யோகவாசிஷ்டம் என்ற மஹாராமாயணம் 722
தினமொரு சுலோகம்
நாள் 722
இல்லாததற்கு’ உண்மை இல்லை! என்றும் உள்ளதற்கு நாசமில்லை!
ந வினஶ்யத எவேத³ம்ʼ தத: புத்ர ந வித்³யதே
நாஸதோ வித்³யதே பா⁴வோ நாபா⁴வோ வித்³யதே ஸத: (6.2/213/11)
न विनश्यत ऎवेदं तत: पुत्र न विद्यते
नासतो विद्यते भावो नाभावो विद्यते सत: (6.2/213/11)
ന വിനശ്യത എവേദം തത: പുത്ര ന വിദ്യതേ
നാസതോ വിദ്യതേ ഭാവോ നാഭാവോ വിദ്യതേ സത: (6.2/213/11)
வசிஷ்டன் தொடர்ந்தார்: நீ இப்போது என்னிடம் கேட்டது போல் இதற்கு முன் ஒரு யுகத்திலும் நீ இதே கேள்வியை கேட்டாய். அப்போதும் நீ மாணவனும் நான் உன் குருவுமாயிருந்தேன். நான் அன்றைய விவாதங்களை சரியாக நினைவுகூருகிறேன்.
சீடன் கேட்டார்: பகவான், லோகசக்கரம் முடிவடையும் போது என்ன முடிவிற்கு வருகிறது? என்ன அழிகிறது?
குரு சொன்னார்: மகனே, எதெல்லாம் காணப்படுகிறதோ அவையெல்லாம் அழியும். நீண்ட சுஷுப்தியில் மூழ்கும் போது கனவில் காணும் உலகம் இல்லாமல் ஆவது போல்த் தான
இந்த உலகங்களும் அதில் ‘உறுதியாக’ நிற்கும் மலைத் தொடர்ச்சிகள் உட்பட அனைத்தும் இறுதியில் இல்லாமல் போகும். மேலும், காலமும் கர்மமும் உலக யம-நியம முறைகளும் அழிந்துபோகும். எல்லா ஜீவஜாலங்களும் ஆகாசம்கூட இல்லாமலாகும். காரணம் ஆகாசத்தைப் பற்றி சிந்திக்க ஆருமில்லாதபோது வானத்திற்கு எங்கேயிருந்து இருப்பு உண்டாகும்?
தெய்வீக சத்வங்கள் கூட- சிருஷ்டிகர்த்தாவான பிரம்மா, நிலைகாரகனாய மகாவிஷ்ணு, சம்ஹாரகனான பரமசிவன் – எல்லாம் நாம் உட்பட மொத்தமாக இல்லாமலாகும்..பின்னேயென்னதான் முடிவடையும்? போதம், அனந்த போதம்! ஆனால் போதம், போன்ற பெயர்கள்- சொற்களை கூட அப்போதைய அறிவின் அனுபவத்தின் வெளிச்சத்தில் கூறுவது தான்!
சீடன் கேட்டார்: ‘இல்லாததற்கு’ உண்மை இல்லை என்றும் உள்ளதற்கு நாசமில்லை என்றும் நான் கேட்டிருக்கிறேன். அப்போது நாம் காணும் உலகிற்கு அழிவு எப்படி ஏற்படும்?
குரு சொன்னார்: “மகனே, ‘இது’ அழிவதில்லை ஆகவே தான் ‘இது’ காணப்படும் பொருளல்ல என்று கூறுவது. அசத்தில் உண்மை உளவாவதில்லை . சத்தின் உண்மையின் ‘ இல்லாமை’யும் இல்லை. .”
ஒரு பொழுதும் எங்கும் இல்லாதவை உற்பத்தியாகதவை.அப்புறம் எப்படி அழியமுடியும்? .
பாலைவனத்தில் இருப்பதாகத்தோன்றும் கானல்நீர் எப்படி நிரந்தரமானதாக முடியும்? பிரமையினாலுண்டாகின்ற மாயக்காட்சியில் அழிவில்லாதது ஏதாவது இருக்க முடியுமா? இந்த உலகில் தென்படுவதெல்லாம் பிரமையினாலுண்டானவை தான்.அப்படிப்பட்ட காட்சிகள் முடிவிற்கு வந்து தானேயாக வேணடும்? தூக்கத்திலிருந்து விழித்தெழும்பொழுது கனவுகள் முடிவிற்கு வருகின்றன.தூக்கத்தில் ஆழும்போது விழிப்பு நிலை முடிவிற்கு வருகிறது.அதே போல்த் தான் உலகின் முடிவும் அழிவும்!
தூக்கத்திலிருந்து விழித்தெழும் பொழுது கனவில் கண்ட நகரங்கள் காணாமல் போய் விடுகின்றன. எங்கு போயின என்று தெரிவதில்லை. அதே போல்த் தான் இந்த உலகமும் எங்கு போயிற்று என்று தெரிவதில்லை.
சீடர் கேட்டார்: ஏன் இந்த ‘காட்சிகள்’ ஏற்படுகிறது? மறைகின்றன?
குரு கூறினார்: அனந்த போதம் தான் இவையெல்லாமாகத் தோன்றுவது. போத்த்திலிருந்து வேறாக உலகமில்லை. வித விதமான காட்சிகளை பிரகடனப்படுத்தும்போதும் போதத்தில் மாற்றங்கள் ஒன்றும் ஏற்படுவதில்லை.. அதன் சகஜநிலையில் எந்த விகல்பமும் ஏற்படுவதில்லை..
தோன்றுவதும் மறைவதும் போத்த்தின் இயற்கையே! நீ தான் சத்தியம்! நீரில் காணும் உன் நிழல் உருவம் உண்மையில் இல்லாதது.அதன் தோற்றம் கண நேரத்தில் தோன்றி மறைவது தான்.
கனவும் கனவு இல்லாத நிலையும் சுஷுப்தி தான் என்பது போல் படைப்பும் அழிவும் பிரம்மம் தான்.