யோகவாசிஷ்டம் என்ற மஹாராமாயணம் 671
தினமொரு சுலோகம்
நாள் 671
ஸ்மிருதி, நினவு, ஸ்மரணை !
काकतालीयवद्भान्ति सर्वात्मनि सुसंविद:
स्वांग्भूता: स्वत: स्वस्थास्था एव स्मृतय: कृता: (6.2/172/24)
காகதாலீயவத்³பா⁴ந்தி ஸர்வாத்மனி ஸுஸம்ʼவித³:
ஸ்வாங்க்³பூ⁴தா: ஸ்வத: ஸ்வஸ்தா²ஸ்தா² ஏவ ஸ்ம்ருʼதய: க்ருʼதா: (6.2/172/24)
வசிஷ்டர் தொடர்ந்தார்:” சிருஷ்டா என்றால் அது மனமே தான். அதனுள் விஷயங்கள் குறித்துள்ள விவரங்கள் இல்லவேயில்லை.முன் பிறவியிலேயே, அதாவது முந்தையதாக சக்கரத்திலேயே,தானே பூரணத்துவத்தை அடைந்து விட்டதால்,அதைக் குறித்து எந்த விதமான நினவுகளும் அதனுள் இல்லை.
நினவுகள் இல்லையென்பதால்’ உருவகப்படுவதற்கான’ ‘ காரணமும்’ கிடையாது.அம்மாதிரி நினவு பிரம்மாவில் உளவானதாக வைத்துக்கொண்டாலும் அதில் எந்த உண்மையும் கிடையாது.கனவு நகரம் எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மைதான் அந்த நினவுகளுக்கும். முக்தியடைந்த புருஷனில் நினவுகள் உண்டாவது என்பது இயலாத காரியம்.
இராமன் வினவினான்:’ பகவான்,எதனால் முக்தனில் நினவுகள் இருப்பதில்லை? நினவுகள் இல்லையென்றால் சிருஷ்டியின் அடிப்படை உறுப்புக்களான முக்குணங்கள் எங்கிருந்து உளவாக முடியும்?’
வசிஷ்டர் சொன்னார்:’ நினவுகள் உளவாவது லௌகீக வஸ்துக்களுடன் உள்ள தொடர்பினால் மட்டுமே! எப்படி காரிய- காரண தொடர்பும் அதன் தொடர்நிகழ்ச்சிகளும் உதயமாகின்றன? ஆனால் , அந்த வஸ்துக்களே உண்மையில் இல்லாதவை என்கின்ற பொழுது அவைகளைக் குறித்துள்ள நினவுகள் எங்கிருந்து வரும்? எங்கிருந்து இந்த நினவுகள் முளைக்க முடியும்? எல்லாமே பிரம்மம் தான்- அனந்தாவபோதம் தான் என்கின்ற போது , அது தான் நித்திய சத்தியம் என்கின்ற போது, நினவுகள் என்ற எண்ணத்திற்கே வாய்ப்பில்லை!
உயிரினங்களில் பொருட்களைப்பற்றியுள்ள சிந்தை உண்டாவது ஸ்மிருதி என்று சொல்கிறார்கள். ஆனால் எதைப்பற்றி சிந்திக்கிறோமோ அந்த பொருட்கள் உண்மையில் இருப்பவையல்லவே! அப்படியிருக்கையில் ஸ்மிருதி மட்டும் எப்படி இருக்க முடியும்? இருந்தாலும், எல்லா உயிரினங்களின் உண்மை நிலை எல்லைகளில்லாததாக விருப்பதால்பொருட்களைக் குற்றித்துள்ள சிந்தைகளும் போதத்தில் இயற்கையிலேயே உள்ளது தான் என்றும் கூறலாம்.ஆகவே தான் நான் அதை ஸ்மிருதி என்று கூறினேன்.ஆனால் அது ஒரு சாமானியமான அஞ்ஞானியின் பார்வையில்த்தான் அப்படி!
இந்த விவாதத்தை இங்கு முடித்துக் கொள்வோம். போதத்தில் இயற்கையில் உண்டாகும் அசைவிற்கும் ஸ்மிருதி என்றே பெயரிடலாம். ஆனால் ஸ்மிருதி திரும்பத் திரும்ப எழும்பி வரும்பொழுது அதற்கு வெளிப்படையானதாக ஒரு மூர்த்திரூபம் உண்டாகிறது. போதத்தில் என்ன என்ன அனுபவமாகின்றதோ அவையெல்லாம் ஸ்மிருதியே தான்! அனந்த போதத்தில் உண்டாகின்ற எல்லா அனுபவங்களுமுண்டாவது இயற்கையாகவும்,யதேச்சையாகவும் உண்டாவது தான்.ஏனென்றால் போதத்தின் உறுப்புகள் தான் அனுபவங்கள்.ஆனால் அது உண்டாவதற்கோ காரணங்கள் ஏதும் கிடையாது.’ காகதலீய’ தொடர்பு தான்.( காக்கை உட்கார பனம்பழம் விழுந்தது போல்) .அவை தான் நினவுகள்.
எல்லா நிகழ்வுகளும் இதே போல்த்தான்.அவை யதேச்சையாக நிகழ்ந்தாலும் இல்லையென்றாலும் அது அப்படித்தான். இவ்வாறு யதேச்சையாக நிகழ்பவைகளைக்குறித்தும்,முன் பின் தொடர்புகள் இருப்பதை நிரூபிக்க முடியாதவையுமான நினவுகளைக் குறித்தும் நாம் எதற்காக ஆராய்ச்சி செய்ய வேண்டும்?அந்த நினவுகளுக்கும் ஆதாரமான வஸ்து விஷயங்கள் உண்மை இல்லை என்று நமக்குத் தெரியுமல்லவா! அவை அஞ்ஞானியின் பார்வைக்கு மட்டுமே நிஜம் என்று தோன்றுகிறது.அம்மாதிரி அஞ்ஞானிகளுக்கு முக்தி மார்க்கத்தை உபதேசிக்க நான் தயாரில்லை! போதம் விழித்தெழுந்துள்ள சில சந்தேகங்கள் மீதமிருக்கின்ற சிலருக்காகத்தான் நான் இந்த விவரங்களைத கூறுவது.இந்த உண்மையை புரிந்து கொள்ள முடியாதவர்களிடம் சங்கம் சேரவே கூடாது.
போதத்தில் சிறிதானாலும் ஒரு அனுபவம் உண்டாகத்தான் செய்கிறது. அது திரும்பத் திரும்ப அனுபவப்படும்பொழுது அது மனதில் ஆழமான பதிவாகிறது; சம்ஸ்காரமாகிறது; அது வாசனையாகிறது.அதுவே உலகம் எனும் மாயக் காட்சியாகிறது. ஆனால் எல்லாம் நிகழ்வது அனந்த போதத்தில்த் தான். அனந்தத்தில் மூர்த்தி உருவங்களோ, உணர்வுகளோ, நினைவுகளோ கிடையாது.
இரட்டை என்ற எண்ணமே மித்யை எனும்போது, பந்தமும் அப்படியே தானே இருக்க முடியும்!