்த் கிடந்து உழலுபவர்களை  தன் தமஷ்டரங்களால் தாங்கி நிற்கின்ற  விஷ்ணுவின் வராஹ அவதாரம் 

போலவும் உன் பாத தூளிகள் சக்தி வாய்ந்ததாக இருக்கிறது.

 த்வதினய: பாணீப்யாவரதோ தைவதகணம:

த்வமேகா நைவாஸி ப் ரகடித வராப்யதபினயா,

பயாத்த்ராதும் தாதும்  பலமபி ச  வாஞ்சாஸமதிகம

ஶரணேய லோகானாம் தவ ஹி  சரணேவவ நிபுணௌ

எல்லா தேவதைகளும் அபய – வரத ஹஸ்தங்களை காண்பித்து அனுக்ரகிக்கிறார்கள். பிரபஞ்சத்திலுள்ள 

எல்லா ஜீவராசிகளுக்கும் அபயம் நல்குகின்ற தேவீ, தாங்கள் மட்டும் தான அம்மாதிரி சேஷ்டைகள் எதுவும் 

காண்பிக்காமல் தங்கள் சரணங்களை அபயம் அடைகிறவர்களுக்கு,கேட்பதிலும் அதிகம் 

வரங்களைஅளிக்கிறீர்கள். அவ்வளவு கருணை உள்ளம் கொண்டவள அன்னை என்கிறார் ஆதி சங்கரர்..

திரு நாமம் 46

ஸிஞ்ஞன மணி மஞ்சிர மண்டித ஶ்ரீபதாம்புஜா

Siñjāna-maṇi-mañjīra-maṇḍita-srīpadāmbujā

 सिञ्जान-मणि-मञ्जीर-मण्डित-स्रीपदाम्बुजा (46)

பல தப்பட்டு உயர்த்த ரக் இரத்தினங்களால் அழகுப்படுத்தப்பட்டுள்ள கொலுசுகளை அணிந்திருக்கிறார், 

அன்னை லலிதாம்பிகை.

திரு நாமங்கள் 43 லிரிந்து 46 வரை தாயின் கால்களையுடைய விவரிக்கின்றன. பாதங்களை இவ்வளவு 

வருணனைகளுக்கெல்லாம்்அப்பாற்பட்டவளான பாய்க்கனூர் இருக்கும்பொழுது , அன்னையின் முழு 

உருவத்தையும் வருணிப்பதற்கு மனிதர்களுக்கு வார்த்தைகளும் கிடைக்குமோ! இவ்வாறு அன்னையின் 

பிரகாச விமரிச மஹா மாயா ஸ்வரூபிணியின் உருவத்தை வாக் தேவதைகள் வருணித்துள்ளார்கள்.
திரு நாமம் 47

மாராலி மந்த கமனா

Marālī-manda-gamanā

 मराली-मन्द-गमना

அன்னையின் நடை அன்ன நடை என்று வாக்தேவதைகள் கூறுகிறார்கள்.இருந்தாலும் அன்னையின் நடை 

எதோடும் உவமிக்க இயலாத்து என்பது தான் உண்மை.

ஸௌந்தரிய லஹரி  91 வது சுலோகத்தில் ஆதி குரு கூறுகிறார்:

பதான்யாஸ க்ரீடாபரிசயமிவாரப்தமனஸ:

ஸ்கலந்தஸ்த கேலம் பவனகலஹம்ஸா ந ஜஹதி

அதஸ்தஷாம் ஶிக்‌ஷாம் ஸுபகமணிமஞ்சீரரணித

செலாதாசக்ஷணம் சரணகமலம் சாருபரிஸ்த

நளின நடை நடக்கும் அன்னையே, தங்கள் வீட்டினுள் அன்னப் பறவைகள் தங்களைப் போல் நடக்க முயற்சி 

செய்து, அடி பிறழும்போது நடை  பயிற்சியை நிறுத்தாமல் தொடருகின்றன. அதனால் தானோ தங்களின் 

இரத்தின கொலுசுகள் அசையும்பொழுது உளவாகும் ஓசைகள் மூலம்  அவைக்கு நளின நடைக்கான 

குறிப்புகளை கொடுக்கின்றயோ?

இந்த நாமத்துடன்  பஞ்சதசி மந்தரத்தின் ‘ சக்தி கூடா’ முடிவுறுகிறது.

தேவீ மாஹாத்மியம் அர்கள ஸ்தோத்திரம் 9-14

ஸ்தோத்திரம் 9

அசிந்த்ய ரூப சரிதே ஸர்வ ஶத்ருவினாஶினி

ரூபம் தேஹி ஜயம் தேஹி யஶோ தேஹி த்விஷோ ஜஹி!!

अचिन्त्य रुप चरिते सर्व शत्रु विनाशिनि

रुपं देहि जयं देहि यशो देहि द्विषो जहि!!

Acintya Rup Charite Sarv Shatru Vinashini

Rupam Dehi Jayam Dehi Yasho Dehi Dvisho Jahi ॥

தேவி நம் மனதின் கற்பனைகளுக்கெல்லாம் மேலேயருக்கிறாள். அவள் எல்லா எதிரிகளையும்  கண் 

நேரத்திலே அழிக்க வல்லவள்.ஆகவே அவளை வேண்டினால் நமது மன சஞ்சலங்களெல்லாம் 

அழிந்துவிடும்.அப்படி அழிந்து விட்டால் அம் மனமும் இல்லாதாகி நாம் முக்தியடைந்துவிடுவார்கள் 

விடுவோம்.ஆகவே அவளை நமக்கு அதற்கான மன பக்கவாத்த்தால் அருளும்படி வேண்டுவோம்.அவளின் 

ஆசி பெறுவதில் வெற்றி பெறுவோம். அந்த வெற்றி எல்லோருக்கும் நல்ல உதாரணமாக இருக்கட்டும்

ஸ்தோத்திரம் 10

 நதேப்ய ஸர்வதா பக்த்யா சண்டிகே துரிதா அபஹே

ரூபம் தேஹி ஜயம் தேஹி யஶோதேஹி த்விஷோ ஜஹி!!

नतेभ्यः सर्वदा भक्त्या चण्डिके दुरिता पहे

रुपं देहि जयं देहि यशो देहि द्विषो जहि!!

Natebhyah Sarvadaa Bhaktyaa Chandike Durita Apahe

Rupam Dehi Jayam Dehi Yasho Dehi Dvisho Jahi ॥

தேவி அபர்ணா , உன்னை பக்தர்கள் பயபக்தியுடன் வணங்குகிறார்கள். அப்படி வணங்குகிறவரகளுக்கு 

சர்வதா பாபவிமோசனம் நல்குகின்றாய்.ஆகவே தேவீ, நான் உன்னை வணங்குகிறேன். நீ என் சகல 

பாபங்களையும் அழித்து, இனிமேல் பாபகர்மங்கள் அனுஷ்டிக்காமல் இருக்க மனோ பலமும் தேக பலமும் 

அருளுவாய்.எனது முயற்சியில் வெற்றி பெற உன் ஆசி அவசியம். அதை அருளுவாய்

ஸ்தோத்திரம் 11. 

 ஸ்துவாப்யோ பக்தி பூர்வம் த்வம் சண்டிகே வ்யாதி நாசினி

ரூபம் தேஹி ஜயம் தேஹி யஶோதேஹி த்விஷோ ஜஹி!!

स्तुवद्‌भ्यो भक्तिपूर्वं त्वां चण्डिके व्याधि नाशिनि

रुपं देहि जयं देहि यशो देहि द्विषो जहि!!

Stuvadbhayo Bhakti Puurvam Tvaam Chandike Vyadhi Nashini

Rupam Dehi Jayam Dehi Yasho Dehi Dvisho Jahi !!

தேவீ, உன்னை பக்தியுடன் யார் உபாசிக்கிறார்களோ அவர்களை சகல வியாதியிலிருந்தும் 

முக்தமாகுவாய்.வியாதிகளிலிருந்து விடுபட ஆசீர்வதிப்பாய்.

ஸ்தோத்திரம் 12. 

 சண்டிகே ஸததம் யுத்தே ஜயந்தி பாப நாசினி

 ரூபம் தேஹி ஜயம் தேஹி யஶோதேஹி த்விஷோ ஜஹி!!

चण्डिके सततं युद्धे जयन्ति पाप नाशिनि

रुपं देहि जयं देहि यशो देहि द्विषो जहि!!

Chandike Satatam Yuddhe Jayanti Paap Nashini

Rupam Dehi Jayam Dehi Yasho Dehi Dvisho Jahi !!

தேவீ, நீ என்றுமே வெற்றியின் தேவதை.உனது வெற்றிப்பாதையில் என்னையும் சேர்த்துக்கொண்டு 

பாபங்களை அழிப்பதற்கு உதவுவாய். பாப கர்மங்கள் பூர்வ ஜன்ம கர்ம வினைகளுடன் பலன்தான் என்றாலும் 

இந்த ஜன்மத்தில் மேற்கொண்டு பாப மூட்டையை அஅதிகரிக்காமல் இருக்க அருளுவாய். தேவீ.

ஸ்தோத்திரம்  13. 

. தேஹி ஸௌபாக்யமாரோக்யம் தேஹி மே பரமம் ஸுகம்

 ரூபம் தேஹி ஜயம் தேஹி யஶோதேஹி த்விஷோ ஜஹி!!

देहि सौभाग्यमारोग्यं देहि मे परमं सुखम्

रुपं देहि जयं देहि यशो देहि द्विषो जहि!!

Dehi Saubhaagyam Aarogyam Dehi Me Param Sukham

Rupam Dehi Jayam Dehi Yasho Dehi Dvisho Jahi !!

தேவீ , வாழ்வில் வெற்றி பெறுவதற்கு சுய முயற்சி தேவை என்பதை நான் அறிவேன். ஆனால், சுய 

முயற்சியோடு  உன் அதிருசியமான கைகளும்-அதிருஷ்டமும்-வேண்டும். பாக்கியம் என்றால் பவிக்கக் 

கூடியது. நிகழக்கூடியது. அது நல்லதாகவும் இருக்கலாம்; துன்பம் பயக்கக் கூடியதாகவும் இருக்கலாம் 

ஸௌபாக்கியம் என்றால் நல்லதுகளின் மட்டுமே தரக்கூடிய நிகழ்வுகள். அப்படிப்பட்ட ஒரு நிலை அவர் 

வேண்டுமென்றால் தேவியின் அருள் இல்லாமல் முடியாது. அதற்கு மிகவும் அவசியம் தேக ஸௌபாக்கியம் 

அல்லது தேக ஆரோக்கியம்.தேக ஆரோக்கியம் இருந்தால் மட்டுமே இடைவிடாமல் தேவியை பஜிப்பதை 

முடியும்.தேக ஆரோக்கியம் மட்டும் இருந்தால்தான் மட்டும் போதாது, தேவியின் அருளைப் பெற. மன 

ஆரோக்கியமும் வேண்டும் மன ஆரோக்கியம் என்றால் நல்ல சிந்தனைகள், நல்ல பழக்க- 

வழக்கங்கள்,நல்லொழுக்கம் என்பவையாகும் இந்த குணங்களை பகவான் கிருஷ்ணன் பகவத் கீதையில் 

தெய்வீக குணங்கள் என்று விளக்குகிறார்.

பகவத்கீதையில் அத்தியாயம் 13 சுலோகம்  1

அபயம் ஸத்வஸம்ஶுத்திர்ஞானயோகவ்யவஸ்திதி

தானம் தமஸ்ச யக்ஞஸ்ச ஸ்வாத்யாயஸ்தப ஆரஜவம் !

अभयम् सद्वसंशुदघिज्ञानयोगव्यस्थिति

दानं दमश्च यक्ज्ञस्च स्वात्यायस्स्तप आर्जवमं ।।

.அபயம்- பயமின்மை,அதாவது அஞ்சாமை,, உள்ளத்தூய்மை,ஞானத்திலிருந்து, யோகத்திலும் உறுதியாக 

நிலை கொள்ளுதல்,தானம்-ஈகைத,இந்திரியங்களை கட்டுக்குள் வைத்திருத்தல்,, யக்ஞங்களிலிருந்து 

வழுவாமலிருப்பது, மவுனத்த செய்தல் இவை தெய்வீக குணங்கள் என்று போற்றுவோம்ப் படுகின்றன

பகவத் கீதை  அத்தியாயம் 13 சுலோகம் 2

அஹம்ஸா ஸத்யமக்ரோதஸ்த்யாக: ஶாந்திரபைசுனம்

தயா பூதேஷ்வலோலுப்த்வம் மார்த்வம் ஹ்ரீரசபலம்!

अहिम्सासत्यमक्रोधस्त्याग: शान्तिरपैशुनम्

दया भूतेष्वलोलुप्त्वम मार्दवं हीरचपलम्।।

அஹிம்ஸா-மற்ற ஜீவராசிகளுக்கும் தீங்கிழையாமை,உண்மை,அக்ரோதா- கோபமின்மை, தியாகம்- 

துறவு,அமைதி,அபைசுனம்- கோள் சொல்லாமல், தயை,மற்ற ஜீவராசிகளிடம் அருணன், மற்றவர்களுடன் 

பழகுவதில் மிருதுத் தன்மை,சபலமின்மை  இவையெல்லாம் தெய்வீக குணங்கள் எனப்படுகின்றது. இப்படிப் 

பட்ட குணங்களை உடையவன் சிறந்த மன ஆரோக்கியத்துடன் விளங்குவான். மன ஆரோக்கியம் 

இருந்தாலோ,சகல  சௌபாக்கியங்களும்  தானாக வந்து சேரும்.அப்படி சௌபாக்கியத்துடனிருப்பவனுக்கு, 

பரம சுகம் உறுதி. அப்படிப்பட்ட நிலையை அடைவதற்கு, தேவீ நீ எனக்கு சரியான உனது ரூபத்தை 

காட்டித்தருவாய; அந்த ஸகுண பிரம்மத்தை உபாசிப்பதன் மூலம் எனக்கு யஶஸ் கிடைக்கும்படி செய்வாய் 

இந்த முயற்சிகளில் எனக்கு வெற்றி தருவாய்!

ஸ்தோத்திரம் 14

 விதேஹி த்விஷதாம் நாஶம் விதேஹி பலமுச்சகை:

ரூபம் தேஹி ஜயம் தேஹி யஶோதேஹி த்விஷோ ஜஹி

विधेहि द्विषतां नाशं विधेहि बलमुच्चकैः

रुपं देहि जयं देहि यशो देहि द्विषो जहिஅஹம்ஸாரூடா ஸத்

Vidhehi Dvissataam Naasham Vidhehi Balamuchchakaih

Rupam Dehi Jayam Dehi Yasho Dehi Dvisho Jahi ॥14॥

தேவீ நீயே நிர்குண பிரம்மம். உனக்குத் தெரியும், ‘ தேகத்துடன் இருப்பவன்- தேகாபிமானத்தை உள்ளவன் 

ஒன்றையும் சாதிக்க முடியாது.விசார மார்ககம் வழியாக ஆத்ம ஞானம் பெற்றால் மட்டுமே முக்த எறியாத 

முடியும். முக்தி என்றால் விஷய வாசனைகள் அற்றுப் போவது என்று பொருள்.விஷய வாசனைப் என்றால் அது 

நஞ்சை விடக் கொடியது. விஷய வாசனைகளில் மூழ்கியவன் தன்னைத் தானே அழித்தும் 

கொள்கிறான்.அதனால் தான் அஷ்டாவக்கிர முனிகள் விஷய வாசனைகளை விஷமென விட்டொழித்து விட

வேண்டும் என்று ஜனகருக்கு உபதேசிக்கிறார். 
முக்திமிச்சஸி சேத்தாத் விஷயாந் விஷவத்த்யஜ!

मुक्तिमिच्छसि चेतात विषयान् विषवत्त्यज। 

             அஷ்டாவக்கிரர் கீதை  முதலாம் அத்தியாயம் சுலோகம் 2

விஷய வாசனைகள் என்றால் இந்திரிய சுகங்கள் தரும் பொருட்களில்,காரியங்களிலும் ஈடுபாடு.அந்த விஷய 

வாசனை எனும் நஞ்சை ஒழிக்க வேண்டும் என்றால் தேகாபிமானத்தை ஒழிய வேண்டும்.அப்படி ஒழிப்பதற்கு 

எனக்கு சரியான மார்க்கத்தை காட்டுவாய் தேவி.அதில் வெற்றி பெறுவதற்கு அருளுவாய் தேவீ.. 

லலிதா ஸஹஸ்ரநாமம் 48-51

47ஆவது திரு நாமம்  வரை அன்னை லலிதாம்பிகையின் கேசாதி பாத வருணனை வாக் தேவிகள் நமக்கு 

அருளுகிறார்கள். 48 ஆவது சுலோகத்திலிருந்து தேக சௌந்தரியத்தை முழுமையாக அருளுகிறார்கள்

திரு நாமம் 48

மஹாலாவண்யா ஶேவதி:     

Mahā-lāvanya-śevadhiḥ

 महा-लावन्य-शेवधिः 

அன்னை லலிதாம்பிகை ஒரு அழகு பெட்டகம்.அவளுக்கு இணை அவளே. வேறு யாரையும் எதையும் உவமிக்க 

இயலாது. 

சௌந்தரிய லஹரியில் 12ஆம் சுலோகத்தில்  ஆதி சங்கரர் சொல்வார்:

தத்விதீயம் ஸௌந்தர்யம் துஹிநகரிகன்யே  துலயிதும்

கவீந்தா: கல்பந்தே கதமபி விரிஞசி ப்ரபுதய:

யதாலோகௌத்ஸுகயாதமரலலனா யாந்தி மனஸா

ததோபஇரதுஷ்ப்ராபயமபி  கிரீஶஸாயூஜ்யபதவீம்

  
தேவீ, இமயவனின் புதல்வியான தங்கள் அழகை வேறு எதனுடனும் உவமிப்பதற்கு  இயலாமல் குழப்பம் 

அடைகிறார்கள் பிரம்மா விஷ்ணு மற்றும் பெருமைக்குரியவர் கவி சிரேஷ்டர்கள் கூட .தங்கள் 

சௌந்தரியத்தை அறிவதற்கு – உணர்வதற்கு அப்ஸரஸ் கள் ஆர்வமுற்று, கடுமை தவமிருந்து பரமசிவனில் 

ஐக்கியமாக முயலுகிறார்கள். ஏனென்றால் பரமசிவனை ஒருவனுக்குள்ளேயே தான்  தங்கள் சௌந்தரியத்தை 

அறியமுடியும்.ஆகவே தங்கள் பதியான பரமசிவனில் ஐக்கியமாகிவிட்டால் தங்களுக்குத் அந்த பாக்கியம் 

கிடைக்கும் என்று தேவ ஸ்த்ரீகளான அப்சரஸுகள் எண்ணுகிறார்கள்.அப்படிப்பட்டது உன் அழகு.

திருநாமம் 49

ஸர்வாருணா

Sarvāruṇā

 सर्वारुणा 

 அன்னையே, நீ சம்பந்தப்பட்டு எல்லாமே செந்நிறம் தான் ஏனென்றால் நீயே கருணையின் வடிவமைப்பு சிவப்பு என்றால் கருணை.

சௌந்தரிய லஹரி 93 ஆம் சுலோகத்தில் ஆதி சங்கரர் சொல்கிறார்:

அரால்ப் கேஶேஷுப்ரகிருதிஸரளா மந்தஹஸிதே

கிரீஷாபா சிஸ்த த்ருஷபலதேபா கசடதே

ப்ருஶும் தன்வீ மத்யே ப்ரிதிருரஸிஜா ரோஹ விஷயே

ஜகத்த்ஆதும் ஶம்பாருஜயதி கருணா காசிதருணா

அன்னையே, உன் சுருள் சுருளான கருமை நிறத்துடனும் கூடிய கூந்தலும்,உனக்கே உரித்தான ஸரளமான 

புன்னகையும்,தென்மேற்கில் வாகை மலரின் மிருதுத் தன்மையுடையதும் உன் மனமும், பாறை போல் இறுகிய 

மார்பகங்களும்,இடையே இல்லாதது போலுள்ள இடையும்,பரந்து விரிந்த மார்பும், நிதமபமும்,ஶம்புவின் 

அருணனின் நிறத்தோடு கூடினால் கருணா ஶக்தியும் இந்த பிரபஞ்சத்தை காப்பாற்றுவதற்காக விஜயாஸ்தாதி 

செய்துள்ளது.

ஆக ஆதி சங்கரனும் அன்னையின் அருணா நிறம் கருணையின் குறியீடு என்கிறார்.

லலிதா த்ரிஶதியில் 138 ஆம் சுலோகத்திலும்,யஜுர்வேதத்திலும் சுருதிகளிலும் அருணனின் சிவப்பு நிறம் 

கருணையின் அடையாளம் என்று கூறப்பட்டுள்ளதை.

திரு நாமம் 50

அனவத்யாங்கி

Anavadyāṅgī

 अनवद्याङ्गी

குறையஏ இல்லாத அங்கங்களுள்ளவள் அன்னை. அன்னையின் எபடி குறையிருக்க முடியும்? அவளே 

பிரம்மமல்லவா? நிர்குண பிரம்மம் ஆக இருக்கும் பொழுது குறை நிறைகளின் இருக்க முடியாது. சகுண 

பிரம்மமாக இருக்கும் பொழுது அவள் குற்றமற்றவளாக இருக்கிறாள்.

திரு நாமம் 51

ஸர்வாபரண பூஷிதா

Sarvābharaṇa-bhūṣitā

 सर्वाभरण-भूषिता (51)

அன்னை வித விதமான ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறாள். அவள் உடலில் ஒவ்வொரு அங்கமும் 

ஆபரணங்களால் மூடப்பட்டிருந்தது.காளிகா புராணம் நாற்பது வகை ஆபரணங்களையும் 

விவரிக்கிறது.பரசுராம கல்ப ஸூத்திரம் என்பது ஶ்ரீசக்ரபூஜை பற்றி எழுதப்பட்டுள்ளது ஒரு அதிகார பூர்வமான 

கிரந்தம்.அதில் தேவியின் இன்னும் நிறைய ஆபரணங்களைக் குறித்துள்ள விவரணங்கள் உள்ளது.லலிதா 

த்ரிஶதியில் 140 திரு நாமம் இதையே குறிக்கிறது.

இந்த திரு நாமத்துடன் தேவியின் ப்ரகாச மற்றும் விமர்ச உருவத்தைக் குறித்துள்ள விவரணப்படம் 

முடிவுறுகிறது..
.

லலிதா ஸஹஸ்ரநாமம் 32-38

தேவியின் பஞ்சதசி மந்திரங்களை மூன்று பகுதிகளாக பிரிக்கலாம்.ஒவ்வொரு பகுதியையும் ‘கூட’ என்று 

சொல்வார்கள்.தேவியின் திருநாமங்கள் பதின்மூன்றிலிருந்து இருபத்தியொன்பது வரையான திருநாமங்கள் ‘ 

வாக்பவ கூட’ என்றழைக்கப்படுகிறது.முப்பதிலிருந்து முப்பத்தியெட்டு வரையிலான திருநாமங்கள் ‘ மத்ய 

கூட’ என்றும் முப்பத்தியொன்பதிலிருந்து நாறபத்தியேழு வரையிலான நாமங்கள் ‘ஶக்தி கூட’  என்றும் 

அழைக்கப் படுகின்றன.

வாக்பவ கூட என்ற பகுதியில் தேவியின் கேசாதி பாத வருணனையில் அன்னையின் திருமுகத்தைக் 

குறித்துள்ள வருணனையும்,கழுத்திலிருந்து இடுப்பு வரையான அங்கங்களின் வருணனை மத்ய கூடா என்ற 

பகுதியிலும்,இடையிலிருந்து பாதம் வரையிலுள்ள அங்கங்களின் வருணனை ஶக்தி கூட என்ற பகுதியிலும் 

காணப்படுகிறது.

மத்ய கூட என்ற பகுதி ‘ காமராஜ கூட’ என்றும் அழைக்கப்படுகிறது. ஏனென்றால் இங்கு அன்னையின் 

சிருஷ்டி சக்தி விளக்கப் படுகிறது.

திரு நாமம் 32

ரத்ன க்ரைவேய சிந்தாக லோல முக்தா பலான்விதா 

Ratna-graiveya-cintāka-lola-muktā-palānvitā

 रत्न-ग्रैवेय-चिन्ताक-लोल-मुक्ता-पलान्विता 

இரத்தினங்களால் உருவானதும் வைர வைடூரியங்கள் பதித்ததுமான ஹாரத்தை கழுத்தில்  அணிந்து 

கொண்டிருக்கின்ற லலிதாம்பிகையை உபாசிப்பவர்களுக்கு அதற்கான பலன் நிச்சயம் கிட்டும். மனதை 

சஞ்சலங்களுக்கு இரையாக்காமல் அலைய விடாமல் அன்னை தேவி லலிதாம்பிகையின் முழு உருவத்தையும் 

மனதில் இருத்தி தியானிப்பவர்களுக்கு முக்தி நிச்சயம்.மனம் பூராவும் அன்னை நிறைந்திருந்தால், நாம் வேறு 

எதையும் குறித்து சிந்திக்க இயலாதல்லவா?. அங்கு வேறு எதற்கும் இடம் கிடையாது. நாம்  அன்னையிடம் 

ஐக்கியமாக்கி விடுகிறோம். அந்த ஐக்கியத்தில் நாம் இல்லாதாகி, நாம் விடுதலை பெற்று மறைந்து 

விடுகிறோம். இது தான் உண்மையான முக்தி. பரமாத்வான பரமேசுவரி, நம் எல்லோருடைய தாய் 

அவளிலிருந்து உண்டானவர்கள் நாம். அவளிலேயே ஐக்கியமாகிவிட்டால் அவளிலிருந்து நாம் 

வேறல்லமலாகிவிடுகிறோம்.அப்படிப் பட்ட முக்தியை தருபவளே அன்னை லலிதாம்பிகை.

திரு நாமம் 33

காமேசுவர ப்ரேமரத்ன மணி ப்ரதிபண ஸ்தனி

Kāmeśvara-premaratna-maṇi-pratipaṇa-stanī

 कामेश्वर-प्रेमरत्न-मणि-प्रतिपण-स्तनी

அன்னையின் மீது மிகுந்த பிரேமையுடைய காமேசுவரனுக்கு, அவன் செலுத்தும் அன்பிற்கு பிரதி பலனாக தனது 

அமுது சுரக்கும் இரு முலைகளையும் தருபவளே அன்னை லலிதாம்பிகை. தாயின் ஸ்தனங்கள் குழந்தைக்கு 

அமுதூட்ட உயிரூட்டுகின்றன. தாய்ப்பால் இல்லையேல் குழந்தையிடம் ஆரோக்கியம்  இராது. 

ஜீவாத்மாக்களின் இருப்பிற்குக் காரணம் பரமாத்வான அன்னையின் கருணை தான் அதே போல் தன்னிடம் 

அன்பு செலுத்தும் காமேசுவரனுக்கு தனது அமுத கலசங்களை அருளுகிறாள் அன்னை.. அதே போல் 

குழந்தைகளாகிய ஜீவாத்மாக்களுக்கும் கருணை காட்டுகிறாள் அவள் கருணைக்கு அளவு கிடையாது. 

அப்படிப்பட்ட கருணையின் உறைவிடமான ஸதனங்களையுடையவளான அன்னையை வணங்குவோம்.

திருநாமம் 34

நாப்யாலவால ரோமாலி லதா பல குசத்வயா

Nābhyālavāla-romāli-latā-phala-kucadvayā

 नाभ्यालवाल-रोमालि-लता-फल-कुचद्वया 

அன்னையின் நாபியில் முளைத்தெழும் உரோமங்களாகின்ற கொடிகளில் காய்த்து தொங்கும் இரு 

முலைகளாகின்ற கனிகளையுடைய தேவியை தியானிப்போம்.

ஸௌந்தர்யலஹரியில் ஆதி சங்கரன் சொல்வார்:” நிரந்தரம் பிரவஹித்துக்கொண்டிருக்கின்ற கங்கையின் 

மூலஸ்தானமான தேவியின் நாபியிலிருந்து முளைத்து வளரும் கொடியில் காய்த்துத் தொங்கும் கனிகளான 

அன்னையின் முலைகள் பரம சிவனை தன்னிடமே ஈர்த்து ரதி லீலைகளின் மைதானமாக மாறி பிரபஞ்ச 

உற்பத்திக்கு வழி வகுக்கிறது.’

ஸ்திரம் கங்காவர்த: ஸ்தனமுகுலஸாமாவலிலதா

கலாவாலம் குண்டம் குஸுமஶரதேஜோஹுதாபுஜ:

ரஸ்தர்லீலாகாரம்  கிமபி தவ நாஇர்கிரிஸுதே

பிலத்வாரம் ஸித்தயே கிரிஶேனஸ்தம் நயனானாம் விஜயதே(சிவானந்தன் லஹரி)

அதாவது தேவியும் பரம சிவனும் ஐக்கியமாவதால் பிரபஞ்சம் உற்பத்தியாகின்றது.

தவாதாரே மூலஸஹ ஸமயயா லாஸ்யபராய 

நவாத்மானாம் மனயே நவரஸமஹாதாண்டவநடம் 

உபாப்யாமேதாப்யமுதய விதிமுத்திஶ்ய தயயா

ஸனாதனாப்யாம் ஜஞ்ஞாஜனக ஜனனீமத் ஜகதிதம் ( சிவானந்தன் லஹரி)‘ தேவீ,தங்களுடைய மூலாதார சக்கரத்தில் ( நாபீ தடத்தில்) லாஸ்ய பிரியையான( லாஸ்யம் என்பது 

பெண்மை ததும்பும் நடனம்)ஸமயா தேவியும் மஹாபைரவனும் நவரஸங்களும் தரும் ஆனந்த நடனம்  ஆடி 

மஹாபிரளயத்திற்கு பின் பிரபஞ்ச உற்பத்திக்காக ஒன்று சேருகிறார்கள்’.இந்த சிவ சக்தி ஐக்கியம்  கண்டு 

நாம் வணங்குவோம்.

ஆதி பராசக்தியாகியாகிய லலிதாம்பிகை தான் ஜகன்மாதா;அவளிலிருந்து பிரபஞ்சமே உற்பத்தியாகின்றது; 

அவளில்லாமல் நாமில்லை.அவளே நாம்; நாமே அவள்.

திருநாமம் 35

லக்‌ஷ்ய ரோம லாதாரதா ஸமுன்னேய மத்யமா

Lakṣya-roma-latādhāratā-samunneya-madhyamā 

लक्ष्य-रोम-लताधारता-समुन्नेय-मध्यमा

அன்னையின் அரை அது இல்லாததும் போலவே இருக்கிறது. அங்கிருந்து உதயமாகும் 

உரோமங்களினால்த்தான் அப்படி யாருக்கும் பிரதேசமும் இருப்பதே தெரியவருகிறது. அதே போல் தான் 

ஆத்மாவும் இருக்குமிடமே தெரியாது.சத்தியான்வேஷண மர்ககத்தின் வழியாகத்தான் ஆத்மாவை 

கண்டறியமுடியும்.

 

திரு நாமம்் 36

ஸ்தனபார தலன்மத்ய பட்டபந்த வலித்ரயா

Stanabhāra-dalanmadhya-paṭṭabandha-valitrayā 

स्तनभार-दलन्मध्य-पट्टबन्ध-वलित्रया 

தேவி லலிதாம்பிகை தனது அரையில் தங்க ஒட்டியாணம் அணிந்துள்ளார்.அன்னையின் பருத்த முலைகளும் 

பாரம் தாங்காமல் இடை வளைந்து மூன்று மடிப்புகளையும் உண்டுபண்ணுகிறது.ஆகவே அன்னையே நீ 

‘ஸ்தனபார தலன்மத்ய பட்டபந்த வலித்ரயா’ என்றழைக்கப்படுகிறாய்.

இதே கருத்தை ஆதி சங்கரனின் ஸௌந்தர்ய லஹரியிலும் காணலாம்.எண்பதாவது சுலோகத்தை பார்ப்போம்

குசௌ ஸத்ய ஸ்விதயத்தடகடிதகுரபாஸபிதுரௌ

கஷந்தௌ தோர்முலையே கனககலஶபௌ கலயதா

தவ  த்ராதும் பங்கஆதலமிதி வலக்னம் தனுபவா

த்ரிதாம் ந்த்தம் தேவீ  த்ரிவலி லவலீவல்லீரபிரிவ

‘ அன்னையே, அவ்வப்பொழுது வியர்க்கின்றவையும் உன் மார்கச்சைகளை பிளர்ந்து கொண்டு வெளிவர 

பார்ககின்றவையும், கக்கம் வரை ஆக்கரமித்துக் கொண்டிருப்பவையுமான , தங்க 

கலசங்களையொத்திருக்கும்  உன் மார்பகங்களின் பாரம் தாங்காமல் உன் இடை ஒடிந்துவிடாமலிருக்க காம 

தேவன் தங்க ஒட்டியாணம் போல் மூன்று படிப்புகளையும் உருவாக்கியுள்ளானோ?’

தேவியின் கருணையுள்ளம்  தாங்கும் பாரம் சொல்லி மாளாது. ஏனென்றால் உலக மக்கள் யாவரையும் காப்பது 

அன்னையின் பொறுப்பல்லவா? அவளது இடையிலுள்ள  மூன்று மடிப்புகள் சிருஷ்டி( படைத்தல்), காத்தல், 

அழித்தல் என்ற மூன்று ஆளுமைகளைக் குறிக்கிறது.

திரு நாமம் 37

அருணாருண கௌஸும்ப வஸ்த்ர பாஸ்வத் கடிதடி

Aruṇaruṇa-kausumbha-vastra-bhāsvat-kaṭītaṭī

 अरुणरुण-कौसुम्भ-वस्त्र-भास्वत्-कटीतटी 

அன்னை தனது அரையில் சிவப்பு நிற பட்டாடை உடுத்தியிருக்கிறாள். ஏற்கனவே சொன்னது போல் சிவப்பு 

கருணை, தயையின் அடையாளம்.அன்னையோடு சம்பந்தப்பட்ட எல்லாமே சிவப்பு நிறத்துடனும் 

உள்ளது.அவளே கருணையின் வடிவம்.ஆகவே தான் அவள் ‘ஶ்ரீ மாதா’ என்றறியப்படுகிறாள்.அவளது 

முத்தொழிலும் – படைத்தல், காத்தல், அழித்தல் மூன்றுமே- கருணையை அடிப்படையாகக் 

கொண்டது.லலிதாஸஹஸ்ர நாமத்தை இசைத்த வாக் தேவிகளுள் ஒருவர் அருணா.அருணன் என்றால் 

சூரியன் . சூரியனின் நிறம் சிவப்பு.சூரிய ஒளி எல்லா ஜீவன்களுக்கும் ஜீவச் சக்தியை தருகிறது.ஆகவே சிவப்பு 

நிறம் ஜீவசக்தியைக் குறிக்கிறது.

மற்ற வாக் தேவிகள் வாஸினி, காமேஶ்வரி, ரோஹிணி,விமலா, ஜைனி,ஸர்வேஶ்வரி மற்றும் கோலினி அவர்.

.

திரு நாமம் 38

ரத்ன கிங்கினிக ரம்ய ரஸன தாம பூஷிதா

Ratna-kiṅkiṇikā-ramya-raśanā-dāma-bhūṣitā 

रत्न-किङ्किणिका-रम्य-रशना-दाम-भूषिता 

அன்னையின் ஒட்டியாணத்தில் மணிகளும் இரத்தினங்களும் அலங்கரிக்கின்றன.

யோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 225

தினமொரு சுலோகம்

நாள் 225

மனம், புத்தி, ஜீவன் எல்லாம் பொய்

யதா ஶிலமயீ கன்யா சோதிதாபி ந நிருத்யதி

ததேயம் கலனா தேஹே ந கிஞ்சிதவபுத்யதே !

यथा शिलमयी कन्या चोदितापि न न्रुत्यति 

तथेयम् कलना देहे न किन्चिदवबुध्यते ।

வஸிஷ்டர் தொடர்ந்தார்:’ நான் முன்னால் சொன்ன இந்த உள்ளுணர்வு- மேதா சக்தி- 

உயிர்ததெழவில்லையென்றால்,ஜீவனில ஒரு அறிவும் உளவாகாது. வெறும் மனோ விருத்திகளினால் 

உண்டாகின்ற அறிவு ஞானமாகாது ; அது ஸத் ஆகாது.எண்ணங்களுக்கு மதிப்புண்டாவது உள்ளுணர்வு என்று 

சொல்லப்படுகின்ற மேதா சக்தியின் ஒளியில் தான்.வாசனைப்பொருட்கள் வைத்திருக்கும் பாத்திரத்திற்கு 

கிடைக்கும் நறு மணம் அந்த வாசனைப் பொருட்களுடையதல்லவா! இப்படி கடன் வாங்கிய 

புத்திசாலித்தனத்தினால்த் தான் மனத்திற்கும் அனந்தாவபோதத்தின் ஞானத்திலிருந்து ஒரு கடுகளகாவது 

ஞானமுண்டாகிறது.அனந்தமான- எல்லைகளில்லாத- போதத்தின் ஒளியில் மட்டும் தான் மனம் பூரண 

வளர்சசி யடுத்து மலர்நதும் வாசம் வீசும்.

” கல்லில் செதுக்கின நாட்டியக்காரி நாட்டியமாடுவாளா? அதே போல் மனோ விருத்திகளும் அறிவுள்ளது 

போல் தோற்றமளித்தாலும், அவையால் ஒன்றும் தெரிந்துகொள்ள இயலாது.” அப்படி அறிவதற்கு போதத்தின் 

ஒளி அவசியம்.

சுவரில் வரைந்துள்ள போர்ககளக் காட்சிகளில் உண்மையான வீரத்தை காண முடியுமா?பிணத்தை ‘எழுந்து 

நட’ என்று சொன்னால் நடக்குமா? அழகிய சூரியனின் சித்திரம் ஒளி தருமா? அதே போல் ஜடமான மனதிற்கு 

சுயமாக ஏதும் செய்ய இயலாது. பாலைவனத்து கானல் நீர் தாகத்தை தணிக்கும்? சூரியனின் ஒளி பட்டுத் தான் 

பாலைவனத்து கானல், நீர் போன்று பளபளக்கின்றது. அதே போல் மனமும் புத்தியுள்ளதாக தெரிவது 

அனந்தாவபோதத்தின் ஒளியினால் தான்.அது கர்மங்கள் ஆற்றுவதாய் தோன்றுவதும் போதசக்தியினால்த் 

தான்.அஞ்ஞானிகள் எல்லாம் மனதால் தான் நடக்கின்றது என்று நம்புகிறார்கள்.ஜீவன் என்பது வெறும் பிராண 

சக்தி மட்டும் தான்.எவனொருவனது புத்தி பேதலிக்காமல் மனோ சங்கல்பங்களால் வரையறைக்குட்பஆமலும் 

இருக்கிறதோ, அவன் பரமாத்மாவாகிறான்.

தனியொருவன் கற்பனை செய்கின்ற ‘நான்’ ‘ எனது’ என்பன போன்ற எண்ணங்கள் மனோ விருத்திகள் தான். 

போதம் அவையோருக்கு தன்னை இணைத்துக் கொள்ளும்பொழுது ஜீவனும் ஜீவாத்மாவும் 

உருக்கொள்கின்றது.புத்தி, மனம், ஜீவன் என்பவையெல்லாம் பொருளற்ற வார்த்தைகளே.எல்லாமே 

பரமாத்மாவாகிறான் அனந்தாவபோதம் தான் .ஞானிகள் கூட இம்மாதிரி வார்த்தைகளை 

பயன்படுத்துகிறார்களே’ என்று நீ கேட்கலாம்.அதுவும் அனந்தாவபோதத்தை புரியவைப்பதற்காகத் தான். 

அனந்தாவபோதத்தை உணர்ந்த பின் அவைகளுக்கு பயன் இல்லை. ஏனென்றால் அவை எதுவும் 

உண்மையல்ல.உண்மையில், மனமென்பதில்லை, புத்தியென்பதில்லை, ஜீவன் என்பதுமில்லை.ஜீவ 

ராசிகளும் இல்லை. இருப்பது ஒன்றே. அது பரமாத்மா ஒன்று தான்.அது தான் எங்கும் எப்பொழுதும் 

இருந்துகொண்டிருக்கிறது.

ஆத்மா- பரமாத்மா தான் உலகம்.அது தான் காலம்.அதுவே மாற்றமும்.அது மிகவும் சூக்‌ஷமமானதாக 

இருப்பதால் அதன் இருப்பை அறிவது அவ்வளவு எளிதல்ல என்பது உண்மை.அது எதிலாவது 

பிரதிபலிக்கின்ன்றபொழுதோ, எதிலாவது உதயமாகும் பொழுது மட்டும் தான் காண முடிகிறது. உண்மை 

என்பது வார்த்தைகளால் விளக்க இயலாதது..ஆத்மஞானத்தின் வழியாக மட்டும் தான் காண முடியும்.ஆத்ம 

ஞானம் உதயமாகின்ற பொழுது அஞ்ஞானம் காணாமலே போய்விடுகிறது. சூரியன் உதயமாகிவிட்டால் 

இருட்டு காணாமலே போய் விடுகிறதல்லவா ?இந்திரய விஷயங்களையும் அனுபவிப்பதற்காக, புத்தி 

தாற்காலிகமாகவேனும் ஆத்மாவை மறந்து விடுவது போல்,மனோ விருத்திகள் உளவாகின்றபொழுது உண்மை 

மறைந்து விடுகிறது.

யோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 226

தினமொரு சுலோகம்

நாள்226

மனமும் போதமும்

ப்ராணஶக்தௌ நிருத்தாயாம் மனோ ராமாவிலீயதே
த்ரவ்யச்சாயானு தத்த்ரவ்யம் ப்ராணரூபம் ஹி மானஸம் !

प्राणशक्तौ निरुद्धायाम् मनो राम विलीयते

द्रव्यच्छायानु तद्द्रवयम् प्राणरूपम् हि मानसम्!!

வஸிஷ்டர் தொடர்ந்தார்:” பரம்பொருளிலிருந்து எழுந்து வருகின்ற ஒரு சிறு மனோ விருத்தி தான்- எண்ணம் 

தான் தனி மனித போதமாக உரு எடுக்கிறது.இந்த எண்ணத்துளி உடல் பந்தத்திலிருந்தும், – தானே உடல் 

எனும் எண்ணத்திலிருந்தும்,அம்மாதிரி நினைப்புகளிலிருந்தும் விடுதலை பெறும்பொழுது முக்தியாயிற்று.இந்த 

பிரபஞ்சமெனும் காட்சிக்கு காரணம் அனந்தாவபோதத்திலுண்டாகின்ற சிறு சிறு எண்ண அலைகள் தான் 

.இந்த சிறு சிறு எண்ண த் துளிகள் தனி மனித போதத்தை தோற்றுவிக்கின்ற விதைகள்.தன்னுடைய 

பிறவிக்குணமான சாந்தியிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகி விலகி, எண்ணஅலைகளால் மாசு பட்டு, 

தனிமனித போதத்தில் கற்பனை ஶக்தி வளருகிறது.தன்னுடைய கற்பனையில் ஒரு பிரபஞ்சத்தை சிருஷ்டித்து, 

வேடிக்கை பார்க்க ஆரம்பிக்கிறது.

‘ இராமா, ஆகவே பிராண ஶக்தியை கட்டுப் படுத்துவதன் மூலம் நாம் மனதையும் கட்டுப் படுத்த 

இயலும்.நிஜத்தை நீக்கிவிட்டால் அப்புறம் நிழலேது? பிராண சக்தியை கட்டுப் படுத்துவதற்காகத்தான் மூலம் 

மனதையும் அழித்து விட முடியும்’

 பிராண சக்தி நம் தேகத்தில் பயணிப்பதால்த்தான், என்றோ , எங்கோ நடந்த சம்பவங்கள் நம் ஞாபபகத்தில் 

தங்கி பிறிதொரு நாள் முளைத்தெழுகிறது.இந்த செயலை நாம் மனம் என்கிறோம்.பிராணனின் பயணத்தை 

அனுபவிப்பது மனம் தான்.எப்படி இந்த பிராணசக்தியை கட்டுப் படுத்துவது? நிர்மமதை ஒரு 

மார்ககம்.நிர்மமதை என்றால் ‘ எனது’ என்ற உணர்விலிருந்து விடுபட்டு இருப்பது.பிராணாயாமம், 

பிராணசக்தியின் பயணத்தை- மனோவிருத்தியின் விசாரணைக்கு உட்படுத்துவது.மேதா சக்தியின் 

உதவியுடன் துன்பங்களிலிருந்து விடுபடுதல்,பரம்பொருளைக் குறித்து சுயமாக விசாரித்து 

உணர்தல்,இவையெல்லாம் பிராணனை கட்டுப்படுத்துவதற்கான வழிகளில் சிலதாகும்.ஒரு கல்லில் 

புத்தியிருக்கிறது என்று மனதால் அனுமானிக்கமுடியும் ஆனால் மனதிற்கு சுயமாக கடுகளவு கூட புத்தி 

கிடையாது.வெறும் ஜடப்பொருளான ப்ராண சக்தி தான் மனதின் அஏசைவை தீருமானிக்கின்றது.

புத்தி, போதம்,விவேகம் என்பன சாசுவதுமும், சர்வ வியாபியுமான அனந்தாவபோதத்தின் 

குணங்கள்.பிராண சக்திக்கும் அனந்தாவபோதத்திற்கும் பந்தம் உளது என்று கற்பனை செய்வது மனம் தான்.

ஆனால் பிராண சக்தி ஜடவும் ஆகவே அஸத்தும் ஆக இருக்கிறது. ஆத்மா அல்லது அனந்தாவபோதம் 

ஸத்தாக உள்ளது.அப்படியிருக்க அவைகளுக்கிடையே எந்த பந்தமும் ஏற்பட இயலாது.அப்படிப்பட்ட 

மித்யையை -பந்தத்திலிருந்து உளவாகின்ற எல்லா எண்ணங்களும் மித்யையாகத்தான் இருக்க முடியும்.-

அவையை உண்மை என்று எண்ணுவது தான் அவித்யை, மாயை,, அஞ்ஞானம்.இது தான் பிரபஞ்சமெனும் 

பிரமை. அதுவும் ஒரு மாயக்காட்சி தான்.பிராண சக்தியும் போதமும் தொடர்புடையவை என்பது ஒரு 

கற்பனையே. நம் கற்பனையில் உளவாவது தான் இந்த மாயா பிரபஞ்சம்.அந்த கற்பனையில்லையென்றால் 

இந்த உலகமுமில்லை.

பிராணசக்தியின்  போதத்துடனுள்ள பந்தம் காரணம் இந்த உலகை காணவும் அனுபவிக்கவும் 

இயலுகிறது.ஆனால இவை  எல்லாம் வீண் வேலை.இருளில் பேயைக் கண்டு பயப்படும் குழந்தையின் 

அனுபவம் போல் பொய்யான அனுபவம்.எல்லாமே அனந்தாவபோதத்தில் ஏற்படுகின்ற அசைவுகளே! இந்த 

உலகிறக்கும்  சரி, உலகிலுள்ள பொருட்களுக்கும் சரி எல்லைகள் உண்டு. அப்படி 

எல்லைகளுக்குட்பட்டவை, எல்லையில்லாத அனந்தாவபோதத்தை பாதிக்காது.

ஆகவே , இராமா, மனமும், எல்லைக்குட்பட்ட போதமும் உண்மையல்ல.சத்தியம் எது என்ற ஞானம் 

உதயமாகும்பொழுது மனம் இல்லாதாகிவிடுகிறது.மனம் என்பது அடிப்படையிலேயே ஒரு பொய்யான 

கற்பனையில் உதயமானது தான் அது அபூர்ணமான அறிவிலிருந்து உளவாவதும் தான்.அந்த 

அபூரணத்துவத்தை மறந்து-மறைத்து பூரணத்துவத்தை அடையும் பொழுது மனம் காணாமலே போய்விடுகிறது.

ஸர்வம் சக்திமயம்- தேவீ மாஹாத்மியம்

பாகம்2            தேவீ மாஹாத்மியம்

அத்தியாயம் 12.        அர்கள ஸ்தோத்திரம் 1-9

தேவீ மாஹாத்மியம் பாராயணக் கிரமத்தில் தேவீ கவசம் பாராயணத்திற்கு பிறகு தேவீ அர்கள பாராயணம்

செய்ய வேண்டும்.தேவீ கவசத்தில் தேவி நம் உடல் உறுப்புக்களையும், நம் சந்ததியரையும் பாதுகாக்கும் படி 

வேண்டினோம்  இருப்பதை பாதுகாத்தால் மட்டும் போதாது, எங்களுக்கு மேலும் சில பிரார்ததனைகள் 

உள்ளன; அவைகளை அர்களத்தில் சொல்கிறோம். முக்கியமாக, ” ரூபம், தா, ஜயம் தா, புகழ் தா” என்று 

வேண்டுகிறோம்.ரூபம், ஜயம், புகழ் என்ற மூன்று வார்த்தைகளுக்கு மிகுந்த ஆழமான பொருள் உண்டு.

ரூபம் என்றால் சாதாரணமாக உருவம் அதாவது தேகம் என்று பொருள். மேலோட்டமாக பார்க்கும் பொழுது  

ஆரோக்கியமான வாழ்வை அருளும்படி கேட்பதாக தோன்றுவதில் தவறில்லை. ஆனால் சகல 

ஜீவராசிகளுக்கும் தாயாக இருக்கும்  பராசக்தியிடம் இதை கேட்கவும் வேண்டுமா? தேவியை உபாசனை 

செய்வதற்கு ஒரு பிடிமானம் வேண்டும்.ஆதியும் அந்தமும்்இல்லாத, நிர்குண பிரம்மமான தேவீ,  உன்னை 

நான் எப்படி உபாசிப்பேன்?உன்னை உபாசனை செய்யாமல் எனக்கு எப்படி முக்தி கிடைக்கும்? ஆகவே ‘ 

ரூபம் தேஹி’ என்று பிரார்ததிக்கிறோம்.

நிர்குண பிரம்மத்திலிருந்து சகுண பிரம்மமாக நீ காட்சியளித்தால் மட்டும் போதாது. அந்த உபாசனையில் 

எனக்கு ஜயம் ஏற்படவேண்டும். எந்த வித தடங்கலுமின்றி ஆத்ம சாக்‌ஷாத்காரம் அனுபவப்பட வேண்டும்.

இந்திரியங்களால் தோற்றுவிக்கப்படுகின்ற சஞ்சலங்களுக்கு ஆளாகாமல்  நான் உபாசனையை முழுமிப்பிக்க 

வேண்டும். ஆகவே ” ஜயம் தேஹி” என்று வேண்டுகிறேன்.

நான் எனது உபாசனையில் வெற்றி பெற்று விட்டால் அதைக் கண்டு இன்னும் பலரும் ஆத்ம 

சாக்‌ஷாத்காரத்திற்கு முயலவேண்டும். அதற்கு எனது புகழ் உலகமெங்கும் பரவ வேண்டும். ‘ யாம் பெற்ற பேறு 

இவ்வையகம் பெற வேண்டும்’ . ஆகவே ” யஶோ தேஹி” என்று பிராரத்திக்கிறோம்.

ஓம் நமோ சண்டிகாயே !!

॥Om Namas Chandikayai ॥

தேவி சண்டியை வணங்கி இதை ஆரம்பிக்கிறேன்.

ஸ்தோத்திரம் 1

ஓம் ஜயந்தி மங்களா காளீ பத்ரகாளீ  கபாலினீ

துர்கா க்‌ஷமா ஶிவா தாத்ரி ஸ்வாஹா ஸ்வாதா நமோஸ்துதே!

ॐ जयन्ती मङ्गला काली भद्रकाली कपालिनी

दुर्गा क्षमा शिवा धात्री स्वाहा स्वधा नमोऽस्तु ते

Om Jayanti Mangala Kali Bhadrakali Kapalini

Durga Kshama Shiva Dhatri Svaha Svadha Namostute ॥1॥

ஆரம்பிக்கும் பொழுது தேவியை வணங்கி ஆரம்பிக்கிறேன் . தேவியின் எந்த அவதாரத்தை வணங்குகிறேன் 

என்றால் காளி ஆகாரத்தை(உருவத்தை) வணங்குகிறேன் காளி கருமை நிறம் கொண்டவன். உலகிலுள்ள 

இருளை முழுவதும் தன்னுள் ஆகரித்து வெளிச்சம் பகருகிறவள். அவள் எடுத்த காரியத்தில் வெற்றி தருபவள். 

அவள் மங்கலமானவள். ஆனால் கெட்டவர்களை அழிப்பதில் வல்லவள்.அந்த நோக்கத்தில் 

உறுதியாயிருப்பவள். கபாலங்களை மாலையாக அணிந்திருப்பவள். எந்த விதமான தயையோ 

தாட்சண்ணியமோ காட்டாதவள்.ஆனால் தனது உபாசகர்களிடம் கருணை மிகுந்தவள்.பரமசிவனின் பாதியை 

பெற்று உமையொரு பாகன் என்ற பெயரை வாங்கிக் கொடுத்தவள்.அவளே உலக மக்கள் அனைவருக்கும் 

உணவு நல்கும்  அன்னபூரணேசுவரி. அவள் வெற்றியின் தேவி. அவளை வணங்கி நமது பிரார்த்தனையை 

ஆரம்பிப்பதே சாலவும் பொருந்தும்.ஆகவே தேவீ, உன்னை நான் வணங்குகிறேன்.எனது உபாசனையின்

வழியிலுள்ள எல்லா தடங்கல்களையும் நீக்கி, என்னை நிரந்தர வெற்றிக்கு இட்டுச் செல்வாய்.சத்திய 

சாக்‌ஷாத்காரத்திற்கு உதவுவாய்.என் உள்ளேயும் புறமேயுமுள்ள எல்லா எதிரிகளையும் அழிக்க உதவுவாய்.

ஸ்தோத்திரம் 2

ஜய த்வம் தேவி சாமுண்டே ஜய  பூதார்ததிஹாரிணி

ஜய ஸர்வகதே தேவிகாளராத்ரி நமோஸ்துதே!!

 जय त्वं देवि चामुण्डे जय भूतार्तिहारिणि

जय सर्वगते देवि कालरात्रि नमोऽस्तु ते

Jaya Tvam Devi Chamunde Jaya Bhutartiharini

Jaya Sarvagate Devi Kalaratri Namostute ॥

‘ தேவீ, வெற்றி எப்பொழுதும் உன்பக்கம். உன்னை எவராலும் வெல்ல முடியாது. நீ எல்லா பூதப் பிரேத 

பிசாசுகளை அழிக்க வல்லவள். நீ எதையெடுத்தாலும் எப்பொழுதும் வெற்றி காண்பவன்.இரவின் தேவி நீ. 

அப்படிப்பட்ட உன்னை வணங்குகிறேன்” 

பூத பிசாசுக்கள் இந்திரியோத்பன்னங்களான வாசனைகளை குறிக்கிறது. அந்த வாசனைகள் அழிந்தால்தான் 

விருப்பு வெறுப்புக்கள் இல்லாதாகும். அப்பொழுது தான் அஞ்ஞானம் அழிந்து, விவேகம் பிறக்கும்.எது ‘ ஸத்’ 

எது ‘அஸத்’ என்ற பகுத்தறிவு உதயமாகும்.ஆகவே நீ எங்கும் இருக்கிறாயா அங்கு வெற்றி நிச்சயம் 

உண்டு.அப்படிப்பட்ட காள ராத்திரியான உன்னை வணங்குகிறேன்.

இந்த முதல் இரண்டு ஸ்தோத்திரங்களிலும் தேவி காளியை உபாசிப்பதாக சொல்லப்பட்டிருக்கிறது.

காளியை வட இந்தியாவில் காலீ என்றும் அழைக்கிறார்கள. 

காலீ என்ற பெயர், அவள் காலத்தையும், மரணத்தையும் வெல்ல அருளுபவள் என்பதால் ஏற்ப்பட்டது. 

இந்த பெயரைக் கேட்டவுடனே சிலருக்கு ஒரு வித அச்சம் உண்டாகலாம்.. காளன் என்னும் சிவபெருமானின் 

துணைவி என்பதால் காளீ என்றழைக்கப்பட்டாள். காளி என்ற பெயர் வடமொழியின் காலா என்ற 

சொல்லிலிருந்து உருவானது. உண்மையில் காலீ என்பதே சரியான உச்சரிப்பு ஆகும். காலீ என்பதன் பொருள் 

காலத்தை வென்றவள் என்பதாகும். மற்றொரு பொருள் கரிய நிறம் கொண்டவள் என்பதாகும்.   

காலீ காலத்திற்கும், கால மாறுதல்களுக்கும் அதிபதி ஆவாள். ஏவல், பில்லி, சூனியம், செய்வினை 

இவற்றிற்கு காரணமும் இவளே;இவற்றை போக்குவதும் இவளே. காலீ நேர்மையின் வடிவம். நாம் 

நேர்மையாக இருந்தால் காலீயை வைத்து யாரும் எவ்வித துன்பங்களையும் நமக்கு செய்ய இயலாது. மாறாக 

யார் துன்பம் செய்ய நினைத்தார்களோ அவர்களே அழிவது நிச்சயம்.

காலீ ஞானத்தின் வடிவம். அறியாமை இருளை போக்குபவள். தன்னை அண்டியவர்களின் பயத்தினை 

போக்குபவள். ஆகவே  காலராத்திரினி என்றும் அழைக்கப படுகிறாள்.எவ்வித துன்பங்களிலிருந்தும் தம் 

பக்தர்களை காப்பவள். கருணையின் வடிவம்.  . காலம் மற்றும் மரணம் இவற்றிற்கு காரணமான தெய்வம் 

ஆவாள். இவளின் அருள் இருந்தால் காலத்தையும், மரணத்தையும் வெல்லமுடியும். காலீ ஞானத்தின் வடிவம். 

ஞானத்தையும், செல்வத்தையும் அளிப்பவள். கல்வியை அளிப்பவள். துணிவை தருபவள். பயத்தை 

போக்குபவள். நோயிலிருந்து விடுவிப்பவள். நோய்களை போக்குபவள். மரணமிலா பெருவாழ்வு தருபவள்.

அவளை வணங்குவோம்

.

  ஸ்தோத்திரம் 3

மது கைடப வித்ராவி விதாத் வரதே நம:

ரூபம் தேஹி ஜயம் தேஹி யஶோ  த்விஷோ ஜஹி!!

मधु कैटभ विद्रावि विधातृ वरदे नमः

रुपं देहि जयं देहि यशो देहि द्विषो जहि

Madhu Kaitabh Vidravi Vidhatr Varade Namaḥ

Rupam Dehi Jayam Dehi Yasho Dehi Dvisho Jahi ॥

மது கைடபர்கள் போன்ற அரக்கர்களை வதம் செய்த வரதே உன்னை வணங்குகிறேன். தேவி , நீ எனக்கு 

தேஹ பலத்தை தா, உன்னை உபாசிப்பதற்கு.உன்னை உபாசிப்பதன் மூலம் என்னை வெற்றி அடைய 

செய்வாய்.அதன்மூலம் என் பெயரும் புகழும் உலகெங்கும் பரவட்டும்.

மது கைடப வதம் தேவீ மாகாத்மியத்தில் வரும் ஒரு முக்கிய பகுதி. அதை இங்கே நினைவு கூர்ந்து, 

அப்படிப்பட்ட தேவி , நீ எனக்கு மது கைடபர்களை போன்ற அரக்கர்களைப் அழிப்பதற்கு உடல் வலிமையை 

அருளவேண்டும்.மது கைடபர்கள் கர்ணமலத்திலிருந்து உண்டானவர்கள். கரணேந்திரயத்தின் தூண்டுதலால் 

ஜீவாத்மாக்கள் நிறைய துன்பத்திற்காளாகிறார்கள். அப்படிப்பட்ட துன்பங்களிலிருந்து என்னைத் 

காப்பாற்றிக்கொள்ள எனக்கு உடல் வலிமையையும் மனோ வலிமையையும் அருள்வாய்.அதன் மூலம் சத்திய 

சாக்‌ஷாத்காரத்திற்கான முயற்சியில் நான் ஜயம் பெற அருள வேண்டும்.அதன் மூலம- என் வெற்றியின் 

காரணம்- எனக்குண்டாகின்ற புகழ் உலகிற்கு முன்மாதிரியாகக் இருக்கட்டும். ‘வரதே’ என்றழைப்பதன் மூலம் 

கேட்ட வார்த்தைகள் தருபவள் என்று பொருள் படுகிறது.

ஆகவே தேவீ, உன்னை வணங்குகிறேன்..

 ஸ்தோத்திரம் 4

 மஹிஷாஸுர நிர்ணஷி பக்தானாம் ஸுகதா நம:

ரூபம் தேஹி ஜயம்  தேஹி யஶோ தேஹி த்விஷோ ஜஹி!

महिषासुर निर्णाशि भक्तानां सुखदे नमः

रुपं देहि जयं देहि यशो देहि द्विषो जहि

Mahishasur Nirnashi Bhaktanam Sukhde Namah

Rupam Dehi Jayam Dehi Yasho Dehi Dvisho Jahi !

மஹிஷாஸுர மர்ததனம் தேவீ மாகாத்மியத்தில் வரும் இன்னொரு சம்பவம்.அதில் மஹிஷ உருவத்தில் வந்து 

தேவர்களை-நல்லவர்களை துன்புறுத்துஉகிறான் ஒரு அரக்கன் அவனை தேவி வதம் செய்கிறாள்.மஹிஷம் 

என்றால் எருமை மாடு. அது மிகவும் பலம் வாய்ந்தது. ஆனால் புத்தி வளராதது. விளைவுகளைத் பற்றி 

யோசிக்காமல், ஒன்றை நினைத்து விட்டால் அதையே குறியாக குதித்து ஓடி வருவது மஹிஷம்.மனிதனில் 

‘ அஹம்’ பாவம் வேரூன்றிவிட்டால் அவனும் மஹிஷத்தைப் போல் நடந்து கொள்வான். பல துன்பங்களுக்கு 

ஆளாவான். ‘தேவீ,  நீ மஹிஷாஸுரனை வதம் செய்தது போல் என்னுள்ளிருக்கும் அஹம் என்ற மஹிஷத்தைப் 

வதம் செய்வதற்கு அருள் புரிவாய்’. அஹம் அழிவது வரை முக்திக்கு வழி பிறக்காதே. ‘நான்’, ‘ நீ’ என்ற 

எண்ணங்கள் தான் எல்லா விருப்பு வெறுப்புக்களுக்கும் அடிப்படை. அது தான் இன்ப-துன்பங்களுக்கும் 

காரணம்.ஆகவே ‘அஹம் என்ற மஹிஷத்தைப் வதம் செய்வதற்கு தேகபலம் தா, வெற்றிபெற சக்தி 

தா, அதனால் உண்டாகின்ற யஶஸ் மற்றவர்களுக்கு தூண்டுகோலாக இருக்கட்டும்”.

ஸ்தோத்திரம்5

தூமநேத்ர வதே தேவி தர்ம காமார்த்த தாயினி

ரூபம் தேஹிஜயம் தேஹி யஶோ தேஹி த்விஷோ ஜஹி!

 धूम्रनेत्र वधे देवि धर्म कामार्थ दायिनि

रूपं देहि जयं देहि यशो देहि द्विषो जहि

Dhomrnetra Vadhe Devi Dharm Kamarth Dayini

Rupam Dehi Jayam Dehi Yasho Dehi Dvisho Jahi ॥

சூரியனை தூமகேது  மறைப்பது போல், நமது ஆத்மஞானத்தை அவித்யை எனும் தூம கேது மறைத்து 

விடுகிறது.. நாம் கண் இருந்தும் குருடர்களாகிவிடுகிறோம். ‘ தேவீ, நீ, எப்படி தூம நேத்ரன் என்ற 

அரக்கனைக் அழித்து , தர்மத்தை அடிப்படையாகக் கொண்ட கர்மங்களுக்கும் வேண்டிய செல்வங்களை ( 

மனோ பலம், சரீரபலம் முதலியவை ) தருவாயோ அது போல், எனக்கும் அருளுவாய்’


ஸ்தோத்ரம்6

 ரக்த பீஜ வதே தேவீ சண்ட- முண்ட வினாசினீ

ரூபம் தேஹி ஜயம் தேஹி யஶோ தேஹி த்விஷோ ஜஹி !

रक्तबीज वधे देवि चण्ड-मुण्ड विनाशिनि

रुपं देहि जयं देहि यशो देहि द्विषो जहि॥6॥

Raktbeej Vadhe Devi Chand-Mund Vinashini

Rupam Dehi Jayam Dehi Yasho Dehi Dvisho Jahi!

தேவியின் ரக்தபீஜ வதத்தையும், சண்டமுணஃட வதத்தையும் கூறி , அது போல் ஒன்றன் பின் ஒன்றாக 

முளைத்தெழும் ஆசைகளை  இல்லாமலாக்குவதற்கு சக்தியை எனக்கு அருள்வாய் தேவீ. ரக்த பீஜனை 

கொல்வது எவ்வளவு கஷ்டமானதோ அதை விட கஷ்டம் இந்திரியங்களாலும், பூர்வ ஜன்ம கர்மங்களாலும் 

உளவான வாசனைகளை அழிப்பதம் , ம அதிலிருந்து உளவாகின்ற ஆசைகளை நாசம் செயவதும் அதற்கு 

தேவியின் அருள் கட்டாயம் தேவை.

அது நல்கும்படி தேவியை வேண்டுவோம்.

ஸ்தோத்ரம் 7

ஶும்பஸ்யைவ நிஶும்பஸ்ய தும்ராக்‌ஷஸ்ய செ மந்திளி

ரூபம் தேஹி ஜயம் தேஹி யஶோதேஹி த்விஷோ ஜஹி!

शुम्भस्यैव निशुम्भस्य धूम्राक्षस्य च मर्दिनि

रुपं देहि जयं देहि यशो देहि द्विषो जहि

Shumbhasyaiva Nishumbhasya Dhumrakshasya Che Mardini

Rupam Dehi Jayam Dehi Yasho Dehi Dvisho Jahi ॥7॥

“தங்களின் பலத்திலும் திறைமையிலும் மிகுதியான நம்பிக்கை வைத்திருந்த சும்ப-நிசும்பர்களை தேவி வதம் 

செய்தது போல் எனது அசட்டு தைரியங்களையும் பொருத்தமில்லாத அஹம்பாவத்தையும் அழித்து எனக்கு 

முக்திக்கு வழி காட்டுவாய், நீ,, தேவீ.அகம்பாவம் அழிய எந்த ரூபம் வேண்டுமோ அதைத் தருவாய், தேவீ.”

இந்த பிரார்த்தனை முரண்பாடான பிரார்ததனையாகத் தோன்றலாம். அகம்பாவம் என்பதே, ஆத்மாவை 

தேகத்துடன் ஐக்கியப்படுத்தி, தேகத்தின் சுகஙங்களையும் துக்கங்களையும் ஆத்மாவின் சுக-துக்கங்களாக 

எண்ணுவது தான்.அப்படியிருக்க, அதை அழிப்பதற்கு ரூபம் தேஹி, தேகம் தேஹி என்றால் முரண்பாடு தானே! 

ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தால் , நமக்கு புரியும், “இகலோக ரூபத்திலிருக்கும் தேகத்திலிருந்து விடுதலை 

அளித்து, உன்னோடு ஐக்கியமாவாதற்கான மனோபலத்தையும், மனபக்குவத்தையும் தா”என்பது தான் இதன் 

உண்மையான பொருள் என்று.”அதற்கு தடையாக இருக்கின்ற எல்லா சும்ப-நிசும்பர்களையும் மற்ற 

அரக்கர்களையும் அழிப்பாய் தேவீ, ”


ஸ்தோத்ரம் 8

 வந்திதாங்க்ரியுகே தேவி ஸர்வ ஸபாஹ்யப்யந்தரே தாயினி

ரூபம் தேஹி ஜயம் தேஹி யஶோதேஹி த்விஷோஜஹி !

वन्दिताङ्‌घ्रियुगे देवि सर्व सौभाग्य दायिनि

रुपं देहि जयं देहि यशो देहि द्विषो जहि

Vanditaangghriyuge Devi Sarva Saubhaagya Daayini

Rupam Dehi Jayam Dehi Yasho Dehi Dvisho Jahi ॥8॥

‘ தேவியின் பத்ம பாதங்களை சர்வரும் வணங்குகின்றனர்.நானும் வணங்குகிறேன். எல்லோருக்கும் சர்வ 

ஐசுவரியங்களையும் நீ அளிக்கின்றாய். அதே போல் எனக்கும் அருளுவாய்’

ஸ்தோத்திரம் 9

அசிந்த்ய ரூப சரிதம் ஸர்வ ஶத்ரு வினாசினீ

ரூபம் தேஹி ஜயம் தேஹி யஶோ தேஹி த்விஷோ ஜஹி! 

अचिन्त्य रुप चरिते सर्व शत्रु विनाशिनि

रुपं देहि जयं देहि यशो देहि द्विषो जहि

Acintya Rup Charite Sarv Shatru Vinashini

Rupam Dehi Jayam Dehi Yasho Dehi Dvisho Jahi!

‘ யாராலும் நினைத்துப்பார்ககக் கூட முடியாத அழகுடைய தேவீ, எல்லா தடைகளையும் நீக்குபவளே , நீ 

எனக்கு என் இலட்சியத்தை அடைவதற்கு அருளுவாய்”

தடைகள் வெளியேயிருந்தும் வரலாம், நம்முள்ளேயும் முளை விடலாம்.இந்த தடைகள் வாசனை 

ரூபத்திலும் இந்திரிய தூண்டுதலாலும் வரலாம். இரண்டையும் நீக்குவதற்கு தேவி உதவ வேண்டும்.